Saturday, November 14, 2015

எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க!


எங்களுக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்கு லோக்கல்  போலீஸ்?  இல் இருந்து போன். நீங்கள் செலுத்த வேண்டிய பைன்/சிட்டி டாக்ஸ்  ஐ செலுத்தவில்லை, உடனே செலுத்தவில்லை எனில் கைது செய்ய நேரிடும். உடனே செலுத்துங்கள் உங்கள் நல்லதுக்கே சொல்லுகிறோம். நாங்கள் கிரெடிட் கார்டு கூட வாங்கி கொள்ளுவோம் என்று போன். அவருக்கு ஒரே பயம். முன்ன பின்ன தெரியாம, எப்படி போலிஸ் ல இருந்து கூப்பிடுவாங்க. என்ன பைன் என்று தெரியலையே..என்று ஒரே குழப்பம். பின்னர் எங்களுக்கு போன் செய்து கேட்டதும் நாங்கள் சொன்னது இது தான். நேரே போலிஸ் ஸ்டேஷன் போய் கேளுங்கள். இல்லை போலிஸ் நம்பருக்கு பேசுங்கள் என்ன பைன் வென்று கேளுங்கள் என்று சொன்னோம். அதன் படியே அவரும் சென்று விசாரித்ததில் அது ஒரு scam என்று தெரிய வந்தது.

இவர்களின் ஸ்ரட்ரஜி  இது தான், புதிதாக யாரவது வந்தால் அவர்களை நோட் செய்வது,  போன் நம்பரைதெரிந்து  கொள்ளுவது அதுவும் இந்தியன் என்றால் இது போன்று போலிஸ் என்றெல்லாம் கொஞ்சம் மிரட்டினலே பயந்து விடுவார்கள் என்று மிரட்டுவது. பின்னர் கிரெடிட் கார்ட் போன்ற டீடைல் வாங்கி கொண்டு பணத்தை சுருட்டுவது. இது தான் அவர்கள் பிளான்.


thanks to google images



நிறைய ஈமெயில் scam கேள்வி பட்டு இருப்போம். முன்னெலாம் ஈமெயில் அடித்து கொள்ளை அடித்தவர்கள் இப்பொழுது இப்படி எல்லாம் ஆரம்பித்து இருக்கிறார்கள் போல. எங்கள் லோக்கல் போலிசிடம் இருந்து இதற்கெல்லாம் ஏமாற வேண்டாம் என்று செய்தி வந்து இருக்கிறது.

எனக்கு தெரிந்த சில ஈமெயில் scam கள் இங்கே

நைஜீரியன் ஈமெயில் scam 

முக்கியமாக நம்முடைய ஈமெயில் ஜன்க் பாக்ஸ்ஐ திறந்தாலே, நிறைய ஈமெயில் வரும் அதுவும் நைஜீரியன் scam எனப்படும் "பல கோடி பணம் உங்களுக்கு வந்து இருக்கிறது, வாங்கி கொள்ளுங்கள்" என்று பல பல இடங்களில் இருந்து பல பல வண்ணத்தில் வரும். அதில் பேராசை பட்டு ரிப்ளை செய்து பணத்தை விட்டவர்கள் நிறைய பேர்.

பெண்கள் உங்களுக்காக காத்திருகிறார்கள் ,Online dating/marriage scam 

இன்னும் சில scam கள் online dating, மற்றும் பெண்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள் என்பது போன்றது. இதில் சபலப்பட்டு காசை விட்டவர்களும் உண்டு.

உடல்நிலை Health scam

அடுத்து நான் நிறைய பார்க்கும் scam கள் உடல் நலத்தை குறிவைத்து செய்ய படும் சில, உதாரணமாக "எடை குறைய வேண்டுமா?, முடி வளர வேண்டுமா?, முகம் பளபளக்க வேண்டுமா?, எப்போதும் இளமை வேண்டுமா?" என்பன போன்றவை" இதில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்கும் Work from home scam 

இன்னும் சில scam கள் வீட்டில் இருந்தே வேலை பாருங்கள் என்று வரும். ஆனால் அப்படி பார்க்க வேண்டும் என்றால் பணம் கட்ட சொல்லுவார்கள், பின்னர் பணம் தான் சென்று கொண்டே இருக்குமே தவிர, உங்களுக்கு வீட்டில் இருந்து வேலையும் கிடைக்காது, பணமும் கிடைக்காது. இது போன்ற வீட்டில் இருந்தே வேலை என்பது எல்லாம் சும்மா பம்மாத்து மட்டுமே. நம்பி ஏமாறாதீர்கள்.

பர்சனல் ரிப்போர்ட் scam 

இப்போது இன்னும் சில scam கள் நான் கேள்வி படுகிறேன், அது, உங்களை பற்றி யாரோ தேடி இருக்கிறார்கள், ரிப்போர்ட் கேட்டு இருக்கிறார்கள், அவர்கள் யார் என்று தெரிய வேண்டும் என்றால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் என்று ஈமெயில் வரும்..யாராக இருக்கும் என்று நீங்கள் கிளிக் செய்தால் போதும் உங்கள் கம்ப்யுட்டரில் ஏதாவது வைரஸ் நிறுவி விட்டு விடுவார்கள்.

பிஷிங் scam 

அதே போல ஒரு phising scam, இது பயங்கர authentic போல உங்கள் பாங்கில் இருந்து வருவது போல இருக்கும். உங்கள் password மாற்ற சொல்லி அனுப்பி இருப்பார்கள். உங்கள் பேங்க் லோகோ எல்லாம் இருப்பதை பார்த்து நீங்களும் கிளிக் செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் அக்கௌன்ட் ஹாக் செய்யப்பட்டு விடும். மிக மிக கவனம் தேவை. எந்த பாங்கும், ஈமெயில் செர்வேரும் இப்படி உங்களிடம் பாஸ்வோர்ட் மாற்ற சொல்லி ஈமெயில் அனுப்ப மாட்டார்கள். அதனால் கவனம் தேவை.



இவையெல்லாம் பொதுவான ஈமெயில் scam கள் என்றாலும், தற்போது போன் மூலம் கூட இப்படி எல்லாம் ஏமாற்ற முனைகிறார்கள் என்று தெரிகிறது. இவர்களின் முழு முயற்சியும் உங்களின் கிரெடிட் கார்டு அல்லது பணத்தின் மீது மட்டும் அல்லாமல் உங்களின் ஐடென்டிட்டி திருடுவதும் தான். நீங்கள் அமெரிக்காவில் வசிப்பவர் எனில் உங்களின் SSN எண்ணை யாரிடமும் சொல்லி விடாதீர்கள் அப்படி சொல்லி விட்டீர்கள் எனில் உங்கள் எண்ணை கொண்டு நீங்கள் தான் என்று வேருருவர் கிரெடிட் கார்டு முதல் எல்லாமே வாங்கி விடுவார். அதனால் எப்பொழுதும் எல்லா இடத்திலும் கவனம் தேவை.

டிஸ்கி

இது நான் சந்தித்த பார்த்த சில scam பற்றிய என்னுடைய அனுபவங்கள் மட்டுமே.


நன்றி.


2 comments:

ஆரூர் பாஸ்கர் said...

லோக்கல் போலீஸ் போன் என்பது புதுத் தகவல். நன்றி,

Deiva said...

Recently some of my colleagues got call saying that they are from IRS. They want cash / gift card in order not to get in trouble with IRS. This is targeted mainly at Indians (and done by Indians).