ஒருவரிடம் ஒரு 6-15 நிமிஷம் எதுவும் செய்யாம ஒரு ரூமுக்குள்ள சும்மா இருக்க முடியுமா? எதுவும் செய்ய கூடாது. நோ போன் பாக்குறது, நோ புக் படிக்கிறது, நோ டிவி, நோ கேம்ஸ், தூங்க கூடாது. உக்கார்ந்த இடத்தை விட்டு நகர கூடாது, நீங்களும் உங்கள் எண்ணங்கள் மட்டுமே. இப்படி ஒரு ஆய்வு 11 வெவ்வேறு இடங்களில்நடத்தப்பட்டது. என்ன முடிவு வந்திருக்கும்? சயின்ஸ்ஆய்விதழில் கட்டுரை ஒன்று பார்க்க நேர்ந்தது.
இந்த ஆய்வு நேரத்துக்கு பிறகு வெளியே வரும் ஆட்களிடம் உங்களின் அனுபவம் எப்படி இருந்தது? என்று கேட்ட கேள்விக்கு, "ஒரே கொடுமையாக இருந்தது" என்றே பலரின் அனுபவம்.
சரி உங்களுக்கு சும்மா இருக்க பிடிக்கவில்லை, உங்களுக்கு ஒரு தூண்டல் தருகிறோம், அது மைல்டு எலக்ட்ரிக் ஷாக். தற்போது, நீங்கள் சும்மா இருப்பதை தேர்ந்தெடுப்பீர்களா?, அல்லது எலக்ட்ரிக் ஷாக் கை தேர்ந்தெடுப்பீர்களா? என்று கேட்டால் 67% ஆண்கள், என்னால சும்மா இருக்க முடியாது? எலக்ட்ரிக் ஷாக் கொடுங்க? என்று கேட்டு இருக்கிறார்கள். ஆனால் 25% பெண்கள் அதனை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
ஏன் சும்மா இருப்பது அவ்வளவு கஷ்டம்? சும்மா இருக்கும் போது, தனக்கு உள்நோக்கி, தன்னுடைய குறைகள் பற்றிய ஆழ்ந்த சிந்தனை சுழற்சியில் மாட்டி கொள்கிறார்கள். அதனால் எப்படியாவது அந்த சுய சிந்தனையில் இருந்து தப்பிக்க வேறேதாவது ஒரு வெளி தூண்டல் அவர்களுக்கு தேவையாக இருக்கிறது.
இதனுடன் தொடர்புடைய டெலிகிராப் செய்தி ஒன்று பார்க்க நேர்ந்தது. அது எப்படி தற்போதைய தலைமுறை (16-24 வயதுக்கு உட்பட்டவர்கள்) வாரத்தில் 34.3 மணி நேரம் நேரம் போக்குவதற்காக இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. இது 10 வருடங்களுக்கு முன்பு இருந்தது விட 2 மடங்கு அதிகம். இந்தியாவும் இந்த விஷயத்தில் விதிவிலக்கல்ல, இந்தியர்கள் தினசரி 3 மணி நேரம் இன்டர்நெட்டில் செலவழிக்கிறார்கள் என்று எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.
சும்மா இல்லாமல் இருக்க டைம் பாஸுக்காக எந்த எல்லைக்கும் போக இவர்கள் தயாராக இருக்கிறார்கள், அது நெகடிவ் விஷயம் ஆக கூட இருக்கலாம்.
இந்த கட்டுரை படித்த பிறகு எனக்கு வடிவேலுவின் "சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்ற காமெடி நினைவுக்கு வந்தது.
References
2. https://www.telegraph.co.uk/news/2018/08/01/decade-smartphones-now-spend-entire-day-every-week-online/
3. https://economictimes.indiatimes.com/magazines/panache/indians-spend-roughly-3-hours-a-day-on-smartphones-but-are-they-paying-big-bucks-for-apps/articleshow/62866875.cms

1. Just think: The challenges of the disengaged mind