Thursday, March 18, 2010

"Researcher" என்ற ஒரு ஜந்து

"பேரு பெத்த பேரு தாக நீலு லேது" என்று யாரோ சொல்லி கேள்விபட்டு இருக்கிறேன். மத்த விசயங்களுக்கு இது பொருந்துதோ இல்லையோ, ஆனா "I am a researcher" என்று யாராவது சொன்னால் அவர்களின் உண்மை நிலை இது தான்.

"Lord of the Rings" கதையையும் ஒரு Researcher இன் வாழ்கையையும் இணைத்து நெறைய கதைகள் வந்ததுண்டு. அந்த கதையில் வரும் ப்ரூடோ (Frodo) போல ஒரு ஆர்வக்கோளாறு பையன் மற்றவர்களை போல இல்லாமல் எதாவது வித்தியாசமா செய்யனும்னு நினைக்கிறான். அவனுக்குன்னு ஒரு advisor, Gandolf ரூபத்தில் வந்து அமைகிறார். முதலில் ஒரு சின்ன ப்ராஜெக்ட் (ரிங் ஐ Rivendell க்கு கொண்டு செல்வது) ஐ Frodo வுக்கு Gandolf கொடுக்கிறார். அதனை assign செய்து விட்டு அவர் எங்கோ சென்று விடுகிறார். அதனை கொடுத்தவுடன் Researcher ஐ dark forces ரூபத்தில் எதிர்கால பிரச்சனை பிடித்து கொள்ளுகிறது . என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் போது Aragorn என்ற ஒரு Postdoc அவனுக்கு ஹெல்ப் செய்கிறார். Aragorn ரொம்ப காலமாக Gandolf க்கு Postdoc ஆக இருக்கிறார்.

ஒரு வழியாக நல்ல postdoc ஆன Aragorn உதவியுடன் முதல் project ஐ முடித்தவுடன் எங்கிருந்தோ மறுபடியும் advisor ஆன Gandolf வந்துவிடுகிறார். பின்னர் Head of the Department ஆன Elrond முன் Presentation நடக்கிறது. Advisor Gandolf இந்த ப்ராஜெக்ட் இனிமேல் தான் ஆரம்பிக்க போகிறது என்று சொல்லி ஒரு பெரிய குரூப் உருவாக்குகிறார். அதில் visiting students ஆக Gimli யும் Legolas ம் இணைகிறார்கள். அதில் எப்படா அடுத்தவன் research ஐ திருடுவது என்று காத்து கொண்டிருக்கும் Boromir ம், நல்ல postdoc ஆன Aragorn ம் இருக்கிறார்கள். அதில் Frodo வின் பழைய friends ஆன சிலரும் இணைகிறார்கள். இதனை உருவாக்கிய பின்னர் மறுபடியும் advisor Gandolf எங்கோ சென்று விடுகிறார். இந்த குரூப் தங்களின் research பயணத்தை Frodo வின் தலையில் கட்டி விட்டு தொடங்குகிறது.

நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொருவராக அந்த குரூப் இல் இருந்து கழண்டு கொள்ள ஆரம்பிகிறார்கள். முதன்முதலாக Boromir, Frodo வின் வேலையே திருட நினைக்க அவனை Frodo கழட்டி விடுகிறான். இனிமேல் research சம்பந்தமாக தன் உயிர் சிநேகிதனான சாம் ஐ தவிர வேறு யாருடனும் discuss செய்வதில்லை என்று முடிவு செய்து தனியாக பயணத்தை சாம் உடன் தொடங்குகிறான். இடையிடையே கூட இருந்து கழுத்து அறுக்கும் Gollum போன்றவர்கள் வருகிறார்கள், அவர்களை பற்றி சாம் எச்சரித்தாலும் அவர்களை நம்பி கொண்டு இருக்கிறான் Frodo.

Frodo வின் research பயணத்தின் கடைசி கட்டமான Thesis writing (Mount doom) வருகிறது. அதில் ஏற, ஏற கனம் அதிகம் ஆவது போல உணர்கிறான். Thesis submission வரும் போது இது என் வேலை என்று Gollum தன் வேலையை காட்டுகிறது. அதில் இருந்து ஒரு வழியாக சமாளித்து Thesis submit செய்து முடிக்கிறான். அவன் சாக கிடக்கும் கடைசி நேரத்தில் அவனுடைய advisor வந்து அவனை காப்பாற்றுகிறார்.

எல்லாம் முடிந்து அவன் டாக்டர் பட்டம் வாங்கி விட்டான். எல்லாரும் பாராட்டுகிறார்கள் அதன் பின் என்ன செய்வது என்று தெரியவில்லை அவனுக்கு. முழு உலகமும் வெறுமையாக தெரிகிறது. டாக்டர் பட்டம் வாங்கினால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுகிறது. அவனால் மற்றவர்களை போல வாழவும், சம்பாதிக்கவும் முடியவில்லை. அவனுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் நல்ல வாழ்கை வாழ அவனோ தலை நரைத்த பெருசுகளான Elrond, Gandalf அவன் Uncle எல்லோருடனும் சேர்ந்து மறுபடியும் எதையோ தேடி செல்கிறான்.

17 comments:

Thekkikattan|தெகா said...

ஹாஹாஹா... அப்படியா கதை நகர்கிறது. அப்படியே அந்த ஆராய்ச்சி சார்ந்த பாதையில் நடந்தவங்களுக்கு வருகிற மாதிரியே இருக்குது. எனக்கும் சில அனுபவங்கள் உண்டு, ஒரு நாள் தீசிஸ் எழுதிட்டு இருக்கும் பொழுது ஒரு சாப்டர் எழுதிட்டு அட்வைசர் கிட்டே கொடுத்து பிழை திருத்தம் செஞ்சிட்டு இருக்கும் போது, அன்று இரவு இடைவேளையில் ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டிக் கொண்டிருக்கும் பொழுது அப்படியே விட்டுட்டு ஓடிப் போயிருவோமா என்ற கனம் எனக்குள் இறங்கியது...

பிறகு இங்கிருந்தவாரே எழுதியும் முடித்து விட்டு, ஊருக்குச் சென்று கடைசி வேலைகளை முடித்துக் கொண்டிருக்கும் பொழுது என் மீது ஒரு பெட்டிஷன், எனக்கு அசிஸ்டண்டாக வேலை செய்த ஒருவரின் கையால் எழுத வைச்சு, என்னுடைய க்ரிடிபிலிட்டியை காலி செய்யும் வண்ணம், என்னமோ நான் பட்டம் வாங்கி, இந்த அமெரிக்காவையே என்னுடைய ஆளுமைக்குள் கொண்டு வரும் ரேஞ்சிற்கு ஒரு வன்மம்... இப்பொழுது நினைச்சாலும் எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது... ஹையோ, ஹையோ! ஆமா ஏன் இப்போ இத நீங்க எழுதினீங்க :-)

//முழு உலகமும் வெறுமையாக தெரிகிறது. டாக்டர் பட்டம் வாங்கினால் அடுத்து என்ன என்ற கேள்வி எழுகிறது. அவனால் மற்றவர்களை போல வாழவும், சம்பாதிக்கவும் முடியவில்லை. //

அவ்வ்வ்வ்வ்... வடை போச்! கதைதான்... its a dead end!!

ராமலக்ஷ்மி said...

நல்லாயிருக்குதுங்க விமர்சனம்.

settaikkaran said...

யெப்பாடியோவ்! எவ்வளவு தகவல்கள்!!!! அசத்துகிறீர்கள்!!

Happy Smiles said...

நீங்கள் சொல்லி இருக்கும் விதம் மிகவும் அருமை. இப்படித்தான் என் தோழி ஒருத்தி அடிக்கடி சொல்லுவாள். ஆராய்ச்சிக்குள் வந்து நாட்கள் தான் நகர்கிறது வேறேதும் நடக்கவில்லை என்று. அதிலும் அந்த thesis writing கொடுமை. மேலோட்டமான உண்மை.

முகுந்த்; Amma said...

//அப்படியா கதை நகர்கிறது//

சின்ன Synopsis தாங்க நான் சொல்லி இருக்கிறது. Full story ல additional பிட்டிங் நெறைய இருக்கும்.

//ஆராய்ச்சி சார்ந்த பாதையில் நடந்தவங்களுக்கு வருகிற மாதிரியே இருக்குது//

உண்மை.

//அப்படியே விட்டுட்டு ஓடிப் போயிருவோமா என்ற கனம் எனக்குள் இறங்கியது//

எனக்கு நெறைய நேரம் அப்படி நெனைப்பு வந்து இருக்கு .

//என் மீது ஒரு பெட்டிஷன், எனக்கு அசிஸ்டண்டாக வேலை செய்த ஒருவரின் கையால் எழுத வைச்சு, என்னுடைய க்ரிடிபிலிட்டியை காலி செய்யும் வண்ணம்//

கூட இருந்து குழி பறிக்கிறவங்க research ல ரொம்ப அதிகம். அதில் நானும் நெறைய அனுபவபட்டுருக்கேன்.

//ஆமா ஏன் இப்போ இத நீங்க எழுதினீங்க//

நேத்து Lord of the Rings படத்தை 1001 ஆவது தடவையா பார்தேன், அப்போ எனக்கு என்னோட Research days ஞாபகம் வந்திடுச்சு, அதான் இந்த பதிவு :)))

//அவ்வ்வ்வ்வ்... வடை போச்! கதைதான்... its a dead end //
Well said தெகா. உண்மை.

முகுந்த்; Amma said...

//நல்லாயிருக்குதுங்க விமர்சனம்//

நன்றி ராமலெட்சுமி அவர்களே

முகுந்த்; Amma said...

//யெப்பாடியோவ்! எவ்வளவு தகவல்கள்!!!! அசத்துகிறீர்கள்!!//

நன்றி சேட்டை அவர்களே

முகுந்த்; Amma said...

முதல் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி மெஹர் அவர்களே.

//ஆராய்ச்சிக்குள் வந்து நாட்கள் தான் நகர்கிறது வேறேதும் நடக்கவில்லை என்று//

உங்கள் தோழி சரியாக சொல்லி இருக்கிறார்கள். பல நேரங்களில் அப்படிதான் நடக்கும், நேரம் மட்டுமே சென்று கொண்டு இருக்கும் எந்த முன்னேற்றமும் இருக்காது.

//thesis writing கொடுமை//

கொடுமையோ கொடுமை :((

சந்தனமுல்லை said...

சுவாரசியமா சொல்லியிருக்கீங்க...நல்லாருக்கு!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இவ்வளவு தாக்கமா.. :)

Radhakrishnan said...

மிகவும் அருமையாக இருந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் இப்படி இருப்பார்கள் போல.

tamil said...

This cannot be an universal experience.Many have had positive experiences like support from peers, guides and institutions.Please dont generalise from your life.Of course there are issues and research for phd is not like walking on a bed of roses or lady luck doing your experiemnts right with expected results.Academic community is as good/bad as the outside world is.Rivalry, jealousy,ego clashes etc are there too.But are they not found elsewhere too.I am part of research/academic community.So is my wife.We both have phds in totally unrelated disciplines.

முகுந்த்; Amma said...

//சுவாரசியமா சொல்லியிருக்கீங்க...நல்லாருக்கு!//

நன்றி முல்லை அவர்களே.

முகுந்த்; Amma said...

//இவ்வளவு தாக்கமா.. :)//

ஆமாங்க என்னங்க பண்ணுறது :)

முகுந்த்; Amma said...

//மிகவும் அருமையாக இருந்தது//

முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ராதாகிருஷ்ணன் அவர்களே.

//நிறைய ஆராய்ச்சியாளர்கள் இப்படி இருப்பார்கள் போல//

அப்படின்னு நான் நினைக்கிறன், ஆனா நிறைய பேரு சந்தோசமாகவும் இருக்காங்க.

முகுந்த்; Amma said...

//This cannot be an universal experience//

I too agree, but the percentage differs. Can you ask anyone when will he/she finish his PhD. No one can give an answer for this question.

//Many have had positive experiences like support from peers, guides and institutions. Please dont generalise from your life.//

Sure, They are the luckiest ones from my point of view.

//I am part of research/academic community.
So is my wife.We both have phds in totally unrelated disciplines.//

Wow, thats great. My point in this blog post is , As a PhD holder one cannot earn and live like others. After a PhD whats next, you got to be a Postdoc or Research Associate. How much you can earn as Postdoc?, very little.

Moreover, being a postdoc means, being a research paper producing machine. Every 6 months your boss expects you to write a research paper.

i.e., One has to do nothing but dedicated research, there wont be anytime for social life and money.

smith said...

Above may be true some 10-20 years back. Now, doing PhD is not at all risky. Less than 10% end up quitting. With the level of electronic communications or network available, a student even can graduate w/o his supervisor advice..particularly google is the first supervisor to many phd students....