Friday, April 10, 2015

மக்களை பிடித்தாட்டும் ஷாப்பிங் மோகம்



இந்திய பயணத்தில் நான் கண்ட இன்னொரு நெருடலான விஷயம், மக்களின் ஷாப்பிங் மோகம். தங்களிடம் பணம் இருக்கிறதோ இல்லையோ, அதை பற்றி என்ன கவலை, இருக்கவே இருக்கு கிரெடிட் கார்டு, எடுத்து செலவு செய்வோம் பின்னால பணம் கொடுத்துக்கலாம். இது தான் இப்போ எல்லா இடத்திலையும் பேஷன். கொஞ்சம் வேலைக்கு போய் கையில பணம் புரள ஆரம்பிச்சவுடன், நம்மை சுண்டி இழுப்பது இந்த ஷாப்பிங் தான். இதற்காகவே காத்திருந்தது போல எங்கு பார்த்தாலும் ஆபர், 25% தள்ளுபடி, 50 % தள்ளுபடி என்று எல்லா கடைகளும் அறிவிக் கின்றன.   பல நேரங்களில் peer பிரஷர் தான் இதற்க்கு காரணம் என்றாலும் கண்ணு மண்ணு தெரியாமல் சிலர் ஷாப்பிங் செய்வது சில நேரங்களில் பயத்தை தருகிறது. மதுரை மக்கள் கொஞ்சம் கோன்செர்வடிவ் என்று நினைத்து இருந்தேன், சென்னை அல்லது பெங்களூர் மக்கள் போல பணத்தை தண்ணியாக செலவைக்க மாட்டார்கள் என்று. ஆனால் இந்த முறை அந்த எண்ணத்தை மாற்றி கொண்டு விட்டேன். மற்ற விசயங்களில் எப்படியோ தெரியவில்லை ஆனால் மதுரையில் துணிக்கடைகளிலும், நகை கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. தேவையோ தேவையில்லையோ நிறைய வாங்குகிறார்கள். நான் சென்ற நேரம் ஆப்-சீசன் அப்போதே போத்தீஸ், ராஜ்மஹால்  போன்ற கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது என்றால், சீசன் நேரங்களில் எப்படி இருக்கும் என்று  யோசித்து கொண்டேன்.  என் அம்மா சொன்னது போல, ஆடி மாசம் எல்லாம் துளி கூட இடம் இருக்காது போல.

இன்னொரு விஷயம் எனக்கு பெரும் குழப்பமாக இருந்தது, பெண்கள் வாங்கும் புடவைகள். கிட்ட தட்ட அனைவரும், ஸ்டோன் வொர்க் அல்லது ஜிமிக்கி வொர்க்ஸ் வைத்த புடவைகள் வாங்குகிறார்கள். அதனை சாதாரண சலவை செய்ய முடியாது, வாஷிங் மெசினில் போடவே முடியாது. டிரை வாஷ் தான் செய்யமுடியும் என்று சொல்லியே விற்கிறார்கள். எத்தனை பேருக்கு டிரை வாஷ் ஒவ்வொரு முறையும் செய்ய முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் பெண்கள் அதனையே வாங்குகிறார்கள். எனக்கு உண்மையில் இவர்கள் அந்த புடவையை எப்படி துவைப்பார்கள்  என்றே சந்தேகம் வந்து விட்டது.

அடுத்த ஷாப்பிங் இப்பொழுதெல்லாம் ஏசி, டிவி, வாஷிங் மெசின், போன்ற வீட்டு உபயோக பொருள்கள் வாங்குவது. எல்லா கடைகளிலும் கிட்ட தட்ட தவணை அல்லது இன்ச்டல்மென்ட் தருகிறார்கள். வீட்டுக்கு தேவையோ இல்லையோ, கரண்ட் இருக்கிறதோ இல்லையோ, நம்மால் கடன் கட்ட முடியுமோ இல்லையோ, எல்லாரும் இதனை வாங்குகிறார்கள் பொருத்தி வைக்கிறார்கள். 


இது இந்திய நிலை மட்டும் அல்ல, இங்கும் மக்கள் நிறைய ஷாப்பிங் செய்கிறார்கள், அதுவும்  இங்கே பேமஸ்,ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது. அது டாய்லெட் பேப்பரில் இருந்து காஸ்ட்லி டிவி வரை எல்லாமே ஆன்லைனில் செய்கிறார்கள். அமேசான், ebay போன்ற சில ஆன்லைன் ஷாப்பிங் சைட் கள் வித வித ஆபர் போட்டு  மக்களை வசீகரிக்கிறார்கள், தினமும் ஒரு பொருளை வாங்குவது அல்லது வாரத்திற்கு ஏதேனும் ஒரு பொருளை வாங்குவது என்று நிறைய பேர் செய்கிறார்கள். இப்போது துணிமணியில் இருந்து, தோடு ஜிமிக்கி வரை எல்லாம் ஆன்லைனில் கிடைகிறது. அதற்காகவே நிறைய தேடு தேடு என்று ஆன்லைனில் தேடுகிறார்கள் மணிகணக்கில் தேடுகிறார்கள். அமேசன் அக்கவுண்ட் இல்லை எனக்கு என்று சொன்னால் அவரை ஒரு ஜந்துவை போல பார்பவர்கள் அதிகம். 

இதனை போன்ற மோகத்தால் அதிகம் பயனடைபவர்கள், வியாபாரிகள் மற்றும் கிரெடிட் கார்டு நிறுவனத்தினர் மட்டுமே. தேவைக்கு அதிகமாக இதனை போன்ற ஒரு ஷாப்பிங் மோகம் தேவையா என்று தெரியவில்லை.

நன்றி.

5 comments:

ப.கந்தசாமி said...

இதைத்தான கன்சூமரிஸம் என்கிறார்களோ?

சிவக்குமார் said...

எல்லாரும் இப்ப ஃபேஸ்புக்-லிருந்து ஃப்ளிப்கார்ட்-க்கு மாறி விட்டனர்

rahul's thoughts said...

when people buy more,it creates more jobs. Think of 80's,when people don't buy much,jobs are scarce .

ஜோதிஜி said...

அடுத்தடுத்து பட்டாசா போட்டுத் தாக்குறீங்களே? அடுத்து என்னவோ?

வேகநரி said...

நம் நாட்டவரிடம் ஷாப்பிங் மோகம் ரொம்ப அதிகம் தான். இந்தியாவில் நிற்கும் போது இடையில் மலேசியாவோ, ஸ்ரீலங்காவோ போயிட்டு வந்தால் முதல் கேள்வி கேட்பார்கள், நல்லாக ஷாப்பிங் செய்தாயா? திருப்தியா ஷாப்பிங் செய்தாயா?
எனக்கு தேவையானதை தாரளமா இந்தியாவிலே வாங்கி கொள்ளலாம்.
வெளிநாட்டில் இருந்து இந்திய, அல்லது வேறுநாட்டிற்கோ நான் சென்று வந்தபோ அந்த வெளிநாட்டவர்கள் நல்லாக ஷாப்பிங் செய்தாயா? என்ற கேள்வியை கேட்டதேயில்லை. ஆனால் நான் இந்தியாவில் தான் உணவுஅயிட்டங்களை ஷாப்பிங் செய்வது.