Tuesday, April 21, 2015

இந்தியாவில் தனியாக ஒரு பெண்ணால் வாழ முடியுமா?


என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண் அவர். இந்தியாவில் இருந்து இங்கு திருமணம் ஆகி வந்து ஒரு குழந்தை என்று ஆன பின்னர் கணவருக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு கொண்டு விவாகரத்து கொண்டு பிரிந்து விட்டனர். இது நான் கேள்வி பட்ட நான்காவது விவாகரத்து இந்த வருடம். இந்த பெண்ணின் கதை வேறு மாதிரி. கடந்த வருடம் நான் என் தோழியின் வீட்டில் நடந்த வீட்டு வன்முறை பற்றி குறிப்பிட்ட போது ஒரு சிலர் விவாகரத்து கொண்டு பிரிந்து விடலாமே ஏன் இப்படி ஒரு சூழ்நிலையில் வாழ வேண்டும் என்று கேட்டனர். அதே போன்றதொரு சூழ்நிலையில் இந்த பெண் இருந்து இப்போது விவாகரத்து வாங்கி விட்டு கலிபோர்னியாவில் இருந்து எங்கள் ஊருக்கு மாற்றல் ஆகி வந்து விட்டார். மிடில் ஸ்கூல் படிக்கும் பையனோடு.

விவாகரத்துக்கு முன் கணவரிடம் இருந்து பிரிந்து இந்தியா சென்று ஒரு வருடம் அவர் தன மகனுடன் தங்கி இருக்கிறார். அவர் ஆந்திராவை சேர்ந்தவர். ஹைதராபாத் சொந்த ஊர்.  கையில் நல்ல வேலை எடுத்து கொண்டு அவர் சென்று ஹைதராபாத் இல் வீடு தேடி இருக்கிறார். அவரின் பெற்றோர் விஜயவாடா ஊரில் இருந்ததால் அவர் தனியே தங்க வேண்டிய நிர்பந்தம். அவர் விவரித்தது இது. 

முதலில் கணவர் பெயர் இல்லாமல் அல்லது கணவர் வந்து கையெழுத்து போடாமல் வீடு வாடகைக்கு கொடுக்க மாட்டேன் என்று சிலர் சொல்லி இருக்கின்றனர். பின்னர் அவர் என் கணவர் US இல் இருக்கிறார் நான் பையனை படிக்க வைக்க இங்கு வந்துஇருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். பிறகும் சில மாதங்கள் கழித்து அனைவரும் கேள்வி கேட்டு இருக்கிறார்கள். இவர் இதனால் பக்கத்து வீடு எதிர் வீடு என்று யாரிடமும் பேசாமல் இருந்து இருக்கிறார். பின்னர் அவர்களுக்கு விஷயம் எப்படியோ தெரிந்த பின்னரும் அனைவரும் நிறைய புரண் பேசி இருக்கின்றனர்.  ஒரு பெண் தனியாக இருக்கிறார் என்றால் ஆபிஸிலும் சில ஆண்கள் நூல் விட்டு பார்த்து இருக்கின்றனர். நிறைய ஜாடை பேசுவது பெண்களும் இவர் பின்னால் "இவ என்ன செய்தாலோ, வீட்டு காரன் விட்டுட்டு போயிட்டான்" என்ற ரீதியில் பேசி இருக்கிறார்கள். அனைவரும் இவள் நடத்தையை கிண்டல் செய்து இருக்கிறார்கள். எங்கே தப்பு என்ன வென்றெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. எதோ மெல்லுவதற்கு அவல் தேவை.

இந்த பேச்சுகளில் இருந்து தப்ப அவள் தன் பெற்றோரை அழைத்து வந்து தன்னிடம் வைத்து கொண்டு இருக்கிறாள்.  ஆயினும் செல்லும் இடம் எல்லாம் தன்னுக்கும் தன பையனுக்கும் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்த அவள், திரும்பி US வந்து விட்டாள். இங்கு ஒரு வேலை எடுத்து கொண்டு தனியாக வாழ கற்றும் கொண்டு விட்டாள். ஆனால் எங்கு சென்றாலும் இந்தியன் மென்டாலிட்டி ஒரே போல தானே இருக்கும், முன்னால் சிரித்து பேசி பின்னால் புரண் பேசுகிறார்கள், என்னை பற்றி தப்பாக பேசுகிறார்கள், இந்தியன் மக்கள் யாருடனும் சேர முடியாமல் ஒரு வாழ்க்கை என்று வருத்த  பட்டாள். நான் அவளிடம் சொன்னது ஒன்றே ஒன்று தான், "நீங்கள் அந்த வாழ்கையில் இருந்து வெளியே வந்து விட்டீர்கள், எத்தனை சந்தித்து இருப்பீர்கள் என்று என்னால் உணர முடிகிறது. ஆனால் நீங்கள் முதலில் அந்த காகுனில் இருந்து கூட்டில் இருந்து வெளியே வர வேண்டும். என்ன சொல்ல போகிறார்கள், தைரியமாக சொல்லுங்கள், I am a divorcee. முதலில் இவர்களின் ஒபினியன் ஒரு பெரிய விசயமாக பார்க்க வேண்டாம். "You just have one life to live, live it to the fullest". வெளியே செல்லுங்கள், நிறைய மனிதர்களை சந்தியுங்கள், உங்களுகென்று ஒரு வாழ்க்கை அமைத்து கொள்ளுங்கள். டிவேர்ஸ் ஆகி விட்டதால் உங்கள் உலகம் முடிந்து விடவில்லை" என்று சொன்னேன்.  சரி என்று சொல்லி இருக்கிறாள். 

ஆனால் அவளிடம் பேசிய பிறகு எனக்குள் சில எண்ணங்கள். உண்மையில் இந்தியாவில் ஒரு வேலை பார்க்கும், சம்பாதிக்கும் பெண் திருமணம் வேண்டாம் என்று இருந்தாலோ, அல்லது விதவையாகவோ அல்லது விவகாரத்து ஆனவளாகவோ இருந்தாலோ சமுதாயத்தால் எப்படி நடத்தபடுவார்கள். அவளால் ஒரு வாழ்க்கையை எந்த ஆண் துணையும் இல்லாமல் அல்லது பெற்றோர்களின், சொந்தங்களின் சார்பு இல்லாமல் வாழ முடியுமா. ஹைதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களில் அந்த பெண் சொன்னது போன்ற நிலை என்றால் டவுன்களில் அல்லது கிராமங்களில் எல்லாம் என்ன நிலைமை இருக்கும். இந்தியா முன்னேறி இருக்கிறது பெண்களுக்கு "My Choice" போன்ற ஒரு நிலை இருக்கிறது என்று தீபிகா படுகோன்கள் ஒரு புறம் பரப்பி கொண்டு இருக்க, எது உண்மை நிலவரம் என்று அறிய முடியவில்லை. இப்போதும் என் மனதில்  தொக்கி  நிற்கும் ஒரு கேள்வி, "இந்தியாவில் தனியாக ஒரு பெண்ணால் வாழ முடியுமா?  "

நன்றி.

6 comments:

SathyaPriyan said...

India has a long way to go. No is the unfortunate answer to your question. Excellent write up.

ப.கந்தசாமி said...

இந்தியாவில், குறிப்பாக நென் இந்தியாவில் ஒரு பெண் தனியாக வாழ்வது இயலாத ஒன்று.

ஹுஸைனம்மா said...

மிகுந்த வேதனை தரும் விஷயம் இது. விவாகரத்தான என் தோழியும், பல நடைமுறை சிரமங்களுக்கிடையில், ஆரோக்கியக் குறைவும், சேமிப்பே இல்லாத வாழ்வு வாழ்ந்தாலும், இந்தியா வந்து செட்டிலாக விரும்பவில்லை. இதே காரணம்தான். கணவன் கொடுமைக்காரன் என்றபோதும், பழி என்னவோ இவள் மீதுதான்.

இன்னொரு விவாகரத்தான தோழியும், (அமெரிக்கா ரிடர்ன்) இந்தியாவிலிருந்து அமெரிக்கா எப்படியாவது செல்ல துடித்துக் கொண்டிருக்கிறார். இதே காரணம்.

துரத்தி துரத்தி கேள்விகள். அவர்களே முடிவெடுத்து கதை கட்டுதல்; பழகுபவர்களோடு இணைத்துப் பேசுதல்....

அவர்களில் ஒருவர் சொன்னது, என்ன கொடுமைகள் அனுபவித்தாலும் விவாகரத்து மட்டும் செய்துவிடக்கூடாது என்றுதான் நான் பார்க்கும் பெண்களுக்கு அறிவுறுத்துகிறேன் என்று!!! :-(

வருண் said...
This comment has been removed by the author.
முகுந்த்; Amma said...

@Varun

Hope you have read what I suggested to her about ignoring the comments from indian society. I even adviced her to date someone other than indian or south asians..because wherever Indians go..they are the same and not broad minded. According to me Indians are scardy cats and defines themselves according to the needs for society.

I remember a famous quote from Paulo Coelho

" What is normal life?, Getting married, having children, and staying together long after all love has died, saying that it’s for the good of the children (who are, apparently, deaf to the constant rows) and Marrying the first person who offers you a decent position in society. Love can wait."

Deiva said...

I agree with Varun. The situation is same for Single Dad as well in US. Indians are quick to come to conclusion with only one side of the story and going with majority opinion always. They don't look at the facts. AS you have suggested, it is better to stay away from Indians / south asians who are more non-judgemental