Saturday, April 25, 2015

பேஷன் என்பது என்ன?

 கடந்த இரண்டு வாரங்களாக Paulo Coelho வின் "The Winner Stands Alone" படித்து கொண்டு இருக்கிறேன். பேஷன், Cannes film festival, சூப்பர் கிளாஸ் ...என்று பேஷன், சினிமா மற்றும் அதனை சுற்றி நடக்கும் பல கூத்துகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு நாவல் அது. இதனை படித்த பிறகு, நம்ம ஊரு கோடம்பாக்கத்தில் மட்டும் என்று இல்லை எல்லா ஊர்களிலும் அதாவது சினிமா எடுக்கும் எல்லா ஊர்களிலும் ஒரே மாதிரி கூத்துக்கள் தான் நடக்கும் போல என்று அறிந்து கொண்டேன். visibility எதாவது ஒரு producer/director/distributor  கண்ணில் படுவதற்கு என்று சிலர் எடுக்கும்  பிரயத்தனங்களை அதன் விளைவுகளை உரைக்கும் நாவல் இது. சரி இந்த பதிவின் நோக்கம் இந்த நாவலை பற்றியது இல்லை என்றாலும், அதில் உரைக்கப்படும் பேஷன் பற்றியது.

பேஷன் என்று நான் சொன்னவுடன், அது எல்லாம் சினிமா நடிகைகள் மாடல்கள் செய்வது நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைத்தால் அது தவறு. உண்மையில் பேஷன் industry இல் இருந்து ஒவ்வொரு ப்ரோடுக்ட்ம் நம் மீது மறைமுகமாக திணிக்கபடுகிறது. அது நம்மை அறியாமல் நடப்பது. உதாரணமாக பெண்கள் பேஷன்  எடுத்து கொள்ளுங்கள் ஒவ்வொரு வருடமும் அல்லது ஒவ்வொரு 6 மாதமும் ஒரு புது வகை புடவை அறிமுகப்படுத்த படுகிறது. அது, ஒரு படத்தில் ஒரு நடிகை கட்டி வந்தது என்று சொல்லியே விற்கிறார்கள். அது வந்தவுடன் கிட்ட தட்ட அனைத்து இளம் மற்றும் மிடில் ஏஜ் பெண்களும் அதனை வாங்கி விடுகின்றனர். அது அவர்களுக்கு பொருந்துமா, இல்லை உடுத்தும் போது தன்னை அழகாக காட்டுமா என்றெல்லாம் யாரும் கவலை படுவதில்லை. நானும் வங்கி விட்டேன், என்னிடமும் இது உண்டு என்று உலகிற்கு காட்டுவதெற்கே பலர் வாங்குகிறார்கள்.

இந்தியா சென்றபோது கண்டது, பெண்கள் பலரும் tights என்று அழைக்கப்படும் ஸ்டாக்கிங்கை சுடிதார்,  டாப்ஸ் உடன் உடுத்துகிறார்கள், அது ஒரு சிலருக்கு உடலுக்கு வெளியில் பிதுங்கி இருப்பது போல தெரிகிறது..ஆனாலும் அதை எல்லாம் பற்றி யாரும் கவலை இல்லை. இன்னும் ஒரு சிலர் இப்போது பேஷன் ஆக இருக்கும் அனார்கலி மாடல் சுடிதார் அல்லது டாப்ஸ் வாங்குகிறார்கள். இது போன்ற டாப்ஸ் கள் நன்றாக உயரமாக ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு அல்லது நல்ல நீளமான கால்கள் இருக்கும் பெண்களுக்கு அழகாக பொருந்தும்..ஆனால் இதனை உடுத்தும் நடுத்தர வயது பெண்கள் நல்ல குண்டாக அல்லது குட்டையாக காட்சி அளிப்பவராக இருப்பின் அது அவர்களை இன்னும் குண்டாக குட்டையாக காட்டும் என்று அறிவதில்லை. ஒரு சில நேரம் எதோ போர்வையை சுற்றி கொண்டு வருவதை போன்ற ஒரு நினைப்பை தவிர்க்க முடியவில்லை.

அதே போல நகை விசயத்திலும், ஐந்து வருடங்களுக்கு முன் பேஷன் ஆகா இருந்த பல மாடல்கள் இப்போது பேஷன் இல்லை, அதனால் ஒரு சிலர் தன்னுடைய ஓல்ட் டிசைன் நகைகளை மாற்றி புது டிசைன் வாங்கி கொள்ளுகிறார்கள், இதனால் எவ்வளவு கிராம்கள் தங்கத்தை இழக்கிறார்கள் நகை கடை காரர்கள் இதனை எப்படி ஒரு உத்தியாக மாற்றி இருக்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் அறிவதில்லை. ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு வரை அட்சய திருதியையில் தங்கம் வாங்குவது என்பதெல்லாம் இருந்ததில்லை, இதுவும் இப்போது பேஷன் ஆகி விட்டது. அதவாது நானும் அட்சய திருதியையில் தங்கம் வாங்கினேன் என்று காட்டி கொள்ளுவது.  இது ஒரு compulsive buying. தனக்கு தேவையா, பொருந்துமா என்பதெல்லாம் தேவையே இல்லை. அடுத்தவர்கள் வாங்குகிறார்கள் நானும் வாங்குகிறேன்.

இதுவே Paulo வின் கூற்றுப்படி

“Fashion is merely a saying: I belong to your world. I'm wearing the same uniform as your army, so don't shoot.” ― Paulo CoelhoThe Winner Stands Alone

இது இந்தியாவில் என்று இல்லை உலகம் முழுதும் உண்டு. சொல்ல போனால் மேலை நாடுகளில் பேஷன் என்ற பெயரில் ஒவ்வொரு ஆறு மாதமும் நடக்கும் கூத்துக்கள் சிரிப்பை தரும். அதுவும் இந்த பேஷன் மக்கள் குறி வைப்பது டீன் ஏஜ் பெண்களை அதிகம். இங்கு பள்ளிகளில் எல்லாம் யூனிபார்ம் கிடையாது என்பதால் தலயில் இருந்து கால் வரை எல்லா வற்றிக்கும் ஒரு பொருள்களை பேஷன் என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அதனை மாடல்கள், நடிகைகள், பாடகிகள் கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். இது போன்றவற்றுகாகவே Kim Kardashian  போன்ற ஒரு சில குடும்பங்கள்  இருக்கிறார்கள். இவர்களின் வேலையே ஒன்றும் இல்லாத ஒரு பேஷன்ஐ அறிமுகப்படுத்துவது. அதனை compulsive buying ஆக்குவது. எனக்கு சமீபத்தில் மிகவும் எரிச்சல் தந்தது "American Girl" எனப்படும் ஒரு பொம்மை பற்றியது. அது உப்பு பெறாத ஒரு பொம்மை ஆனால் அதை வைத்திருப்பதையே சில pre teen பெண்கள் ஒரு பேஷன் ஆக வைத்து இருக்கிறார்கள். 
ஒவ்வொரு பொம்மையும் $120 முதல் $150 வரை இருக்கும். அதனை தவிர அந்த பொம்மைக்கு grooming என்று பணத்தை அழுக வேண்டும். எப்படி எல்லாம் பேஷன் என்ற பெயரில் மக்களை மாற்றி இருக்கிறார்கள் அவர்களின் மனத்தை சூறையாடுகிறார்கள் என்று நினைத்தால் கடுப்பு வரும்.

முடிவாக நான் சொல்லுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான், உனக்கு ஒரு உடை உடுத்தும் போது comfortable ஆகா இருக்கிறதா?, உடுத்தும் பொது அங்கங்கே பிடிக்காத உனக்கு சூட் ஆகிறது என்றால் வாங்குங்கள். அடுத்தவர்கள் வாங்கி இருக்கிறார்கள்  அதனால் நானும் வாங்க வேண்டும் என்றால் தயவு செய்து வாங்காதீர்கள், ஏனெனில் இது ஒரு முடிவிலி ஆகி விடும். ஒவ்வொரு 6 மாதமும் நீங்கள் இப்படி வாங்கி கொண்டே இருக்கவேண்டும். உங்கள் பெண் குழந்தைக்கும் சொல்லி கொடுங்கள். இப்படி உடை உடுத்தினால் தான், நகை போட்டால் தான் friends பேசுவார்கள் என்று உங்கள் பெண் கூறினால் அவளிடம் சொல்லுங்கள் அப்படிப்பட்ட ஒரு நட்பே நமக்கு தேவை இல்லை என்று. அவர்கள் எல்லாம் false friends. எப்போதும் உங்களுடன் வர மாட்டார்கள் என்று.

நன்றி.