Wednesday, April 8, 2015

இன்ஸ்டன்ட் நூடுலேஸ் என்ன செய்யும் உங்கள் உடலுக்கு?

Maggi, சன்பீஸ்ட்,  Ching's, Ramen என்று வித வித நூட்லஸ் விளம்பரங்கள். இது ஹெல்தி, இது ஹோல் வீட் என்று வேறு சப்பை கட்டு. கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை கட்டாயம் சாப்பிடுகிறார்கள். வேகமாக வேலை முடிவது, பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்கு நல்ல டிபன் என்று பல தாய்மார்களும் செய்து தருகிறார்கள். ஆனால் அது உண்மையில் ஹெல்தியா என்று யாரும் சிந்திப்பதில்லை. Massachusetts General Hospital ஐ சேர்ந்த டாக்டர்  Dr. Braden Kuo அவர்கள் செய்த இன்ஸ்டன்ட் நூடல்ஸ் ஆய்வின் முடிவை பாருங்கள். 

எப்படி இன்ஸ்டன்ட் நூடுல்களை செரிக்க வைக்க குடல் என்ன பாடு படுகிறது என்று கீழ்க்கண்ட வீடியோ தெரிவிக்கிறது.







இன்ஸ்டன்ட் நூடுல்கள் பல நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க tertiary-butyl hydroquinone (TBHQ) என்னும் ஒரு நச்சு தன்மை உள்ள ப்ரிசெர்வேடிவ் சேர்கிறார்கள். இது நம் குடலுக்குள் செல்லும் போது குடலில் செரிக்க வைக்க சுரக்கப்படும் வேதிப்பொருள் களால் இந்த TBHQ வை செரிக்க வைக்க இயலாது, அதனால் இந்த நூடுல்கள் செரிக்கபடாமல் மற்ற பொருள்களையும் செரிக்க விடாமல் எள்ளது உடல் சத்துகளை உறிஞ்ச விடாமல் கெடுகிறது.


TBHQ என்பது ஒரு பெட்ரோலியம் பை ப்ரொடக்ட். வேறு எந்த எந்த பொருள்களில் எல்லாம் இது சேர்க்கபடுகின்றது என்று தேடியபோது கிடைத்த செய்திகள் தலை சுற்றியது. McDonald கடைகளில் கிடைக்கும் சிக்கன் nuggets, Kellogg’s CHEEZ-IT crackers, Reese’s peanut butter cups, Wheat Thins crackers, Teddy Grahams, Red Baron frozen pizza மற்றும் டகோ பெல் பீன்ஸ் என்று தெரிந்த ஐடம்ஸ் அனைத்தும் இந்த TBHQ பதபடுத்தும் பொருளை உபயோகிகிறார்கள்.


இன்னும் என்ன இந்த இன்ஸ்டன்ட் நூட்லஸ் செய்யும் என்று பாருங்கள். ஜர்னல் ஆப் நியூட்ரிசன் ல் வெளிவந்த கட்டுரையின் படி(1), அதிகமாக அதாவது வாரத்திற்கு இரண்டு முறைக்கு அதிகமாக இன்ஸ்டன்ட் நூட்லஸ் சாப்பிடும் பெண்களுக்கு  metabolic syndrome எனப்படும் ஹார்மோன் குறைபாடுகள் வரலாம் என்று கூறுகிறது. அதித எடை, அதிகரிக்கும் ரத்த அழுத்தம்,  அதிகரிக்கும் ரத்தத்தில் சக்கரை அளவு மற்றும் சக்கரை வியாதி


இன்ஸ்டன்ட் நூட்லுஸ் சாப்பிடுவோர் protein, calcium, phosphorus, iron, potassium, vitamin A, niacin,மற்றும்  vitamin C போன்ற உடலுக்கு அத்திவசியமான ஊட்ட சத்துகள் எதனையும் பெறுவதில்லை. அவர்கள் பெறுவது எல்லாம் அதிக உப்பு (கிட்ட தட்ட 2700 மில்லி கிராம் அளவு) மற்றும் அதிக ஆபத்தான கொழுப்புகள் மட்டுமே. இவை ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனை தவிர இந்த இன்ஸ்டன்ட் நூட்லஸ்களில் நிறைய MSG அல்லது அஜினோமோடோ வேறு உண்டு.


சிறு வயதில் இருந்து இன்ஸ்டன்ட் நூட்லுஸ் சாப்பிடும் குழந்தைகளுக்கு  அதிக எடை, சக்கரை வியாதி அல்லது ரத்த அழுத்த  பிரச்சனைகள் வரலாம்.


நூடல்ஸ் ஒரு சத்து இல்லாத அன் ஹெல்தி உணவு, முடிந்த வரை இதனை சாப்பிடுவதை தவிருங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்காதீர்கள்.


நன்றி.



Reference
(1) Instant Noodle Intake and Dietary Patterns Are Associated with Distinct Cardiometabolic Risk Factors in Korea
J. Nutr. 2014 144: 1247-1255first published online June 25, 2014.

7 comments:

ஹுஸைனம்மா said...

இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் என்ற தலைப்பிலல்லாது, “ரெடிமேட் & ஃப்ரோஸன் உணவுகள்” என்ற தலைப்பில் சொல்லிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஃபிரிஸர்வேடிவ்ஸ் எல்லாத்திலயும்தான் இருக்குமே??

முகுந்த்; Amma said...

@ஹுஸைனம்மா said...
"இன்ஸ்டண்ட் நூடுல்ஸ் என்ற தலைப்பிலல்லாது, “ரெடிமேட் & ஃப்ரோஸன் உணவுகள்” என்ற தலைப்பில் சொல்லிருக்கலாமோ என்று தோன்றுகிறது. ஃபிரிஸர்வேடிவ்ஸ் எல்லாத்திலயும்தான் இருக்குமே??"

This is about the instant noodles only, because they have lots of sodium and MSG and the Journal of nutrient paper is also about the noodles consumption and metabolic syndrome issue in women and the study conducted was on Ramen instant noodles,. so, although it would make perfect sense to change the title, I would still stick to it, because of the video content and journal reference. :-)

Thanks for the suggestion though.

வேகநரி said...

இந்த இன்ஸ்டண்ட் நூடுல்ஸ்சை ஏதோ சத்துணவு மாதிரி நினைத்து முன்பு சாப்பிட்டிருக்கேன் :(

Anna said...

Instant noodles நிச்சயமாக‌ ஒரு போஸாக்கு நிறைந்த உணவு இல்லை. அதில் மாற்றுக்கருத்து இல்லை. வேறு சத்தான உணவுகளை விட்டு, இதை மட்டுமே அடிக்கடி சாப்பிடுவதால் தீமையே விளையும்.

ஆனால் உங்களின் TBHQ பற்றிய கருத்துகளிலிருந்து மாறுபடுகிறேன்.

"tertiary-butyl hydroquinone (TBHQ) என்னும் ஒரு நச்சு தன்மை உள்ள ப்ரிசெர்வேடிவ் சேர்கிறார்கள்."
நஞ்சு is a bit of a stretch for TBHQ - don't you reckon? "அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும்." In that sense, even water will be poison if you overdose yourself. DOSE MAKES THE POISON. FDA has approved 0.02% of the total fat content, which is way way below the amount you need for it to be poison. நீங்க‌ள் 62 ப‌க்க‌ட்டுக‌ளுக்கு மேல் ஒரே த‌ட‌வையில் சாப்பிட்டால் ம‌ட்டுமே safety level ஜ‌த் தாண்டுவீர்க‌ள்.


"TBHQ என்பது ஒரு பெட்ரோலியம் பை ப்ரொடக்ட்". :(
TBHQ is a synthetic chemical which has a butyl moiety. That does not mean it is made from butane. Butter has a butyl a butyl moiety as well! Just like butter TBHQ is not a lighter fluid. It would be like syaing water is a lighter fluid because it has hydrogen and oxygen.

Sorry - got to run. I'll come back to the referred article later.

Anna said...

The authors should have titled the article as ‘Dietary Patterns are associated with Distinct Cardiometabolic Risk Factors in Korea’ and left the 'Instant Noodle intake' out, because the title will likely lead the reader to assume conclusions before critically analysing the article.

First up – there are many problems with studies using dietary recall data. For a brief read through – here’s one link- The Challenges and Failures of Nutrition Studies.
. Mainly there are self-reporting biases and many compounding variables that could affect the analysis and results. In addition – media loves sensationalizing any potentially over the top results – which then end up the only view that reaches the public.

One of the findings that they did not highlight in their abstract is “The meat and fast food group (MP) quintiles as a group (quintiles 2–5) had marginally increased odds for metabolic syndrome compared with the lowest MP quintile (quintile 1) in men but not in women." Which is interesting.

People who have consume a lot of instant noodles also intake ridiculous amount of sodium. If there are going to be poisoned by anything, sodium would be the number one culprit, not TBHQ. In addition, as the paper says, “Participants who frequently consumed instant noodles (≥2 times/wk) and those in the highest quintile of the MP were younger, more likely to be current smokers, drink more alcohol, be less physically active, and have low carbohydrate intake in both genders.” In addition, they also earn less. Hence they might not be able to afford to eat healthy.

All of those factors will be interacting with each other and with genetics – which the authors do not go into at all.

The authors discuss BPA as a potential reason for the sex differences. But there’s no evidence for it as well. It’s also strange that, “adjustment by sodium intake, estrogen use, menopause, or waist circumference also did not change the positive relation between instant noodle intake ≥2 times/wk and metabolic syndrome in women”. If BPA was to make a difference, surely menopause will.

I agree with their points in the discussion “The combined effect of high energy, high glycemic loads with refined carbohydrates, high saturated fat content, and high sodium may contribute to an increased risk of metabolic syndrome and abdominal obesity.”

“Biologic differences between men and women such as sex hormones and metabolism, gender-specific cutoff values in abdominal obesity and metabolic syndrome components, different food group compositions between men and women in their dietary patterns, and social desirability and differences in the accuracy of food reporting and in distribution of confounding factors across dietary patterns in each gender might contribute to gender differences.”

Overall take home message should be eat healthy – Don’t eat junk food frequently.

Anna said...

BTW, Have you read this?

Food Additive TBHQ May Protect from Avian Influenza Virus H7N9.

முகுந்த்; Amma said...

@Anna, thanks for the detailed explanations about the study, I will give a look at those stuff you sent. Especially the one with TBHQ and H7N9, very interesting. :)