அமெரிக்காவில் ஒரு நம்பிக்கை உண்டு, french paradox என்று அது அழைக்கபடுவதுண்டு, அது எல்லா பிரெஞ்சு மக்களும் ஸ்லிம் ஆக பிட் ஆக இருப்பார்கள் என்பது. இது அவர்களின் ஜெனெடிக் ஆ, இல்லை லைப் ஸ்டைல் ஆ என்று பலர் குழம்புவார்கள்.
இப்போது மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது..ஆனால் ஒரு 10 வருடத்திற்கு முன்பு வரை, குண்டான obese பிரெஞ்சு, ஜெர்மன் பெண்கள் யாரையும் நான் பார்த்ததில்லை. சொல்ல போனால், அவர்கள் நிறைய முறை சாப்பிடுவார்கள் ஒவ்வொரு முறை சாப்பிடும் போதும் வைன் குடிப்பார்கள். பின்னர் எப்படி இப்படி ஒல்லியாக இருக்கிறார்கள் என்று விவாதம் நடக்கும்.
என்னுடைய பர்சனல் பிரெஞ்சு சாப்பாட்டு அனுபவம் இங்கே. நான் ஒரு முறை கருத்தரங்கிற்காக ஆக ஓரு நாள் Strasbourg, France இல் தங்கி இருக்கிறேன். அப்போதுஎங்கள் ஹோஸ்ட் ஆக இருந்த ஒரு குடும்பம் ஒரு நாள் இரவு சாப்பாடிற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அது இரவு சாப்பாடு அல்ல விருந்து, சொல்ல போனால் 5 மணியில் தொடங்கிய அது 10 மணி வரை நீண்டது. 7 கோர்ஸ் சாப்பாடு அது
L’Apéritif/Hors-d’œuvres (finger food),
L’Entrée (Appetizer),
Salade( Salad),
Le Plat Principal/Plat de Résistance (The Main Dish),
Fromages (Cheese desert) ,
Dessert (Crème brûlée)
le café
ஒவ்வொரு சாப்பாடு முடியும் போதும் ஒரு புது வைன் பாட்டில் ஓபன் செய்வார்கள். கிட்ட தட்ட எல்லா சாப்பாடும் அவர்கள் வீட்டில் விளைந்த காய்கறி, பழங்கள் கொண்டு அல்லது பக்கத்து உழவர் சந்தையில் வாங்கியவை. அவ்வளவு சுவையான தக்காளிகளை நான் வேறு எங்கும் சாப்பிட்டதே இல்லை. மாமிச பட்சினியாக இருந்து வெஜிடரியன் ஆக நான் ஆன புதிது வேறு அப்போது..வேறு எந்த மாமிச உணவுகளை நான் சாப்பிட முடியாமல் போனாலும், நிறைய வெஜிடேரியன் ஆப்சன்ஸ் எனக்கு இருந்தது. அதுவும், என்னால் அவர்களின் Duck Confit சாப்பிட முடியாமல் போனதே என்று பின்னர் வருந்தியதுண்டு. இப்படி வித விதமாக சாப்பிட்டாலும் எப்படி அவர்களால் ஒல்லியாக இருக்க முடிகிறது என்று பாப்போம்.
முதலில் அவர்கள் கொடுக்கும் போர்சன் மிக மிக குறைவு, அடுத்து, அவர்கள் சாப்பிடுவது ஒரு கடமையாக அவசர கதியாக சாப்பிடுவதில்லை. மாறாக, எல்லோரும் சுற்றி அமர்ந்து கொண்டு பேசி கொண்டு, சிரித்து கொண்டு சந்தோசமாக ரசித்து சாப்பிடுகிறார்கள். 7 கோர்ஸ் சாப்பாடு என்றாலும் ஒவ்வொரு கோர்ஸ்ம் ஒரு கை அளவு தான் இருக்கும். பிங்கர் பூட் என்றாலும் எண்ணையில் பொரித்த உணவுகளை பார்க்கவே முடியாது. நிறைய BBQ செய்து இருப்பார்கள், அல்லது baking செய்து இருப்பார்கள். நிறைய காய்கறிகள் சாலட் ஆக வந்து சேரும். நிறைய சீஸ் வகைகள்..அனைத்தும் சொந்த பார்ம் இல் இருந்து வந்தவை அல்லது பக்கத்தில் இருக்கும் உழவர் சந்தையில் இருந்து வந்தவை. அதுவும், குறிப்பாக Brie சீஸ் எனக்கு மிகவும் பிடித்தது. எல்லாமே லிமிட் தான், நிறைய வைன் குடிப்பார்கள் போல என்று எண்ண வேண்டாம், அதுவும் max இரண்டு கிளாஸ் மேலே போகாது. ஆற அமர அமர்ந்து ரசித்து ருசித்து சாப்டுவார்கள.
அடுத்து அவர்களை போலே, உடற்பயிற்சி செய்பவர்களை பார்க்க முடியாது. அதற்காக தினமும் ஜிம் செல்வார்கள் என்று நினைக்க வேண்டாம். பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளில் நிறைய பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட் உண்டு என்பதால் கார் உபயோகிப்பவர்கள் மிகவும் குறைவு..அதுவும் நிறைய பிரெஞ்சு மக்கள், நிறைய நடப்பார்கள், அல்லது சைக்கிள் உபயோகிப்பார்கள். எல்லா வீட்டு வேலைகளையும் செய்வார்கள், வேலைகாரி என்ற கான்செப்ட் இல்லவே இல்லை, நிறைய தோட்ட வேலை செய்வார்கள். நிறைய வீடுகளில் காய்கறி தோட்டம் உண்டு. junk food என்பது மெட்ரோ ஊர்களில் வேண்டுமானால் இருக்கும்..ஆனால் மற்ற எல்லா ஊர்களிலும் இன்னும் junk food ஆக்கிரமிக்கவில்லை.
சரி இப்போது என்னுடைய கடந்த பதிவிற்கு வருவோம். இந்திய உணவு பழக்க வழக்கத்திற்கும் இதற்கும் இருக்கும் இரண்டு பெரிய வித்தியாசம் உண்டு, ஒன்று..போர்சன் கண்ட்ரோல், இரண்டு உடற்பயிற்சி..அதோடுஇன்னும் சிலதும் சேர்த்து கொள்ளலாம், பொரித்த உணவுகள் அறவே இல்லை, அவசர கதியில் யாரும் சாப்பிடுவதில்லை. நம்ம ஊரில் ஒன்று சொல்லுவார்கள், "நொறுங்க தின்றால் நூறு வயது என்று", அது நிறைய சாப்பிட வேண்டும் என்று அர்த்தமில்லை, மாறாக , நன்றாக மென்று ரசித்து சாப்பிட வேண்டும் என்பதே. அதுவே பிரெஞ்சு மக்களின் பிட்னெஸ் ரகசியம் என்று நான் நினைக்கிறன்.
நன்றி.

2 comments:
நீங்கள் சொல்வது ரொம்பவும் சரி. நம்மூரில் 'சாப்பிடுவது என்பது ஒரு வேலை!' வீடுகளில் சாப்பிட்டால் ஒரு வேலை ஆகும் என்று சொல்லித்தானே எல்லோரையும் சாப்பிடக் கூப்பிடுகிறோம்.
அதேபோல குண்டாக இருப்பவர்கள் மட்டுமே ஜிம் போகவேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற கான்செப்ட் நம்மூரில்.
I live in quebec province in Canada. here also the same tradition for food. They drink lot of wines,and salads are very famous .
Post a Comment