ரஷ்சிய எழுத்தாளர் Fyodor Dostoevsky அவர்களின் நாவல் இது. இவரின் இன்னொரு நாவலான crime and punishment போல மிக பிரபலமானது இல்லை என்றாலும், மனிதரின் உணர்வுகளை படம் பிடித்து காட்டுவதில் இது மிக சிறந்த நாவல்.
ஒருவர், தன்னை சுற்றி இருப்பவர்கள் எல்லாரும் நல்லவர்கள் என்று நம்பினால் , பேசினால், உண்மையாக இருந்தால் அல்லது உதவி செய்தால், நம் ஊரில் என்ன சொல்லுவார்கள் அவர்களை. . "வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிறான் பாரு, பிழைக்க தெரியாதவன்".
அடுத்து ஒருவர் , ஒரு குறிக்கோளுடன் "இப்படி தான் வாழ்வேன்" என்று தன் கொள்கையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் நடக்கிறான் என்று வைத்து கொள்ளுங்கள். அவரை எப்படி இந்த சமூகம் சொல்லும், "ஊரோடு ஒத்து வாழாதவன்" என்று முத்திரை குத்தும்.
அடுத்து ஒருவர், தன் மனதில் இருப்பதை வெளியில் கொட்டி விடுகிறார் என்று வைத்து கொள்ளுங்கள், straight forward ஆக, எதனையும் மறைக்கவோ, beating around the bushes ஆகவோ இல்லாமல் இருந்தால், அவரை என்னவென்று இந்த சமூகம் சொல்லும். "வாழ தெரியாதவன், எதை எப்படி பேசணும் எதை சொல்ல கூடாதுன்னு கூட தெரியாதவன்" என்று.
மேலே குறிப்பிடப்பட்ட பல குணாதிசயங்கள் அனைத்தும் நிறைந்த ஒருவர் தான் "பிரின்ஸ்" என்றழைக்கபடும் "மிஸ்கின்", "தி இடியட்" கதையின் கதாநாயகன். அதாவது, ஒருவரி வெள்ளந்தி மனிதராக இருப்பின் எப்படி சமூகத்தால் நடத்தபடுவார், உபயோகிக்கபடுவார் பின்னர் சக்கையாக தூக்கி எறியப்படுவார் என்பதை விளக்கமாக சொல்வது இந்த நாவல்.
அடுத்து ஒருவர் மனதில் எவ்வளவு எண்ணங்கள் இருப்பினும் வெளிப்படுத்தாமல் அல்லது பிரச்சனையை சந்திக்கவிரும்பாமல் நமக்கு ஏன் அப்பா வம்பு, இது பெரிய இடத்து சமாசாரம், கிடைக்கிறவரை சுருட்டிட்டு விலகி ஓடி விடுவோம் என்று இருப்பவர்கள், இந்த சமூகம், ஊரோடு ஒத்து வாழ தெரிந்தவன், அல்லது பிழைக்க தெரிந்தவன் என்று சொல்லும். இது போன்ற ஒருவன் ""Rogozhin",
அடுத்து பவர் மற்றும் பணம் வைத்து இருப்பவர்கள் "Super class" மக்கள். அவர்கள் எந்த சூழலையும் தன் வசம் இழுக்க பார்பார்கள், அல்லது வளைக்க பார்பார்கள், அவர்கள் வசம் பணம், பதவி எல்லாம் உண்டு. இவர்கள் தான் ரஷ்யன் "Aristocrats".
இது 19ஆம் நூற்றாண்டு ரஷியன் high society மக்கள் கொண்டு அவர்களின் எண்ணங்கள், mindset கொண்டு எழுதப்பட்டது என்றாலும், இன்றைய சமூகத்திற்கும், சூழலுக்கும் கூட அழகாக பொருந்தும்.
டிஸ்கி
இது நாவல் பற்றிய என்னுடைய அனுமானிப்பு மட்டுமே, இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை.
நன்றி.
1 comment:
//இதில் எந்த உள்ளர்த்தமும் இல்லை//
எந்த உள்ளர்த்தமும் இல்லை, இல்லவே இல்லை. நாங்கள் நம்புகிறோம்.
Post a Comment