Friday, May 22, 2015

IT Outsourcing to india என்னும் ஒரு தலைவலி

Pictures from Google images

எங்களுக்கு தெரிந்த அமெரிக்கர் அவர், எப்போதும் எங்களுடன் டென்னிஸ் விளையாடுவார். புது ஸ்டார்ட் அப் கம்பெனி கடந்த வருடம் தொடங்கி இருந்தார். அப்போது Back end and website மற்றும் சில சப்போர்ட் வேலைக்களுக்கு இந்தியன் கம்பெனி ஒன்றிடம்  Outsourcing செய்ய இருப்பதாக சொல்லி இருந்தார். 6 மாதத்திற்கு பிறகு, நேற்று டென்னிஸ் விளையாடும் போது, எப்படி இருக்கிறது outsourcing என்று கேட்டது தான் தாமதம். அழுகாத குறையாக பெரிய லிஸ்ட் படித்து விட்டார்.

அவர் சொன்ன சில காரணங்கள் இங்கே.


  1. முதலில், நேர வித்தியாசம்.பெரிய  சாப்ட்வேர் கம்பனிகள் இந்த நேர வித்தியாசம் கருத்தில் கொண்டே 12 மணி முதல் 10 மணி வரை ஆபிஸ் நடத்தினாலும், சிறு சிறு நிறுவனங்கள் இன்னும் இதனை adapt செய்யவில்லை என்பதாலும், மிக குறைந்த மக்கள் கொண்டு இயங்குவதாலும், ஒரே ஆளுக்கு வேலை பளு அதிகம் கொடுகிறார்கள் அல்லது, பல ப்ராஜெக்ட் வேலையை ஒருவரிடம் கொடுகிறார்கள், அதனால் இங்கே காலை என்னும் போது அங்கே மாலை நேரம் என்பதால் வேலை பார்க்க ஒரு உற்சாகம் இருப்பதில்லை. 
  2.  ப்ராஜெக்ட் ப்ரோபோசல் முடிந்தவுடன் நம் வேலைக்கு என்று assign செய்யப்படும்  ப்ராஜெக்ட் மேனேஜர் களும், developers ம் , அதிகம் சப்ஜெக்ட் தெரியாதர்கள்,  வேலை செய்யும் டெவெலொபெர் எல்லாம் காலேஜ் ப்ரெஷ் மென் என்பதால் ஒரு அனுபவத்திற்க்காக என்றே வேலைக்கு சேர்கிறார்கள், வேலைக்கு முன் அனுபவங்கள் இருப்பதில்லை.  அதனால் வேலை பற்றி ஒவ்வொரு முறையும் அவர்களிடம் சொல்லி புரிய வைக்க மிகவும் கஷ்டபட வேண்டி இருக்கிறது, இதோடு நேர வித்தியாசமும் சேர்ந்து தலைவலி கொடுகிறது.
  3. அடுத்தது, taking responsibility. அதாவது, ஒரு வேலையை நாம் assign செய்தோம் என்றால், அது நம் வேலை போல என்று எடுத்து, தொடக்கம் முதல் கடைசி வரை யோசித்து வேலை செய்து முடித்து தருவதில்லை. நாம் என்ன என்ன எழுதி தருகிறோமோ அதனை மட்டுமே செய்வது. ஒரு சிறு வார்த்தைகள், தவறி இருப்பினும் அல்லது குறிப்பிட படாமல் இருப்பினும், "நீங்கள் அதில் குறிப்பிடவில்லை, அதனால் நாங்கள் செய்து தர வில்லை" என்று சால்சாப்பு சொல்லுவது. 
  4. அடுத்தது, excuses சொல்லுவதில் இந்திய outsourcing கம்பனிகள் சிறந்தவை. அதாவது, முந்தய பாராவில் குறிப்பிட்டது போல, நீங்கள் சரியாக requirements கொடுக்கவில்லை, என்று ஆரம்பிப்பதில் இருந்து, எனக்கு எதுவும் இதனை பற்றி தெரியாது...நீங்கள் என் மேனேஜர் இடம் கேளுங்கள்..அல்லது டெஸ்டிங் மக்களிடம் கேளுங்கள்..என்று கையை காட்டுவது. 
  5. அடுத்த முக்கியமான பாயின்ட் , "Yes" என்ற வார்த்தையை உபயோகிப்பது, அதன் அர்த்தம் வேறாக இருப்பது. உதாரணமாக, We need to have this in production by the end of the month" என்று சொல்லி இருக்கிறீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள், அவர்கள் அதற்க்கு "yes" என்று பதில் சொல்லுவார்கள். அதற்க்கு அர்த்தம், "கட்டாயம் முடித்து விடுவோம்" என்பதல்ல, மாறாக, "நீங்கள் சொன்னது எங்கள் காதில் விழுந்தது" என்பது மட்டுமே.இந்திய கம்பனிகளுக்கு "no" என்று சொல்லவே தெரிவதில்லை.
  6. முடிவாக, இப்படி நம்மிடம் ப்ராஜெக்ட் ப்ரோபோசல் செய்து நம்மிடம் outsourcing அக்ரீமெண்ட் வாங்கும் இந்திய கம்பனிகள் எல்லாமே, ரொம்ப ஸ்ட்ரீட் ஸ்மார்ட். அதாவது வேலை ஆர்டர் வாங்கும் வரை இருக்கும் சின்சியாரிட்டி, வேலை முடித்து கொடுப்பதில் இருப்பதில்லை, வேலை கொடுத்து பல மாதங்கள் ஆகினும்  சிறிது கூட வேலை நடந்து இருக்காது. என்ன என்று கேட்டாலும் நிறைய excuses, pointing பிங்கர்ஸ் டு others என்று நிறைய. "They are so greedy , I wont trust them"
இது ஒரு குறிப்பிட்ட மனிதரின் சாப்ட்வேர் outsourcing  அனுபவங்கள் என்று மட்டும் என்னால் தள்ள இயலவில்லை. ஏனெனில், என்னுடைய சொந்த அனுபவமும் ஒரு சில நேரங்களில் இப்படி தான் இருக்கிறது. என்னுடைய ப்ரெண்ட் ஒருவரின் வெப்சைட் உருவாக்க என்று ஒரு ப்ரீ-லான்ஸ் கம்பெனி  ஒன்றிடம்  outsource செய்து இருந்தோம். முதலில் அவர்கள் கேட்கும் ரேட் இல் இருந்து, அவர்கள் கொடுக்கும் output வரை பார்த்தால். பேசாம, இங்கே இருக்கிற ஒரு ஸ்டுடென்ட் எடுத்து அவருக்கு இன்டர்ன்ஷிப் பணம் கொடுத்து அழகா முடிச்சிடலாம் என்று தோன்றி விட்டது. இல்லை, இங்க இருக்கிற ப்ரீலான்ஸ் dev யாரையாவது பிடிச்சு வேலை முடிச்சிடலாம்னு தோன்றிவிட்டது. காசு கொஞ்சம் கூட போனாலும், product output ஆவது, ஒழுங்கா வரும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டோம்.

அவர் சொன்னதை நானும் என் சொந்த அனுபவத்தில் வழி மொழிகிறேன். "Some Indian IT outsourcing companies are so greedy and I won't trust them"


டிஸ்கி 

இது என் சொந்த அனுபவத்திலும், தெரிந்தவர்கள் அனுபவத்திலும் குறிப்பாக Software outsourcing வைத்து மட்டுமே எழுதப்பட்டது.  பொதுப்படையானது அல்ல.

நன்றி  

6 comments:

Deiva said...

I have dealt with Bigger companies such as IBM, TCS, Wipro etc. for outsourcing multi-million dollar assignments. I am in agreement with you on most of the points.

இராய செல்லப்பா said...

நீங்கள் குறிப்பிடுவது சிறிய ஐ.டி கம்பெனிகளைப் பொறுத்தவரை உண்மைதான். Timely Delivery என்பது இங்கு நடப்பதில்லை. Project Manager பெரும்பாலும் பொறுப்புணர்ச்சி உடையவராக இருப்பதில்லை. இது வங்கி அதிகாரியாக இருந்த என் சொந்த அனுபவம்.- இராய செல்லப்பா சென்னை.

Avargal Unmaigal said...

இந்தியன் கம்பெனிகளை மட்டும் greedy என்று சொல்லுவது தவறு அமெரிக்கன் கம்பெனிகளும் greedy தான் அதனால்தான் இங்கு வேலை பார்க்கும் மக்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு சீப் லேபருக்கு இந்தியா போன்ற கம்பெனிகளிடம் அவட் சோர்ஸிங்க பண்ணுகிறார்கள்... நீங்கள் குறிப்பிட்ட நண்பர்கள் மிக மிக சீப்பான லேபர் காஸ்ட்டுக்கு துக்கடா கம்பெனிகளிடம் அவுட் சோர்ஸிங்க பண்ணக் கொடுத்து இருக்கிறார்கள் அதனால்தான் மிக கசப்பான அனுபவம்

ஆரூர் பாஸ்கர் said...

சிறிய ஐ.டி கம்பெனிகளைப் பொறுத்தவரை உண்மைதான். All coming down to hiring/retaining quality,experienced resource in small companies.

வருண் said...

Like MT says, we need to analyze this carefully. Why do one outsource? Because they want to make more profit for their investment. When you want something cheap, the quality will usually go down south. There wont be any warranty either. That does happen in US too. If you go buy something in dollar shop, the quality will be low. Going for cheap labor and complaining about quality and talking about guaranteed time-frame and dead-line and all does not make much sense. I wish the Americans take this lesson seriously and stop outsourcing instead of crying and bitching and saying Indians lack work ethics or punctuality or blah blah blah.

முகுந்த்; Amma said...

Varun,

To answer you and MT, I would like to take the situation of our friend who outsourced to India for front end design.

First, he had a startup with very less seed money, he wanted to show something to the investors for raising more money. Being an indian himself, he thought it would be beneficial for him as well
As the small IT freelance firm he hired.
But it all went haywire.. You know what he did finally, he outsourced the same thing to Turkey, slightly higher rate but the product output was great. So the competion is across the globe. If the companies in India are doing a sloppy job then it's easy for US companies to shift to Brazil, Philippines and Turkey..