எங்கும் எதிலும் டியாபெடிக்ஸ்..சுகர் என்ற வார்த்தை இப்போது எங்கும் நீக்கமற இந்தியாவில் நிறைந்து இருக்கிறது. 30-35 வயது மக்களுக்கு எல்லாம் இப்போது சுகர் வருகிறது. என் பெரியம்மா பெண் அவர், 39 வயதாகிறது அதற்குள் டியாபெடிக்ஸ், அதற்கென்று மருந்து உட்கொள்ளுகிறார்.
முன்பெல்லாம் 60 வயது மக்களுக்கு அதிகம் வரும் என்று நம்பப்பட்ட இது இப்போதுமிடில் ஏஜ் மக்களையும் அதிகம் ஆட்டி படைக்கிறது. நமது உணவு பழக்க வழக்கம், அதிக உடல் உழைப்பு இல்லாத ஓடி ஆடி உழைக்காத வாழ்க்கை முறை என்பதையும் தாண்டி மக்களுக்கு இதில் இருக்கும் மூட நம்பிக்கைகள் ...தலை சுற்றும்.
உதாரணமாக..என் அம்மாவுக்கு டியாபெடிக்ஸ் இருக்கிறது. தினமும் என்ன சாப்பிட்டார்கள், என்று நான் கேட்பது உண்டு. உடனே அவர்கள் சொல்லுவது, நான் இப்போது சப்பாத்தி தான் சாப்பிடுறேன், இல்ல ஓட்ஸ் குடிக்கிறேன்..அப்படியும் சுகர் குறைய மாட்டீங்கிறது என்பார்கள். ஆனால், நான் திரும்ப திரும்ப அவர்களிடம் சொல்லுவது ஒன்று தான்..."எது சாப்பிட்டாலும், அளவோட சாப்பிடுங்க..கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க..ஒரே நேரத்தில நிறைய சாப்பிடாதீங்க, நிறைய தானியம், பருப்பு வகைகள், நிறைய காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 3 வேலையாக சாப்பிடாமல் 6 வேலையாக சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்". எல்லாம் சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்கு தான்.
சுகர் இருப்பவர்கள் "கார்போஹைட்ரேட் குறைவாக அல்லது அறவே சாப்பிட கூடாது", அரிசியில் இருப்பதை விட, கோதுமையில் சிறிது குறைவாக கார்போஹைட்ரேட் இருக்கிறது என்பதற்காகவே, இப்படி சாப்பிட சொல்லுகிறார்கள்" ஆனால் நம் மக்கள் செய்வதென்ன, அரிசி தானே சாப்பிட கூடாது, என்று, சப்பாத்தி, ஓட்ஸ் என்று வளைத்து கட்டி சாப்பிடுகிறார்கள். போர்சன் கண்ட்ரோல் இல்லாமல் அதிகம் சாப்பிடும் போது, ரத்தத்தில் சுகர் அளவு சூட் அப் ஆகும். உடனே மயக்கம் வரும்.
அடுத்தது உடல் உழைப்பு அல்லது நடை பயிற்சி கட்டாயம் தேவை. இதில் இப்போதெல்லாம்...நடை பயிற்சி செய்வதெல்லாம் எதோ பாஷன் போல...சும்மா ரெண்டு தெரு நடந்துட்டு வந்து..ஆச்சு என்று கணக்கு காட்டுவது. வேர்வை வர நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும். சும்மா நானும் போனேன்..நடந்தேன் என்று யாருக்காகவோ செய்கிறார்கள்.
அடுத்து டியாபெடிக்ஸ் என்று டாக்டரிடம் சென்றால் நடக்கும் கூத்துகள்..ஐயோ என்று இருக்கும். இப்படி இவர்கள் செல்லும் டாக்டேர்கள் எல்லாம் Endocrinology Specialist அல்ல, மாறாக, பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள். இவர்கள் பெரும்பாலும் செய்வதென்ன? . முதலில் சிம்பிள் சுகர்
ஸ்ட்ரிப் டெஸ்ட் எடுப்பார்கள்.அதில் வரும் நம்பர்களை வைத்து 140 தான் இருக்க வேண்டும்..உங்களுக்கு 200 இருக்கிறது, அதனால மருந்து போடணும் என்பார்கள். Hemoglobin A1c டெஸ்ட், dialated eye exam என்று பலதும் டெஸ்ட் செய்வதில்லை. பின்னர் தங்கள் கிளினிக்க்கு மெடிக்கல் சேல்ஸ் ரெப்ரெசெண்ட்டிவ் கொண்டு வந்து தரும் மருந்துகளை இவர்களுக்கு எழுதி தருவது. அதுவும் ஒரு சில நேரங்களில் இவர்கள் எழுதி தரும் மருந்து அவர்கள் வைத்திருக்கும் மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும். வேறு எங்கும் கிடைக்காது. "இதை 3 மாசம் சாப்பிடுங்க, குறையுதான்னு பார்க்கலாம், இல்லாட்டி வேற மருந்து மாத்திரலாம்" என்று சொல்லியே கொடுக்கிறார்கள்.
மக்களும், அதான் மருந்து போடுறோம்ல சுகர் ஏறாது என்று, வளைத்து சாபிடுகிறார்கள். அடுத்து 3 மாதம் கழித்து மறுபடியும் ஒரு ஸ்ட்ரிப் டெஸ்ட், மறுபடியும் மருந்து மாற்றம். டாக்டர்கள் ஒரு சில நேரம் இப்படி trial அண்ட் error செய்ய அல்லது எங்கள் துறையில் "கிளினிகல் ட்ரயல்" அல்லது மக்களிடம் சோதனை செய்வது. அதற்க்கு இப்படி அப்பாவி பொது மக்களை அதிகம் படிப்பறிவு இல்லாத மக்களை உபயோகிப்பது.
என் அம்மா எப்போது இங்கே வந்தாலும் இங்கு இருக்கும் மருத்துவரிடம் புல் செக் அப் செய்ய அழைத்து சென்று விடுவேன். அவர்கள் உடனே செய்வது, இந்தியாவில் இருந்து அவர்கள் எடுத்து வரும் சுகர் மாத்திரைகளை தூக்கி எறிவது தான். அதுவும் ஒரு தமிழ் டாக்டர் அம்மா இங்கே இருக்கிறார்கள்,அவர்கள் தமிழிலேயே என் அம்மாவிடம் மாத்திரை கொடுத்தவர்களை திட்டுவார்கள். ஏன் இப்படி ஒரு மருந்து கொடுகிறார்கள் என்று. முழு செக் அப் எதுவும் செய்யாமல், அதிக டோஸ் அல்லது குறைந்த டோஸ் என்று நடக்கும் பல கூத்துகள், அதோடு மக்களுக்கு இருக்கும் மிக அதிக மூட நம்பிக்கைகள் எல்லாம் சேர்ந்து எங்கும் எதிலும் சுகர் என்னும் வார்த்தை நீக்கமற நிறைய உதவுகிறது.
நான் மருந்து கொடுக்கும் மருத்துவர்களை இங்கே குறை சொல்லவில்லை, அவர்கள் எக்ஸ்பெர்ட் அல்லர்..அவர்களால் முடிந்தவரை செய்கிறார்கள்..ஆனால் இது எந்தவிதத்திலும் மக்களுக்கு உபயோகபடாது என்பதே என் எண்ணம்.
நன்றி.

17 comments:
நோயாளிகளுக்கும் தங்கள் நோயைப் பற்றிய ஒரு தெளிவு வேண்டும்.டாக்டர்களுக்கு பணம் வேண்டும். அவ்வளவுதான்.
பருப்பும் கார்போஹைட்ரேட்தான் அமெரிக்காவில! Lentils are considered carbohydrates in the US.
@kalai van
Lentils have low glycemic index and they are suggested for low carb diets
Please refer
http://lowcarbdiets.about.com/od/CarbsInGrains/a/Carbs-In-lentils.htm
நான் ஒருவருடம் மாத்திரை ஏதும் சாப்பிடாமல் இருந்துவிட்டேன் ஆனால் இப்போ ஒழுங்ககாக தொடர்கிறேன் சுகர் கண்ட்ரோலில்தான் இருக்கிறது..... ஒரு நாளைக்கு 5 முதல் 7 மணிநேரம் நடைதான், காரணம் வேலை பாடி.வீட்டிலும் அனைத்து வேலைகளையும் நான் பார்ப்பதால் .நான் உட்காருவது என்பது பதிவு எழுதும் நேரத்தில் மட்டுமே
பலர் மது குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று கூக்குரல் இட்டுவிட்டு சாப்பாட்டை வளைத்து கோபரம் போல வளைத்து கட்டி அடிப்பார்கள் அதை பார்க்கும் போதுதான் எனக்கு சிரிக்க தோன்றும்
அமெரிக்காவில் பருப்பு கார்போஹட்ரேட் என்று யார் சொல்லுகிறார்கள்? பருப்பு வகைகளில் ஹைகுவாலிட்டி புரதமும், பதிவர் சொன்னது போல உடல்நலம் பயக்கும் கார்போஹைட்ரேட்டுகளும் (+ ஃபைபர்) உண்டு.
www.pulsecanada.com/uploads/ff/28/ff280f2f10206d5a53a241ef6e2e2d25/USA_PC_protein_fact_sheet_p6.pdf
புரதம் மட்டும் வேண்டுமானால் புரோட்டீன் பவுடர் சாப்பிடலாம் - இல்லை அமெரிக்கனுக மாதிரி எல்லா வேளையும் புரதம் மிகுந்தது என பீஃப் சாப்பிடலாம். - இப்படி சாப்பிட்டால் டைப்படீஸ் பற்றி அதிகம் கவலைபட வேண்டாம் என்பது உண்மைதான் - ஏன்னா இப்படி தின்றால் டைபடீஸை விட பெரிய பிரச்சனைகளான கிட்னி ஃபெயிலியர் அல்லது கோலன் கான்சர் வந்துவிடும், அப்புறம் டைபடீஸ் சின்ன பிரச்சனை மாதிரி தோன்ற ஆரம்பித்துவிடும்.
அருமையான பதிவு. தொடர்ந்து இதுபோல பயனுள்ள பதிவுகள தர வாழ்த்துக்கள்!!
***Avargal Unmaigal said...
பலர் மது குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று கூக்குரல் இட்டுவிட்டு சாப்பாட்டை வளைத்து கோபரம் போல வளைத்து கட்டி அடிப்பார்கள் அதை பார்க்கும் போதுதான் எனக்கு சிரிக்க தோன்றும்***
தல: ஆனாலும் தண்ணியப் பத்தி ஒரு பய ஒண்ணு சொல்லீடக்கூடாது உடனே நீங்க பொங்கி எழுந்துடுவீங்க..:))) தண்ணியே காலரி அதிகமாக உள்ள திரவம். அதை குடிச்சுப்புட்டு இஷ்டத்துக்கு சாப்பிடுவது கெடுதி இல்லையா?. எங்க ஊரில் சாராயம் குடிச்சுப்புட்டு ஒரு ஊறுகாய் பொட்டலம் ஒண்ண வாங்கி சாப்பிட்டுவிட்டு அவங்களுக்கே தெரியாமல் டயட்ல இருப்பாங்க. அதுபோல் இங்கே நீங்க இல்ல உங்க நண்பர்கள் யாரும் செய்வதில்லையா? :)))
***மக்களும், அதான் மருந்து போடுறோம்ல சுகர் ஏறாது என்று, வளைத்து சாபிடுகிறார்கள். ***
இந்தியர்களுக்கு டைப் 2 டயபட்டிஸ் அதிகமாக வருகிறது. ஒரு வேளை கார்போஹைட்ரேட் ரிச் டயட் தான் காரணமோனு எனக்குத் தோன்றும்.
வைட் காலர் வேலை பார்ப்பவங்க மற்றும் வியாபாரம் செய்ற வியாபாரிகள் (இவர்களுக்கு எக்சர்சைஸ்னா என்னனே தெரியாது) எல்லாம் பசியடடங்க மட்டும் சாப்பிட்டால் நல்லது. வயிறு நிறைய சாப்பிட ஆசைப்படுபவர்கள் உடலுழைப்பு அதிகமாக உள்ள வேலையில் இருக்கணும்.
இன்னொண்ணு... நம்ம ஊரில் டின்னர் ரொம்ப லேட்டா சாப்பிடுறாங்க. வெஸ்ட்ல எல்லாரும் 7 மணிக்கு முன்னாலேயே டின்னர் முடிச்சுடுறாங்க. நம்ம மக்களுக்கு டயபட்டீஸ் அதிகம் வர்ரதுக்கு இது ஒரு காரணமா என்னனு தெரியலை.
ஹாட்ஸ் ஆப்
அருமையான பதிவு..
//உதாரணமாக..என் அம்மாவுக்கு டியாபெடிக்ஸ் இருக்கிறது. தினமும் என்ன சாப்பிட்டார்கள், என்று நான் கேட்பது உண்டு. உடனே அவர்கள் சொல்லுவது, நான் இப்போது சப்பாத்தி தான் சாப்பிடுறேன், இல்ல ஓட்ஸ் குடிக்கிறேன்..அப்படியும் சுகர் குறைய மாட்டீங்கிறது என்பார்கள். ஆனால், நான் திரும்ப திரும்ப அவர்களிடம் சொல்லுவது ஒன்று தான்..."எது சாப்பிட்டாலும், அளவோட சாப்பிடுங்க..கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடுங்க..ஒரே நேரத்தில நிறைய சாப்பிடாதீங்க, நிறைய தானியம், பருப்பு வகைகள், நிறைய காய்கறிகள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். 3 வேலையாக சாப்பிடாமல் 6 வேலையாக சிறிது சிறிதாக சாப்பிடுங்கள்". எல்லாம் சொன்னாலும் அது செவிடன் காதில் ஊதும் சங்கு தான்.//
இப்படி இவர்கள் செல்லும் டாக்டேர்கள் எல்லாம் Endocrinology Specialist அல்ல, மாறாக, பொது மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள்.
how many endocrine specialists are there in india? Most of the diabetes centres are run by only general physicians. the care given by the doctors depend on their skill and experience not by the degree they hold.
@soundar rajan
I know few endocrinology specialist even in MAdurai, my home town. There should be lots of them in other cities too.
பாஸ் நாங்க ஏது குடிச்சாலும் 2 கிளாஸுக்கு மேல குடிக்கிறது இல்லை முன்பு எல்லாம் மாதத்திற்கு ஒரு முறையோ 2 முறையோதான் குடிப்பது உண்டு இப்போது அப்படி எல்லாம் இல்லை நீயூ இயர்ஸ் ஈவ் அப்ப குடிச்சது அதற்கு அப்புறம் Spring ஆரம்பிச்ச போது குடிச்சதுதான்... இங்கு குடிக்கும் யாரும் நிதானம் தவறியது இல்லை இதுவரை ..அப்புறம் ஒன்று சொல்ல மற்ந்துட்டேன் நாங்க குடிக்கும் போது பலவித சைடிஸுக்கள் செய்து வைத்திருந்தாலும் அதை குழந்தைகளும் பெண்களும்தான் சாப்பிடுவார்கள் . ஆனால் ஆண்கள் நான் செய்து வைத்த எலுமிச்சை ஊறுகாயை மட்டும் வெளுத்துகட்டுவார்கள்.
என் கருத்து என்னவென்றால் எதையும் அளவோடு செய்தால் நல்லது அது குடியாக இருக்கட்டும் அல்லது உணவாக இருக்கட்டும் அதற்காக குடிக்காத எவரையும் குடிங்க என்று நான் சொல்லவில்லை குடிக்கவில்லையா மிக நல்லது அப்படியே தொடருங்கள். குடிப்பவரா அப்படியானல் மிக அளவோடு குடியுங்கள் என்றுதான் சொல்லுகிறேன்
பாஸ் ஊறுகாய் வேண்டுமென்றால் சொல்லுங்க நான் தயார் செய்து அனுப்புகிறேன் கடையில் விற்கும் ஊறுகாயை விட மிகவும் உறைப்பாக டேஸ்டாக இருக்கும்
but i doubt whether these few endocrinologists can cater to a huge population of diabetics in india.
காலை எழுந்ததும் நல்ல நடைபயிற்சி, பின்னர் நிறைவு கொடுக்கும் சிற்றுண்டி.
மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப் படுத்திக் கொள் பாப்பா !
உங்கப்பன் உங்கம்மை போல நீரிழிவு நோய் வராது பாப்பா !
காலை எழுந்ததும் நல்ல நடைபயிற்சி,
பின்னர் நிறைவு கொடுக்கும் சிற்றுண்டி.
மாலை முழுவதும் விளையாட்டு என
வழக்கப் படுத்திக் கொள் பாப்பா !
உங்கப்பன் உங்கம்மை போல உனக்கும்
நீரிழிவு நோய் வராது பாப்பா !
தேவையில்லை அதிகம் ஸ்னாக்ஸ்
சேர்த்துக் கொள் நல்ல சாலாட்,
இனிப்பு புளிப்பு அதிக காரம்
எண்ணெய் பதார்த்தமும் வேண்டாம்,
காய்கறிகள் கூட நல்ல பழங்கள் என
சாப்பிட்டுப் பழகு பாப்பா !
வீண் ஸ்ட்ரஸ் டென்சன் எல்லாம் எதற்கு
சிரித்து மகிழு தினமும்
மனதை லேசா வைத்துக் கொள் பாப்பா !
உங்கப்பன் உங்கம்மை போல உனக்கும்
நீரிழிவு நோய் வராது பாப்பா !
Post a Comment