Friday, May 1, 2015

பதிவுலகில் அறிவியல் கட்டுரைகள் எழுதுவது எப்படி? ஓர் கைடு
  1. முதல் தகுதி உங்களுக்கு அறிவியல் தெரிந்திருக்க கூடாது. நிறைய கற்பனை வளம் இருக்க வேண்டும் 
  2. உதாரணமாக,நீங்கள் சிந்தெடிக் பையலாஜி பற்றி எழுத வேண்டும் என்று வைத்து கொள்ளுங்கள், அதற்க்கு உங்களுக்கு basic biology தெரிந்திருக்க வேண்டும் என்ச்று தேவை இல்லை. உங்களுக்கு தேவை எல்லாம் நெட்டில் தேடும்போது கிடக்கும் ஒரு சில விசயங்கள், பின்னர் இருக்கவே இருக்கு உங்கள் கற்பனை குதிரை, அதனை தட்டி விடுங்கள்.. சுடச்சுட ஒரு பதிவு தயார். பிறகு என்ன.. படிக்கும் சிலரும் இவர்களின் கதையை நம்புவார்கள். உங்களுக்கு வெற்றிதான்.
  3. யார் வந்து ப்ரூவ் கொடு என்று கேட்க்க போகிறார்கள், அப்போ பாத்துக்கலாம் அதனை எல்லாம்.
  4. அடுத்து பரிணாமம், டார்வின் மெண்டல் இவர்கள் எல்லாம் பைத்திய காரர்கள் வேலை வெட்டி இல்லதவ்வ்ர்கள், அவர்களே முன்னுக்கு பின் முரணாக பேசி இருக்காங்க பாருங்க என்று மேற்கோள் காட்ட வேண்டியது. படிக்குரவங்களுக்கு என்ன தெரிய போகுது? 
  5. உங்களுக்கு தெரியுதோ இல்லையோ அதனை பற்றி எல்லாம் யார் கேட்டா?
  6. மொட்ட தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடா தெரிந்து இருக்க வேண்டும், உதாரணமாக உறவுமுறை திருமணம் எல்லாம் கெடுதல் இல்லை, ஏன்னா கான்சர் பாதிப்பு இரண்டு வகை திருமணத்திலும் ஒன்றுந்தான் என்று விவாதிக்க வேணும்.
  7. நோயின்னா எல்லா மக்களுக்கும் கான்செர் இல்ல சக்கர வியாதி தானே தெரியும்,Cystic Fibrosis, Sickle Cell Anemia, Tay-Sachs Disease இதெல்லாம் உறவுகல்ல திருமணம் முடிகிறதால வருதுன்னு சொன்னா அவங்களுக்கு புரியவா போகுது..
  8. நீங்க எதைவேண்ணா எழுதுங்க , சுட்டி,தொடுப்பு எதையும் கொடுக்க கூடாது, யாரு போய்  அதை எல்லாம் சரி பார்த்துட்டு இருக்க போறாங்க..

அவ்வளவு தான், நீங்க பதிவுலக சயின்டிஸ்ட் ஆயாச்சு? பின்ன என்ன ஒரு கவர்ந்து இழுக்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து வச்சுடுங்க.. முடிஞ்சது கதை..
இன்னும் கூட நிறைய டிப்ஸ் இருக்கும்,  இருந்தா சொல்லுங்கப்பா, எல்லாருக்கும் உபயோகமா இருக்கும். 

நன்றி 

5 comments:

வருண் said...

ஆமா, உங்களுக்கு ஏன் இந்தக் கொலைவெறி? :)))

திண்டுக்கல் தனபாலன் said...

கற்றுக் கொண்டேன்...! ஹிஹி...

அன்புடன் நீலன் said...

மிகச் சரியாக சொன்னீர்கள். இது தான் இப்போது அதிகம் நிகழ்கின்றது. கூகிளப்பர் மூலம் எதையாவது தேட வேண்டியது, அதை அப்படியே அங்கொன்று இங்கொன்றாக கொத்திக் கொண்டு இடையில் மானே தேனே எனப் போட்டு எழுதினால் அறிவியல் கட்டுரையாக வந்துவிழும். வாசிப்பவர்களில் 90 % பேருக்கு என்னத் தெரியப் போகின்றது. தெரிந்த 10 % பேரில் 9 % கூட இதற்கு எல்லாம் மினைக்கெட்டு பதில் எழுத வேண்டுமா என நகர்ந்துவிடுவர். யாராவது 1 % பேர் மறுப்புரை எழுதினால் நலம், ஆனால் இவர்கள் எதிர்ப்பார்ப்பது எல்லாம் எதிர்மறை விளம்பரம், அப்படி எதிர்மறை விமர்சனம் வரும் போது அது விளம்பராகிவிடும். இது தான் இன்றைய உலகம்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அப்ப நான் கூட அறிவியல் கட்டுரை எழுதலாம்

manichiral said...

நாலு பேருக்கு புரியும்படி நாலு விசயங்களை நல்லாவே சொல்லுரீங்க.