Tuesday, May 5, 2015

பெண்களும் மிட் லைப் தடுமாற்றமும்

இங்கிலீஷ் விங்க்லிஷ், "H ow old are you?" என்ற இரண்டு இந்திய படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டுமே பெண்களின்  மிட் லைப் பற்றியது. அவர்களின் change in priorities அல்லது தன்னையும் கவனிக்க வைக்க அவர்கள் செய்யும் சில விஷயங்கள் பற்றியது.



மிட் லைப்பில் இருக்கும் பல பெண்களிடம் நாடு மொழி இன வித்தியாசம் இன்றி பேசி  போது பல நேரங்களில் ஒரு வெறுமை அவர்கள் தொனியில் இருக்கும். பெரும்பாலான பெண்கள் இளவயதில் திருமணம் முடித்தவர்கள், அவர்களுக்கு பெரிய வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கலாம். இது நாள் வரை திருமணம், குழந்தை பிறப்பு, குழந்தை வளர்ப்பு என்று குடும்பத்திற்காக தன் நேரத்தை  செலவிட்ட அவர்கள், குழந்தைகள் ஒரு கட்டத்தை/வயதை  நெருங்கியதும்அடுத்தது என்ன? என்ற ஒரு கேள்வி தொக்கி நிற்கும்.அதோடு மெனோபாஸ் போன்ற உடல் கூறுகளும் சேர்ந்து வாழ்கை வெறுமையாகி  விடும். ஒரு சிலருக்கு, பெற்றோர் மரணம் அல்லது நெருங்கிய சொந்தங்களின் மரணம் நேர்ந்து இது போன்ற வெறுமையை அதிகபடுத்தும். இது நாள் வரை எமோசனல் ஆக ஒருவரை சார்ந்திருந்த பெண்கள் அந்த எமோசனல் சப்போர்ட் இல்லை என்னும் போது டிப்ரெசன் அளவுக்கு சென்று விடுவது உண்டு. 

இந்த நேரங்களில் பலர் சில எக்ஸ்ட்ரீம் முடிவுகள் எடுக்கலாம். உதாரணமாக அதுவரை வேலை எதுவும் செய்யாத அவர்கள், நானும் வேலைக்கு போகிறேன் என்று ஆரம்பிப்பது, தானும் இந்த சமூகத்தில் தனியாக வாழ முடியும், சம்பாதிக்க முடியும் என்பன போன்ற சில மன குழப்பங்கள். இது நாள் வரை எனக்காக என்று எதுவும் செய்யவில்லையே என் வாழ்க்கையில்,  ஏதாவது செய்து ப்ரூவ் செய்ய வேண்டும் இந்த உலகத்திற்கு, என்று ஒரு சிலர் சொல்லுவது அல்லது செய்வது. தனக்கு இளமை போய்விட்டதோ..என்று தன்னை மிக அழகு படுத்தி கொள்ள நினைப்பது, நல்ல நல்ல உடைகள்வாங்க செலவழிப்பது, நாட்டியம், இசை என்று ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்று நினைப்பது "to get noticed". இது போன்ற ஒரு transition அல்லது மன மாற்றம் நிகழும் நேரத்தில் குடும்பத்தில் இரு பிடிப்பு இல்லாத ஒரு நிலை. அல்லது குடும்பத்தில் எல்லோரிடமும் எரிந்து விழுவது, அவர்கள் சொல்லும் ஒவ்வொரு விசயத்தையும் தன்னை பற்றி குறை சொல்லுகிறார்கள், எனக்கு மதிப்பு இல்லை என்று ஆரம்பிப்பது...என்று அனைத்தும் நடப்பது இந்த காலத்தில் தான். அமெரிக்காவில் இப்படி என் மன நிலை இருக்கிறது என்று நீங்கள் சென்றால் உடனே அவர்கள் "It's mid life crisis and depression" என்று சொல்லி depression மாத்திரைகள் கொடுக்க ஆரம்பிப்பார்கள். பலருக்கு இது போன்ற மருந்துகள் பயன்படுகின்றன என்றாலும் அவை எல்லாம் சிறு காலத்திற்கு மட்டுமே. பின்னர் மறுபடியும் இதே போன்ற கேள்விகள், ப்ரியாரிட்டி என்ன என்று தேடல்கள் ஆரம்பிக்கும். 

இது ஒரு கடந்து போகும் காலம்..ஆனால் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலமும் இது தான்.  இந்த நேரத்தில் தன் குடும்பம் அல்லாத யாரேனும் ஒருவர் தன்னிடம் அன்பாக பேசினாலோ, நடந்து கொண்டாலோ உடனே அவரை நம்புவது என்பது பதின்ம  வயது இனக்கவர்ச்சிக்கு ஒப்பானது. அதுவும் அந்த நபர் உங்களை சப்போர்ட் செய்கிறார் அல்லது என்கரேஜ் செய்கிறார் என்னும் போது அந்த இனக்கவர்ச்சி வேறு வகை உருவம் எடுக்க ஆரம்பிக்கலாம். ஆனால் இது போன்ற தடுமாற்றங்கள் எல்லாம் ஷார்ட் லைப் ஸ்பான் கொண்டது, என்று கொஞ்ச கவனமாக இருந்தால் பல பெரிய இழப்புகள் அல்லது முடிவுகளை தவிர்க்கலாம். தேவை கொஞ்சம் குடும்பத்தில் இருப்பவர்கள் சப்போர்ட், கொஞ்சம் புரிதல் அல்லது சில நேரங்களில் மெடிக்கல் ட்ரீட்மென்ட். ஆனால் இது ஒரு passing cloud மட்டுமே. உண்மை நிலை அறிந்து திரும்பி வந்துவிடலாம்.

நன்றி.

3 comments:

வருண் said...

***இது ஒரு கடந்து போகும் காலம்..ஆனால் மிக மிக கவனமாக இருக்க வேண்டிய காலமும் இது தான். இந்த நேரத்தில் தன் குடும்பம் அல்லாத யாரேனும் ஒருவர் தன்னிடம் அன்பாக பேசினாலோ, நடந்து கொண்டாலோ உடனே அவரை நம்புவது என்பது பதின்ம வயது இனக்கவர்ச்சிக்கு ஒப்பானது. ***

It is always easy to be nice to someone with whom one has an uncommitted relationship. A friend can be nicer than a wife or husband because of lack of commitments there. The same guy/girl, will become different if one takes him/her to a next level. Once it becomes a committed relationship, everything will change. Again the same old story here as well :-) Not many people realize that, that's really a pity.

ஜோதிஜி said...

இங்கு வெளியே தெரியாத போதும் இது தான் நீங்க சொன்ன சார்ந்து இருத்தல் தான் நடக்கின்றது. அதுவும் பணம் அதிகமாக இருக்கும் வீட்டில் முறையற்ற பாலின தொடர்பு என்பது அக்கறையின் பால் தொடர்கின்றது. அது கடைசியில் அவஸ்த்தையில் தான் முடிகின்றது.

துளசி கோபால் said...

Empty nest syndrome .இதுக்கும் கூட டிப்ரெஷன் மருந்துகளைக் கொடுத்துடறாங்க. அதுக்குதான் எதாவது பொழுதுபோக்கு வச்சுக்கணும்.

எழுத்துக்கு வந்தது கூட இப்படித்தான்னு நினைக்கிறேன்.