Wednesday, May 13, 2015

Facebook ம் ப்ரைவசியும் பெண்களும்


நீங்கள் முகநூல் உபயோகிக்கும் பெண்ணா?, பழைய கல்லூரி, பள்ளி, பக்கத்து வீட்டு தோழர்களை கண்டுபிடிக்க முகநூல் உதவி உள்ளதா?, நீங்களும் உங்கள் சொந்த ஊர், படித்த கல்லூரி, பள்ளி, யுனிவெர்சிட்டி, வேலை பார்க்கும் இடம், யாரை திருமணம் முடித்து இருக்கிறீர்கள் அல்லது யாருடன் எங்கேஜ்மென்ட் ஆகி இருக்கிறது என்றெல்லாம், உங்களின் பிரிண்ட்ஸ் யாரெல்லாம்  ,என்று  பப்ளிக் ப்ரொபைலில் பதிந்து இருக்கிறீர்களா?. கிரேட். 

இப்போது சில கேள்விகள்.  

  1.  உங்கள்  பிரெண்ட்ஸ் லிஸ்டில் இருக்கும் எத்தனை பேர் உங்களுக்கு உண்மையில் பரிச்சயமானவர்கள். ஏனெனில் உங்களுக்கு பிரெண்டுக்கு பிரெண்டு எல்லாம் ரெகுஸ்ட் அனுப்பலாம். அதனை நீங்களும் சரி நம்முடைய ப்ரிஎண்டின் ப்ரெண்ட் தானே என்று அக்செப்ட் செய்து இருக்கலாம். அதனால் தான் இந்த கேள்வி. எத்தனை பேர் உங்களுக்கு உண்மையில் தெரியும் அல்லது பழகி இருக்கிறீர்கள்.
  2. முக நூல் அக்கௌன்ட் ஆரம்பிக்கும் போதும் அல்லது பிறகும் ப்ரொபைலை பற்றி கேள்விகளை எல்லாம் இக்னோர் செய்யாமல் எல்லாவற்றுக்கும் பதில் அளித்து இருக்குறீர்களா?, உதாரணமாக, நீங்கள் எந்த வருடம் இப்போது வேலை பார்க்கும் கம்பனியில் சேர்ந்தீர்கள் என்று கேட்கும் கேள்விக்கு, சின்சியர் ஆக பதில் அளித்து இருகிறீர்களா?
  3. நீங்கள் எத்தனை முறை ஏதாவது ஷேர் செய்யும் போது, ப்ரைவசி செட்டிங்க்ஸ் ஐ கவனித்து ஷேர் செய்து இருக்குறீர்கள். உதாரணமாக உங்கள் ப்ரொபைல் படம் எப்பொழுதும் பப்ளிக் அனைவருக்கும் தெரியும் படி இருக்கும், அதற்க்கு வரும் கமெண்ட்ஸ் உங்கள் பதில் என்று அனைத்தும் அனைவருக்கும் தெரியும். 
  4. உங்கள் கவர் போட்டோ எப்போதும் எல்லோருக்கும் தெரியும். நீங்கள் அதனை எந்த செட்டிங்க்ஸ் கொண்டும் மாற்ற முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?
  5. உங்கள் ப்ரொபைல் கூகிள் போன்ற தேடு பொறியில் தேடப்படாமல் இருக்க என்று சில ப்ரொபைல் செட்டிங்க்ஸ் இருக்கிறது எதனை பேருக்கு தெரியும். 
  6. அதே போல, தேவை இல்லாதவர்கள் ப்ரெண்ட் ரெகுவேஸ்ட் அனுப்பாமல் இருக்க என்று ப்ரைவசி செட்டிங்க்ஸ் எதனை பேருக்கு தெரியும்.
  7. நீங்கள் பிளாக்கர் அல்லது வோர்ட்ப்ரெஸ் உபயோகித்து ப்ளாக் எழுதுபவர் என்றால், எதனை பேர் உங்கள் ப்ளாக் முகவரியை உங்கள் முகநூல் ப்ரொபைலுடன் இணைத்து இருக்குறீர்கள்.

சரி, இப்போது ப்ரைவசி செட்டிங்க்ஸ் பற்றி அறியாமல் இருந்தால் நடக்கும் சில பின் விளைவுகள்.

உங்களுக்கு பிடிக்காத நபர் அல்லது எதிரி அல்லது யாருக்கோ உங்களை பற்றிய தகவல்கள் தேவை எனில் அவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான். 

உங்கள் பெயரை கூகுளில் டைப் செய்ய வேண்டியது. கூகுள் தேடுதளம், உங்கள் பெயரில் இருக்கும் facebook profiles என்று அனைத்தையும் அள்ளி கொண்டு வந்து கொடுக்கும். ஏனெனில் நீங்கள் "உங்கள் ப்ரொபைல் கூகிள் போன்ற தேடு பொறியில் தேடப்படாமல் இருக்க என்று சில ப்ரொபைல் செட்டிங்க்ஸ் இருக்கிறது " அதனை enable செய்ய வில்லை.

உங்கள் முக நூல் பக்கத்தை தேட வேண்டியது தான். பிங்கோ..எல்லாமே அங்கே இருக்கிறது. உங்கள் கல்வி தகுதி, யார் உங்கள் நண்பர்கள், நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள், யாரை மணந்து இருக்குறீர்கள், யார் யாரெல்லாம் உங்கள் நண்பர்கள் ...etc etc 

நீங்கள் அமெரிக்காவில் இருப்பவர் எனில், உங்கள் முழுப்பெயர் மற்றும் உங்கள் கணவரின் பெயர் கொண்டு நீங்கள் வசிக்கும் வீட்டின் முகவரி முதல் கண்டு பிடிக்க முடியும். தேவைப்பட்டால் உங்கள் போன் நம்பர் வரை யாரும் துப்பு துலக்க முடியும். ஆகையால், முகநூலில் உங்களை பற்றிய செய்திகளை பதியும் போது மிக மிக கவனம் தேவை.

உங்களுக்கு ப்ரெண்ட் ரெகுவேஸ்ட் கூட யாரும் அனுப்ப தேவை இல்லை. அவர்களுக்கு தேவையான எல்லாமே உங்கள் பப்ளிக் ப்ரோபிளில் இருக்கிறது.

சரி நீங்கள் மேலே கண்ட ப்ரொபைல் செட்டிங்க்ஸ் எல்லாம் பக்கா வாக செய்து இருக்குறீர்கள். உங்கள் க்ளோஸ் நண்பர்கள் தவிர யாரும் உங்களை தொடர்பு கொள்ள முடியாது என்று இறுமாப்பாக இருக்க வேண்டாம்.

அப்படியே, நீங்கள் "ப்ரெண்ட் ரெகுவேஸ்ட்" பப்ளிக் ஆக  அனுமதிக்காமல் இருப்பினும், பிரெண்ட்ஸ் ஆப் பிரெண்ட்ஸ் வரை உங்கள் ப்ரொபைல் தெரிந்தே ஆகும். இப்போது உங்கள் ப்ரெண்ட் லிஸ்ட்டில் ஒரு பெண் இருந்து அவரின் ப்ரெண்ட் லிஸ்டில் இருக்கும் ஒரு பெண் உங்களுக்கு ரெகுவேஸ்ட் அனுப்புகிறார் என்று வைத்து கொள்வோம். நீங்களும் நம் நெருங்கிய தோழியின் நண்பி தானே என்று அனுமதிகிரீர்கள் என்று வைத்து கொண்டாலும் , அந்த பெண்ணின் நண்பர்களுக்கும் இப்போது உங்கள் ப்ரொபைல் தெரியும்.. நீங்கள் ஷேர் செய்யும் படங்கள், குழந்தைகள் படங்கள், எல்லாம் 3rd லெவல் வரை தெரியும்..கவனம் தேவை.

சில ப்ரைவசி  டிப்ஸ் இங்கே .

  1. எப்போதும், உங்கள் ப்ரெண்ட் லிஸ்ட் ஐ யாரிடமும் காட்டாமல் "ஒன்லி மீ" ஆப்சனில் போட்டு வையுங்கள்.
  2. நீங்கள் பெர்சனல் ஆக தெரியாத பழகாத யாரையும் உங்கள் ப்ரெண்ட் லிஸ்டில் சேர்க்க வேண்டாம்.
  3. ப்ரைவசி செட்டிங்க்ஸ் மாற்றி அமைத்து கூகிள் போன்ற தேடு பொறிகள் தேடாத வண்ணம் மாற்றி அமையுங்கள். 
  4. ஒவ்வொரு போஸ்ட் ஷேர் செய்யும் போதும், யார் உங்கள் டார்கெட் ஆடியன்ஸ் என்று பாருங்கள்.
  5. உங்கள் ப்ரொபைல் படமாக உங்கள் தனி படங்களை போடாதீர்கள், குடும்ப படம் போடலாம் அல்லது இயற்க்கை காட்சிகள் என்றும் போடாலாம்.
  6. எப்போதும் கவர் போடோவாக உங்கள் குடும்ப/பெர்சனல் படங்களை போடாதீர்கள். ப்ரொபைல் படத்தில் இருக்கும் ப்ரைவசி செட்டிங்க்ஸ் கூட கவர் படங்களுக்கு இல்லை.
  7. இது எல்லாம் செய்து, முகநூல் உபயோகிக்க முடிந்தால் உபயோகியுங்கள், இல்லையேல் முக நூல் கணக்கை மூடி விடுங்கள் 

எல்லா புது டெக்னாலாஜி வரும் போதும் நாம் உடனே மகிழ்ந்து அதன் பின் விளைவுகளை பற்றி அதிகம் கவலை படாமல் செய்கிறோம் உபயோகிக்கிறோம். ஆனால் உண்மையில் அதன் பின் விளைவுகளை பற்றி ஒரு நிமிடமும், ப்ரைவசி செட்டிங்க்ஸ் பற்றி சிறிதும் படித்து பார்த்தாலே போதும்...அதில் இருக்கும் ஓட்டைகள் என்ன என்ன என்று. நீங்கள் எதார்த்தமாக நினைக்கும் பல விசயங்களும் பல நேரங்களில் எதார்த்தமான விளைவுகளை தருவதில்லை, மாறாக பல நேரங்களில் பிரச்சனைகளையும் தர இயலும். அதுவும் பொது வெளியில் இயங்கும் பெண்கள் இந்த விசயத்தில் மிக மிக கவனமாக இருக்கவும், இல்லையேல், உங்களையும் அறியாமல் சில நேரங்களில் தேவை இல்லாத பிரச்சனைகளில் மாட்டி கொள்ள இயலும்.

இது என்னுடைய சொந்த அனுபவத்தில் எழுதியது.

நன்றி.


6 comments:

வருண் said...

நீங்க சொல்ற அளவுக்கெல்லாம் நம்ம ஊர்ப் பெண்கள் கவனமாக இருக்கப் போவதில்லை. நான் "லைக்" பண்ணினேன் " ஆனால் அவ என் படத்தை "லைக்" பண்ணலைனு அவங்க பிரச்சினை எல்லாம் வேற. இவங்களை எல்லாம் காப்பாத்துவது கஷ்டம். இதுதான் என் (அவ)நம்பிக்கை!

எனி வே நீங்க சொல்றதைச் சொல்லுங்க ஒரு சிலராவது சரியாக எடுத்துக் கொண்டால் நல்லதுதானே?

One more thing, if one seeks (girls and housewives) attention thru facebook (you dont really know what kind of "complex" they have inside) and they are "starving" for such attentions even from "strangers", they would not like your suggestions at all. Because they will not get that if they set their privacy very carefully! :)

ஹுஸைனம்மா said...

நீங்க இப்ப ஃபேஸ்புக்கில் இல்லையா?

ஃபேஸ்புக் மற்றும் இணையத்தில் வலம் வரும்போது மிக மிக மிகக் கவனமாகவே இருக்கீறேன். புகைப்படங்கள் எதுவும் போடாததும் அதன் ஒரு பகுதியே.

நீங்க சொல்லியிருக்கும் டிப்ஸ் பயனுள்ளவை.

//எப்போதும், உங்கள் ப்ரெண்ட் லிஸ்ட் ஐ யாரிடமும் காட்டாமல் "ஒன்லி மீ" ஆப்சனில் போட்டு வையுங்கள்.

ப்ரைவசி செட்டிங்க்ஸ் மாற்றி அமைத்து கூகிள் போன்ற தேடு பொறிகள் தேடாத வண்ணம் மாற்றி அமையுங்கள். //

இந்த இரண்டும் எப்படி செய்வது?

முகுந்த்; Amma said...

//எப்போதும், உங்கள் ப்ரெண்ட் லிஸ்ட் ஐ யாரிடமும் காட்டாமல் "ஒன்லி மீ" ஆப்சனில் போட்டு வையுங்கள்.


Go to the friends list and click on the edit button and change the privacy settings to "only me"

செங்கதிரோன் said...

tips definitely will help the girls. but the reality is just opposite., girls are in don't care attitude..as we have seen lot of young female celebrities trapped by the social media culture.

முகுந்த்; Amma said...

@hussain amma
நீங்க இப்ப ஃபேஸ்புக்கில் இல்லையா?

I am in FB still, but dont use it.


/ப்ரைவசி செட்டிங்க்ஸ் மாற்றி அமைத்து கூகிள் போன்ற தேடு பொறிகள் தேடாத வண்ணம் மாற்றி அமையுங்கள். /


If you don’t want search engines to link to your profile, you can adjust your Privacy Settings. To adjust your settings:

Click at the top right of any Facebook page and choose Settings
Click Privacy from the left column
Under the Who can look me up? section, click Do you want other search engines to link to your timeline?
Make your selection using the check box

ஆரூர் பாஸ்கர் said...

Here is my take on this.

* Facebook rewritten the meaning of friends. Old school meaning of friends is gone. I know people who add their boss in their friends list along with their college going kids.

* Also, how much open in Face book is depends. This is simply a perception and age plays a major role.

* For example, Millennials very are open and very much attached to social media. They would like to be connected with their friends all the time.

* Anyways, Better being safe than sorry

Regards,
Baskar