Friday, July 17, 2015

அமெரிக்க Ivy League பல்கலைகழகங்களில் ஆசியர்களுக்கு பாகுபாடு நடக்கிறதா?

கடந்த வாரம் அட்லாண்டாவில் இருந்து வெளி வரும் இந்திய பத்திரிக்கையான Khabarஇல் வாசித்த செய்து இது. ஏற்கனவே இது பற்றி அரசால் புரசலாக கேள்வி பட்டு இருந்தாலும் முழுதாக இப்பொழுது தான் இதனை பற்றி வாசிக்க நேர்ந்தது.



செய்தி இது தான் "Ivy League எனப்படும் அமெரிக்க டாப் கல்லூரிகளில் இந்தியா, சீனா, கொரியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்து வந்து குடியேறியர்களின் குழந்தைகளுக்கு கல்வி மறுக்க படுகிறதா?"


இது என்ன Ivy League என்று கேட்பவர்களுக்கு. அமெரிக்காவில் வடகிழக்கில் இருக்கும் 8 பல்கலைகழகங்கள் Ivy League பல்கலைகழகங்கள் என்று அழைக்க படுகின்றன. ப்ரெஸ்டீஜ் பல்கலைகழகங்கள் இவை. ஹார்வர்ட், yale, பிரின்ஸ்டன், கார்நெல், பிரவுன், கொலம்பியா..என்று அமெரிக்காவில் புகழ் பெற்ற பல்கலைகழகங்கள் இவை.





இதில் இன்னொரு விஷயம் என்னவென்றால் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட 43 அமெரிக்க ஜனாதிபதிகளில் 14 பேர்  Ivy League பல்கலைகழகத்தில் படித்தவர்கள். அதே போல பில் கேட்ஸ், பில் கிளிண்டன்,  இல் இருந்து தற்போதைய ஒபாமா, மற்றும்  FB நிறுவனர் போன்ற பலரும்  இந்தபல்கலைகழகங்கள் உடன் எதோ தொடர்பு கொண்டவர்கள்.  இங்கு படித்து வெளியில் வந்தாலே எங்கோ ஒரு இடத்தில்  ஹை பொசிசன் நிச்சயம்.

சரி இப்பொழுது தொடங்கிய பிரச்சனைக்கு வருகிறேன். இங்கு எந்த கல்லூரிகளில்/பணிக்கு  இடம் கேட்டு விண்ணப்பம் போட்டாலும் அதில் "race" என்று ஒரு கேள்வி வரும். அதில் நீங்கள் எந்த race என்று ஒரு பகுதியை நிரப்ப வேண்டும். சர்வே க்கு மட்டுமே இதனை கேட்கிறோம் என்று சொல்லுவார்கள். ஆனால் உண்மையில் எந்த இனத்தை சேர்ந்தவர்கள் வேலைக்கு சேர்கிறார்கள் அல்லது பள்ளியில் சேர்க்கபடுகிறார்கள் என்று கண்காணிக்கவே திரை மறைவில் இது நடக்கிறது.

சரி இதற்கும் Ivy League அட்மிசன்க்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களுக்கு. எங்கே, நிறைய ஹை அச்சீவிங் ஆசியர்கள் உள்ளே நுழைந்து caucasian எனப்படும் வெள்ளை மக்களை முந்தி விடுவார்களோ என்ற பயம் தான் காரணம்.

ஆசியர்கள் பொதுவாக "tiger parenting" நடத்துகிறார்கள். அதாவது, தங்கள் குழந்தைகள் ஹை அச்சீவர் ஆக, படிப்பில் தலை சிறந்து விளங்க வேண்டும் என்று, ஏதாவது போட்டிகளில் தள்ளுகிறார்கள்.
ஸ்பெல்லிங் பீ, மேத் பீ, ஜியோக்ராபி பீ, SAT என்று எல்லா காம்பெடிடிவ் பரிச்சைகள் அல்லது போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்று புஷ் செய்கிறார்கள். தன் குழந்தையின் வெற்றியை தன் வெற்றியாக, தன்னுடைய சமூக மக்களிடம் தெரிவிக்க ஒரு வாய்பாக இவர்கள் பார்கிறார்கள்.அதனால் , பல நேரங்களில் ஆசிய குழந்தைகள் Ivy league இல்லாவிட்டாலும் பல நல்ல கல்லூரிகளில் Pre -Med படிப்பதை பார்க்கலாம்.


அதனால் கிட்ட தட்ட எல்லா ஆசிய குழந்தைகளும் கல்லூரி அட்மிசன் பரிச்சையான SAT  பரிட்சையில் நல்ல ஸ்கோர் வாங்கி விடுகிறார்கள். தங்கள் குழந்தை மேல் படிப்பு படிக்க வைக்க வேண்டும் என்று எல்லா ஆசிய பெற்றோர்களும்  முயற்சி செய்கிறார்கள். அதற்காக  சிறுக சிறுக சேமித்த பணமும் அவர்களிடம்  இருக்கிறது. இது மற்ற இன மக்களிடம் அதிகம் இருப்பதில்லை. உதாரணமாக Ivy league பல்கலைகழகங்களில் படிக்க என்று ஆகும் செலவை ஒரு லோயர் மிடில் கிளாஸ் கறுப்பின குடும்பமோ அல்லது மெக்சிகன் குடும்பமோ சந்திக்க இயலாது. ஆனால் ஒரு ஆசிய குடும்பம் இதனை எப்படியாவது சமாளித்து விடுகிறார்கள்.

நல்ல SAT மதிப்பெண்ணுடன், படிக்க வைக்க ஆகும் செலவும் தயாராக வைத்து இருக்கும் ஆசிய குடும்பங்கள் நிறைய. எங்கே இவர்களுக்கு மட்டுமே அட்மிசன் கொடுத்தால் Ivy League  கல்லூரிகள் ஆசிய கல்லூரிகள் ஆகி விடுமோ..என்று பயந்து நிறைய சாக்கு போக்கு சொல்லி விண்ணபங்களை நிராகரிக்கிறார்கள். உதாரணமாக இவர்கள் சொல்லும் ஒரு ஒப்பு சப்பு காரணம். ஆசிய குழந்தைகள், படிப்பை தவிர வேறு எக்ஸ்ட்ரா கரிகுலர் அறிவு அல்லது திறமை இல்லை. இவர்கள் வெறும் புத்தக புழுக்கள். பொது வெளியில் எப்படி பேசுவது, சமாளிப்பது, எல்லா இனத்தவருடன் எப்படி பழகுவது எப்படி என்று தெரியாது..என்பது போன்ற ஒரு சில ஒப்பு சப்பு காரணம் சொல்லுகிறார்கள்.

என்ன காரணமோ, இது ஒரு நடந்து கொண்டு இருக்கும் பிரச்னை. நிறைய நாளிதழ்களில் இதனை பற்றி கட்டுரை வெளியிட்டு இருகிறார்கள்.  இதே பிரச்சனையை கையில் எடுத்து மைக்கல் வாங் என்ற ஒருவர் தான் தொடர்ந்த வழக்கு பற்றி கார்டியன் பத்திரிக்கை செய்தி இது.

இவர்கள் எவ்வளவு தான் தடுத்தாலும் அமெரிக்காவில் அடுத்த தலைமுறையில் நிறைய இந்தியர்கள் மற்றும் சீன மக்கள் அதிகம் படித்தவர்களாக, பெரிய வேலை பார்பவராக இருப்பதை இவர்களால் தடுக்க முடியாது என்று மட்டும் நிச்சயாமாக கூறலாம்.

டிஸ்கி

இங்கே குறிப்பிட்டு இருப்பவை , என் கருத்துகள் மட்டுமே. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எதிர் கருத்துக்க்கள் இருப்பின் தெரிவியுங்கள்.

நன்றி.

14 comments:

ஜோதிஜி said...

நீங்க ஒருத்தரு தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சினிமா பக்கம் போகாமல் அங்கே உள்ள தெரிவிக்க வேண்டிய தகவல்களை ஒவ்வொரு முறையும் ஒழுங்காக தந்து கொண்டு இருக்கீங்கள். நன்றி.

ஆரூர் பாஸ்கர் said...

நல்ல பதிவு முகுந்த்அம்மா.

நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அமெரிக்க பள்ளிகளில் நம்முடைய குழந்தைகள் discrimination செய்யப்படுவது பற்றி நான் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

-ஆரூர் பாஸ்கர்

? said...

இது ரொம்ப காலமாகவே நடப்பதுதான். 1920களில் யூத மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டபட்டதாக ஆரம்பித்த விடயம் பின்பு ஆசியர்களுக்கு எதிராக திரும்பியது. 1990-ல் நீதித்துறை ஹார்வேர்டு பல்கலைகழகத்தை விசாரணைக்கும் உட்படுத்தினார்களால் - இந்த விசாரணை எந்த லட்சணத்தில் நடந்து என்ன தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை - தற்போது கறுப்பின மக்களை கொன்ற போலீசுகாரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றி பேப்பரில் படித்திருந்தாலே ஊகித்துவிடலாம். அதற்கு பிறகு 20% ஆசியர் இருந்த ஆசியர் எண்ணிக்கை தற்போது 16 ஆக குறைந்துவிட்டதாம்.

ஆனால் அதே நேரத்தில் குறிப்பாக நம்மாட்கள் இந்தியாவைப் போலவே படிப்பு படிப்பு என்று கட்டுப்பெட்டியாக வளர்க்கும் முட்டாள்தனத்தை தவிர்க்கவேண்டும். இங்கு கல்லூரி அட்மிசனுக்கு விளையாட்டு போன்ற பிற விடயங்களுக்கு படிப்பைவிட முக்கியத்துவம் தரப்படும். நான் முன்பு வேலை செய்த கல்விநிலைத்தில் புகழ்பெற்ற அமெரிக்க புட்பால் டீம் உண்டு. அதில் விளையாடுபவர்கள் நிச்சயம் நியூயார்கில் புகழ்பெற்ற கம்பனிகளில்தான் இன்டன்ஷிப் போவார்கள் - கிளாசில் நன்றாக படிப்பவன் லோக்கல் கம்பனியில் குப்பை கொட்டுவான். ஏனெனில் அமெரிக்க பள்ளி-கல்லூரிகளுக்கு விளையாட்டு ஒரு முக்கிய பணம் சேர்க்கும் வழி. இந்த விடயம் இந்தியாவிலிருந்து வரும் பலருக்கு புரிவதில்லை. ஆனால் என்னுடன் வேலைபார்த்த விபரமான தமிழர் தனது பையன்களை பள்ளியில் புட்பால் (சாக்கர்) விளையாட வைத்தார்- பையன்கள் முழு கல்லூரி படிப்பையும் ஓசியிலேயே முடித்துவிட்டார்கள்.

வருண் said...

I dont find anything wrong in the way they are filtering in the name of "maintaining diversity". Most of the asians are disloyal to America! Talk to Asians or Indians and see what loyalty they have for America. Moreover they are generally socially awkward and just book-worms. ivy league selection committees do not get impressed with people who just have high IQ's and able to score high gpa with the help of tutoring and all sort of things. They look at their essays and extracurricular activities and other factors carefully too. May be that is how they could make great achievements like invention of "google" or "youtube" or "facebook" or twitter.

Yeah when ivy leagues is filled with Asian and Indian kids, America will go down too! Sure both will happen sooner or later!

SathyaPriyan said...

I am an Indian American and an Ivy League alumni. I endorse the filtering. I do not want to attend a class that constitutes 90% Asian descendants. Diversity brings in well rounded experience. Ivy League experience itself revolves around this diversity.

? said...

A lengthy article.....

Ivy League Admissions Are a Sham:Confessions of a Harvard Gatekeeper

//Instead of giving people a boost on the ladder to upward mobility, I felt that I was simply there to make sure the children of the upper class stayed in the virtuous cycle that would keep them in the upper class.//

Unknown said...

You are correct in saying there is a decline in aAsian american students. But it is not due to 'fear'. The Ivy when it started has over enrollment from the hi-fi society - Boston Brahmins and Jews. Later it included American Indian and Chinese. At one point the management decided it should be more demographic. It is therefore got 'corrected'. The threat FOR the American Indians are mostly from Internationals--mostly students from Indian China and Korea.

At least 50% of the enrollment is given to alumni children. Athletes are given preference only if they meet an Academic achievement Index of 8 in a scale of 1 to 9.How they calculate is guarded.

Having said, in my daughters school the top 10 ranks, 9 are Indian origin. 4 of them got into Ivy.2 got into highly selective colleges. Apart from academics and SAT scores if you have a passion expressed in essays with an evidence of accomplishment like winning state/ national /international trophies and PARTICIPATION ONE CAN GET ADMISSION.
In fact they give aids 100% for income group less than 100K $.

Rajan

முகுந்த்; Amma said...

@ஜோதிஜி திருப்பூர் said...
"நீங்க ஒருத்தரு தான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் சினிமா பக்கம் போகாமல் அங்கே உள்ள தெரிவிக்க வேண்டிய தகவல்களை ஒவ்வொரு முறையும் ஒழுங்காக தந்து கொண்டு இருக்கீங்கள். நன்றி."

Thanks for the comment and encouragement

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...
"நல்ல பதிவு முகுந்த்அம்மா.

நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் அமெரிக்க பள்ளிகளில் நம்முடைய குழந்தைகள் discrimination செய்யப்படுவது பற்றி நான் அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்."

Thanks. I have some comments about the discrimination about the kids in schools. Will try to write it when time permits.

முகுந்த்; Amma said...

@நந்தவனத்தான் said...
"இது ரொம்ப காலமாகவே நடப்பதுதான். 1920களில் யூத மாணவர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டபட்டதாக ஆரம்பித்த விடயம் பின்பு ஆசியர்களுக்கு எதிராக திரும்பியது. 1990-ல் நீதித்துறை ஹார்வேர்டு பல்கலைகழகத்தை விசாரணைக்கும் உட்படுத்தினார்களால் - இந்த விசாரணை எந்த லட்சணத்தில் நடந்து என்ன தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை - தற்போது கறுப்பின மக்களை கொன்ற போலீசுகாரர்களுக்கு வழங்கப்படும் தண்டனை பற்றி பேப்பரில் படித்திருந்தாலே ஊகித்துவிடலாம். அதற்கு பிறகு 20% ஆசியர் இருந்த ஆசியர் எண்ணிக்கை தற்போது 16 ஆக குறைந்துவிட்டதாம்."


Thanks for the history and educating us about the early discrimination in Ivy leagues.

"ஆனால் அதே நேரத்தில் குறிப்பாக நம்மாட்கள் இந்தியாவைப் போலவே படிப்பு படிப்பு என்று கட்டுப்பெட்டியாக வளர்க்கும் முட்டாள்தனத்தை தவிர்க்கவேண்டும். இங்கு கல்லூரி அட்மிசனுக்கு விளையாட்டு போன்ற பிற விடயங்களுக்கு படிப்பைவிட முக்கியத்துவம் தரப்படும். நான் முன்பு வேலை செய்த கல்விநிலைத்தில் புகழ்பெற்ற அமெரிக்க புட்பால் டீம் உண்டு. அதில் விளையாடுபவர்கள் நிச்சயம் நியூயார்கில் புகழ்பெற்ற கம்பனிகளில்தான் இன்டன்ஷிப் போவார்கள் - கிளாசில் நன்றாக படிப்பவன் லோக்கல் கம்பனியில் குப்பை கொட்டுவான். ஏனெனில் அமெரிக்க பள்ளி-கல்லூரிகளுக்கு விளையாட்டு ஒரு முக்கிய பணம் சேர்க்கும் வழி. இந்த விடயம் இந்தியாவிலிருந்து வரும் பலருக்கு புரிவதில்லை. ஆனால் என்னுடன் வேலைபார்த்த விபரமான தமிழர் தனது பையன்களை பள்ளியில் புட்பால் (சாக்கர்) விளையாட வைத்தார்- பையன்கள் முழு கல்லூரி படிப்பையும் ஓசியிலேயே முடித்துவிட்டார்கள்."

I have heard that many indian kids although they have many extra curricular activities like music, dance, social works are still not able to get into Ivy leagues.

But I agree with what you mentioned about the sports quota. One of my colleague told me that he could send his daughter to college with full scholarship by sending her to bowling lessons and making her participate in the bowling competitions.

முகுந்த்; Amma said...

@Varun, @Sathiyapriyan

I get your argument about diversity in ivy leagues..
But I have few questions...

why many parents still prefer to send the kids to schools that have more asian population and the competition caused by asian population..

For example in Atlanta..lot of people are moving towards north of Atlanta..this includes americans, asians and Indians of course. Because north of Atlanta area have more asian population and the schools in this area are top notch in academics, national level. Even many of the white americans are moving towards that area because of the schools.

This seems to be double standard to me..encouraging kids to go to school in more asian neighborhood for achieving good grades in academics but then separating them in colleges by the name of diversity..

முகுந்த்; Amma said...

@நந்தவனத்தான் said...A lengthy article.....

"Ivy League Admissions Are a Sham:Confessions of a Harvard Gatekeeper

//Instead of giving people a boost on the ladder to upward mobility, I felt that I was simply there to make sure the children of the upper class stayed in the virtuous cycle that would keep them in the upper class.//"


Thanks for the article. This article narrates clearly the reason behind Ivy league discrimination....

SathyaPriyan said...

//
This seems to be double standard to me..encouraging kids to go to school in more asian neighborhood for achieving good grades in academics but then separating them in colleges by the name of diversity.
//

மிக முக்கியமான கேள்வியை எழுப்பி இருக்கிறீர்கள்.

First, diversity is not discrimination. 90% of students in Indian higher institutions like IIMs / ISB / XLRI / FMS etc. are Indian IT male population. When studying among them, it is hard to get other perspectives. Classes tend to be one dimensional. Case studies seem to go towards only one direction. Contrasting opinions become a rarity.

In contrast, when a class has people of multi ethnic background, multi industrial background, multi linguistic background and a good mix of gender, we get a balance. Our opinions / perspectives change after every class. We polish ourselves to become a better person.

However, such class room discussions are rarity in high school. High school kids do not want to differentiate themselves unlike graduate students. They tend to move with the mass. So its natural that parents would want to send their kids to schools in which the most care about grades and education. It is also true that in high schools with the most Asian kids, meth usages and teenage pregnancies are lesser. These are probably some reasons why people would want to send their kids to such schools. However, none of these is important when it comes to graduate school.

If diversity was not given such importance in Ivy Leagues, 90% of the classes would be Asian kids and Ivy Leagues would lose their flavor. I have spent 2 years of my life in one of these Ivy Leagues and I can vouch that not once I was discriminated.

நம்பள்கி said...

I would love to talk in detail.
Diversity is necessary in all schools let alone IVY. Else it will be like I.I.T in India with 98% Brahmins-uni dimensional. It is NOT that they are superior. It is simple: Brhammins selct Brahmins---period.

PS:
what is the difference if an F.C get 99% and SC/ST get 96%. This is Tamilnadu medical seats so-called quota. Yet, SC/ST are ridiculed for getting selected non-meritoriously. In US any one above 89% gets an A or 92% and above get A+. In India getting 96% is also called non-meritorious.

Moral of the story: I.I.T needs diversity. You cannot recruit students and faculty from Brhamins alone--over 98%. it is morally ethically wrong.