Sunday, September 20, 2015

பிஞ்சிலே பழுத்த பழங்கள்!

இரண்டு விஷயங்கள் காண, அனுபவிக்க நேர்ந்தது. முதல் விஷயம் கண்டது ஒரு பர்த்டே பார்ட்டியில். இந்திய பெண் குழந்தை ஒன்றுக்கு பர்த்டே என்று சென்று இருந்தோம். அந்த குழந்தை முகுந்த் உடன் பள்ளியில் படிக்கிறாள். அந்த பார்டிக்கு வந்த இன்னொரு குழந்தை முகுந்தை பார்த்து பர்த்டே குழந்தையிடம் "எப்படி ஒரு பாய் உனக்கு ப்ரெண்ட் ஆக இருக்க முடியும். கேர்ள் க்கு கேர்ள் மட்டுமே ப்ரெண்ட் ஆக இருக்க வேண்டும். பாய் ப்ரெண்ட் செட் ஆகாது" என்று ஒரே சண்டை போட்டு கொண்டு இருந்தது. உடனே நான் தலை இட்டு , "என்னமா பிரச்னை" என்று கேட்க்க, அதற்க்கு அந்த குழந்தை, "எப்படி ஒரு கேர்ள் க்கு பாய், ப்ரெண்ட் ஆக இருக்க முடியும், பாய் ப்ரெண்ட் என்றால் கல்யாணம் செய்துக்குவாங்க, இது செட் ஆகாது..ஆகாது" என்று ஒரே சண்டை 6 வயது குழந்தைக்கு எப்படி இந்த விஷயங்கள் எல்லாம் தெரியும் யார் சொல்லி கொடுக்கிறார்கள் என்று யோசித்து, "எங்க மா இதெல்லாம் கேட்ட, அப்படி எல்லாம் ஒண்ணுமே இல்லையே" என்று நான் கேட்க்க, அவள், "சினிமால பார்த்தேன், எனக்கும் தெரியும் " என்று குண்டை தூக்கி போட்டது.

இதனை பற்றி தோழி ஒருவரிடம் புலம்பி கொண்டு  இருந்த போது அவர், இப்போ இருக்க குழந்தைகள் எல்லாம் ரொம்ப அட்வான்சா பேசுதுங்க, இதை பாரு என்று "சன் டிவி யின் குட்டி சுட்டீஸ்" யு ட்யூப்  லிங்க் ஒன்றை அனுப்பினார்.


அதில் வந்த சிறுவன் பேசிய பேச்சை பார்த்து வாயடைத்து விட்டேன். அதுவும், "இது வேறையா " என்று அசால்டாக பேசுவது, பிறகு டேய் என்று வயதில் மூத்தவரை அனைவர் முன்பும் விளிப்பது, "வாயை மூடுப்பா" "அண்ணாச்சிக்கு நட்டு கழண்டுடுச்சு", என்று கூப்பிடுவது அவரின் தாத்தாவை பார்த்து கண்டபடி பேசுவது அதனை பார்த்து குழந்தையின் அம்மா சிரிப்பது கண்டு, இதில் என்ன சிரிக்க இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை.

மரியாதை என்பது கிலோ என்ன விலை என்று கேட்க வேண்டும் போல இந்த குழந்தையிடம். ஒரு 4 வயது குழந்தை இப்படி பேசினால் இது வளர்ந்து பெரியவரானால் எப்படி பேசும். அப்பொழுது அவர் அம்மா இப்படி சிரித்து கொண்டு இருப்பாரா ?


என்னவோ போங்கப்பா..



6 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

என்னவோ போங்கப்பா..

அதுதாங்க!

செங்கதிரோன் said...

this is very famous video many ppl shared in fb and whatsapp., and even they brought these whole bunch of kids to the Thani oruvan promotion event.

? said...

விளையும் பயிர் முளையும் தெரியும்ங்கறா மாதிரி அந்த 6 வயசு பொண்ணு வளர்ந்த பின்னாடி கண்ணகி மாதிரி அமெரிக்காவுல பெரிய கற்புக்கரசியா வருவான்னு நினைக்கிறேன். அவளுக்கு சுதந்திர தேவி சிலைக்கு போட்டியாக 'அமெரிக்க தமிழ் கண்ணகி'ன்னு பீச்சுல சிலை வைப்பானுகளா இருக்கும்!

அதேபோல அந்த டிவி பையன் டெனால்டு டிரம்ப் மாதிரி பெரிய அரசியல்வாதியாக வரவும் வாய்ப்பிருக்கு! இல்லைனா குறைந்தபட்சம் தீப்பொறி ஆறுமுகம் அல்லது வெற்றிகொண்டான் போல "கருத்தாழம்" மிக்க கழக பேச்சளாராவது வருவான்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வருண்! நீங்கள் சொல்வதைத் தமிழில் சொல்ல முடியாதா? என்போன்றோருக்கு தமிழில் கூறினால் ஆழப் புரியும். நீங்கள் உங்கள் பாங்கில் சொல்வதை உரிய ஆழத்துடன் புரிவதே என் நோக்கம்.சில வரிகள் என் ஆங்கில அறிவை வைத்துப் புரிய முடியவில்லை.

"பிஞ்சிலேயே பழுத்தது" என்பதை யாரைத்தான் பார்த்துக் கூறுவது?
உங்கள் கருத்துப்படி "பழுக்க வைக்கப்பட்டது" எனக் கூறலாமா?

முகுந்த்; Amma said...

@varun, sorry i accidentally deleted your comment.

முகுந்த்; Amma said...

"வருண் has left a new comment on your post "பிஞ்சிலே பழுத்த பழங்கள்!": "

I understand your concern but I strongly believe kids are kids, they dont really know what they mean and they are harmless to the society. Yes, it would not be pleasing when we hear them talking "too much" but I would not worry about them being little bit "advanced". Let us be realistic, they do not have the sex hormones secreted yet. They can be easily straightened out in the elementary school.

I strongly believe a society can be polluted only adults, certainly not by kids. Our adults are the real problem. All we see is Corrupted and perverted minds everywhere and they dont know what they want. The older are not wiser either. They keep saying the same nonsense.. "respect the older people even if they are idiots kind of culture"

I find addressing a child is "பிஞ்சிலேயே பழுத்தது" is sort of politically incorrect and offensive. I repeat, the adults are the real problem in any culture not the kids! Certainly NOT a 6-10 yr old kids!