thanks to google images
நான் கம்பெனி தொடங்கி மூன்று மாதத்தில் கற்று கொண்டது என்ன? என்ற கட்டுரையை லின்கெட்இன் இல் வாசிக்க நேர்ந்தது. அது கௌசிக் மித்ரா என்ற தொழில் முனைவோர் ஒருவரின் இந்தியாவில் தொழில் தொடங்கிய 3 மாத கால அனுபவம்.
1. பதில் கொடுப்பது: பொதுவாக இந்தியர்கள் உங்கள் மெயில், லெட்டெர்க்கு பதில் அனுப்ப மாட்டார்கள். அதாவது அவர்களுக்கு பதில் எழுதுவது என்பது பெரிய வேலை. பயம் அல்லது நேரமின்மை அல்லது விருப்பமின்மை காரணமாக இருக்கலாம். நீங்கள் திரும்ப ஞாபகபடுத்தி மெயில் அனுப்பினாலும் அது அவர்களின் குப்பை கூடைக்கு போகுமே தவிர வேறெங்கும் செல்லாது. அதனால், ஈமெயில் மூலம் ஒருவரை காண்டக்ட் செய்து விடலாம் பிசினெஸ் செய்து விடலாம் என்று நினைப்பவர்கள் அந்த நினைப்பை மறந்து விட்டு வேறு வழி பாருங்கள்.
2. இலவச வேலை: இலவச வேலை செய்து தருவார்கள் என்று நம்மை அணுகுவது. உங்களுக்கு எங்களிடம் பிசினெஸ் வேண்டும் என்றால் இதனை முடித்து கொடு என்று ஆரம்பித்து இலவசமாக வேலை வாங்கி கொள்ளுவது. அல்லது ஸ்டுடென்ட்டை வைத்து முடிக்க பார்ப்பது அவர்களுக்கு சொற்ப சம்பளம் தருவது.
3. எல்லாவற்றிக்கும் நம் கலாச்சாரத்தை காரணம் காட்டுவது: உதாரணமாக நீங்கள் ஏதாவது வேலை நடக்க வில்லை, ஏன் நடக்கவில்லை என்று கேட்டால் அவர்கள். இது நம்ம ஊர்ல இப்படி தான் சார். எல்லாரும் மாமூல் கேட்பாங்க என்று ஆரம்பிப்பது. உடனே, பெரிய மந்திரியில் இருந்து..கடை நிலை ஊழியர் வரை எப்படி கேட்பார்கள் என்று ஆரம்பிப்பது.
4. உங்களுக்கு நண்பர்கள் பவெர்புல் வேலையில் இருந்தால் அவர்கள் மூலம் காரியம் ஏதாவது சாதிக்கலாம் என்று நீங்கள் நினைத்து அணுகினால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும். நண்பர்கள் வெறும் நண்பர்கள் மட்டுமே, அவர்களை பிஸ்னெஸ் பர்ட்னெர் ஆக்க நினைத்தால் உங்களுக்கு அது கெடுதலாக முடியும், நட்பும் பாழாய் போகும்.
5. நேரத்தின் மதிப்பு அறியாமல் இருப்பது. ஒவ்வொரு மணியும் பணம் அதனை இழுத்தடிப்பதால் எவ்வளவு நஷ்டம் என்று உணராமல் இருப்பது.
இது முக்கியமாக இந்தியாவில் தொழில் தொடங்குவோருக்கான அறிவுரைகள் என்றாலும், எல்லா பாயிண்டுகளும் எல்லா நாடுகளில் தொழில் தொடங்குவோருக்கும் பொறுந்தும்.
டிஸ்கி
மேற்கண்ட பல விஷயத்தை நானே இந்திய பல்கலை கழகத்துடன் ப்ராஜெக்ட் ஒன்று செய்யும் போது நிறைய அனுபவித்து இருக்கிறேன். முக்கியமாக 1ஆவது, 3 ஆவது பாயிண்டும் 5தாவது பாயிண்டும்
3 comments:
இந்தியாவுக்கு மட்டும் உரியதல்ல..1,3& 5.
அமெரிக்காவின் வடகிழக்கிலிருந்து தெற்கு மாநிலத்தில் மாறியதும் இதே போன்ற அனுபவம்தான் ஏற்பட்டது.வடகிழக்கு பகுதிகளில் பெரும்பாலான விடயங்களுக்கு ஈமெயில் போதுமானது. ஆனால் இங்கே எவனுமே ஈமெயிலுக்கு பதில் கொடுக்க மாட்டீங்றானுவ, எல்லாவற்றிற்கும் நாம்தான் 10 வாட்டி போன் செய்து கெஞ்ச வேண்டியிருக்கு. அலுவலகத்தில் எதை கொஞ்சம் பெட்டராக செய்யச் சொல்லி கேட்டாலும் 'நாங்க வழக்கமா இப்படித்தான் செய்வோம்' என்றுதான் பதில் கிடைக்கிறது. எங்கு அப்பாயின்மெட் வாங்கிவிட்டு போனாலும் காத்திருக்காமல் எந்த வேலையும் முடிவதில்லை.
பாதி இந்தியாவிருக்கும் உணர்வினை ஏற்படுத்துகிறது தெற்கு, கிளைமேட்டும் பொருந்துவது கூடுதல் பிளஸ். கொசு கடித்தால் தூக்கம் வரும் என்பது போன்ற சந்தோசம் தெற்கில்!
@முகுந்த் அம்மா
முன்பு இந்த பின்னூட்டம் வேறு அக்கவுண்டு மூலம் வெளியாகிவிட்டது. அதான் டெலீட் பண்ணிவிட்டேன், மன்னிக்கவும்.
Couple of people I know immigrated to US from India with a PhD or so, and started doing business - quitting their job after of course they got green card. They both filed bankruptcy as they failed in their business, and they survive because their wives who have a white-collar jobs. I dont know what they will tell about doing business in US- coming from Indian background. :) They are kind of "super seniors" to me and I did not know their "business history" when I interacted with them. But when you talk to other old-timers, they tell you their bankruptcy history which was not told by them to you. What happens is when people fail miserably like this, they make new friends who do not know their past or failure and live a "new life" with new friends they make. They just move away form old friends because they know everything about them and probably feeling that they are looking down on them or so. :)
Post a Comment