Wednesday, October 28, 2015

பிறந்தநாள் பார்ட்டிகள் - உக்கார்ந்து யோசிப்பாங்களோ?

சில வருடங்களுக்கு முன் பிறந்தநாள் கொ/தி ண்டாட்டம் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதில் எப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் எல்லாம் கம்மேர்சியல் ஆகி விட்டன என்று குறிப்பிட்டு இருந்தேன்.  இதுவும் பிறந்த நாள் குறித்த பதிவு என்றாலும் இதுவும் கொஞ்சம் திண்டாட்டம் மற்றும் பிறந்தநாள் எப்படி நம் மக்களிடையே தற்போது தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று எனக்கு தெரிந்த சில விஷயங்கள் குறித்தது.

உண்மையில் எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து பிறந்த நாள் எல்லாம் பெரிய விசயமாக எனக்கு  கொண்டாட பட்டதில்லை. கோவிலுக்கு செல்வது, சிறு வயதில் டிரஸ் வாங்கி தந்து இருக்கிறார்கள். இதனை தவிர கேக் வெட்டுவது என்றெல்லாம் நான் ஒரு முறை கூட செய்ததில்லை.  ஆனால் இப்பொழுது எல்லாம், பர்த்டே பார்ட்டி வைப்பது என்பது அவசியமானதாக நினைகிறார்கள். அது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என்று நீள்கிறது. இந்தியாவில் கூட பெரிய அளவில் இவை கொண்டாட படுகிறது. கேக் வெட்டி, பெரிய ஹால் பிடித்து சாப்பாடு எல்லாம் போடுகிறார்கள். சிலர் ப்ளெக்ஸ் பன்னெர் எல்லாம் வைக்கிறார்கள். 

இங்கு இருக்கும் தேசி மக்களிடையே பிள்ளைகளுக்கு பர்த்டே பார்ட்டி வைப்பதில்  ஒரு போட்டி நடக்கிறது. பர்த்டே பார்ட்டி வைப்பது எங்கு வைப்பது, என்ன டெகரெசன் வைப்பது, என்ன தீம் வைப்பது, என்ன ரிட்டர்ன் கிப்ட் கொடுப்பது  என்றெல்லாம் அது நீள்கிறது. நீ அங்க பார்டி வைக்கிறியா, நான் பாரு உன்ன விட ஒரு படி மேல போய் இங்க வைக்கிறேன் பாரு. என்று வித விதமாக வைக்கிறார்கள், யோசிகிறார்கள். ஆண் குழந்தை பர்த்டே பார்டி எனில் "தாமஸ், ஸ்பைடர்மேன், பேட்மேன், லெகொ, தற்பொழுது பேமஸ் "பான்யன்" என்றும், பெண் குழந்தைகள் எனில், "பார்பி, ப்ரோசன்,பிரின்சஸ்" என்று விதவிதமாக ட்ரஸில் இருந்து, கேக், ப்ளேட், நாப்கின், டெகரேசன் என்று சகலமும் அந்த தீமில் செய்கிறார்கள், இதில் ஒரு சிலர் பார்டி ஹாலுக்கு என்று அந்த தீம் டிரஸ் உடுத்திய மக்கள் வந்து ஆட்டோகிராப் எல்லாம் செய்யும் அளவு அல்லது முக பெய்ண்டிங் என்றெல்லாம் ஒவ்வொன்றுக்கும் பணத்தை தண்ணியாக செலவளிகிரர்கள். உண்மையில் அந்த குழந்தைகளுக்கு இவை எல்லாம் ஞாபகம் இருக்குமா, இல்லை தன்னால் முடியாததை இப்படி செய்து கொள்கிறார்களா என்று தெரியவில்லை.

எனக்கு தெரிந்து ஒரு வயது ஆண், பெண் இரட்டை குழந்தைகள் பர்த்டே பார்டி சென்று விட்டு அவர்கள் செலவழித்த செலவை பார்க்கும் போது வாயடைத்து போய்  விட்டேன். ப்ரிசெச்ஸ் கேக் மற்றும் ஸ்பைடர்மேன் கேக், இரண்டு டெகரேசன் ப்ளேட், நாப்கின் மற்றும் இரண்டு அதே போன்ற உடை உடுத்திய மக்கள் மற்றும் ரிட்டர்ன் கிபிட் பெரியது மற்றும் பலூன் ஊதி விலங்குகள் அல்லது உருவங்கள் செய்து தரும் க்ளௌன்  என்று அசத்தி இருந்தார்கள். எனக்கு தோன்றியது இது தான், எப்படி அந்த ஒரு வயது குழந்தைக்கு இவை எல்லாம் நியாபகம் இருக்கும். எதுக்கு இவ்வளவு செலவு..
இதெயெல்லாம் கேட்டா நம்மள கஞ்சம்ன்னு சொல்லுவாங்க, சரி அவங்க கிட்ட காசு இருக்கு செலவக்கிறாங்க நமக்கு என்ன பா, என்று பேசாமல் இருந்து விடலாம்,  நமக்கு எதுக்கு வம்பு என்று வந்து விட்டேன்.

என்னவோ, அவங்க அவங்க ஸ்டேடஸ் காட்டுற ஒரு நிகழ்ச்சியா இப்போதெல்லாம் பர்த்டே பார்டிகள் நடத்தபடுது என்பது மட்டும் உண்மை.

சரி ஒரு ரிலாக்ஸ்சேசன் க்காக, மர்லின் மன்றோ பாடிய, ஹாப்பி பர்த்டே Mr.President பாட்டு 




.

டிஸ்கி 
இது பிறந்தநாள் பார்டிகள் குறித்த எனது எண்ணங்கள் மட்டுமே, பொதுப்படையானது அல்ல.


நன்றி


லீவு நோட்டிஸ்:

நிறைய வேலை இருப்பதால், இரண்டு வாரம் ப்ளாகுக்கு லீவு விடபடுகிறது. நேரம் அமைந்தால் மறுபடியும் எழுத முயற்சிக்கிறேன்.

5 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதெல்லாம் பெற்றோரின் பெருமைக்காகவே நடத்துகிறார்கள். அன்று பல பிள்ளைகள் புதிய முகங்கள், சத்தம், நேரம் தாண்டி நடக்கும் வைபகம், உடுப்புகள் மாற்றலால் ஏற்படும் அவசௌகரியம் என அழுது கொண்டும் பார்க்கவே சகிக்காது. பெற்றோர் தலையைச் சுவரில் மோதினால் என ஆத்திரம் வரும். என்ன? செய்வது..
இந்த ஆர்ப்பாட்டம் இங்கு நான் பார்த்த அளவில் பிரான்சியரிடம் இல்லை.
எனக்கு இவை ஒரு வகை மனநோய் போல் தான் தோன்றுகிறது.

SathyaPriyan said...

//
எப்படி அந்த ஒரு வயது குழந்தைக்கு இவை எல்லாம் நியாபகம் இருக்கும். எதுக்கு இவ்வளவு செலவு..
இதெயெல்லாம் கேட்டா நம்மள கஞ்சம்ன்னு சொல்லுவாங்க,
//
A newly born baby may not even see or realize his or her parent's face. Do you stop kissing or hugging the baby just because he or she cannot realize, remember or cherish the same? Have you ever kissed your baby while he or she is in deep sleep?

These things are not done for our kids to remember and cherish. These are done for us to remember and cherish. If you have money and if it gives you happiness, why not?

வேகநரி said...

//நீ அங்க பார்டி வைக்கிறியா, நான் பாரு உன்ன விட ஒரு படி மேல போய் இங்க வைக்கிறேன் பாரு. என்று வித விதமாக வைக்கிறார்கள், யோசிகிறார்கள்.//
:)
இது பற்றி நாங்க நண்பர்கள் முன்பு ஒரு சீனியரிடம் பேசிய போது அவர் சொன்னார், நமது மக்களுக்கு சினிமா நடிகர்கள் தான் கனவு ஸ்ரார் அவர்கள் பிறந்த நாள் கொண்டாடுவதை பார்த்து ஏங்கி ஆசைபட்டவர்கள் தங்களுக்கு பணவசதி கிடைத்ததும் வெறித்தனமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களை கொண்டாடுகின்றனர்.

வருண் said...

Some things are important for some people. Such important issues, when "they do it successfully" it makes them happy. Some people are happy looking at their savings or their stocks doing good but they wont enjoy spending money. Some people think spending for a birthday party or a wedding ceremony or an anrangEtram is not bad. After all they make money for spending for such occasions. Some people want to buy a luxury car spending triple that of what a quality car would cost and for having a "higher status". Now some other people feel such things are not necessary.

Let me go to another issue. Their religion and their God make lots of sense to some people. For others it might not make much sense.

So, these things are personal priority. I know someone who spent $36,000 for his daughter's arangEtram. He is not that rich either. But it is so important for him. He saved every penny he made and successfully finished his daughter's arangEtram. It gave him satisfaction I guess.

Like I always say, it is us who choose our friends and we "rsvp" and attend the functions which WE CHOOSE to attend! If their "materialistic lifestyle" bothers us so much and does not make sense much to us, we can always skip such friends and avoid attending such "meaningless" functions. It is in our hands after all!

It is hard to change the world but we can choose what world we wish to live. Or not? :)

ஆரூர் பாஸ்கர் said...

@வருண், I completely agree with you on this.