நேற்று, எங்கள் ஆபிசுக்கு புதிதாக வேலைக்கு வந்திருந்த ஆந்திராவை சேர்ந்த ஒருவரிடம் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஆந்திராவில் இளநிலை எஞ்சினியரிங் முடித்துவிட்டு இங்கு வந்து தகவல் தொழில்நுட்பத்தில் முதுநிலை முடித்துவிட்டு தற்போது வேலைக்கு சேர்ந்து இருக்கிறார்.
அவருடைய தங்கைக்கு ஊரில் மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னார். அதன் பின் அவர் சொன்ன பல விசயங்களும் எனக்கு தலை சுற்ற செய்தன.
அவருடைய தங்கை பிடெக் முடித்து இருக்கிறார். வேலைக்கு முயற்சி செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு வரும் வரன்கள் எல்லாம் தற்போது வரதட்சனை கேட்பது கோடிகணக்கில். அதுவும் வரன்களின் படிப்பு மற்றும் அவர் வேலை பார்க்கும் இடத்திற்கு ஏற்ப வரதட்சனை கூடும் என்றார்.
அதே போல நகையாக இப்போதெல்லாம் கிலோ கணக்கில் கேட்கிறார்கள் என்றார். மணமகளின் எடைக்கு எடை வெள்ளி பாத்திரமும் தரவேண்டி என்று கேட்கிறார்கள் என்றார் அவர். வெளி நாட்டில் வேலை பார்க்கும் வரனாக இருந்தால் மாப்பிள்ளை வீட்டார் என்ன என்ன கேட்கிறார்களோ அவ்வளவும் தரவேண்டுமாம்.
”நான் கேள்வி பட்ட வரை தமிழ் நாட்டில் எல்லாம் இந்த நிலை கொஞ்சம் மாறி இருக்கிறது” என்று அவரிடம் சொன்னேன். இப்போதெல்லாம் வெளி நாட்டில் வாழும் மாப்பிள்ளைகளுக்கு முன்பிருந்த கிராக்கி இப்போது இல்லை என்ற போது அவர் ”இப்போது எங்கள் குடும்பம் இருப்பது சென்னையில் தான், சென்னையில் இருக்கும் வரன்களின் பெற்றோர் தான் இவ்வாறு கேட்கிறார்கள் “ என்று வேறொரு குண்டை தூக்கி போட்டார்.
எனக்கு தற்போதைய கல்யாண நிலவரங்கள் தெரியாததால், அவரிடம் பேசிவிட்டு வீடு வந்த பின்பு இணையத்தில் தேடினேன்.
அப்போது எனக்கு கிடைத்தது,
http://www.dowrycalculator.com/
என்ற இந்த தளம். நீங்கள் திருமணத்திற்கு தயாராக இருப்பவரென்றால் இந்த தளத்திற்கு சென்று தங்களை பற்றி அனைத்தையும் கொடுத்து தங்களின் வரதட்சனை ரேட் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இது விளையாட்டா உண்மையா தெரியவில்லை..ஆனாலும் இந்த தளத்தில் குறிப்பிட்டு இருப்பது போலே உண்மையில் யாராயினும் சென்று பார்த்து அதற்கு ஏற்றார்போல வரதட்சனை வாங்கினார்/வாங்குகிறார் என்றால் என்னாகும் நினைக்கவே பயமாக இருக்கிறது.
இதனை குறித்த டிவி9 கொடுத்த ஒரு செய்தி அறிக்கை