Friday, August 14, 2015

பொது இடத்தில் சிறுநீர் கழித்தலும், சான் பிரான்சிஸ்கோவும்

இந்தியாவை பற்றி குறிப்பிடும் விமர்சகர்கள் எல்லாம் அங்கு இருக்கும் சுத்தமின்மை மற்றும் எங்கும் சிறுநீர் கழித்தல் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையில் இந்தியாவில் மட்டும் தான் எங்கும் சிறு நீர் கழிப்பவர்கள் இருக்கிறார்களா? என்றால் இல்லை. சொல்ல போனால் மிக வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்காவின் சிலிக்கான் வல்லெய் எனப்படும் சான் பிரான்சிஸ்கோவில் இது மிக பெரிய பிரச்சனை. அதனை குறித்த செய்தி ஒன்று வாசிக்க நேர்ந்தது. 

எங்கும் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க, சிறு நீரை ரேப்லேக்ட் செய்யும் பெயிண்ட் ஒன்றை சான் பிரான்சிஸ்கோ நகரம் எங்கும் அடித்திருப்பதாகவும், அது சிறு நீர் பட்டவுடன் ரேப்லேக்ட் செய்து சிறுநீர் கழிப்பவரின்  பான்ட், ஷு எல்லாம் நனைத்து விடுவதாகவும் படித்தேன்.


(AP Photo/Eric Risberg)


பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சான் பிரான்சிஸ்கோ நகரில் மிகப் பெரிய பிரச்சனை. இதனை தவிர்க்க சிறுநீர் கழித்தால் 500$ அபராதம் என்று பொது அறிவிப்பு கொடுத்தும் சிறிது பயன் மட்டுமே ஏற்பட்டது. 

பல சுவர்களில், "ஹோல்ட் இட்!, இந்த சுவர் பப்ளிக் பாத்ரூம் அல்ல, சான் பிரான்சிஸ்கோவை மதியுங்கள்" என்று எழுதி வைத்து இருக்கிறார்கள். 

சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பப்ளிக் டாய் லெட்டுகள் ஊரெங்கும் இயங்கு கின்றன. பொதுப்பணி துறையில் வேலை பார்பவர்களும் நாள் முழுதும் வேலை செய்து மக்களை பப்ளிக் டாய் லெட்டு உபயோகிக்க வேண்டுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொரு லைட் போஸ்ட்ம், சுவற்றையும் செக் செய்து, உப்பு பறித்தவற்றை மாற்றுகிறார்கள் அல்லது செப்பனிடுகிறார்கள். முடிவாக எதுவும் வேலை செய்யவில்லை / கட்டுபடுத்த முடியவில்லை என்ற நிலையில். ரெலேக்டிங் பெயிண்ட் ஐடியா வை செயல் படுத்தி இருக்கிறார்கள்.

இந்த பெயிண்ட் ஐடியா வை,  ஜெர்மனியில் இரவு நேர குடிகாரர்களின் சுவற்றில் அசுத்த பிரச்சனையை தவிர்க்க அங்கு உபயோகபடுத்துவதை பார்த்து பல சான் பிரான்சிஸ்கோ நகர சுவருகளில் அடித்து வைத்து இருக்கிறார்கள்.


இதனை வாசித்த பிறகு எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.  எல்லா வசதி இருந்தும் பப்ளிக்கில் அசுத்தம் செய்யும் இவர்களை விட , பொது டாய் லெட்டுகள் அதிகம் இல்லாததால் ரோட்டில், சுவற்றில் அசுத்தம் செய்யும் நம் மக்கள் எவ்வளவோ தேவலையோ என்று எண்ண தோன்றுகிறது. என்ன வசதி இருந்தாலும், மக்கள் மனம் வைத்தால் மட்டுமே ஒரு சுத்தமான ஊரை, நாட்டை உருவாக்க முடியும். மற்றபடி என்னதான்  சட்டம் போட்டாலும் அபராதம் விதித்தாலும், அதனையும் மக்கள் மதிக்க மாட்டார்கள் போல.


நன்றி.


6 comments:

ஆரூர் பாஸ்கர் said...

முகுந்த்அம்மா, செய்தி ஆச்சரியமாக இருக்கிறது.

-ஆரூர் பாஸ்கர்

துபாய் ராஜா said...

எனது அனுபவத்தில் நான் சென்ற பல நாடுகளிலும் கண்ட உலகளாவிய பிரச்சினைகளில் முக்கியமானவை எச்சில் துப்புதலும், சிறுநீர் கழித்தலுமே ஆகும். பல விளையாட்டுப் போட்டிகளின் முக்கியமாக கிரிக்கெட், ஃபுட்பால் ஆட்ட நேர் ஒளிபரப்பின் போது பல முன்னணி வீரர்களும் ஆடுகளத்திலும், மைதானங்களின் பல்வேறு இடங்களிலும் எச்சில் துப்புவதை கண்கூடாக பார்க்கலாம்.எச்சில் துப்புவதைப் பற்றியும் விபரமாக எழுதுங்கள்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அட!! இப்பிரச்சினை அமெரிக்காவிலுமா?

முகுந்த்; Amma said...

@ஆரூர் பாஸ்கர் said...
"முகுந்த்அம்மா, செய்தி ஆச்சரியமாக இருக்கிறது."

I felt the same when I read the story.

Thanks for the comment

முகுந்த்; Amma said...

@துபாய் ராஜா said...
"எனது அனுபவத்தில் நான் சென்ற பல நாடுகளிலும் கண்ட உலகளாவிய பிரச்சினைகளில் முக்கியமானவை எச்சில் துப்புதலும், சிறுநீர் கழித்தலுமே ஆகும். பல விளையாட்டுப் போட்டிகளின் முக்கியமாக கிரிக்கெட், ஃபுட்பால் ஆட்ட நேர் ஒளிபரப்பின் போது பல முன்னணி வீரர்களும் ஆடுகளத்திலும், மைதானங்களின் பல்வேறு இடங்களிலும் எச்சில் துப்புவதை கண்கூடாக பார்க்கலாம்.எச்சில் துப்புவதைப் பற்றியும் விபரமாக எழுதுங்கள்."

It seems it is quite prevalent among all people across the globe.

In all major cities I have seen spitting and bubble gum sticking as well.

THanks for the comment.

முகுந்த்; Amma said...

@தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
"அட!! இப்பிரச்சினை அமெரிக்காவிலுமா?"

Everywhere across the globe.

Thanks for the comment