Monday, August 17, 2015

குரூப்பிஷம் மற்றும் டபுள் ப்ரோமோசனும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும்!

கடந்த வாரம் நடந்த இரண்டு விஷயங்கள், நான்  இந்த பதிவு எழுத காரணம். கிட்டத்தட்ட இரண்டுமே, இந்தியாவில் இருந்து இங்கு புதிதாக வந்த சில குடும்பங்களை பற்றியது என்றாலும், இங்கு வந்து சில ஆண்டுகள் ஆன மக்களிடமும் நான் கண்ட விஷயங்கள் இவை. 

குரூப்பிஷம்
அமெரிக்காவில், எந்த ஊரில் எல்லாம் இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கு எல்லாம் இந்தியன் கம்யூனிட்டிகள்  இருக்கும். அங்கு முக்கால் வாசி நேரம் இந்தியர்கள் மட்டுமே வசிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் இந்தியர்கள் இருப்பதாலேயே, குழந்தை விளையாடலாம், நம்ம ஊர் போன்ற சூழ்நிலை இருக்கும் என்று பலரும் இது போன்ற கம்யூனிட்டிகளுக்கு வீடு வாங்கி செல்வது உண்டு.  வீடு வாங்கி கொண்டு செல்லும் போது சந்தோசமாக செல்லும் பலரும், சென்ற சிறிது ஆண்டுகளுக்குள், குரூப் பொலிடிக்ஸ், பிரச்னை என்று ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளாமல் முகத்தை திருப்பி கொள்ளுவதை பார்த்து இருக்கிறேன்.

இனம் மொழி மாறாமல் கிட்ட தட்ட எல்லா இந்தியர்/மாநில மக்களிடமும் இந்த நிலை பார்த்து இருக்கிறேன். என்ன காரணம் என்றால் , இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு குரூப் சேர்த்து கொள்ளுவார்கள். மாநிலம், மொழி, இனம், சில நேரம் ஒத்த ஜாதி மக்கள் எல்லாம் கூட ஒன்றாக சேர்ந்து க்ரூப் அமைத்து கொள்ளுவார்கள்.  பின்னர் அந்த குரூப் மக்கள் அவர்களிடம் மட்டுமே பேசி கொள்ளுவார்கள். வேறு வெளி ஆட்கள் யாரையும் அந்த குரூப்இல்  சேர்த்து கொள்ளுவது இல்லை.

பல நேரங்களில் இப்படி குரூப் களுக்குள் ,பொறமை, நீ /நான் பெரியவர், என்னிடம் பேச மாட்டேங்கிறா,மதிக்க மாட்டேன்கிறா, குடும்ப பிரச்னை ... என்பன போன்ற பல பிரச்சனைகள் எழுந்து, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொள்ளுவதுண்டு. பின்னர் அந்த க்ரூப் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளுவது இல்லை. சில நேரங்களில் குரூப் களில் இருக்கும் குடும்ப பெண்மணிகளுக்குள் நடக்கும் பிரச்சனையால் குடும்ப தலைவர்களும் சில நேரம் பேசி கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை கண் கூடாக கண்டு இருக்கிறேன். நல்ல நட்புகளாக இருந்த பலரும் உடைந்து சிதறி இருக்கிறார்கள்.

இந்த காரணத்தினாலேயே, எங்களுடைய  நண்பர்கள் அனைவரும் ஒரு இந்தியன் கம்யூனிட்டியில் வீடு வாங்கி சென்று எங்களையும் அங்கு வீடு வாங்குங்கள் என்று வற்புறித்திய  போது, நாங்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டோம்.

ஊர் விட்டு ஊர் வந்து வாழும் நிலையில் இருக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் என்று ஒற்றுமையாக இருப்போம் ஒருவருக்கு ஒருவர் உதவு செய்து கொள்ளுவோம் என்றெல்லாம் இல்லாமல், நீ பெரியவர் நான் பெரியவர் என்று போட்டி போட்டு கொண்டு சண்டை போடுவது ஏன் மக்களே?


இந்த குரூப் கலாச்சாரத்தினால் நிறைய இங்கு வரும் புதியவர்கள் பாதிக்க படுகிறார்கள். அப்படி நான் சந்தித்த வட இந்திய குடும்பம் அது . இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றாலும் ஹைதராபாதில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். IT துறையில் இருவருக்கும்  வேலை என்பதால், தற்போது, இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகள் ஆன் சைட் என்று அனுப்பி இருக்கிறார்கள். இரட்டை  குழந்தைகள், இரண்டும் முகுந்த் உடன் பள்ளியில் படிக்கிறார்கள்.  ரொம்ப அமெரிக்க வாழ்க்கை பற்றி அறிந்திராத இவர்கள், இங்கு வந்ததும் நண்பர்கள் வேண்டும் என்று அவர்கள் வந்து சேர்ந்த அபார்ட்மெண்டில் அணுகி இருக்கிறார்கள். முதலில் இவர்கள் புதியவர்கள் என்று யாரும் இவர்களை குரூப்இல் சேர்த்து கொள்ளவில்லை. பின்னர் ஓரிரு நண்பர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் ஈகோ சண்டைகள், போட்டி பொறமை என்று ஆகி இருக்கிறது.  தற்போது தங்களுக்கு யாரும் நண்பர்கள் கிடையாது பேசாம இந்தியாவிற்கு திரும்பி விடலாம்என்று இருக்கிறேன் என்று அந்த அம்மா சொன்னார்கள்.

இங்கு வந்த புதிதில் நானே இதனை நிறைய அனுபவித்து இருக்கிறேன் என்பதால் என்னால் அவர்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும் பெண்கள் படுத்தும் பாடு அதிகம் என்று இங்கு சொல்லியே ஆக வேண்டும். வேலைக்கு போகும் பெண்கள் இருந்தால் அவர்களை யாரும் குரூப்இல் சேர்த்து கொள்ள மாட்டார்கள், என்ற காரணத்தினாலேயே பல நேரங்களில் நான் என் பல்கலைகழக குடும்பத்துடனே பழகி இருக்கிறேன். என்ன மக்களோ?


டபுள் ப்ரோமோஷன் மோகம்

அடுத்த விஷயம், மக்களின் டபுள் ப்ரோமோஷன் மோகம். அதாவது, தன குழந்தையை எப்படியாவது டபுள் ப்ரோசன் வாங்க வைத்து விட வேண்டும் என்று எல்லா வற்றிலும் தள்ளுவது. அதனை கண் கூடாக காண நேர்ந்தது. எங்கள் தமிழ் பள்ளியில் இந்த வருட அட்மிசன் நேரத்தில் குழந்தைகளின் தமிழ்திறனை கணிக்க என்று ஒரு தேர்வு நடத்தினார்கள், அங்கு உதவி செய்யும் படி நேர்ந்தது. அங்கு குழந்தைகள் தேர்வு எழுத அழைத்து வரும் பல பெற்றோரும், தங்கள் குழந்தை நன்கு தமிழ் பேசும், படிக்கும் அதனால் டபுள் ப்ரமோசன் கொடுத்து அடுத்த கிளாஸ் அனுப்புங்கள் என்று எங்களிடம் சண்டை போட்டார்கள். நாங்கள் அவர்களின் திறனை சோதித்த பிறகு இல்லை என்று சொன்னாலும், எப்படி எங்கள் குழந்தைகளை நீங்கள் இந்த வகுப்பிற்கு அனுப்புகிறீர்கள்?, எங்கள் குழந்தை எவ்வளவு டலேன்ட் தெரியுமா ?, பரிச்சை பேப்பரை கொண்டு வந்து காட்டுங்கள்?, எங்கே மிஸ்டேக் சொல்லுங்கள் என்று ஒரே என்று சண்டை. ஒரு பெற்றோர், 7 வயது குழந்தையை 2ஆம் வகுப்பு தமிழில் சேருங்கள் என்று எங்களுடன் சண்டை. இன்னும் சிலர், பிறந்த தேதி கட் ஆப் இல்லை என்று சொன்னாலும், வேண்டும் என்றே டேட் ஆப் பெர்த் ஐ மாற்றி சொல்லுவது என்று செய்து கொண்டு இருந்ததை பார்க்க சிரிப்பு வந்தது. இந்த ஊரில் வந்து தமிழ் மொழி, கலாச்சாரம் தெரிய வேண்டும் என்று தான் குழந்தைகளை தமிழ் படிக்க இப்படி தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். இந்த நிலையில் ஏன் இந்த
போட்டி டபுள் ப்ரோமோசன் மோகம், சண்டை என்று தெரியவில்லை.

இதே போன்ற ஒரு மோகத்தை நான் குமான்னிலும் (kumon) பார்த்து இருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒருவர் kumon வைத்து இருக்கிறார். அங்கு பிள்ளைகளை சேர்க்க வரும் பலரும், ஏன் என் பிள்ளையை இன்னும் இந்த லெவலில் வைத்து இருக்குறீர்கள் மேலே அனுப்புங்கள். இன்னும் ஹோம்வர்க் கொடுங்கள் என்று சண்டை போடுவதை பார்த்து இருக்கிறேன். 

இப்படி நீங்கள் டபுள் ப்ரோமோசன் மோகம் கொண்டு அலைவதால் உங்கள் குழந்தை ஜீனியஸ் ஆகி விடாது. மாறாக, உங்கள் தொல்லை தாங்காமல் வந்து படிக்குமே தவிர உண்மையில் எந்த இண்டரஸ்ட்ம் இல்லாமல் தான் இருக்கும். இப்படி இவர்களை புஷ் செய்து என்ன சாதிக்க போகிறீர்கள், சொல்லுங்கள். என்னவோ போங்கப்பா!

நன்றி.

டிஸ்கி
இது நான் சந்தித்த மக்களை கொண்டு மட்டுமே எழுத பட்டது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.



10 comments:

நம்பள்கி said...

நான்றாகவும் உண்மையாகவும் எழுதுகிறீர்கள்...
நீங்கள் சொன்னது...உண்மையே.

ஒரு முப்பது முப்பத்து ஐந்து வருடங்கள் முன்பு இப்படி இல்லை. காரணம்...அப்போ எல்லோரும் படிக்கவந்து, படித்து வேலை வானங்கினவர்கள். இப்போ கணவன் மனைவி இருவரும் இங்கு வரும்போதே ஆறு இலக்கம் சம்பளம் (இருவரையும் சேர்த்து) என்பதால் மீதி வேண்டாத வேலையில் (ஜாதி, மொழி) மனது போகிறது.

வெள்ளைக்காரன் வசிக்கும் சமூகத்திலே வளர்ந்த என் குழந்தைகள் நன்றாகவே இருக்கிறார்கள்--என்ன அவர்களுக்கு ஜாதி மதம் கிடையாது
(என் ஜாதியும் என் மனைவி ஜாதியும் என் குழந்ந்தைகளுக்கு தெரியாது).

என் குழந்தைகளுக்கு இங்கு கோவில் குளம் கிடையாது---அது என் வழி!
இந்த வம்படி குமப்லில் சேராதது நன்மையே!

ஆரூர் பாஸ்கர் said...

குரூப்பிஷம்- Yes, it's very common in Indians living abroad.

In the beginning, I remember a tamil group (7-8 families) in NJ used to meet every week for pot-luck.
But, with in few months they had a problem. I heard they are not even
talking to each other now days.

Here is our strategy, we will not go too close or far.
That will always gives a healthy relationship between families (including
kids). However, there is only one Indian family in our community.

வருண் said...

எதுக்கு டபுள் ப்ரமோஷன், ட்ரிபிள் ப்ரமோஷன் எல்லாம்?

உங்க பையன்/பொண்ணு இப்போவே தமிழ் ஸ்கூலில் க்ராஜுவேட் பண்ணத் தகுதி பெற்றுவிட்டார்னு அதற்கு தேவையான அளவு ப்ரமோஷன் கொடுத்து, ஒரேயடியா அந்தமேதாவிக் குழந்தையை கெளரவப்படுத்தி ஸ்கூலைவிட்டு அனுப்பிடலாம். க்ராஜுவேட் ஆனதுக்கு அப்புறம் அந்தப் பிள்ளைகளையும், பிள்ளை பெருமை பேசும் பெற்றோர்களையும் தமிழ்ப் பள்ளியில் நீங்க பார்க்க வேண்டி இருக்காது! நீங்களும் சொல்லிக்கொடுக்க தேவையிருக்கும் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கலாம். எல்லாம் தெரிந்த்வர்களுக்கு எதுக்கு மெனக்கட்டு சொல்லிக்கொடுக்கணும்? அனுப்பிடுங்க டிப்ளமா ஒண்ணைக் கொடுத்து :)

Anonymous said...

நல்ல பதிவு. கூட்டணி என்றால் கழ(ல)கம் தான் என்று அனுபவித்து சொல்லி இருக்கீங்க.
நம்மள்கி அவர்களே!
புரியல உங்க பின்னூட்டம். கோவில் குளம் இல்லாதது நல்லதுன்னு சொல்லுறீங்களா? கோவில் குளத்துக்கும் கூட்டணிக்கும் என்ன சம்பந்தம்? வாயையும் கண்ணையும் மூடித் திறக்க தான கோவிலும் குளங்களும்.
கொஞ்சம் யோசித்தால், அளவான வார்த்தைகளும், எதிர்பார்ப்பும் உள்ளவர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நம்பள்கி said...

இப்போ இருக்கும் கோவில்கள் பக்கா வியாபர் ஸ்தலங்கள். கோவிலை ஊக்குவிப்பது ஒரு கும்பல். கணவன் வேலைக்கு செல்கிறான்; வேலையில்லா மனைவிகள் பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், முறுக்கு சுடும் க்ளாஸ், ஊசிமணி பாசிமணி விற்கும், எல்லா வியாபாரம்...இப்படி பல.. எல்லா ஊரிலேயும் உண்டு. எவளாவது ஊர் பேர் தெரியாத பெண்மணியை கூட்டி வந்து பாட்டு என்ற பேரில் கர்ண கடூரமாக கத்த வேண்டியது. கோவில்-restaruant-ல் பணம் பன்னுவது. இங்கு பல கோவில்கள் இருந்தாலும் சில் மாநிலங்களில்---தமிழர்கள் அதிகம் உள்ள இடமான அட்லாண்டா , நியூ ஜெர்சி இங்கு அதிகம் . எட்டு வருடம் முன்பே இந்த கூத்து இப்போ? அட்லாண்டா கோவில் பாட்டு இன்னும் காதில் ரம்பம் போடுகிறது!

முகுந்த்; Amma said...

@ நம்பள்கி said...

"-தமிழர்கள் அதிகம் உள்ள இடமான அட்லாண்டா , நியூ ஜெர்சி இங்கு அதிகம் . எட்டு வருடம் முன்பே இந்த கூத்து இப்போ? அட்லாண்டா கோவில் பாட்டு இன்னும் காதில் ரம்பம் போடுகிறது!"

I felt the same whenever I go to the Atlanta temple, I used to wonder Why people are always singing.. Still the same thing going on in Atlanta.

முகுந்த்; Amma said...

ஆரூர் பாஸ்கர் said...
"Here is our strategy, we will not go too close or far.
That will always gives a healthy relationship between families (including
kids). However, there is only one Indian family in our community."

WE do the same thing..In our neighbourhood there is no indian family :)

முகுந்த்; Amma said...

@வருண் said...
"எதுக்கு டபுள் ப்ரமோஷன், ட்ரிபிள் ப்ரமோஷன் எல்லாம்?

உங்க பையன்/பொண்ணு இப்போவே தமிழ் ஸ்கூலில் க்ராஜுவேட் பண்ணத் தகுதி பெற்றுவிட்டார்னு அதற்கு தேவையான அளவு ப்ரமோஷன் கொடுத்து, ஒரேயடியா அந்தமேதாவிக் குழந்தையை கெளரவப்படுத்தி ஸ்கூலைவிட்டு அனுப்பிடலாம். க்ராஜுவேட் ஆனதுக்கு அப்புறம் அந்தப் பிள்ளைகளையும், பிள்ளை பெருமை பேசும் பெற்றோர்களையும் தமிழ்ப் பள்ளியில் நீங்க பார்க்க வேண்டி இருக்காது! நீங்களும் சொல்லிக்கொடுக்க தேவையிருக்கும் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுக்கலாம். எல்லாம் தெரிந்த்வர்களுக்கு எதுக்கு மெனக்கட்டு சொல்லிக்கொடுக்கணும்? அனுப்பிடுங்க டிப்ளமா ஒண்ணைக் கொடுத்து :)"

i think thats the only way to get rid of them..They do all these things not to get knowledge but to brag about their kids to others.

thanks for the comment

முகுந்த்; Amma said...

@manichiral said...
நல்ல பதிவு. கூட்டணி என்றால் கழ(ல)கம் தான் என்று அனுபவித்து சொல்லி இருக்கீங்க.

Thanks for the comment

கிரி said...

நீங்கள் கூறுவது சரி தான். நான் இது போல பார்த்து இருக்கிறேன் (சிங்கப்பூர்).

இதற்கு மொழி ஒரு காரணியாக இருந்தாலும், அதையும் மீறி குழுக்களுக்குள் சண்டை / கருத்து வேறுபாடு வருகிறது.

இது இந்தியர்களுக்கே உண்டான பொதுவான மனநிலை என்று நினைக்கிறேன். இதனாலே நான் எந்தக் குழுவிலும் அலுவலகத்தில் கூட சேர்வதில்லை.. பின்னாளில் மனக்கசப்பை ஏற்படுத்துகிறது.

"எங்களுடைய நண்பர்கள் அனைவரும் ஒரு இந்தியன் கம்யூனிட்டியில் வீடு வாங்கி சென்று எங்களையும் அங்கு வீடு வாங்குங்கள் "

இதை மட்டும் செய்துடாதீங்க.. எட்ட இருக்கும் வரை நட்பாக இருக்கலாம்.. கிட்டப்போனாலே சண்டை தான் :-)