Thursday, August 20, 2015

இந்தியன் மேனேஜர்களும், வாட்ஸ்அப் விஞ்ஞானிகளும்

இந்தியன் மேனேஜர்கள் 

நீங்கள் ஒரு இந்தியன் மேனேஜர் இடம் வேலை பார்ப்பீர்களா இல்லை வெள்ளை மேனேஜர் இடம் வேலை பார்ப்பீர்களா ? என்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு எந்த ஒரு இந்தியரிடமும் கேட்டு பாருங்கள். அவர்களின் பதில்.ஐயோ, தேசி மேனேஜர் வேண்டாம் பா, வெள்ளை மேனேஜர் தான் நல்லது.என்று  பதில் வரும். என்னிடம் நீங்கள் கேட்டால் நானும் அதையே சொல்லுவேன். என் அனுபவத்தில் கண்ட வரை,நான் வேலை பார்த்த வெள்ளை  மேனேஜர்கள் மைக்ரோ மனஜெமென்ட் செய்ததில்லை. ஆனால் இந்தியன் மேனேஜர் கள், எப்பொழுதும் பின்னர் நின்று கொண்டு வேலை முடிந்ததா என்று படுத்துவார்கள்.

அது எந்த துறையா இருந்தாலும் இது உண்மை என்று நினைக்கிறன். ஏனென்றால், இந்தியன் மேனேஜர் கள் வேலையை பிழிந்து விடுவார்கள், மதிக்க மாட்டார்கள். உங்களை அடிமை போல நடத்துவார்கள், நீங்கள் பார்க்கும் வேலைக்கு அவர்கள் கிரெடிட் வாங்கி கொள்ளுவார்கள்...என்று பல பல கம்ப்ளைன்ட் வரும்.

ஏன் இப்படி இருக்கிறார்கள் இந்தியன் மேனேஜர்கள் என்று யோசித்தால்...பலர் சொல்லுவது நம்ம ஊர் வர்ணாசிரமம் இன்னும் மக்களின் மனதில் நிறைந்து இருக்கிறது அதனாலேயே..என்று சொல்லுவார்கள். இது உண்மையா தெரியவில்லை.

வாட்ஸ்அப் விஞ்ஞானிகள் 


என்னுடைய தோழிகள் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி இது. அதாவது வாட்டர் பக்கெட்டில் இருந்து தண்ணீர் அருந்துவதால் High Bone Fever என்ற வைரஸும், உயிர்  கொல்லியான  எபோலாவும் பரவும் என்று அந்த செய்தி  தெரிவிக்கிறது. இதனை இன்னும் 5 பேருக்கு அனுப்பவும் என்று வேறு சொல்லுகிறார்கள்.

உண்மையில் High Bone Fever என்று ஒரு வைரஸ் எனக்கு தெரிந்து இல்லவே இல்லை. அதே போல எபோலாவும் தண்ணீர் மூலம் பரவாது. பாதிக்க பட்டவரின் ரத்தத்தை தொடுவதன் மூல அல்லது காண்டக்ட் மூலமே இது பரவும்.

அதனால், இது  வாட்ஸ்அப் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த வைரஸ் புரளி மட்டுமே.

எப்படி டிசைன் டிசைன் ஆ புரளி கிளப்புறாங்கப்பா! உக்கார்ந்து யோசிப்பாங்க போல.

நன்றி.

11 comments:

நம்பள்கி said...

[[[ஏன் இப்படி இருக்கிறார்கள் இந்தியன் மேனேஜர்கள் என்று யோசித்தால்...பலர் சொல்லுவது நம்ம ஊர் வர்ணாசிரமம் இன்னும் மக்களின் மனதில் நிறைந்து இருக்கிறது அதனாலேயே..என்று சொல்லுவார்கள். இது உண்மையா தெரியவில்லை.]]

நூற்றுக்கு நூறு உண்மை!
வர்ணாசிரமம் effect இங்கேயும் இந்தியாவிலும் உண்டு!
உங்களுக்கு கீழ் ஜாதி என்றால் மிதி!
மேல் ஜாதி என்றால் தாங்கு தாங்கு என்று தாங்கு; அவா உயர்ந்த சாதி அவர்களுக்கு அறிவு அதிகம் என்று credit கொடுக்கும் ஜன்மங்கள் தான் தமிழர்கள்

செல்வநாயகி said...

Mukunth Amma,

I just love your blog. Please keep writing. I am a big fan of Nambalki`s comments too.

? said...

இந்தியர்கள் மற்றும் சைனர்களை தவிர்ப்பதை பலர் விரும்புவார்கள் என்பது சரிதான். ஆனால் எல்லா வெள்ளையர்களும் நல்லவர்கள் என்று தட்டையாக சொல்லிவிட முடியாது. பெரும்பாலான யூரோப்பியர்கள் - குறிப்பாக ஜெர்மனி ‌& நெதர்லாந்து, இத்தாலி ஆட்களிடம் வேலை செய்வது கடினம். பிரிட்டீஷ்காரர்கள் பெட்டர். ஆனாலும் அமெரிக்க வெள்ளையர்கள் பெரும்பாலும் கடவுள் நம்பிக்கை+ வசதி அதிகம் உடையவர்கள் என்பதினால் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருப்பார்கள். கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் எல்லோரும் நல்லவனா என சிலர் சண்டைக்கு வரக்கூடும். ஆனால் கடவுள் நம்பிக்கை சிலரிடமாவது கொஞ்சம் பயத்தை தூண்டிவிடுகிறது, அவ்வளவுதான். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் வேறு எதுபற்றியும் பயமில்லாது தமது வெற்றியை மட்டும் குறியாக்கி நகர்வார். ஆக வெள்ளை அமெரிக்கரிடம் நல்ல பாஸை பார்க்கும் வாயப்பு அதிகம்.

ஆனால் இந்திய பாஸாக இருந்தால் மட்டமாக நடத்தப்பட்டாலும் உங்களின் முன்னேறும் வாய்ப்பு அதிகம் - இந்திய புரபஸரிடம் புராஜக்ட் (postdoc) செய்தால் நீங்கள் வாத்தியராகும் வாய்ப்பு அதிகம் - ஆனால் அவர் மிகப் பெரிய ஆளாக இருத்தலும் அவசியம். வெள்ளை பாஸ் உங்களை நன்றாக நடத்துவார் - ஆனால் பிற்பாடு வெள்ளையன் யாராவது வந்தால் அவனை தூக்கிவிட்டு விட வாய்ப்புகள் அதிகம். இது அறிவியல் துறை குறித்தான் கணிப்பு மட்டும் மற்ற துறை பற்றி தெரியவில்லை.

வருண் said...

I hated working for an "indian boss" during my graduate studies in India. It was enough for my lifetime as I HATED HIM. He is dead now and I hate him even now! My only aim in my life is that I should never be like that closed-minded moron!

One time when I was in job market in the US as company I worked for was sinking though I still had the employment. I was sending out resumes, not many clicked. At the time, one another Indian guy- few years senior to me (he used to be my friend) suggested a position in the small firm he was working. Interview, talk and then they hired me and matched my salary. The guy who suggested this position did not expect the people who hired me, will pay me good, comparable salary of what he was making in that firm. Even I was thinking that I would be reporting to him. I did not mind reporting to him though he was from mediocre school in India. I thought he would have learnt much more during his "higher studies" in US. But the firm who hired me had a different idea. They treated me in the same way and same level of him. I did not expect that either. Neither did he. Well, now I cant hire him as my boss and I needed to listen to what my organization/firm tells me to do. He was associated with that firm for few years and I was new there and so, obviously I need to learn few things from him. He started feeling so insecure as soon as I joined there. He did not maintain any recorded notebook of expts he had been carrying out, or any soft-copy documents which can be passed on to the new comers. He never gave me the correct recipe for compounds he made before. He, in fact gave me a "wrong recipe" on purpose as he was insecure. I could not understand what kind of work ethics he had. Such a complicated personality he was. He was so insecure and did not know how to deal with me or the situation he himself created. I would not be there if he had not suggested that position. I started realizing the complication there. It was very clear to me that I cant last there long. There was a complete mismatch of personalities and it is impossible to work with that guy as his work ethics is so weird. I had to get out as soon as I can. I did get out, in few months or so. That's where my "friendship" ended with him. You think you know people but a friend becomes your coworker, he can no longer be your friend. I dont think I will ever work with any indian guys anymore in the US or anywhere in the world. They are SICK if you ask me! They may be normal for other people but for me, they are so odd and sick personalities and it is impossible for me to put up with them. I re-realized why I got out of India one more time. :)

I dont blame him or any Indians for being what they are. It is just my personality which is different from what we call as "typical indian personality". Not sure I would be able to put up with sundar pichai, or nadella if I need to work with them. I dont think I can even if they pay me million dolar salary. I mean it here! :) It is also possible, it is not them it is me, and my personality, who is part of the problem! :)

? said...

மேலும் இந்தியர்கள் - பார்பனர்கள் மட்டுமல்ல எல்லா சாதி வெண்ணைகளும் சாதியை விடுவதில்லை. அதிலும் கேடுகெட்டவர்கள் நம் தமிழர்கள். வடநாட்டில் வர்ணாசிரமான 4 சாதி அடுக்குகள் மட்டுமே ஆனால் நம்மூரில் ஆயிரக்கணக்கான சாதிகள் உண்டு. அவனவன் சாதியை தவிர மற்ற சாதிக்கு - அவர் உயர்சாதியாக இருந்தாலும் உதவமாட்டார்கள்.

ஆனால் நீங்கள் எழுதிய மனப்பாங்கு - அதிக வேலை வாங்குதல்,மரியாதையின்றி நடத்துதல் போன்ற சமாச்சாரங்களுக்கு காரணம் சாதி மட்டும் இல்லை. இந்தியர்களிடம் இருக்கும் ஜமீன்தாரி மனப்பாங்குதான். இளைத்தவனை ஏறி மிதித்தல் - வலியவனின் காலைபிடித்தல் என்பதான் நம்முடைய மனப்பாங்கு. இது பிரிட்டீஷ் ஆட்சி விட்டுச்சென்ற பெரும் சொத்து. இப்போதும் வெள்ளையனிடன் பம்பிவிட்டு சக இந்தியனை ஏறி மிதிக்கும் பலர் இந்தியர்கள் அமெரிக்காவில் உண்டு. இந்தவிதமான மனோநிலை சைனர்களிடயே பார்க்க முடியாது. Hierarchy இருந்த போதிலும் சைனர்கள் அடித்தாலும் பிடித்தாலும் ஒன்றாக சேர்ந்துகொள்ளுவார்கள் - வெள்ளையர்களை மனுசனாக்கூட மதிக்க மாட்டார்கள்:)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஏன் இப்படி இருக்கிறார்கள் இந்தியன் மேனேஜர்கள் என்று யோசித்தால்...பலர் சொல்லுவது நம்ம ஊர் வர்ணாசிரமம் இன்னும் மக்களின் மனதில் நிறைந்து இருக்கிறது// இவை ஈழத்தவருக்கும் பொருந்தும்.

ராஜ நடராஜன் said...

மேனேஜர் மட்டுமல்ல ஒரு நிறுவனத்தில் ஒரு வேலையில் சேர்ந்து விட்டால் அந்த வேலை பிரிவில் அனுபவ ஆண்டுகள் ஆகி விட்டால் அவனோ/அவளோ ராஜா/ராணிதான். நாடுகள் கடந்த ஒரு தனிமனிதனின் வளர்ப்பு முறையும்,குணநலன்களே நிர்வாக ஆளுமையை தீர்மானிக்கிறது.இதில் வர்ணாசிரம படிகள் எங்கு வருகிறது?

மைக்ரோ மேனேஜ்மெண்ட் இந்தியர்களிடம் அதுவும் தென்னிந்தியர்களிடம் தமிழர்கள்,மலையாளிகளிடம் அதிகம்.

வேகநரி said...

ராஜ நடராஜன் said
மைக்ரோ மேனேஜ்மெண்ட் இந்தியர்களிடம் அதுவும் தென்னிந்தியர்களிடம் தமிழர்கள்,மலையாளிகளிடம் அதிகம்.


இந்த கருத்தோடு நான் ஏற்று கொள்கிறேன். இதற்க்குள் வர்ணாசிரமம் எப்படி வந்தது என்பது தெரியல

நம்பள்கி said...

தமிழ்நாட்டில் தமிழர்களுடன் எல்லா அம்சத்திலேயும் (வாழ்க்கையிலும்-அலுவலக்திலேயும்) பார்ப்பனீயம்-பார்ப்பனிய படிக்கட்டு- என்பது தமிழர்களுக்கு...கர்ணனுடன் பிறந்த கவச குண்டலங்கள் மாதிரி கூடவே பிறந்தது. படிக்கும் வயது பையன்கள் எதைப் பேசினாலும் கடைசியில் செக்ஸில் முடிவது மாதிரி, தமிழர்கள் மூச்சுக்கு மூச்சு எப்படியும் பேசுவது பார்ப்பனியம்-அதன் படிக்கட்டு முறை தான்.

ஆயுத பூஜையில் எவ்வளவு பேர் இருந்தாலும் மணி அடிக்க கடைநிலை ஊழியலாரக இரும்தாலும் ஐயர் ஜாதியை சேர்ந்தவனைத் தான் கூபிபுடுகிறோம். வேற ஒருத்தன் மணி அடிச்சா சாமி ஓடுப்போய்டுமா? பின் என்ன காரணம்? வேற ஒருத்தன் வந்து அவன் நம்ம ஜாதிக்கு கீழே இருந்து மணி அடித்தால் நம்ம கெளரவம் என்ன ஆவது! அதே மாதிரி தான் அலுவலக் promotion-களிலும்.

முகுந்த்; Amma said...

@ நம்பள்கி said...
இதனுடன் தொடர்புடையதா இல்லை வேறயா என்று தெரியவில்லை. ஆனால், சமீபத்தில் அப்பட்டமாக தெரிந்த ஒரு விஷயம் நான் வாசித்த சுந்தர் பிச்சையின் ஜாதியை குறித்து மக்கள் வாட்ஸ் அப் மற்றும் FB இல் அனுப்பிய செய்திகள். நாமெல்லாம் ஒரு தமிழன் இப்படி உயர் நிலையை அடைந்து இருக்கிறானே என்று பெருமை பட்டு கொண்டு இருக்க..அவர்களோ..உடனே அவரின் ஜாதியை குறிப்பிட்டு பெருமை பட்டு கொண்டு இருக்கிறார்கள்.
உலகில் எங்கு சென்றாலும் மாறாத ஒரு குணம்.

Deiva said...

The problem with indian manager is two sided. Because of "Paambin Kaal Pambariyum", i.e he know how fellow indians cheat others so he will catch any wrong doings immediately whereas a caucasian manager don't have that skill. As others mentioned Indians are insecure and they are afraid the person reporting to him will bypass him to become manager. But Caucasian team members tend to work well with Indian manager except for few odd people.