“Imagination is more important than knowledge. For knowledge is limited to all we now know and understand, while imagination embraces the entire world, and all there ever will be to know and understand.”
"கற்பனை உலகில் எப்பொழுதும் வாழ்பவர்கள்" என்று கவிஞர்கள் எழுத்தாளர்களை பலர் தூற்றுவதை பார்த்து இருக்கிறேன். "கற்பனையில வாழுறத விட்டுட்டு நிஜத்தை கவனி" என்று பல பெற்றோர் தன் டீன் ஏஜ் குழந்தைகளிடம் சொல்லுவதை பார்த்து இருக்கிறேன். அதாவது, எப்பொழுதும் புத்தகம், புத்தகம், மனபாடம், முதல் மார்க் என்று இருந்தால் அவர்கள் நிஜ வாழ்கையில் வாழ்வதாகவும். கொஞ்சம் கற்பனை, படம் வரைதல், கவிதை/கட்டுரை எழுதுதல் என்று இருந்தால் அது கற்பனை வாழ்க்கை என்றும் சொல்லுகிறார்கள்,
இந்தியாவில் பல பெற்றோர் யாரிடமாவது நீங்கள், "குழந்தைகளுக்கு கற்பனை திறனை கற்று கொடுங்கள்" என்று சொல்லி பாருங்கள் உங்களை ஒரு மாதிரி பார்பார்கள். நான் பார்த்தவரை, குழந்தைகள் பென்சில் அல்லது கிரையான் அல்லது ஸ்கெட்ச் பேனா வைத்து ஏதாவது கிறுக்கினால் கூட நிறைய பெற்றோர் அடிப்பதை பார்த்து இருக்கிறேன். கண்ட கண்ட இடத்தில ஏன் இப்படி கிறுக்கிற என்று சத்தம் போடுகிறார்கள். அப்படி குழந்தைகள் கிறுக்கினால் உடனே வரும் பதில், "இப்படி கண்ட இடத்தில கிறுக்காம போய் புக்கை எடுத்து படி, நிறைய தெரிஞ்சுக்கோ ".என்று நிறைய சொல்ல கேட்டு இருக்கிறேன். அதாவது இவர்களின் கூற்றுப்படி, "கனவு உலகில் வாழாமல், நிறைய விசயங்களை தெரிந்து கொள்ளுவது சிறந்தது"
உண்மையில் நமக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு கற்பனை திறன் தேவையா? வாழ்க்கைக்கு, வாழ்க்கையின் வெற்றிக்கு கற்பனை திறன் தேவையா?
சமீபத்தில் ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனை திறன் பற்றிய மேலே குறிப்பிட்ட கூற்று படிக்க நேர்ந்தது. எத்தனை உண்மையான வரிகள் அவை. உண்மை என்னவென்றால், பெரிய அறிவியல் அறிஞர்கள் ஆகட்டும், கலைஞர்கள் ஆகட்டும், இன்வேண்டோர்ஸ் எனப்படும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் கண்டு பிடிப்பவர் ஆகட்டும் இவர்கள் எல்லாம் கொண்டிருக்கும் ஒரு திறன் அல்லது trait "Imagination" கற்பனை திறன்.
உதாரணமாக, ஐன்ஸ்டீன் அவர்களை எடுத்து கொள்ளுவோம் , இருக்கும் அறிவை தெரிந்து கொள்ளுவது மட்டுமே போதும், என்று நினைத்து நிறைய தெரிந்து கொள்ளுவதில் மட்டுமே அறிவை செலுத்தி இருந்தால், ஒரு "தியரி ஆப் ரெலேய்டிவிட்டி" அல்லது "Energy mass சமன்பாடு"கண்டு பிடித்து இருக்க முடியாது.
நீங்கள் எவ்வளவு தான் படித்து இருந்தாலும் அல்லது உலக அறிவு பெற்று இருந்தாலும், உங்களுக்கு கற்பனை திறன் இல்லை எனில் தனித்து தெரிய முடியாது. உங்களால் ஒன்றும் புதிதாக கண்டு பிடிக்க முடியாது. அவுட் ஆப் தி பாக்ஸ் எனப்படும் வித்தியாசமாக யோசிக்க உங்களுக்கு சிந்திக்க, கற்பனை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
அதனால் யாராவது, கற்பனையில வாழாத? என்பர் சொன்னால் ஒரு சிரிப்பு சிரித்து விடுங்கள். கற்பனை இல்லாவிட்டால் எதிலும் வெற்றி பெற முடியாது. வாழ்க்கையாகட்டும், வேலையாகட்டும். எதிலும்.
சரி இப்பொழுது கற்பனை எவ்வளவு முக்கியம் என்று அறிய முடிகிறது அல்லவா?, அடுத்து, எப்படி கற்பனை திறனை வளர்ப்பது, முக்கியமாக குழந்தைகளிடம் கற்பனை திறனை வளர்ப்பது என்று பாப்போம்.
சிறு வயதில் நான் நிறைய கதைகள் பாட்டி, அம்மா சொல்லி கேட்டதுண்டு. அப்பொழுது அந்த கதையின் மாந்தர்கள் எப்படி இருப்பார்கள் என்று மனக்கண்ணில் ஓடும்.
ஒரு கதை படித்தாலோ அல்லது கட்டுரை வாசித்தாலோ கதையுடன் அல்லது கட்டுரையுடன் ஒன்றாவிட்டால் நமக்கு அந்த எழுத்துக்கள் எல்லாம் வாக்கியங்களாக மட்டுமே தெரியும். என்ன சொல்ல வருகிறார்கள் என்று அறிய முடியாது. grasping பவர் அல்லது வார்த்தைகளை உருவங்களாக மனக்கண்ணில் கொண்டு வந்தால் மட்டுமே எழுத்தின் முழு பரிமாணமும் நமக்கு விளங்கும். அதே போல பின்னர் எந்த கதைகள் படித்தாலும் அல்லது செய்தி துணுக்கு வாசித்தாலும் அதில் சொல்ல வரும் செய்திகள் உங்களுக்கு விளங்கும். "Authors motive" மிக முக்கியம். என்ன சொல்ல விளைகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.
இங்கு குழந்தைகள் முதலில் கற்று கொள்ளுவது "மேக் பிலீவ்" அல்லது "கற்பனை செய்" என்று தான்.
எப்பொழுதும் முகுந்துடன் தினமும் சில்லி சென்ட்டேன்செஸ் எனப்படும் வாக்கியங்கள் விளையாடுவது உண்டு. ஏதாவது ஒரு வாக்கியத்தை சொல்ல வேண்டும் அது கேட்பவர்களுக்கு சிரிப்பை வரவழிக்க வேண்டும். அதுதான் சில்லி செண்டென்ஸ். உதாரணமாக "A dolphin climbed on a mountain" . நான் இப்படி விளையாடுவதை பார்த்து சிலர், என்ன இடியோடிக் விளையாட்டு இது என்று கேட்பார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, இது பயங்கர இண்டரஸ்டிங் விளையாட்டு. ஏனெனில் குழந்தைகள் இதனை விளையாடுவதற்கு முன்பு, அந்த மிருகம் எப்படி வாழும் என்று தெரிந்திருக்க வேண்டும், பின்பு எப்படி வாழ முடியாது, என்னவெல்லாம் செய்ய முடியாது என்று அறிந்திருக்க வேண்டும். பின்பு, உங்களின் கற்பனையை பயன்படுத்தி சில்லியாக நிறைய சொல்ல வேண்டும் . அதனால் இந்த விளையாட்டு விளையாட நிறைய தெரிந்திருக்கவேண்டும், மற்றும் கற்பனை செய்ய வேண்டும்.
அதே போல, நிறைய படம் வரைய சொல்லுவது, அல்லது புல்லில் படுத்து கொண்டு மேகத்தை பார்ப்பது, பார்த்து நிறைய மேகத்தின் ஷேப் என்ன மிருகம் போல இருக்கிறது என்று கற்பனை செய்வது. பின்னர் ஒரு மிருகம் வேறு எங்காவது இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய சொல்லுவது. தினமும் புத்தகம் படிப்பது, அதில் வரும் கதை மாந்தர்கள் குறித்து விவாதிப்பது என்று நிறைய நான் விளையாடுவது உண்டு. குழந்தைகளை நாம் கற்பனை செய்ய சொல்லி ஊக்க படுத்த படுத்த, அவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். நம்முடன் விளையாட சொல்லுவார்கள். நிறைய நெருக்கம் அதிகமாகும்.
இரண்டு நாளைக்கு முன்பு, காலையில் எழும் போது, அம்மா என்னிடம் ஒரு கதை இருக்கிறது கேள், என்று முகுந்த் ஒரு கதை சொன்னான், அது "கேட்ச் என்னும் ஒரு கம்பளி பூச்சி கதை" ஆச்சரியமாக இருந்தது அவன் சொல்வதை கேட்கும் போது. சிறு குழந்தைக்கே உரிய சில சில்லிநேச்ஸ் அந்த கதையில் இருந்தாலும், நாம் செய்யும் சிறு சிறு உற்சாகமும் அவர்களை எப்படி செதுக்குகிறது என்று கேட்க சந்தோசமாக இருந்தது.
சரி, இப்படி செய்வதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு. உங்கள் குழந்தை, ஒரு புத்தக புழுவாக, நடமாடும் நூலகமாக மட்டும் வாழ வேண்டுமா? அல்லது ஒரு இன்வேன்டோர் ஆக பெரிய பெரிய சாதனைகள் செய்ய வேண்டுமா? நீங்களே உங்கள் குழந்தைக்கு முதல் ஆசான், முடிவு செய்யுங்கள்.
நன்றி.
1 comment:
உண்மை
Post a Comment