Wednesday, August 19, 2015

கொசு விரட்டிகள் ஏன் அதிகம் வேலை செய்வதில்லை?

Mortein, Good night, Hit ...என்று பல பல கொசு விரட்டிகள் தினமும் அறிமுகப்படுத்த படுகின்றன. இவர்களின் தாரக மந்திரம். கொசுக்களை சீக்கிரம் விரட்டி விடும். அதிக புகை இல்லை, இரவு முழுக்க பாதுகாப்பு, நிம்மதியாக தூங்கலாம்... என்று பல பல.. உண்மையில் இவர்கள் விளம்பர படுத்துவது போல கொசு விரட்டிகள் வேலை செய்யுமா, கொசுக்கள் இந்த கொசு விரட்டிகளை  கண்டு ஓடி விடுமா? உண்மை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கொசுக்கள் முதன் முதலில் கொசு விரட்டிகள் முன்பு  அறிமுகபடுத்த படும் போது துரத்த படுகின்றன. ஆனால் அடுத்த முறை எக்ஸ்போஸ் ஆகும் போது, கொசு விரட்டிகள் எந்த பயனும் ஏற்படுத்துவதில்லை.
அமெரிக்காவில் அதிகம் உபயோபடுத்தும் Deet என்னும் கொசு விரட்டியை வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து PloS என்னும் ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டு இருக்கின்றனர்(1).
இந்த ஆராய்சியின் படி, கொசு விரட்டிகள் உபயோகிக்கப்பட்டு மூன்று மணி நேரம் மட்டுமே கொசுக்கள் அதன் எபக்ட் கொண்டிருக்கும் என்று, அதன் பிறகு அவை பழகி கொள்ளும் என்றும் அறிந்து இருகிறார்கள். 

London School of Hygiene and Tropical Medicine டாக்டர் ஜேம்ஸ் லோகன் அவர்களின் கருத்து படி "கொசுக்கள் மிக மிக வேகமாக மரபணு மாற்றம் செய்து கொண்டு சூழ்நிலைக்கு தக்க தங்களை மாற்றி தகவமைத்து கொள்ளுகின்றன. அதனாலேயே, பல கொசு விரட்டிகள் உபயோக்கிக்க ஆரம்பிக்கும் போது பயன் தருவது போல தெரிந்தாலும், கொஞ்ச நாட்களில் அல்லது கொஞ்ச நேரத்தில் அவை செயலிலந்தவை ஆகி விடுகின்றன.

அதனால் இனிமேல் எந்த விளம்பரமாவது எங்கள் கொசு விரட்டி இரவு முழுதும் கொசுக்களை கொள்ளும் பாதுகாப்பு அளிக்கும் என்றால் அவை உண்மை இல்லை. வெறும் வியாபார தந்திரம் மட்டுமே.

Photo credit to BBC 

மாறாக, இயற்கையாக கிடைக்கும் புல் ஒன்று கொசுக்களை விரட்டும் என்றும் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து தற்போது கொசுக்களை விரட்டும் Coumarin  என்னும் வேதிபொருளை பிரித்திருப்பதாகவும் படித்தேன். எப்படியே, இயற்கை வழியே சிறந்தது என்று இதன் மூலம் மறுபடியும் நிருபிக்க பட்டு இருக்கிறது. இதனை வைத்து என்ன என்ன விளம்பரங்கள் வர போகின்றனவோ? பார்க்கலாம்.

நன்றி.


Reference

1) Stanczyk NM, Brookfield JFY, Field LM, Logan JG (2013) Aedes aegyptiMosquitoes Exhibit Decreased Repellency by DEET following Previous Exposure. PLoS ONE 8(2): e54438. doi:10.1371/journal.pone.0054438

2 comments:

Avargal Unmaigal said...

கொசு பற்றி நான் அறிந்த செய்தி ஒன்று... ஆண் கொசுகள் கடிப்பதில்லை பெண் கொசுகள்தான் கடிக்கின்றன. மனைவிகள் மாதிரி....ஹீஹீ என் மனைவி பூரிக்கட்டையை எடுப்பதற்கு முன்பு நான் எஸ்கேப் ஆகிறேன் என் மனைவி கடிப்பதில்லை அடிக்கதான் செய்வாள்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கொசுவிரட்டிகள் ஏதுவுமே கொசுவை விரட்டுவதில்லையாம், நம்மை ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்தி கொசுக்கடியையே உணராமல் செய்கிறதாம் எனவும் சிலர் கூறினார்கள். அதுதான் உண்மைபோல் உள்ளது.