பார்த்தது
எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் Mission Impossible படம் நான் கல்லூரி ஆரம்பத்தில் என்று நினைக்கிறன். அதிலும் Tom Cruise இன் மேலிருந்து கீழாக கயிற்றில் இறங்கி கீழே உடலை தொடாமல் அந்தரத்தில் இறங்கும் செயல் சூப்பர் ஆக இருக்கும்.
எல்லா Mission Impossible தொடரிலும் ஏதேனும் ஒரு புல்லரிக்கும் செயல் இருக்கும். கிட்டத்தட்ட எல்லா Mission Impossible சீரீஸ்ம் பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறன், Mission Impossible 2 தவிர. Mission Impossible 4, Ghost Protocol இல் துபாய் புர்ஜ் கலிபா வில் இருந்து குதித்து அடுத்த ப்ளோர்க்கு செல்லும் படி இருக்கும் கட்சிகள் புல்லரிக்க வைக்கும்.
இரண்டு வாரத்திற்கு முன்பு, தோழிகளுடன் மறுபடியும் சினிமா Mission Impossible 5, Rogue Nation படத்திற்கு. ஈதன் ஹன்ட் ஆக அதே ஸ்டைல் உடன் Tom Cruise. முதல் Mission Impossible இல் என்று பார்த்த Tom Cruise க்கும் இப்பொழுது இருக்கும் Tom Cruise க்கும் அதிக வித்தியாசம் இல்லை, இன்னும் அதே துடிப்பு என்று கலக்குகிறார்.. என்றாலும் முகம் கிழடு விழுந்ததை போன்று ஒரு சில காட்சிகளில் தெரிகிறார். ஒவ்வொரு சீனும் கலக்கல், சீட்டு நுனிக்கு வரவழித்து விடுகிறார்கள். இன்னும் பல சீரீஸ் வரும் என்று நினைக்கிறன். பார்க்கலாம்.
படித்தது
மனித உடலில் இருக்கும் சீரியல் கில்லெர்ஸ் பற்றி படிக்க நேர்ந்தது. அதனை வீடியோ ஒன்றும் எடுத்து இருக்கிறார்கள். உடலில் இருக்கும் கான்செர் செல்கள் மற்றும் வைரஸ்களை தேடி கொள்ளும் cytotoxic T cells எனப்படும் ரத்த வெள்ளை அணுக்களில் இருக்கும் செல்கள் இப்படி செல்ல்களை தேடி தேடி தன்னை இணைத்து, தன்னுடன் சேர்த்து கொன்று விடுகின்றன. உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் இது. என்ன அற்புதமான அமைப்பு பாருங்கள். உண்மையில் நம் உடலை போன்ற ஒரு அதிசயம் எதுவும் இல்லை.
அனுபவித்தது
இது எனக்கு மட்டும் நேர்ந்ததா இல்லை உண்மையில் மக்கள் இப்படி தான் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. என்னுடைய ப்ராஜெக்ட் விசயமாக இந்தியா சென்றிருந்த போது ஒரு பல்கலை கழகமும் மற்றும் சில பேராசிரியர்களும் சந்திக்கும் பேச வாய்ப்பும் கிடைத்தது. நாம் என்ன பேச ஆரம்பித்தாலும் அல்லது நம்முடைய ஆராய்ச்சி பற்றி சொல்ல ஆரம்பித்தாலும் நிறைய நெகடிவ் கமெண்டுகள் கேட்ட்க நேர்ந்தது. இது இந்தியாவில் வேலை செய்யாது. அல்லது இந்திய செட்டிங் இதற்க்கு ஒத்து வராது. இந்தியாவில் சாம்பிள் கிடப்பது கடினம்..என்று நிறைய நெகடிவ்.. ஒருவரி கூட பாசிடிவ் ஆக, துணிந்து செய்யலாம் என்று சொல்ல வில்லை. ட்ரை செய்து கூட பார்க்காமல் எப்படி இது ஒத்து வராது என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை.
புதிய முயற்சிகள் செய்வதில் பயமா இல்லை தோற்றால் நம் எதிர் காலம் என்னாவது என்ற பயமா தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இப்படி safe zone இல் வாழ வேண்டும் என்று இந்தியாவில் இருப்பவர்கள் எப்பொழுதும் நினைக்கும் வரை. புது புது இன்வேன்சியன், கண்டுபிடிப்புகள் வராது என்பது என் எண்ணம்.
இது எனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து மட்டுமே எழுதியது..பொதுவானது அல்ல.
நன்றி.
P.S.
இரண்டு வாரம் நயாகரா, கனடா பயணம் செல்ல இருப்பதால், இரண்டு வாரம் கழித்து சந்திக்கிறேன்.
4 comments:
killer t cells...super mechanism in our body....
பயணம் இனிமையாக இருக்க வாழ்த்துக்கள்
வணக்கம் முகுந்த்அம்மா,
உங்களுக்கு டொராண்டோவில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் தெரியப்படுத்தவும். உங்களுக்கு நேரம் கிடைத்து நீங்கள் டொராண்டோவில் இருந்தால் நேரில் சந்திக்கலாம்.
-கேசவன்
@ கேசவன்
Thanks.
Post a Comment