எப்பொழுதும் எங்கள் ஆபிசில் காலையில் பொது விஷயங்கள் குறித்து பேசுவதுண்டு. கரண்ட் அப்பைர்ஸ், பெண்கள், வரவிருக்கும் தேர்தல் என்று அனைத்தும் பேசுவதுண்டு.
இன்றைய ஹாட் டாபிக் ஆக அடுத்த வருடம் வரப்போகும் US குடியரசு தலைவர் தேர்தல் முன்னிலையில் இருக்கும் குடியரசு கட்சியின் "டொனல்ட் ட்ரம்ப்" பற்றியும் ஜனநாயக கட்சியின் "ஹிலரி கிளின்ட்டன்" பற்றியும் பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது எப்பொழுதும் அமைதியாக இருக்கும் ஒரு வெள்ளை அம்மா, "நீங்கள் என்ன தான் சொன்னாலும், பெண்களால் நாட்டை வழிநடத்த முடியாது அதனால் நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவள் என்றாலும், நான் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன்" என்று சொன்னார்.
ஏன் அம்மா இப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்டதற்கு. பைபிளில் இருக்கிறது, பெண்களால் சர்ச்சை கூட வழி நடத்த தகுதி இல்லை. இப்படி இருக்க, எப்படி ஒரு நாட்டை வழி நடத்த முடியும் என்று கேட்டார். பைபிளில் இருப்பதை தான் நாங்கள் பாலோ செய்வோம். அதனால் ஒரு பெண் குடியரசுத்தலைவர் போட்டியில் நின்றால் நாங்கள் ஒட்டு போட மாட்டோம் என்று சொன்னார்.
இதே போன்ற வாசகங்களை நான் மற்ற கன்செர்வேடிவ் கிருத்துவ ஆண்களிடம் கேட்டு இருக்கறேன் என்பதால் அப்பொழுது எனக்கு அது ஆச்சரியம் தரவில்லை. ஆனால், இது வருவது ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் இருந்து வருவது தான் ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் இந்த பெண் வீட்டில் அனைத்தையும் செய்கிறார், அவளின் கணவர் வீட்டோடு இருக்கிறார் வேலை இல்லை. ஆனாலும், அவள் சொல்லுவது இது தான், என் கணவருக்கு வேலை இல்லை, வீட்டில் இருக்கிறார், ஆனாலும் அவர் தான் குடும்ப தலைவர். அது தான் பைபிளில் இருக்கிறது என்று சொன்ன போது எனக்கு நாம் அட்வான்ஸ்டு என்று உலகம் எங்கும் நினைத்து கொண்டு இருக்கும் அமெரிக்காவில் தான் இருக்கிறோமா என்று நினைக்க தோன்றியது.
உண்மையை சொன்னால், ஒரு நாட்டை வழி நடத்த ஒரு பெண்ணை நம்பி நாட்டை ஒப்படைத்தது, சவுத் ஈஸ்ட் ஆசியா தான்முன்னோடி என்று நினைக்கிறன். இந்திரா காந்தி, பெனசிர் பூட்டோ, கலிதா ஜியா, சந்திரிகா குமாரதுங்கா என்று நிறைய பெண் தலைவர்கள் பார்த்து இருக்கிறோம். அதே போல ஐரோப்பாவிலும், பிரிட்டனின் தாட்சர், மற்றும் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் போன்ற தலைவர்களும் நாட்டை ஆண்டு கொண்டு திறமாக வழி நடத்தி கொண்டு இருக்கும் போது. உலகின் தலைவர் என்று மார் தட்டி கொண்டு இருக்கும் அமெரிக்காவில் ஒரு பெண்ணை தேர்தெடுக்க கூட இப்படி யோசிக்கிறார்கள். அதற்க்கு பைபிளை காரணமாக சொல்லுவது சிரிப்பாக இருந்தது. ஒரு வேளை நாங்கள் பைபிள் பெல்ட் எனப்படும் மாநிலங்களில் இருப்பதனாலா இல்லை US முழுதும் இந்த நிலையா, சொல்லுங்கள் மக்களே.
கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி
6 comments:
ஒரு வேலை = ஒரு வேளை
ஒருவேளை இந்திரா காந்தி(எமர்ஜன்சி), மாயாவதி, மம்தா, ஜெயலலிதா இவர்களைப் பார்த்து பயந்திருப்பானுக, பயபுள்ளைக! அதன் பயம் கூடிப்போய் பைபிளை உருப்போட ஆரம்பித்திருப்பார்கள் :)
@நந்தவனத்தான் said...
"ஒருவேளை இந்திரா காந்தி(எமர்ஜன்சி), மாயாவதி, மம்தா, ஜெயலலிதா இவர்களைப் பார்த்து பயந்திருப்பானுக, பயபுள்ளைக! அதன் பயம் கூடிப்போய் பைபிளை உருப்போட ஆரம்பித்திருப்பார்கள் :)"
I wonder whether these people even know who is Mayavathi and Jeyalalitha..according to them US is the world :)
@பழனி. கந்தசாமி said...
"ஒரு வேலை = ஒரு வேளை"
Thanks Corrected it.
முகுந்த் அம்மா,
Perhaps you would talked to an Evangelist.
As you know. America is always different from rest of the world in many sense.
If you notice US elections for past decade, you will definitely see a shift.
RED, BLUE states are getting changed or redrawn.
There are many factors play a role in it; globalization, immigrant population etc.,
All in all, in my opinion the day USA selects a female candidate is not very far away.
Post a Comment