Friday, April 9, 2010
ஜப்பானிய Geisha வும், இந்திய தேவதாசிகளும்
இது ஒரு ஒப்பீடு
ஜப்பானிய Geisha : இவர்கள் ஜப்பானிய traditional entertainers . நடனம் மற்றும் பாட்டில் கைதேர்ந்தவர்கள் இவர்கள். விருந்தினர்கள் முன் பாட்டு பாடி, நடனம் ஆடி அவர்களை மகிழ்விப்பது இவர்கள் தொழில்.
இந்திய தேவதாசிகள்: இவர்கள் முந்தய இந்தியாவில் இருந்த traditional entertainers , இவர்களும் பாரம்பரிய, நடனம் மற்றும் பாட்டில் கைதேர்ந்தவர்கள். கடவுளின் முன் பாட்டு பாடி, நடனம் ஆடுவது இவர்கள் தொழில்.
ஜப்பானிய Geisha : Geisha க்கள் தங்களை மிகவும் அழகு படுத்தி கொள்வார்கள். அதற்கென்றே சிறப்பு மேக்கப், கிமோனோ (Kimono) அணிந்து கொள்வார்கள். இவர்களின் white மேக்கப் மிக பிரசித்தம்.
இந்திய தேவதாசிகள்: இவர்களும் தங்களை மிகவும் அழகுபடுத்தி கொள்வார்கள். அதற்கென்றே சிறப்பு நகைகளும், ஆடையும் உடுத்தினர்.
ஜப்பானிய Geisha : முந்தைய காலத்தில் பெரும்பாலும் இவர்கள் சிறு குழந்தைகளாக இருக்கும் போது ஏழ்மையான பெற்றோரால் Gion எனப்படும் Geisha க்கள் வாழும் வீட்டுக்கு விற்கப்படுபவர்கள்.
இந்திய தேவதாசிகள்: முந்தய காலத்தில் பெரும்பாலும் இவர்கள், பெற்றோர்களால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுபவர்கள்.
ஜப்பானிய Geisha : சிறு குழந்தைகளாக Gion இக்கு வரும் Geisha க்கள், பருவமடைந்ததும் Mizuage என்ற ஒரு விழா நடத்தப்படும், அது முடிந்த பின்னரே ஒரு பெண் முழுமையான Geisha வாக அறியப்படுகிறாள். Mizuage இக்கு முன்னர் அந்த பெண் ஏலத்துக்கு விடப்படுவாள். யார் அதிகமாக ஏலம் எடுக்கிறார்களோ அவர்கள் அவளுடன் அன்று தங்க அனுமதிகப்படுவார்கள்.
இந்திய தேவதாசிகள்: சிறுமிகளாக விற்கப்படும் தேவதாசிகள், பருவமடைந்ததும் கடவுளுடன் அவளுக்கு திருமணம் நடக்கும். அதன் பின்னர் அவள் தேவதாசி என அறியப்படுவாள். தேவதாசி ஆன பின் அவள் உயர்குடி ஆண்களின் விருப்பப்பொருள் ஆக்கப்படுகிறாள்.
ஜப்பானிய Geisha : ஒரு காலத்தில் நன்கு மதிக்கப்பட்ட இவர்கள் பின்னர் பாலியல் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்திய தேவதாசிகள்: அரசர் காலத்தில் மிக உயர்ந்த நிலையில் மதிக்கப்பட்ட இவர்களும், பின்னர் படிப்படியாக பாலியல் தொழில் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
டிஸ்கி: இது எனக்கு தெரிந்த, படித்த விசயங்களை கொண்டு எழுதியது, ஏதேனும் தவறு இருப்பின் மன்னிக்கவும்.
Labels:
சமூகம்,
முந்தய இந்தியா,
ஜப்பான்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
தகவல்கள் புதியவை. அதே சமயம் இந்த ஒற்றுமை வேற்றுமைகளுக்குள் ஒளிந்திருக்கிற மெல்லிய இழைபோன்ற ஒரு சமூக அவலம் - தேசங்கடந்தும் தென்படுகிறது.
விஷயங்கள் புதுசு.. நம்ம நாட்டில் மட்டும்தான் இதுபோல நடக்கிறது என்று நினைத்தேன்..
நன்றி..
தேவதாசிகளையும் Geisha களையும் ஒப்பிட முடியாது. யப்பானியர்களின் கலையை வெளிப்படுத்துவதே அவர்களது முதன்மை. விபச்சாரம் என்பது உண்மைக்கு மாறாக திணிக்கப்பட்ட ஒன்று. அதை பிரதானப்படுத்த முடியாது. கிமோனோ அவர்களது பாரம்பரிய கலாச்சார உடையாகும். தேவதாசிகள் அவ்வாறான வகையை சார்ந்தவர்கள் இல்லை. தேவதாசிகள் இந்துக்கோயில்களுடன் சம்மந்தப்பட்டவர்களின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதை பிரதானமாகக் கொண்டவரர்கள். அவர்களை ஒரு தேசத்தின் கலையுடன் பொருத்திப்பார்க்க முடியாது. தற்போதும் கர்நாடக மாநிலத்தில் அதிகளவு தேவதாசிகள் காண்டம் பாவிப்பதற்கு அர்சகர்கள் தடையை ஏற்படுத்துகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சில மேலைநாட்டு தொண்டுநிறுவனங்கள் பணியாற்றுகின்றது.
http://www.youtube.com/watch?v=OxzfMdibESY
Buraku சமூகத்தினரைப் பற்றி படித்தால் மற்றொறு விசயத்திலும் இரு நாடுகளுக்கும் இடையே சில ஒற்றுமைகளைக் காணலாம்.
ஜப்பானின் தாழ்த்தப்பட்ட மக்கள்
Post a Comment