சிறுவயதில் எனக்கு பிடித்த திரைப்படங்கள் எல்லாம் இப்போது பிடிப்பதில்லை. அதேபோல, இப்போது பிடிக்கும் படங்கள் சிறுவயதில் அறவே வெறுத்து ஒதுக்கி இருக்கிறேன்.
சிறுவயதில் எனக்கு பாட்டு, சண்டை, சிரிப்பு உள்ள படங்கள் தான் பிடிக்கும். மெதுவாக செல்லும் கதைஅம்சம் உள்ள படங்கள் அறவே பிடிக்காது. எனக்கு சிறுவயதில் ரஜினி ரொம்ப பிடிக்கும். ரஜினி படங்கள் தான் சிறந்தது என்று என் கூட படித்த பெண்களிடம் சண்டை போட்டு இருக்கிறேன். இன்றும் கூட ரஜினி படங்கள் பார்பேன் ஆனால் சிறுவயதில் பிடித்த அளவு பிடிக்குமா என்றால் சந்தேகமே.
எனக்கு பிடித்த தமிழ்ப்படங்கள் என்று யோசிக்கும் போது அந்த படம் பார்த்தபோது செய்த, சந்தித்த நிகழ்ச்சிகள் எனக்கு ஞாபகம் வருகின்றன. அப்படி எனக்கு பிடித்த சில தமிழ்ப்படங்கள் இங்கே.
1 . எதிர்நீச்சல் & பாமாவிஜயம்
.jpg)
.jpg)
எனக்கு நாகேஷ் மிகவும் பிடிக்கும். அதுவும் எதிர்நீச்சல் படத்தில் அவரின் ஒவ்வொரு செயலும் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும். "அடுத்தாத்து அம்புஜத்தை பார்த்தேளா " என்ற பாட்டு சரியான நகைச்சுவை. பாமாவிஜயம் படத்தில் "வரவு எட்டணா செலவு பத்தணா" பாட்டும், நகைச்சுவையும் அருமை. இன்றும் பார்க்க தூண்டும் படம்.
2 . ஒரு தலை ராகம்

சிறுவயதில் என் பெரிய அண்ணன் இருந்த போது இந்த பாடல் காசெட் எப்போதும் எங்கள் வீட்டில் ஒலித்து கொண்டிருக்கும். என் பெரிய அண்ணனுக்கு பிடித்தமான படம். நானும் சில வருடங்களுக்கு முன் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தது. என்னுடைய பெரிய அண்ணனுக்காக இந்த படம் பிடிக்கும்.
3 . முதல் மரியாதை
.jpg)
எனக்கு இந்த படம் பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தில் வரும் கதை போன்றே எங்கள் பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கதை தான் ஞாபகம் வரும். சிவாஜியின் மிகை இல்லாத நடிப்பும், வடிவுக்கரசி, ராதாவின் நடிப்பும் அருமையாக இருக்கும்.
4 . தண்ணீர் தண்ணீர்

நீரின்றி எதுவும் இல்லை என்று உணர்த்திய படம். சரிதாவின் மிகையில்லாத நடிப்பும், சூழ்நிலையும் கண்ணில் நீர் வரும்.
5 . ரோஜா
.jpg)
நான் ஒன்பதாவது படிக்கும் போது வந்த படம். அந்த படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை பாட்டும், காதல் ரோஜாவே பாட்டும் என்னை கிறுக்கு பிடிக்க வைத்தன. இந்த படத்திற்கு பிறகு அரவிந்த சாமி அவ்வளவு பிடிக்கும். சின்ன சின்ன ஆசை பாட்டில் வருவது போல தண்ணீரில் ஆடி என் அம்மாவிடம் திட்டு வாங்கி இருக்கிறேன். மறக்க முடியாத படம்.
6 . அலைபாயுதே
.jpg)
நானும் என்னுடைய கணவரும் (காதலிக்கும் போது) சேர்ந்து பார்த்த முதல் படம். இன்றும் மறக்க முடியாதது.
7 . அன்பே சிவம் & பஞ்சதந்திரம்
.jpg)
.jpg)
இரண்டுமே இரண்டு extreme படங்கள். முதல் படம் பயங்கர touching என்றால் அடுத்த படம் மனம் விட்டு சிரிக்க வைக்கும். அன்பே சிவம் Planes, Trains and Automobiles என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்றாலும் கமலின் நடிப்பு அருமை.
8 . பாரதி
.jpg)
பாரதியாரின் வாழ்கை கதை. பாரதியாக நடித்தவரின் நடிப்பு அருமை. அதற்காகவே எனக்கு இந்த படம் பிடிக்கும்.
9 . காந்தி
.jpg)
காந்தி படத்தின் தமிழ் மொழியாக்கத்தை கடந்த வருடம் பார்க்க முடிந்தது. காந்தியாக நடித்த Ben Kingsley யின் நடிப்பு அருமை.
10 . சிவாஜி
.jpg)
கடைசியாக தலைவர் படம். ரஜினி படங்கள் அனைத்தும் 100% என்டேர்டைன்மென்ட். லாஜிக் எல்லாம் பார்க்ககூடாது. அதனாலேயே ரஜினி படங்கள் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், சிவாஜி படம் அமெரிக்காவில் முதல் இருக்கையில் அமர்ந்து எல்லா சேட்டைகளும் செய்து பார்த்த படம் என்பதால் இன்னும் பசுமையாக நினைவில் இருக்கும் படம்.
என்னுடைய தமிழ்பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உதவிய பத்மாவிற்கு மீண்டும் என் நன்றிகள்.
இது தொடர் பதிவு என்பதால் தொடர விருப்பமானவர்கள் தொடருங்கள்.
10 comments:
தேங்க்ஸ் முகுந்த் அம்மா.எனக்கும் இந்த எல்லா படங்களும் பிடிக்கும்
தேங்க்ஸ்
அருமையான கலெக்ஷன். முக்கியமா தண்ணீர் தண்ணீர், முதல் மரியாதை- very nostalgic. I might want to add Punnagai Mannan to this !
ஏ ஒன் கலெக்ஷன். இதில் முதல்மரியாதைக்குத்தான் என் முதல்மரியாதை.
Super! அசத்திட்டீங்க!
#10 - oui!!!!!!!!!!!!!whistle!!!!!!!
சிவாஜி படத்தைக் குறிப்பிட்டு, அதில் ஸ்ரேயாவைப் பற்றிக் குறிப்பிடாததை அகில உலக தலைமை ஸ்ரேயா ரசிகர் மன்றத் தலைவர் என்ற முறையில் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :-))
இந்த லிஸ்டுல ஏழு படம் பாத்திருக்கிறேன்
நல்ல தொகுப்பு...
உங்களின் படத் தேர்வுகளும் . அதை பற்றிய உங்களின் எண்ணங்களும் மிகவும் அருமை .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன் . படம் பார்க்க இல்லை ., உங்க பதிவுகளைப் படிக்க .
உங்கள் தேர்வுகள் எல்லாம் அருமையான படங்கள்.
நல்ல பகிர்வு.
வாழ்த்துக்கள்.
ஒரு தலை ராகத்தை மறக்க முடியுமா. நம் பத்து பட பதிவை வாசியுங்கள்.
http://tamiluthayam.blogspot.com/2010/04/blog-post_17.html
Post a Comment