Saturday, April 17, 2010

Iceland எரிமலையும், அமெரிக்கா பயணமும்

"தென்னை மரத்தில தேள் கொட்டினா பனை மரத்தில நெறிகட்டுற மாதிரி" அப்படின்னு பழமொழி கேள்வி பட்டு இருக்கேன். ஆனா இப்போ தான் அதுக்கு proof பார்க்க நேர்ந்தது.

ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் அட்லாண்டிக் மகாசமுத்திரம் பிரிக்குது. அதனால ஐரோப்பாவில இருந்து வரும் விமானங்கள் கடல் மேல ரொம்ப நேரம் பறக்கிறத தவிர்க்க நிலத்துக்கு மேல முடிஞ்ச வரை பறக்க பார்ப்பாங்க. அதனால ஐரோப்பாவில இருந்து வரும் விமானங்கள் எல்லாம் UK, Iceland, Canada வழியாக அமெரிக்கா வரும்.

இப்போ Iceland ல எரிமலை வெடித்ததால் ஐரோப்பாவில இருந்து ஒரு விமானமும் அமெரிக்கா வரல. எரிமலையில இருந்து வர்ற புகை மேகமண்டலம் மாதிரி சூழ்ந்து இருக்கிறதால விமான என்ஜின் நின்னு போயிடுதாம். அதனால எந்த விமானமும் பறக்கல.

இதனால நெறய பேரு விமானநிலையத்தில காத்துட்டு இருக்காங்க. அதுல ஒருத்தர் எங்களோட நண்பரின் மாமியார். அவர்களும் லண்டன் விமான நிலையத்தில மாட்டிட்டு இருக்காங்க. தன்னோட மகளின் பிரசவத்துக்காக இந்தியாவில இருந்து வந்துட்டு இருந்தவங்க இப்போ லண்டன் ல. இதில இன்னொரு நிகழ்வு என்னான மே மாதம் டெலிவரி னு சொன்னங்க டாக்டர்ஸ் ஆனா இப்போவே குழந்தை பிறந்துடுச்சு.

இதை எல்லாம் சொல்லும் போது அந்த நண்பர் சிரிப்பாக ஒன்றை குறிப்பிட்டார். இடுப்புவலி வந்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு முன் இங்கு படிக்கும் தன்னுடைய மச்சானுக்கு போன் செய்து "Water broke " அப்படின்னு சொல்லி இருக்கார். அவர் மச்சான் என்ன நினைச்சாரோ தெரியல, "Is it , I will call the plumber" அப்படின்னு சொன்னாராம். எப்படி இருக்கு பாருங்க.

15 comments:

Thekkikattan|தெகா said...

அவர் மச்சான் என்ன நினைச்சாரோ தெரியல, "Is it , I will call the plumber" அப்படின்னு சொன்னாராம்.//

ஹாஹாஹா... அது சரி! மிகச் சரியாத்தான் கணிச்சிருக்கார் :)

Chitra said...

முதல் பகுதி படித்து விட்டு, நண்பரின் மாமியார் நிலை அறிந்து, "ஐயோ பாவம்!" என்று நினைத்தேன். இறுதியில், இப்படி சிரிக்க வைத்து விட்டீர்களே.....!

settaikkaran said...

நல்ல வேளை, அமெரிக்காவுக்கு வா வான்னு ஒபாமா தொல்லை பண்ணிட்டிருந்தாரு; எப்படி அவாய்ட் பண்ணலாமுன்னு யோசிச்சிட்டிருந்தேன். இதுனாலே தப்பிச்சேன்!

பத்மா said...

விமானங்களுக்காக காத்துட்டு இருக்கறது கஷ்டமான விஷயம் .அதும் நம்மூர்லேந்து..... பாஷை புரியாம.... ஐயோ பாவம் .எப்போ சரியாகுமாம்?

Ananya Mahadevan said...

lol.. இப்படியும் சில மனிதர்கள்!!!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அது சரி! :))

ஹுஸைனம்மா said...

பாவம் அந்த மாமியார்!! கூட தெரிஞ்சவங்க இருந்தா நல்லது.

இது பத்தி (எரிமலை) இன்னிக்குத்தான் பதிவுல எழுதினேன். நிறைய பேருக்குத் தெரிஞ்சவங்க இப்படி அங்கங்க மாட்டிகிட்டு இருக்காங்க போல, பாவம்!!

மச்சானைத் தூக்கத்துல எழுப்பிச் சொன்னாரோ??!!

அமைதி அப்பா said...

//ஐரோப்பாவையும், அமெரிக்காவையும் அட்லாண்டிக் மகாசமுத்திரம் பிரிக்குது. அதனால ஐரோப்பாவில இருந்து வரும் விமானங்கள் கடல் மேல ரொம்ப நேரம் பறக்கிறத தவிர்க்க நிலத்துக்கு மேல முடிஞ்ச வரை பறக்க பார்ப்பாங்க. அதனால ஐரோப்பாவில இருந்து வரும் விமானங்கள் எல்லாம் UK, Iceland, Canada வழியாக அமெரிக்கா வரும்.//

நல்ல தகவல், நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

அந்த அம்மாபாடு கஷ்டம்தான். மொழி தெரியாத தேசத்துல , அதுவும் இதுமாதிரி சந்தர்ப்பத்துலன்னா நினைச்சுப்பார்க்கவே கஷ்டமா இருக்கு.

முகுந்த்; Amma said...

@தெகா
//ஹாஹாஹா... அது சரி! மிகச் சரியாத்தான் கணிச்சிருக்கார் //
ரொம்ப சரி
நன்றிங்க

@சித்ரா

//முதல் பகுதி படித்து விட்டு, நண்பரின் மாமியார் நிலை அறிந்து, "ஐயோ பாவம்!" என்று நினைத்தேன். இறுதியில், இப்படி சிரிக்க வைத்து விட்டீர்களே//
அந்த அம்மா நாளைக்கு வாராங்களாம். அந்த பையன் இப்படி இருப்பார்ன்னு யாருமே எதிர்பார்க்கல அதனால சிரிச்சி தான் ஆகணும்.

நன்றி சித்ரா

முகுந்த்; Amma said...

@பத்மா
//விமானங்களுக்காக காத்துட்டு இருக்கறது கஷ்டமான விஷயம் .அதும் நம்மூர்லேந்து..... பாஷை புரியாம.... ஐயோ பாவம் .எப்போ சரியாகுமாம்?//

உண்மை தான் பத்மா. அந்த அம்மாவுக்கு ஆங்கிலம் கொஞ்சம் தெரியும் கூட வேற ஆளு இருக்காங்க அதனால பரவாயில்லைன்னு நினைக்கிறன்.

@சேட்டைக்காரன்
//நல்ல வேளை, அமெரிக்காவுக்கு வா வான்னு ஒபாமா தொல்லை பண்ணிட்டிருந்தாரு; எப்படி அவாய்ட் பண்ணலாமுன்னு யோசிச்சிட்டிருந்தேன். இதுனாலே தப்பிச்சேன்//

ரொம்ப நாள் தப்பிக்க முடியாது அண்ணாச்சி. இப்போ கொஞ்சம் சரியாயிடுச்சாம். விடமாட்டார் ஒபாமா.

முகுந்த்; Amma said...

@அநன்யா மஹாதேவன், @முத்துலெட்சுமி

ரொம்ப நன்றிங்க


@ஹுஸைனம்மா
//பாவம் அந்த மாமியார்!! கூட தெரிஞ்சவங்க இருந்தா நல்லது//
ஆளுங்க இருக்காங்க அவங்க கூட

//இது பத்தி (எரிமலை) இன்னிக்குத்தான் பதிவுல எழுதினேன். நிறைய பேருக்குத் தெரிஞ்சவங்க இப்படி அங்கங்க மாட்டிகிட்டு இருக்காங்க போல, பாவம்//

அப்படியாங்க படிச்சு பார்கிறேன். நெறய பேரு இந்தமாதிரி மாட்டிட்டு இருக்காங்க

//மச்சானைத் தூக்கத்துல எழுப்பிச் சொன்னாரோ??!//

கரெக்டுங்க தூக்கத்தில எழுந்து தான் அப்படி பேசி இருக்கார்.

முகுந்த்; Amma said...

@அமைதி அப்பா

ரொம்ப நன்றிங்க


@அமைதிசாரல்

//அந்த அம்மாபாடு கஷ்டம்தான். மொழி தெரியாத தேசத்துல , அதுவும் இதுமாதிரி சந்தர்ப்பத்துலன்னா நினைச்சுப்பார்க்கவே கஷ்டமா இருக்கு//

இந்த மாதிரி நேரத்தில அவங்க வந்து மாட்டிட்டு இருக்கிறது ரொம்ப துரதிஷ்டமானது/

ரொம்ப நன்றிங்க

Radhakrishnan said...

நிலைமை இப்போது சரியாகி வருகிறது. நல்ல நகைச்சுவை.

மங்குனி அமைச்சர் said...

//"Is it , I will call the plumber" அப்படின்னு சொன்னாராம். எப்படி இருக்கு பாருங்க. ///


பஸ்ட்டு தமிழ்ல பேசுங்க அப்பு