விடியக்காலையில் தொலைபேசி அலறியது, யாரென்று பார்த்தால் இந்தியாவிலிருந்து அம்மா. "தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்" , என்று வாழ்த்து சொன்னார்கள். நேற்று இரவு முழுதும் பல் முளைப்பதால் தூங்க முடியாமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து எங்களையும் தூங்க விடாமல் செய்த முகுந்த் ஆல் இருவரும் ஏன்டா பொழுது விடியுது என்று நினைத்து எழுந்தோம். அப்போது தான் உறைத்தது "ஓ, இன்னிக்கி newyear இல்ல". வாழ்த்துக்கள் பரிமாறி கொண்டோம்.
என்னுடைய சிறுவயது, இந்திய தமிழ் புத்தாண்டு ஞாபகம் கொசுவர்த்தி சுற்றியது, அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து பெரிய கோலம் போட்டு, கூரை பூ வீட்டு வாசலில் வைத்து, சாமி அலமாரியில ஒரு கண்ணாடி வைத்து அதில் நகை எல்லாம் போட்டு "காலையில் எழுந்திருச்சதும் அதில தான் கண்ணு முழிக்கணும், அப்போ தான் இந்த வருஷம் பூரா உனக்கு அதிர்ஷ்டம் வரும் ", என்று அம்மா சொல்லுவதும். அதற்காகவே காலையில எழுந்திருச்சு கண்ணை மூடிகிட்டே சாமி அலமாரி வரை சென்று அதில் கண்ணு முழித்து, இந்த வருஷம் எனக்கு நல்ல அதிர்ஷ்டம் வரும் என்று நம்பியது, கொசுவர்த்தியாக சுத்தி முடிந்தது.
நினைவுகளில் இருந்து விடுபட்டு, பையனை கவனிக்க ஆரம்பிக்க, அடுத்த தொலைபேசி அழைப்பு, இந்த முறை அவருடைய அப்பா, அம்மா, மறுபடியும் அதே வாழ்த்து பரிமாற்றம். புதுவருசம் வந்திருச்சு, அப்புறம் என்ன அவர் அலுவலகம் கிளம்ப, நான் முகுந்த் ஐ கவனிக்க. மறுபடியும் ஆரம்பித்தது எங்களுடைய "Just another day".
அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
12 comments:
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! :-))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்:)!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
vaazhthukkal mukund amma
//நேற்று இரவு முழுதும் பல் முளைப்பதால்//
அய்யோ அப்புறம் என்ன ஆச்சு
தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு மற்றும் சித்திரைவிசு திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஏறக்குறைய தில்லி புத்தாண்டும் இப்படித்தான் இருக்கு :)))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
முகுந்த் எப்படி இருக்கிறான்?
Maybe, from next year, you can start a tradition for him too. :-)
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
@சேட்டைக்காரன், @ராமலெட்சுமி, @ராகவன் நைஜீரியா, @பத்மா, @துபாய் ராஜா
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.
@பெருசு
//அய்யோ அப்புறம் என்ன ஆச்சு//
ஒண்ணும் ஆகலைங்க.
நன்றிங்க
@முத்துலெட்சுமி
//ஏறக்குறைய தில்லி புத்தாண்டும் இப்படித்தான் இருக்கு :)))//
ஓ அப்படியாங்க, பஞ்சாபி புத்தாண்டு கூட இப்போதான் இல்ல.
@சித்ரா
//இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!//
நன்றி சித்ரா
//முகுந்த் எப்படி இருக்கிறான்? //
இப்போது பரவாயில்லை, ஆனாலும் சில நேரம் வலியால்அழுகிறான். விசாரித்ததற்கு ரொம்ப நன்றிங்க
//Maybe, from next year, you can start a tradition for him டூ//
நல்ல ஐடியா தான், ஆனா அவனுக்கு புரிய இன்னும் ஒன்றிரண்டு வருஷம் ஆகணும்னு நினைக்கிறன்.
@அமைதிசாரல்
வாழ்த்துக்கு நன்றிங்க
Post a Comment