Tuesday, April 20, 2010

உலகம் தட்டையானது (The World is flat)
சில நாட்களுக்கு முன் தாமஸ் எல். பிரீட்மான் எழுதிய "The World is flat - உலகம் தட்டையானது ", புத்தகம் படிக்க நேர்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் information age எனப்படும் அதி நவீன காலத்திற்கு நம்மை இட்டுச்சென்ற முக்கிய காரணிகளை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தபால், கடிதம், செய்திதாள்கள், தூர்தர்ஷன் இவைதான் இருந்தது. ஆனால் இன்று SMS பற்றி தெரியாதவரை வேற்று கிரக வாசி போல பார்க்கின்றனர். ஒரு வீட்டில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒரு கைபேசி இருக்கிறது. கைபேசியுடன், டிஜிட்டல் கேமரா, இன்டர்நெட், FM ரேடியோ, ஆயிரக்கணக்கான டிவி சேனல்கள் என்று அனைத்து வசதிகளும் உண்டு. உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் சில நொடிகளில் நம்மை வந்தடைந்து விடுகின்றன.

இது எப்படி சாத்தியமானது?

பிரீட்மான் அவர்களின் கூற்றுப்படி உலகத்தை தட்டையாகிய காரணிகள் சில

1 . முதல் காரணி 1989 ஆம் ஆண்டு நிகழ்ந்த பெர்லின் சுவர் இடிப்பு அல்லது சோவியத்தில் கம்யுனிசத்தின் வீழ்ச்சி - சோவித் யூனியனின் வீழ்ச்சி, அதன் பொருளாதார அமைப்பை போன்று பின்பற்றிய இந்தியா, சீனா போன்ற நாடுகளின் சந்தையை அனைத்து நாடுகளுக்கும் திறக்க வழிகோலியது.

2. இன்டர்நெட் - மனிதரின் துணை இல்லாமல் ஒரு இயந்திரம் அடுத்த எந்திரத்துடன் தொடர்பு கொள்ள உதவிய SMTP , HTTP போன்ற தொடர்ப்பு தொழில்நுட்பம் . இவை PC எனப்படும் தனிக்கணினியை ஒன்றுடன் ஒன்று இணைக்க உதவியது. Intranet ஆக இருந்த கணினி இணைப்பு பின்பு இன்டர்நெட் ஆனது இதனை போன்ற மென்பொருள்களின் உதவியால் தான்.

3 . Netscape போன்ற browser கள் - இவை இண்டர்நெட்டை ஐந்து வயது குழந்தைகளில் இருந்து எழுபது வயது பெரியவர்கள் வரை கொண்டு சேர்த்தது. அனைத்தும் virtual மயமாக்கப்பட்டது. அதாவது இங்கிருந்த படியே நான் இந்தியாவில் இருக்கும் கணினியை இயக்க முடியும்.

4 . Open source - யார்வேண்டுமாயினும் எதைவேண்டுமாயினும் எழுத, பகிர உதவும் Open source மென்பொருட்கள், வலையுலகம், விக்கிபீடியா போன்றவை.

5 . Outsourcing & Offshoring - ஓரிடத்தில் இருக்கும் வேலையை வேறு வேறு இடங்களுக்கு பிரித்து அனுப்புதல். பிரீட்மான்னின் கூற்றுப்படி நிறுவனங்கள் தங்களின் லாபத்தை கணக்கில் கொண்டு எங்கு கூலி குறைவாக வேலை அதிகமாக செய்து தருவார்களோ அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு outsource செய்வது . உதாரணமாக சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு செய்து தரப்படும் துணிமணி, பொம்மை, தளவாடங்கள் போன்ற அனைத்து பொருட்களும், இந்தியாவில் இருந்து செய்து தரப்படும் மென்பொருட்கள், BPO க்கள் போன்றவை. இதனால் மக்களிடம் ஏற்பட்ட பணப்புழக்கமும் ஒரு காரணம்.

இவை எல்லாம் பிரீட்மான் அவர்கள் சொல்லும் உலகம் தட்டையானதிற்க்கான சில காரணிகள். இதனை எல்லாம் சொல்லிவிட்டு அவர், அமெரிக்கர்கள் உலகத்துடன் போட்டியிட வேண்டுமாயின் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் சரி தான், ஆனால், நேற்று என்னுடைய கணவர், தான் இந்தியா பற்றி ஒரு செய்தி படித்ததாக கூறினார். அது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. அதன் படி இந்தியாவில் இருக்கும் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கைபேசிகளின் (cellphone) எண்ணிக்கை அதிகம் என்று அது தெரிவிக்கிறது.

ஆமாம், உலகம் தட்டையாகி விட்டது. கழிவறைக்கு கூட கைபேசி எடுத்து செல்கின்றனர் சிலர். ஆனால் கழிவறை தான் போதுமான அளவு இல்லை.

17 comments:

ராஜ நடராஜன் said...

நல்ல இடுகைக்கு கூட்டம் சேர்க்க வேண்டி எனது பின்னூட்டம்.

Thekkikattan|தெகா said...

ஃப்ரீட்மேனும் தட்டையாகவே இந்த உலகத்தை கண்டுவிட்டார். நானும் அந்தப் புத்தகத்தை ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பே வாசிக்க நேர்ந்தது.

//ஆமாம், உலகம் தட்டையாகி விட்டது. கழிவறைக்கு கூட கைபேசி எடுத்து செல்கின்றனர் சிலர். ஆனால் கழிவறை தான் போதுமான அளவு இல்லை.//

இது மாபெரும் கொடுமை, அப்படியாக நிகழ்ந்தது போனது. கழிவறை தேடி ஒரு வெள்ளைக்காரர் ஒருவருடன் சென்னை வீதிகளில் அலைந்ததுதான் ஞாபகத்திற்கு வந்து போகிறது :((... கிலேவிற்கு இவ்வளவு என்று செல்ஃபோன்களை எடை போட்டு விற்கும் காலத்தோட நாமும், நல்ல அரிசியை விட மலிவாமே !!

துபாய் ராஜா said...

அழகான பகிர்வு. அருமையான கருத்துக்கள்.

Chitra said...

ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. அதன் படி இந்தியாவில் இருக்கும் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கைபேசிகளின் (cellphone) எண்ணிக்கை அதிகம் என்று அது தெரிவிக்கிறது.


..... வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் - மாதிரி - இருபது செல்லுக்கு ஒரு கழிப்பறை கட்டுவோம். :-)

settaikkaran said...

உலகம் தட்டையானதுன்னதும் எல்லாரும் மலையைக் கூட விட்டு வைக்காம பிளாட்டுப் போட்டு வித்திடாம இருக்கணும். அப்புறம், இந்த கைபேசி:கழிப்பறை விகிதாச்சாரம் சரியான காமெடி! ஒரு வீட்டுலே நாலு பேர் இருந்தா அதுக்குன்னு நாலு கழிப்பறையா வச்சுக்குவாங்க? ஐ.நா சபை கூட இப்பெல்லாம் ரொம்ப அலம்பல் பண்ண ஆரம்பிச்சிருச்சு போலிருக்கு! :-))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஒரு வீட்டுலே நாலு பேர் இருந்தா அதுக்குன்னு நாலு கழிப்பறையா வச்சுக்குவாங்க? ஐ.நா சபை கூட இப்பெல்லாம் ரொம்ப அலம்பல் பண்ண ஆரம்பிச்சிருச்சு போலிருக்கு! :-))

// இது கூட நியாயமா தெரியுதே..

சே எதை படிச்சாலும் சரின்னுபடறதுக்கு பேரு என்ன வியாதி..?

Anonymous said...

செல்போன் - கழிவறை :)

பனித்துளி சங்கர் said...

/////இவை எல்லாம் பிரீட்மான் அவர்கள் சொல்லும் உலகம் தட்டையானதிற்க்கான சில காரணிகள். இதனை எல்லாம் சொல்லிவிட்டு அவர், அமெரிக்கர்கள் உலகத்துடன் போட்டியிட வேண்டுமாயின் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவேண்டும் என்று கூறி இருக்கிறார்.

இதெல்லாம் சரி தான், ஆனால், நேற்று என்னுடைய கணவர், தான் இந்தியா பற்றி ஒரு செய்தி படித்ததாக கூறினார். அது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை. அதன் படி இந்தியாவில் இருக்கும் கழிவறைகளின் எண்ணிக்கையை விட கைபேசிகளின் (cellphone) எண்ணிக்கை அதிகம் என்று அது தெரிவிக்கிறது. ///////


உண்மைதான் நானும் படித்தேன் . அதனால்தான் இன்னும் இந்தியா இப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்

முகுந்த்; Amma said...

//நல்ல இடுகைக்கு கூட்டம் சேர்க்க வேண்டி எனது பின்னூட்டம்//

நன்றி ராஜ நடராஜன் அவர்களே.

முகுந்த்; Amma said...

//ஃப்ரீட்மேனும் தட்டையாகவே இந்த உலகத்தை கண்டுவிட்டார். நானும் அந்தப் புத்தகத்தை ஒரு இரண்டு வருடங்களுக்கு முன்பே வாசிக்க நேர்ந்தது.//

நான் வாசித்தபோது பட்ட அனுபவத்தை முபே தாங்கள் அனுபவித்து இருக்கிறீர்கள். நன்று.

//இது மாபெரும் கொடுமை, அப்படியாக நிகழ்ந்தது போனது. கழிவறை தேடி ஒரு வெள்ளைக்காரர் ஒருவருடன் சென்னை வீதிகளில் அலைந்ததுதான் ஞாபகத்திற்கு வந்து போகிறது //

ஓ, அது பெரிய கொடுமை அல்லவே , என்ன நினைத்தாரோ அந்த வெளிநாட்டவர்

// நல்ல அரிசியை விட மலிவாமே !!//

அப்படியா , :((

முகுந்த்; Amma said...

//அழகான பகிர்வு. அருமையான கருத்துக்கள்.//

நன்றி துபாய் ராஜா அவர்களே

முகுந்த்; Amma said...

//வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் - மாதிரி - இருபது செல்லுக்கு ஒரு கழிப்பறை கட்டுவோம். :-)//
இது நல்ல திட்டமாக இருக்கும் போலிருக்கிறதே. திட்டத்துறை தலைவர் சித்ராவுக்கு நன்றி.

முகுந்த்; Amma said...

//உலகம் தட்டையானதுன்னதும் எல்லாரும் மலையைக் கூட விட்டு வைக்காம பிளாட்டுப் போட்டு வித்திடாம இருக்கணும். //
நல்ல ஆதங்கம்.

//அப்புறம், இந்த கைபேசி:கழிப்பறை விகிதாச்சாரம் சரியான காமெடி! ஒரு வீட்டுலே நாலு பேர் இருந்தா அதுக்குன்னு நாலு கழிப்பறையா வச்சுக்குவாங்க? ஐ.நா சபை கூட இப்பெல்லாம் ரொம்ப அலம்பல் பண்ண ஆரம்பிச்சிருச்சு போலிருக்கு! :-))//

அண்ணாச்சி, அவங்க சர்வே எடுத்திருக்கிறது, ஒவ்வொரு வீட்டிலையும் எதனை போன் இருக்கு, கழிப்பரை இருக்குங்கிறது இல்ல.
இந்தியாவில மொத்தம் எத்தனை செல்போன் இருக்கு, மொத்தம் எத்தனை கழிப்பரை இருக்குங்கிற சர்வே தான். அப்படி பார்த்ததில கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்கள் கொண்ட இந்தியாவில 366 மில்லியன் மக்களுக்கு மட்டுமே நல்ல கழிப்பரை வசதி இருக்காம். ஆனால் 563 மில்லியன் மக்கள் கிட்ட கைபேசி இருக்காம்.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி
//இது கூட நியாயமா தெரியுதே.. சே எதை படிச்சாலும் சரின்னுபடறதுக்கு பேரு என்ன வியாதி..?//
அதிகமா சர்வே செய்தி படிச்சா எனக்கும் சிலநேரம் இப்படிதான் தோணும், அதுவும் சரி, இதுவும் சரி ஆனா எது உண்மையான சரி , எப்படியோ குழம்பாமல் இருந்தால் சரி.
நன்றி முத்துலெட்சுமி அவர்களே

முகுந்த்; Amma said...

//செல்போன் - கழிவறை :)//

கருத்துக்கு நன்றி சின்ன அம்மணி அவர்களே

முகுந்த்; Amma said...

//உண்மைதான் நானும் படித்தேன் . //

இந்த செய்தியை படித்தபோது எனக்கு ஏற்பட்ட உணர்வு தங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்.


//அதனால்தான் இன்னும் இந்தியா இப்படியே இருக்கிறது என்று நினைக்கிறேன்//

அப்படிதான் நானும் நினைக்கிறேன்.

நன்றிங்க

அமைதி அப்பா said...

நல்ல தகவல்கள்.

//உலகின் எந்த மூலையில் நடக்கும் நிகழ்வுகளும் சில நொடிகளில் நம்மை வந்தடைந்து விடுகின்றன.//

செல்போன் எடுக்காமால் வெளியில் சென்றால், நாம் எதோ தனிமைப்பட்டது மாதிரியான உணர்வு ஏற்படுவது உண்மையே!