மழை வருது, சீக்கிரம் சட்டி எடுத்து வாருங்கள், மனைவி கத்தியது கேட்டது
ஓட்டையை சரிசெய்யுங்கள், பலமுறை வீட்டுக்காரரிடம் சொன்னபோது
வரும்மாதம் பார்போம் என்ற பதில் வாடிக்கை ஆனது
கடுமையாக கேட்டால் எங்கே காலி செய்ய வேண்டுமோ, மனது பயந்தது
ஒண்டு குடித்தனத்தில் வாழ்ந்த மனம் ஒடுங்கிவிட்டது
காம்பவுண்டு வீடுகளின் அனைத்து கஷ்டமும் நெஞ்சில் ரணமானது
எனக்குன்னு ஒரு சொந்த வீடு வெறும் கனவானது
என் வாழ்நாளுக்குள் கனவு நிறைவேறுமோ மனம் ஏங்கலானது
7 comments:
ஒரு இந்திய நடுத்தர வர்க்கத்தின் குரலாக இதைப் பார்க்கின்றேன்.
எல்லோருக்கும் வரும் இந்த கனவு சிலருக்கு இனித்திடும். சிலருக்கு எட்டாக்கனியாகி கண்கள் பனித்திடும்.
ஆதங்கமா இருக்கு! ஜோர்!
என் வாழ்நாளுக்குள் கனவு நிறைவேறுமோ மனம் ஏங்கலானது
..... :-(
true..... its still a dream for many!
ரொம்ப டச்சிங் , அருமை மேடம்
சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கும் பலரின் ஏக்கத்தை பிரதிபலிக்கும் கவிதை. நல்லா சொல்லியிருக்கீங்க முகுந்த் அம்மா.
உண்மையான உண்மை ...
Post a Comment