Tuesday, April 6, 2010

பைத்தியக்கார மாடு (Mad cow)பைத்தியக்கார மாடு- இது வசைச்சொல் அல்ல.

ஒரு மாடு மற்றொரு மாட்டை சாப்பிட்டால் என்ன ஆகும்?

என்னது! மாடு இறைச்சி சாப்பிடுவதா? ஒரு மாடு எப்படி இன்னொரு மாட்டை சாப்பிடும், மாடு புல்லை தானே சாப்பிடும்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஆனால் வெறும் புல்லை தின்ற மாடுகள் புஷ்டியாக இல்லாமல் நோஞ்சான்னாக இருந்தன. அப்படி நோஞ்சான் மாடுகள் கறிக்கு உதவவில்லை என்று மாடுகள் பண்ணை நடத்தும் " Cattle Industry " மக்கள் உணர்ந்தனர். நோஞ்சான் மாடுகள் கொழுக்க சரிவிகித உணவு என்ற ஒன்றை கொடுக்க ஆரம்பித்தனர். ( நாம் சரியாக சாப்பிடாத குழந்தைகளுக்கு எக்ஸ்ட்ரா ப்ரோடீன் உள்ள nutritional drink கொடுப்பது போல)

அவர்கள் கொடுத்த சரிவிகித உணவுக்கு பெயர் "Meat and bone meal ( MBM )". இது மாட்டின் இறைச்சியை பிரித்தெடுத்த பிறகு மீதமுள்ள பொருள்களான எலும்பு, தசை, ரத்தம் .. இவற்றை கொண்டு தயாரிக்கப்படுவது. இந்த MBM இல் ப்ரோடீன் அதிகம் இருக்கும். அதனால் மாடுகள் நன்கு கொழுக்க ஆரம்பித்தன.

மாடுகள் பண்ணை நடத்துபவருக்கும், அதனை கறியாக்கி விற்றவருக்கும் ஏக மகிழ்ச்சி. ஆனால் சில வருடங்களில், மாடுகள் நோய்வாய்ப்பட ஆரம்பித்தன. சுணங்கி படுப்பது, நிற்க முடியாமல் போவது, இறப்பது என்று இருக்கவும், என்ன காரணம் என்று ஆராய ஆரம்பித்தனர்.

ஆராய்ச்சி முடிவில் அவர்கள் கண்டது இது தான். நோய்கள் பல வகைப்படும், பெரும்பாலான நோய்கள் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் உண்டாவது. ஆனால் ஒரு ப்ரோடீன் ஆல் மாடுகளுக்கு இந்த நோய் உண்டாவது கண்டு பிடிக்க பட்டது. அந்த ப்ரோடீனுக்கு " prion " என்று பெயர். இந்த கெட்டுபோன ப்ரோடீன் மாடுகளின் மூளை மற்றும் தண்டுவடத்தில் உள்ள மற்ற நல்ல ப்ரோடீன் களையும் கெடுக்கிறது. விளைவு மாடுகள் மூளை செயல்பாட்டை இழக்கின்றன. மாடுகள் "பைத்தியம்" ஆகின்றன.

இது எப்படி ஏற்பட்டது? வெறும் புல்லை மட்டும் செரிக்கும் உடல் அமைப்பை கொண்டிருந்த மாடுகளுக்கு " MBM " என்ற எக்ஸ்ட்ரா ப்ரோடீன் உணவு அதுவும் மாடுகளின் மிச்சத்தையே கொடுப்பதால் இது உண்டானது என்று கண்டு பிடித்தனர்.

இந்த நோய் தாக்கிய மாடுகளின் இறைச்சியை சாப்பிட்ட மனிதருக்கும் இந்த நோய் உண்டானது. ஒரு சிலர் இறக்கவும் நேரிட்டது. இதனை கண்டு பிடித்த பின்னர் மாட்டு இறைச்சி ஏற்றுமதி பெருமளவில் பாதிக்கப்பட்டது.

மேலை நாடுகளில் இறைச்சி உண்ணக்கூடியதா என்று பரிசோதித்த பின்னரே கடைகளுக்கு அனுப்புவர். பல்வேறு பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பிறகு விற்கப்பட்ட இறைச்சியில் இப்படி ஒரு நோய் இருந்தது கண்டு பிடிக்க முடியாமல் போனது.

ஆனால் இந்தியாவில் கோழிக்கு உடம்புக்கு முடியாமல் போனால் அது இறைச்சியாக ஆக்கப்படுகிறது. அது உண்ணக்கூடியதா, இதனால் பாதிப்பு எதுவும் வருமா என்று யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

இந்தியாவில் எப்படி இறைச்சி விற்கப்படுகிறது?

சென்ற முறை நான் இந்தியா வந்திருந்த போது, என் அம்மாவுடன் அதிகாலை வாக்கிங் சென்றேன், எங்கள் வீட்டுக்கு அருகில் ஆடுகள் குப்பை தொட்டியை மேய்ந்து கொண்டு இருந்தன. என்ன இப்போதெல்லாம் ஆடுகள் குப்பை சாப்பிட ஆரம்பித்து விட்டனவே என்று நினைத்து கொண்டே சென்றேன்.

வாக்கிங் முடித்து திரும்பும் போது அதில் ஒரு ஆடு கொல்லப்பட்டு தோல் உரிக்கப்பட்டு கொண்டு இருந்தது. அதனை வாங்க ஒருசிலர் நின்று கொண்டு இருந்தனர்.

14 comments:

அநன்யா மஹாதேவன் said...

Food Incorporation என்ற ஆங்கில படத்தை எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன். முக்கியமாக அசைவம் சாப்பிடுபவர்கள், இந்த திரைப்படத்தை பார்த்தே ஆக வேண்டும்.
நம் இஷ்டத்துக்கு இயற்கையை மாற்ற நினைத்தால் இது போன்ற விபரீத விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டி உள்ளது.

padma said...

நன்றாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா .இங்கும் மாடு நன்றாக பால் கறக்க ஆக்சிடாக்சின் ஊசி போடுகிறார்கள் .அது அதை உபயோகிக்கும் நம்மை அடைந்து பல ஹார்மோன் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது

சேட்டைக்காரன் said...

உம்! வீட்டுலே அசைவம் பண்ணுறவங்க கவலைப்படறீங்க! சில ஹோட்டல்களைப் பத்தி சொன்னா அசைவம் சாப்பிடுற ஆசையே போயிடுமில்லா? :-)))

Chitra said...

ரிஷி மூலம், நதி மூலம் பாக்க கூடாது என்று சும்மாவா சொன்னார்கள். ஹி,ஹி,ஹி,ஹி......
அசைவப் பிரியர்களுக்கு, இது என்னடா சோதனை?

Dr.P.Kandaswamy said...

கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன. இப்படியெல்லாம் நடந்தால்தான் கலியுகம் முடிவிற்கு வரும். இதை நான் நம்புகிறேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொடுமைங்க.. இயற்கையா புல் சாப்பிடற ஒல்லி மாட்டையே தின்னுட்டு நல்லபடியா இருக்கலாமில்ல..அதுக்கு போய் .. அதும் பாவம்..அதை தின்னவங்களும் பாவம்..

அம்பிகா said...

விழிப்புணர்வு எற்படுத்தும் பதிவு.

முகுந்த் அம்மா said...

//நன்றாக சொன்னீர்கள் முகுந்த் அம்மா//

நன்றி பத்மா.

//இங்கும் மாடு நன்றாக பால் கறக்க ஆக்சிடாக்சின் ஊசி போடுகிறார்கள் .அது அதை உபயோகிக்கும் நம்மை அடைந்து பல ஹார்மோன் சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது//

ஓ அப்படியா, ஆக்சிடாக்சின் மனிதர்களுக்கு நெறைய ஹார்மோன் சீர்கேட்டை ஏற்படுத்துமே, எப்படி அனுமதிக்கிறார்கள். :((
என்னவோ போங்க

முகுந்த் அம்மா said...

//Food Incorporation என்ற ஆங்கில படத்தை எல்லோருக்கும் சிபாரிசு செய்கிறேன்//

அனன்யா, இந்த படத்தை நேற்று தான் இன்டர்நெட்டில் பார்த்தேன். ஆடிப்போயிட்டேன்!. என்ன கொடுமை எல்லாம் பண்ணுறாங்க. இதை அமெரிக்காவில வெளியிட Meat industry மக்கள் தடை வாங்கிட்டாங்க. அதனால ஆஸ்காருக்கு பரிந்துரைக்க பட்டு இருந்தாலும் இது அமெரிக்காவில வெளியிட படவில்லை.

இதனை பரிந்துரைத்த உங்களுக்கு நன்றி.

//நம் இஷ்டத்துக்கு இயற்கையை மாற்ற நினைத்தால் இது போன்ற விபரீத விளைவுகளை சந்தித்தே ஆக வேண்டி உள்ளது.//

100% உண்மை நெறைய இது போன்ற விளைவகளை அனுபவித்து கொண்டு தான் இருக்கிறோம். வறட்சி, சுனாமி எல்லாம் எதோ ஒரு வகையில் இயற்கையுடன் நாம் விளையாடியதால் வந்த விளைவுகளே.

முகுந்த் அம்மா said...

//வீட்டுலே அசைவம் பண்ணுறவங்க கவலைப்படறீங்க! //

நாங்க அசைவம் சாப்பிட்டரதில்லைங்க.

//சில ஹோட்டல்களைப் பத்தி சொன்னா அசைவம் சாப்பிடுற ஆசையே போயிடுமில்லா//

ஐயோ சொல்லாதீங்க, கேட்கும் போதே எதோ செய்யுது.

முகுந்த் அம்மா said...

//ரிஷி மூலம், நதி மூலம் பாக்க கூடாது என்று சும்மாவா சொன்னார்கள். //

இந்த பழமொழி கரெக்டு தான் போலிருக்கு.

//அசைவப் பிரியர்களுக்கு, இது என்னடா சோதனை?//
சோதனை மேல் சோதனை.

நன்றி சித்ரா

முகுந்த் அம்மா said...

//கலியுகத்தின் முடிவில் உலகம் அழிந்துவிடும் என்று நம் புராணங்கள் சொல்கின்றன. இப்படியெல்லாம் நடந்தால்தான் கலியுகம் முடிவிற்கு வரும். இதை நான் நம்புகிறேன்.//

மனிதனை மனிதன் அடித்து சாப்பிட்டு நாம் கற்காலத்துக்கு போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை அப்படின்னு நினைகிறீங்களா.

நன்றி அய்யா

முகுந்த் அம்மா said...

//கொடுமைங்க.. இயற்கையா புல் சாப்பிடற ஒல்லி மாட்டையே தின்னுட்டு நல்லபடியா இருக்கலாமில்ல..அதுக்கு போய் .. அதும் பாவம்..அதை தின்னவங்களும் பாவம்.//

பணத்தாசை யாரை விட்டது சொல்லுங்க.

நேற்று அனன்யா சிபாரிசு செய்த அந்த படம் பார்த்தேன். அதுல சொல்லுறாங்க, அமெரிக்காவில இருக்க மொத்த Cattle Industry ம் நாலே நாலு கம்பனியை தான் சேர்ந்ததாம். கோழி, மாடு, பன்னி எல்லாம் வளகுரவங்க இந்த நாலு கம்பெனிகாரங்க கிட்ட இருந்து வெளில வரமுடியாத அளவு ஒரே Monopoly.
எங்க போய் முடியபோகுதோ?

முகுந்த் அம்மா said...

//விழிப்புணர்வு எற்படுத்தும் பதிவு//

நன்றி அம்பிகா அவர்களே