Saturday, May 9, 2015

அன்னையர் தின பரிசும் , உத்தம வில்லனும்


நாளைக்கு அன்னையர் தினம் என்பதால் நானும் என் தோழியர் குழாமும் சேர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று , எங்களின் வாண்டுகளும் அவர்களின் அப்பாக்களும் சேர்ந்து எங்களுக்கு கொடுத்த ஒரு கிப்ட் 4 மணி நேரமும் செலவழிக்க பணமும். அதுவும் இது முழுக்க முழுக்க பெண்கள் நேரம். எதுவேண்டும் என்றாலும் செய்யுங்கள் லேடீஸ், என்று கொடுத்த பொன்னான நேரம்.

பெரும்பாலான பெண்கள் இதனை அனுபவித்து இருப்பார்கள். அதாவது திருமணத்திற்கு முன், அல்லது கல்லூரி படிக்கும் போது  தோழிகள் உடன் சினிமா பார்க்க தியேட்டர் சென்று இருப்பார்கள். பின்னர் திருமணம் ஆன பிறகு சினிமா டிராமா என்று எது சென்றாலும் அது கணவன் குழந்தைகள் உடன் தான் இருக்கும். ஒரு சில நேரம் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் வந்தால் அவர்களுடன் செல்லலாம். கல்லூரி காலம் போல ஒன்லி லேடீஸ் அல்லது தோழிகள் மட்டும் எல்லாரும் சேர்ந்து  செல்வது என்பது அபூர்வம். அதுவும் இல்லத்தரசியாக காலை முதல் மாலை வரை குழந்தை குடும்பம் என்று இருக்கும் பெண்களுக்கு ஒரு 4 மணி நேரம் எந்த இடையூரும் இல்லாமல் எங்களுக்கே எங்களுக்கான டைம் என்று கிடைத்தால் வாவ்..

அப்படி கிடைத்தது எங்களுக்கு 4 மணி நேரம் அன்னையர் தின பரிசாக..சரி என்ன செய்யலாம் என்று உக்கார்ந்து யோசித்ததில் ஒரு சிலரின் சாய்ஸ் சரி "ஏதாவது சினிமா போகலாம் பா" என்பது . அதை சொன்னபோதே எனக்கு "அய்யயோ இப்போ ஹாட் ஆ இருக்கிற ஒரே படம்னா அது , உத்தம வில்லன் தானே" என்று நினைப்பு தோன்றி முடிப்பதற்குள்ளே எல்லாரும் சேர்ந்து "உத்தம வில்லன் போலாம்" என்றனர். "Finally majority won"

ஒரு வழியாக எல்லாரும் முடிவு செய்து தியேட்டர் சென்றாயிற்று, உக்கார்ந்து சில நிமிடங்களில் என்ன பாட்டு என்று தெரியாமல் ஒரு பாட்டு, அதுவும் பூஜா குமாருடன் கமல் போடும் ஆட்டம். "ஐயோ சாமி, இந்த வயசில இதெல்லாம் இவருக்கு தேவையா, பல நேரங்களில் முகத்தில் இருக்கும் வயதின் அடையாளங்களை மறைக்க என்று நிறைய லாங் ஷார்ட்ஸ்?" என்று நான் கமெண்ட் அடிக்க, எங்கள் க்ரூபின் கமல் வெறியை ," ஏன் தலைவரை மட்டும் சொல்லுறீங்க, பூஜா குமாருக்கு மட்டும் வயசாகல" என்று கவுன்ட்டர் கொடுக்க, சரி போனா போகுது என்று விட்டு விட்டோம்.

அடுத்து, எங்களை ரொம்ப புல்லரிக்க வைத்தது,  "என் அருமை கள்ள காதலா " என்று விளித்து ஆண்ட்ரியா பேசும் வசனம். நாங்கள் அனைவரும் கமல் வெறியை பக்கம் திரும்ப அவளோ அப்போதும் சளைக்காமல், எங்களுக்கு பதில் சொல்லி கொண்டு இருந்தாள்.

கடைசி வரை எனக்கு இது எந்த genre படம் என்று விளங்க வில்லை. புராண படமா, கரண்ட் affairs படமா, மிட் லைப் crisis படமா, சாகப்போகும் ஒருவரின் bucket லிஸ்ட் படமா அல்லது மனோதத்துவம் சொல்லும் படமா..படம் முடிந்தவுடன் எனக்கு தோன்றிய சில நினைவுகள் "அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், நீங்க யாருக்கு சார் படம் எடுத்து இருக்கீங்க..நாங்க பார்க்கணும்னு எடுத்து இருக்கீங்களா இல்ல, உங்களை satisfy பண்ண படம் எடுத்து இருக்கீங்களா.  நீங்க எவ்வளவு பெரிய ஆளு, அறிவாளின்னு எல்லாருக்கும் தெரியும் சார், ப்ளீஸ் எங்களுக்காகவும் கொஞ்சம் படம் எடுங்க சார்"

ஐயோ சாமி முடியல, வலிக்குது, அழுதுருவேன்..என்று நொந்து போய் அவள் பக்கம் திரும்பி "இப்படி ஒரு படத்துக்கு கூட்டிட்டு வந்து எங்களுக்கு கிடச்ச 4 மணி நேரத்தை இப்படி வேஸ்ட் பண்ணிட்டியே  என்று கொலை வெறியுடன் திரும்ப, அவளோ கூலாக, "தலைவர் எப்படி நடிச்சாலும் சரி, படம் எப்படி இருந்தாலும் சரி, நான் பார்ப்பேன், கட்டாயம் பார்ப்பேன்" என்று சொன்ன போது...எனக்கு தோன்றியது ஒன்றே ஒன்று தான்.."இப்படி பட்ட தீவிர ரசிகர்கள் இருக்கும் வரை, தமிழ் நாட்டுல ஒரு சிலரை அசைக்க முடியாது"


அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்

டிஸ்கி

இது இந்த படத்தை பற்றிய என்னோட பெர்சனல் அனுபவம், கருத்து மட்டுமே. விமர்சனம் அல்ல, யாரையும் புண் படுத்த எழுதியது அல்ல.

நன்றி.





1 comment:

வருண் said...

கமல் தன் வாழ்வை, தன் சிந்தனைகளை சரியானதென்று தன் சினிமாக்கள் மூலம் நியாயப்படுத்த முயல்கிறார் என்றே தோன்றுகிறது. அப்பப்போ அவர் அந்த கேரக்டரில் இருந்து கமலாக மாறி ஒரு சில விடயங்களை சொல்லுவார். மற்றவர்கள் எப்படியோ கமல் ரசிகர்கள் நிச்சயமாக அதை ரசிக்கிறார்கள். மற்றவர்கள் குழம்புறாங்க.

நான் பார்த்தவரைக்கும் இந்தப் படத்தை கமல் ரசிகர்கள் பலர் ஆஹா ஓஹோனு சிலாகிக்கிறார்கள். உங்க தோழி உண்மையிலேயே ரசித்து இருப்பார்னுதான் தோனுது. அட் லீஸ்ட் அவருக்கு இது ஒரு சிறப்பான அன்னையர் தினம்தான்.

இங்கே வரும் அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள். :)