என்னுடைய முந்தய மங்கையராய் பிறக்க பதிவில், நன்றாக படித்தும், சூழ்நிலையால் படிக்க முடியாமல் கஷ்டப்பட்ட சுதாவை பற்றி எழுதும் போதே எனக்கு இன்னொரு பெண் பற்றி ஞாபகம் வந்தது. இந்த பெண் அடுத்த extreme . அதன் விளைவே இந்த பதிவு.
அவள் என்னோடு முதுநிலை படித்தவள். இவளுக்கு வீட்டில் அனைத்து வசதிகளும் உண்டு. அவள் அம்மா, அப்பா இருவரும் பெரிய வேலை பார்த்து கொண்டிருந்தனர். அவளுக்கு ஒரு தம்பி மட்டுமே. இவளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்பது அவள் பெற்றோரின் எண்ணம். அதனால் வீட்டில் கண்டிப்பு அதிகம். ஆனால் அவளோ கல்லூரிக்கு பொழுது போக்க வருவாள்.
பொதுவாக பெண்கள் serious nature கொண்டவர்கள். பெண்களில் ஏமாற்றுபவர்கள் குறைவு, ஏமாறுபவர்கள் அதிகம். ஆனால் இவளோ ஏமாற்றுபவர்கள் லிஸ்டில் இருந்தாள்.
நான் முதுநிலை சேர்ந்த புதிதில், எங்கள் Seniors எங்களுக்கு Welcome party கொடுத்தனர். அதில் எங்களுக்கு அவர்களுடன் நல்ல அறிமுகம் ஏற்பட்டது. நாங்கள் அனைவரும் seniors என்றால் ஒரு மரியாதையுடன் விலகியே இருப்போம், ஆனால் அவளோ எங்கள் seniors சிலரிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டாள்.
பிறகு அவர்களில் ஒரு சீனியர் ஐ தான் காதலிப்பதாக கூறினாள். எங்களுக்கு அவள் பற்றி எதுவும் அவ்வளவாக தெரியாததாகையால், அவள் சொன்னதற்கு நாங்கள் பதில் ஏதும் சொல்ல வில்லை. பின்னர் ஒரு சீனியர் அக்கா திருமணதிற்காக வெளியூர் செல்ல நேர்ந்தது, அங்கு சென்ற போது இவள் எப்போதும் அந்த சீனியர் அண்ணனுடன் தான் சுற்றி கொண்டு இருந்தாள். நாங்கள் அனைவரும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள் என்று முடிவுக்கே விட்டோம். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை, அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.
பிறகு சில நாட்களில் அந்த சீனியர் அண்ணன் வேலை கிடைத்து வேறு ஊருக்கு சென்று விட்டார், நாங்களும் இரண்டாவது வருடத்தில் அடி எடுத்து வைத்தோம். அப்போது நாங்கள் எங்களுடைய juniors இக்கு பார்ட்டி கொடுக்க வேண்டும். அப்போது ஒரு ஜூனியர் பையன் மிகவும் அப்பாவி அவர், எங்களுக்கு அறிமுகம் ஆனார்.
எங்கள் ஜூனியர், நல்ல அறிவாளி, அவர் இளநிலையில் நன்றாக மதிப்பெண் பெற்று வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற லட்சியத்துடன் GATE எக்ஸாம் க்கு தன்னை தயார் படுத்தி கொண்டு இருந்தார்.
இந்த பெண்ணின் பார்வை, எங்கள் ஜூனியர் மேல் விழுந்தது. எங்களுக்கு இவள் பற்றி முன்னமே தெரிந்து இருந்ததால், எங்கள் ஜூனியர் இடம் இவளை பற்றி ஜாடை மாடை ஆக சொல்லி பார்த்தோம். ஆனால் அவரோ என்ன மயக்கத்தில் இருந்தாரோ தெரியவில்லை. படிப்பில் அவரின் கவனம் குறைந்தது. ஒவ்வொரு வெள்ளிகிழமை மதியமும் அவர்களை அமிர்தம் தியேட்டர்இல் பார்க்கலாம். அப்படி ஒன்றாக ஊர் சுற்றினார்கள்.
அந்த பையன் அவளை அப்படி காதலித்தான் என்று தான் கூற வேண்டும். ஒரு முறை கையில் காசு இல்லை, ஆனால் இவளுடைய பிறந்த நாள் வருகிறது என்று தெரிந்ததால் அவர் எதோ சினிமாவில் வருவது போல, தன்னுடைய ரத்தத்தை விற்று ஒரு பரிசு பொருள் வாங்கி கொடுத்தார். அதனை அவள் எங்களிடம் எல்லாம் எதோ பெரிய சாதனை தான் செய்து விட்டது போல காட்டுவாள். நாங்கள் அனைவரும் கிட்டத்தட்ட இவள் அவரை ஏமாற்றி விடக்கூடாதே என்று பிராத்தனையே செய்ய தொடங்கி விட்டோம்.
ஆனால் இறுதி ஆண்டு முடிவில், மிகவும் கூல் ஆக ஒருநாள் எங்களுக்கு தன்னுடைய திருமண பத்திரிக்கையை நீட்டினாள். அதில் மாப்பிள்ளை அவளின் மாமா பையன். எங்களுக்கு எல்லாம் தூக்கி வாரிபோட்டது. அப்பொழுது எங்கள் ஜூனியர் பையனின் கதி என்ன என்று கேட்டோம். அவளோ, ஒரு சாரி சொல்லி தான் கடிதம் கொடுத்து விட்டதாக சொன்னாள்.
நான் அவள் கல்யாணத்திற்கு போகவில்லை, ஆனால் என்னுடைய juniors மூலம் நான் பின் தெரிந்து கொண்டது இது தான், அந்த ஜூனியர் பையன் முதல் வருடம் முழுவதும் நெறைய பாடங்களில் தேறவில்லை. பின்னர் காதல் தோல்வியில், GATE எக்ஸாம் இக்கும் படிக்க வில்லை. சில வருடங்கள் காதல் தோல்வியில் துவண்டு இருந்தார். பின்னர் தேறியதாக அறிந்தேன். இப்போது எங்கோ ஒரு தனியார் பள்ளியில் டீச்சர் ஆக வேலை பார்ப்பதாக சொன்னார்கள். எப்படியோ வந்திருக்க வேண்டியவர் அவர், ஆனால் இவள் செய்த சதியால் எப்படியோ ஆகிவிட்டார்.
16 comments:
இப்படியும் சிலர்..ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான்
படிக்க வந்தால் படிக்கவேண்டும். அதைவிட்டு காதலைப்படித்தால் அந்த ஜூனியர் பையன் நிலைதான்.
ஆழ்ந்த அனுதாபங்கள், தெளிவான நோக்குடன் இருக்கும் சிலர் கூட இப்படி வாழ்க்கையில் சறுக்குதல் வருத்தமாக இருக்கிறது.
மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது என்பது அவருக்கு அவ்வளவு சுலபமாகப் போய்விட்டாதா?
இந்த ஜூனியரும், தான் படிக்க வேண்டும் என்ற புத்தி இல்லாமல் சுத்தியிருக்கார் பாருங்க..
கொடுமை... கொடுமை..
:(
காதலே வாழ்க்கை என்பவரும் காதலே விளையாட்டு என்பவரும் சந்தித்தால்........ என்ன கொடுமை, இது?
என்னத்தைச் சொல்ல? ஹூம்! பாவம் அந்த இளைஞர்! :-((
இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான பதிவு.
தொடரட்டும் உங்கள் நற்பணி...
இப்படியும் இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறது.
@பத்மா
//இப்படியும் சிலர்..ஏமாறுபவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான்//
ஆம், நாங்கள் எவ்வளவோ ஜாடை மாடையாக சொல்லி பார்த்தோம், என்னுடைய classmate அந்த பையனிடம், நேரடியாகவே சொல்லியும் பார்த்து விட்டார், விளைவு என்னவோ பூஜ்யம் தான்.
நன்றி பத்மா
@கந்தசாமி அய்யா
//படிக்க வந்தால் படிக்கவேண்டும். அதைவிட்டு காதலைப்படித்தால் அந்த ஜூனியர் பையன் நிலைதான்.//
உண்மை தான் அய்யா, நன்றாக படிக்கும் இது போன்ற சிலர் காதல் வயப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றனர்.
@அனன்யா
//ஆழ்ந்த அனுதாபங்கள், தெளிவான நோக்குடன் இருக்கும் சிலர் கூட இப்படி வாழ்க்கையில் சறுக்குதல் வருத்தமாக இருக்கிறது.//
உண்மை, அவள் அடுத்த வருடமே ஆண் குழந்தை பெற்றுக்கொண்டு, சந்தோசமாக இருக்கிறாள் என்று அறிந்தேன். கொஞ்சம் அடுத்தவர்கள் அவளை பற்றி சொல்வதை அவர் கேட்டிருந்தால் இது தவிர்க்கப்பட்டு இருக்கும்.
நன்றி
@ராகவன் நைஜீரியா
//மற்றவர்கள் வாழ்க்கையில் விளையாடுவது என்பது அவருக்கு அவ்வளவு சுலபமாகப் போய்விட்டாதா?//
அவள் தான் சந்தோசமாக யார் கண்டிப்பும் இல்லாமல் ஊர் சுற்ற ஒரு ஆள் தேவை. அதற்காகவே அவள் யாருடனாவது சுற்றிக்கொண்டு இருந்தாள். ஆனால் அவளை பற்றி மற்றவர்கள் சொன்னதை அவர் கேட்டிருந்தால் தானும் சுதாரித்து ஊர் சுற்றுவதோடு இருந்திருப்பார், வாழ்கையை தொலைத்து இருக்க மாட்டார்.
நன்றிங்க
@முத்துலெட்சுமி
நன்றிங்க
@சித்ரா
//காதலே வாழ்க்கை என்பவரும் காதலே விளையாட்டு என்பவரும் சந்தித்தால்........ என்ன கொடுமை, இது?//
நாங்கள் கல்லூரியை விட்டு வெளியே வந்த பின்பு கூட சில ஆண்டுகள் இதனை அனைவரும் நினைவில் வைத்து இருந்தனர். அதுவும் அவன் சுற்றியது ஜூனியர் உடன் என்பதால் இது பெரிய நியூஸ் ஆகி இருந்தது.
thanks Chitra
@சேட்டைக்காரன்
//என்னத்தைச் சொல்ல? ஹூம்! பாவம் அந்த இளைஞர்!//
ரொம்ப பாவம்ங்க , ஆனா அவர் மேலயும் தப்பு இருக்கு, அடுத்தவங்க சொல்லுறதையும் கொஞ்சமானும் கேட்கனும்ல.
நன்றிங்க
@அமைதி அப்பா
//இன்றைய இளைஞர்களுக்கு அவசியமான பதிவு. தொடரட்டும் உங்கள் நற்பணி.//
நன்றி அமைதி அப்பா அவர்களே.
@ Dr.எம்.கே.முருகானந்தன்
//இப்படியும் இருக்கிறார்களா என ஆச்சரியமாக இருக்கிறது//
பெண்களிலும் இவளை போன்ற புல்லுருவிகள் சிலர் இருக்கிறார்கள் என்பதை வெட்கத்துடன் ஒப்புக்கொள்ள தான் வேண்டியிருகிறது.
நன்றிங்க
ஏங்க காதலில் விழுவது அவ்வளவு பெரிய தவறாங்க... அந்தப் பையனை பொருத்தவரை காதலுக்குத் தேவையான தன்னுடைய அடிப்படை இயல்பை வெளிப்படுத்தியிருக்கான் - அந்தப் பெண்தான் கொஞ்சம் கிடைச்ச சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டது மாதிரி தெரியுது. எது தேவைப்பட்டாலும், உண்மையைச் சொல்லிட்டு தொடர்ந்தா எல்லாம் மிகச் சரியா நகரும், யாருக்கும் அங்கே லாஸ் கிடையாது... பொண்ணு செஞ்சது தப்பு!
Post a Comment