இரண்டு நாட்களாக உடம்பு சரியில்லாமல் போக, வீட்டில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய நிலை. பொழுது போக்கிற்காக தொலைக்காட்சி பார்க்க நேர்ந்தது. இரண்டு நாள் தொடர்ந்து சேனல்ஸ் மாற்றி மாற்றி பார்த்ததில், என்ன என்ன நிகழ்ச்சிகள் வழங்கப் படுகின்றன என்று ஒரு முடிவுக்கு வர முடிந்தது.
என் அனுபவத்தில், இதோ என் கணிப்புகள்.
காலை எப்படியும் ஒரு சுப்ரபாதம் அல்லது சாமி நிகழ்ச்சி, காலை மலர் என்று கடலை போடுவது, பின்னர் சமையல் நிகழ்ச்சி, ஒரு சில சேனல்ஸ் செய்தி என்ற பெயரில் அவர் அவர் சொந்த கட்சிக்கு ஏற்றார் போல ஜால்ரா செய்திகள். பின்னர் ஒரு பதினோரு மணியில் இருந்து தொடர்கள்..அதில் கட்டாயம் ஒரு சாமி தொடர் இருக்கும். மகாபாரதம், ராமாயணம், சிவன், ஆஞ்சநேயர் ...என்று எதோ ஒரு சாமி தொடர். பின்னர் கிட்டத்தட்ட ஒரே கதை அமைப்பில், அடுத்தடுத்த தொடர்கள்...நிறைய repeated நடிகர்கள்..என்று சில/பல நேரங்களில் குழம்பம்..இது போன்ற உள்ளூர் நடிக நடிகையர் நடிப்பது என்பது, கட்சிகள் வைத்திருக்கும் டிவி சேனல்கள் மட்டுமே. மற்ற டிவி சேனல்கள் எல்லாமே, வட இந்திய தொடர்களை மொழி மாற்றம் செய்து வெளியிடுகின்றனர்..
பல நேரங்களில் மிக அன்னியப்பட்டு இருந்தாலும், மக்கள் அதனையும் விடாமல் பார்கிறார்கள், என்பதால் விளம்பரங்கள் வருவது நிச்சயம். காஸ்ட்லி டிரஸ்..செலவு மிச்சம் என்று நிறைய advantage வட இந்திய தொடர்களை வெளியிடும் போது.
அடுத்து, கிட்டத்தட்ட எல்லா சேனல் களும் ஒரு படம் போடுகிறார்கள்..பல நேரங்களில் பயங்கர மொக்கை படமாக அது இருக்கிறது. 70-80 களில் வந்த படங்கள் பெரும்பாலும் திரையிட படுகின்றன. இப்படி திரையிடப்படும் பல படங்கள் youtube இல் பெரும்பாலும் கிடைப்பதால் அதுவும் செலவு மிச்சம் அல்லது சொற்ப பணம் மட்டுமே..என்று நினைகிறேன். இதில் இடை இடையே விளம்பரங்கள் வேறு வருமானம் கொடுத்து விடும்
அதற்க்கு பிறகு மாலை நேரங்களில் ஏதாவது ஒரு டாப் சீரியல் நடிக நடிகையர் நடித்த அல்லது டாப் சீரியல் டைரக்டர் இயக்கிய தொடர்களை பெரும்பாலும் எல்லா சேனல்களும் வைத்து இருக்கின்றன. 30 நிமிட சீரியல் என்றால் 15 நிமிடம் மட்டுமே பார்க்க முடிகிறது மீதி 15 நிமிடம் விளம்பரம். நல்ல வருமானம்.
பெரும்பாலான தொடர்களில், ஹீரோயின் தியாக சுடர். வில்லி எப்படியும் ஹீரோயினின் புருஷனை அல்லது காதலனை வலை வீசி பிடிப்பார்..ஹீரோ பயங்கரமான ஆள். ஹீரோயினும் வேணும், வில்லியும் வேணும் என்று கேம் விளையாடுவார். அதே வில்லி ஹீரோயினின் மாமியாரிடம் அன்பாக இருப்பார்....ஐயோ சாமி ஆளை விடுங்கப்பா.
பின்னர் சூப்பர் சிங்கர், டான்சர்..டாலேன்ட் ஷோ என்று பாடகர்கள், நடிக நடிகையர் ஜட்ஜ் ஆகா உட்கார்ந்து மொக்கை போடுகிறார்கள். இதில் யாருக்கு என்ன பிரயோஜனம் என்று தெரியவில்லை. சண்டைகள், emotion என்று நிறைய டிராமா வேறு. ரியாலிட்டி ஷோ என்ற பெயரில் இவர்கள் அடிக்கும் கூத்துகள் உவ்வே ரகம்.
ஒரு சில சேனல்கள் எப்போதும் நாடக நடிக நடிகையர், DJ, RJ என்று யாரையாவது வைத்து கெக்கே பிக்கே என்று பேச வைத்து ஒரு ரியாலிட்டி ஷோ. பெரும்பாலும் spoof ஷோ வாகவே அது இருக்கிறது. யாரையாவது கிண்டல் செய்ய வேண்டியது. முக்கால் வாசி நேரம், அது பங்குபெரும் பெண்களுக்கு இருக்கும் அறிவை சுட்டிகாட்டுவதாகவே இருக்கிறது. பெரும்பாலும் இப்படி பங்கு பெரும் பெண்கள் பொது அறிவில் பூஜ்யமாக இருக்கிறார்கள்/அல்லது நடிக்க வைக்க படுகிறார்கள்.
ஒரு சில சேனல்கள் நிஜம் நடந்தது என்ன என்று...அல்லது துப்பறியும் என்று பல மொக்கைகள்..பல நேரங்களில் இவர்கள் பேசுவது கள்ள காதல் விஷயங்கள்/கொலைகள் மட்டுமே...
சில சேனல்கள் மிட் நைட் ஷோ சில வைத்து இருக்கிறார்கள் அல்லது டாக்டர் இடம் சந்தேகங்கள் கேட்பது என்று சில நேரங்களில் மொக்கை..பிறகு பாடல்கள்...
மறுபடியும் அடுத்த நாள் காலை நிகழ்சிகள் அதே ஆர்டர். கிட்ட தட்ட எல்லா சேனல்களும் ஒரு sequence வைத்து இருக்கிறார்கள்..அதன் படியே தவறாமல் ஒளிபரப்புகிறார்கள்.
இரண்டு நாள்கள் பார்த்த விளைவே,யாரை பார்த்தாலும் சந்தேகம், என்று எனக்கு ஒரு மெண்டல் எப்பெக்ட் தந்து விட்டது. தொடந்து இதனை பார்க்கும் மக்கள் கட்டாயம் மன மாற்றம் அடைந்தே இருப்பார்கள் என்பது என் கணிப்பு.
முடியல, வலிக்குது..அழுதுருவேன்..இனிமே என்ன உடம்புக்கு முடியாம வீட்டில் கிடந்தாலும்..தமிழ் சேனல்ஸ் மட்டும் பார்ப்பதில்லை என்று முடிவு செய்து விட்டேன். ஒரு தடவை அனுபவித்தது போதும்..
டிஸ்கி
இது சொந்த அனுபவ கருத்து மட்டுமே..இதில் எந்த நிகழ்ச்சியையும் சேனல்களையும், அதனை பார்க்கும் மக்களையும் குறை சொல்லவில்லை. அவரவர்களுக்கு எது விருப்பமோ அதனை செய்கிறார்கள். இதில் குறை சொல்ல நான் யார்.
நன்றி.