Thursday, April 15, 2010

Researcher என்ற ஒரு ஜந்து-1

என்னுடைய முந்தய இதே தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் ஒருவர் முனைவர் பட்டம் பெறுவதற்குள் இருக்கும் அவஸ்தையை எழுதி இருந்தேன், ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு அவர் permanent வேலையில் சேர்வதற்குள் என்ன சந்திக்க நேரிடும் என்பதை குறிப்பிடுவது இந்த பதிவு.

இன்று, நான் பிரசவத்திற்கு முன் வரை படித்த/வேலை பார்த்த பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. எப்போதும் கலகலப்பாக என்னுடன் பேசும் நண்பர்கள் அனைவரும் இன்று ஏனோ பேசவில்லை. அங்கு இருக்கும் பலரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு, இருப்பினும் ஏன் இப்படி நடந்து கொண்டனர், வேலை இருந்தால் ஒரு மாதிரி இல்லாவிட்டால் இப்படி தான் நடத்துவார்கள் என்று நினைத்து கொண்டேன்.

என்னுடைய பழைய பாஸ் ம் என்னவோ தெரியவில்லை, இதனை வேறு விதமாக சொல்லியே விட்டார்(ள்). அடுத்தவர்களுக்கு வேலை இருக்கிறது உன்னை போல இல்லை அல்லவே, என்று கிட்டத்தட்ட ஒவ்வொரு வார்த்தை முடிவிலும் கமெண்ட் போல சொல்லி கொண்டு இருந்தார்(ள்). இது ஒருவகையான சர்காஸ்டிக் விமர்சனம் தான் என்றாலும் அவர்களை பொறுத்தவரை குடும்பத்திற்காக career ஐ on - hold இல் வைத்திருப்பது என்பது stupid decision .

நான் அவர்களை குறை சொல்ல முடியாது. என்னுடைய பாஸ், திருமணம் ஆகாதவர். எனக்கு தெரிந்து ஆராய்ச்சி துறையில் இருந்து கொண்டு குடும்ப வாழ்கையிலும் ஈடுபடும் பெண்கள் மிக குறைவு. ஏனெனில் மற்ற துறைகளை போல அல்லாமல் ஆராய்ச்சி துறையில் அர்ப்பணிப்பு அதிகம் தேவைப்படும். டென்சன் அதிகம் உள்ள ஒரு துறை இது. அதனால் இந்த துறையில் உள்ள நெறைய பெண்கள் இதனாலேயே அதே துறையில் இருப்பவர்களை திருமணம் செய்து கொள்வர். இதனால் இருவருக்கும் ஒரே இடத்தில், ஒரே ஊரில் வேலை கிடைப்பது சுலபமாக இருக்கும் என்பதால்.

ஒருவர் முனைவர் பட்டம் பெற்ற பிறகு Tenure எனப்படும் permanent பேராசிரியர் வேலை கிடைப்பதற்கு அமெரிக்காவில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பாருங்கள்.

1 . முதலில் முனைவர் பட்டம் பெற வேண்டும் (Minimum 5-6 years)

2. முனைவர் பட்டம் பெற்ற பிறகு ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஒருவர் Postdoc எனப்படும் professor ஆவதற்கான தகுதி வேலை பார்க்க வேண்டும். அதில் அவர் எத்தனை ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுகிறார் என்பதை பொறுத்து அவரின் அடுத்த நிலையான Tenure - Track எனப்படும் ஒரு பதவி தரப்படும்.

3. Tenure - Track என்பது temporary professor மாதிரி. இந்த பதவி அவருக்கு ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்கள் தரப்படும். அதற்குள் அவர் எவ்வளவு productive ஆக இருக்கிறார் என்பதற்கு அவரின் ஆராய்ச்சி கட்டுரைகள் எந்த அறிவியல் பத்திரிக்கையில் வருகின்றது என்பதை பொறுத்தது.

4 . அப்படி அவர் நல்ல கட்டுரைகள் எழுதினாலும் ஆராய்ச்சி செய்ய பணம் தேவை அதற்காக அவர் " Grants " எனப்படும் ஆராய்ச்சி செய்வதற்காக பணம் goverment இடம் இருந்து வாங்க வேண்டும். இதில் ஒரு கொசுறு என்னவென்றால் அமெரிக்க குடிமக்கள் மட்டுமே இதனை வாங்க அனுமதிக்க படுவர்.

5 . கிராண்ட்ஸ் இருக்கிறது, ஆராய்ச்சி கட்டுரை உள்ளது, பிறகு என்ன? உங்களை பற்றி அந்த துறையில் உள்ள சிலர் "Recommend " செய்ய வேண்டும்.

6 . இந்த கடலையும் தாண்டிய பிறகு ஒரு வழியாக அவர் permament professor ஆகிறார்.

சமீபத்தில் இங்குள்ள அலபாமா என்னும் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் ஒரு பெண் பேராசிரியர் ஒருவர் தனக்கு Tenure எனப்படும் permanent வேலை கிடைக்காததற்கு யாரெல்லாம் காரணம் என்று நினைத்தாரோ அவர்களை எல்லாம் சுட்டு கொன்று விட்டது பெரிய செய்தியானது. அந்த பேராசிரியர் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அவருக்கே permanent வேலை என்பது எட்டா கனியான போது மற்றவர்களுக்கு என்னவாகும் என்று நினைத்து பாருங்கள்.

எல்லாவற்றையும் தாண்டிய பின்னர் யாரும் சரியாக தன்னை recommend செய்யாததால் அலபாமா பெண் பேராசிரியர் தனக்கு permanent வேலை கிடைக்கவில்லை என்று நினைத்து, அதற்கு காரணமானவர்களை கொன்றிருக்கிறார்.

இருபதுகளில் ஒருவர் முனைவர் பட்டம் பெற படிக்க ஆரம்பித்தால் அவர் படித்து முடித்து permanent வேலையில் சேரும் போது தனது நாற்பதுகளில் இருக்க நேரிடும்.

இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம்.

15 comments:

ப.கந்தசாமி said...

ஆராய்ச்சியாளர்களுக்கு வேலை கிடைப்பது அமெரிக்காவிலேயே இவ்வளவு கஷ்டமா?

Chitra said...

இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம்.
...... It depends on the dept. and the university. I have met few professors, who are paid less than the fresh IT programmers from India.

You have nicely written about the hardship of Ph.D. students and the r(t)ough road that they have to go through to establish themselves.

Ananya Mahadevan said...

ரொம்ப வருத்தமாக இருக்கு முகுந்தம்மா. ரிஸர்ச் ஃபீல்டில் பொறுமை & சுய அர்ப்பணம் இவை ரெண்டுமே முதலீடு போலுள்ளது. (ஷீரடி பாபா மாதிரி ஷ்ரத்தா, சபூரி) எத்தனை போராட்டங்கள்! இவ்வளவு தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப பாவமா இருக்கே..

நம்ம ஊர நினைச்சுப்பாத்தேன் .ஹ்ம்..

இராகவன் நைஜிரியா said...

அய்யோ... ப்ரொபசர் ஆவதற்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா..

ஓவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம்... இது ரொம்ப பெரிசா இருக்குங்க..

settaikkaran said...

ஹூம், எல்லா இடத்துலேயும் ஏற வேண்டிய, ஏறாமல் இருக்கிற, ஏணிப்படிகள் குறித்த ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன போலும்!

அமைதி அப்பா said...

//வேலை இருந்தால் ஒரு மாதிரி இல்லாவிட்டால் இப்படி தான் நடத்துவார்கள் என்று நினைத்து கொண்டேன்.//

உண்மைதான்...


//சமீபத்தில் இங்குள்ள அலபாமா என்னும் மாநிலத்தில் உள்ள பல்கலைகழகத்தில் ஒரு பெண் பேராசிரியர் ஒருவர் தனக்கு Tenure எனப்படும் permanent வேலை கிடைக்காததற்கு யாரெல்லாம் காரணம் என்று நினைத்தாரோ அவர்களை எல்லாம் சுட்டு கொன்று விட்டது பெரிய செய்தியானது. //


அங்கு எதுக்கெடுத்தாலும் துப்பாக்கிதானா?!


//இப்படி ஏழு கடல் ஏழு மலை எல்லாம் தாண்டி ஒருவர் பேராசிரியர் ஆனாலும் அவருக்கு சம்பளம் என்று கிடைப்பது இந்தியாவில் இருந்து வரும் ஒரு பிரெஷ் programmer க்கு கிடைப்பதை விட சற்று அதிகம்.//

உங்களுடையக் கருத்தை ஏற்றுகொள்கிறேன். ஆனால் வாழ்வில் பணம் மற்றவர்கள் முன் போலியான மரியாதையை கொடுக்கும், மனதுக்கு நிம்மதியை கொடுக்குமா?

பத்மா said...

கரக்டா ஜந்துன்னு சொல்லிருகீங்க முகுந்த் அம்மா .நிஜம்மாவே பாவம். .எப்போ கல்யாணம்? எப்போ குழந்தை?நாப்பது வயசுக்கு மேல என்ன வாழ்க்கை ? கஷ்டம்தான்

முகுந்த்; Amma said...

@கந்தசாமி அய்யா

//ஆராய்ச்சியாளர்களுக்கு வேலை கிடைப்பது அமெரிக்காவிலேயே இவ்வளவு கஷ்டமா?//

ஆமாங்கய்யா!

கருத்துக்கு நன்றிங்க

@ராபின்

நன்றி ராபின் அவர்களே

முகுந்த்; Amma said...

@சித்ரா
//It depends on the dept. and the university. I have met few professors, who are paid less than the fresh IT programmers from India. //

ஆமாங்க நானும் கேள்வி பட்டேன். நீங்கள் சொன்னது போலவே என்னோட வீட்டுகாரரும் சொன்னாருங்க, அவரோட பேராசிரியர் நண்பர்கள் சிலருடைய சம்பளம் மிகவும் குறைவாம்.

கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி சித்ரா.

@அனன்யா

//ரொம்ப வருத்தமாக இருக்கு முகுந்தம்மா. ரிஸர்ச் ஃபீல்டில் பொறுமை & சுய அர்ப்பணம் இவை ரெண்டுமே முதலீடு போலுள்ளது. //

ஆமாங்க, பொறுமையும், dedication ம் இல்லாட்டி வீட்டுக்கு போக வேண்டியது தான்.

//(ஷீரடி பாபா மாதிரி ஷ்ரத்தா, சபூரி) எத்தனை போராட்டங்கள்! இவ்வளவு தகவல்களை தந்திருக்கிறீர்கள். நன்றி!//

கருத்துக்கும், ஊக்குவிப்புக்கும் நன்றி அனன்யா.

முகுந்த்; Amma said...

@முத்துலெட்சுமி

//ரொம்ப பாவமா இருக்கே..//

ஆமாங்க செத்து பிழைக்கணும்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு சில நேரம் ஆகிடுங்க.

//நம்ம ஊர நினைச்சுப்பாத்தேன் .ஹ்ம்..//

இந்தியாவில முனைவர் பட்டம் பெற்ற பிறகு வேலை கிடைக்கிறது எப்படின்னு தெரியலைங்க. யாரவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா.

நன்றிங்க

@இராகவன் நைஜிரியா
//அய்யோ... ப்ரொபசர் ஆவதற்கு இவ்வளவு கஷ்டங்கள் இருக்கா. ஓவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு மாதிரி கஷ்டம்... இது ரொம்ப பெரிசா இருக்குங்க.//

உண்மைதாங்க, இக்கரைக்கு அக்கரை பச்சைன்னு சொல்லுவாங்களே, அது போல ஒரு சில நேரம் வேற துறை நல்லதாக தோணும் ஆனால் எல்லா துறையிலும் பிரச்சனை உண்டு என்பதே உண்மை.

நன்றிங்க

முகுந்த்; Amma said...

@சேட்டைக்காரன்

//ஹூம், எல்லா இடத்துலேயும் ஏற வேண்டிய, ஏறாமல் இருக்கிற, ஏணிப்படிகள் குறித்த ஏக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன போலும்!//

உண்மையான உண்மை.

நன்றிங்க

@அமைதி அப்பா

//அங்கு எதுக்கெடுத்தாலும் துப்பாக்கிதானா?!//

இங்கு யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக்கொள்ளலாம் அய்யா. அதை சிலர் misuse செய்கிறார்கள்.

//உங்களுடையக் கருத்தை ஏற்றுகொள்கிறேன். ஆனால் வாழ்வில் பணம் மற்றவர்கள் முன் போலியான மரியாதையை கொடுக்கும், மனதுக்கு நிம்மதியை கொடுக்குமா?//

நிம்மதியை கொடுத்தால் போதுமா அய்யா, குடும்பம் நடத்த பணம் வேண்டும் அல்லவா . அதுவும் தேவை என்பது என் எண்ணம்.

முகுந்த்; Amma said...

@பத்மா
//கரக்டா ஜந்துன்னு சொல்லிருகீங்க முகுந்த் அம்மா .நிஜம்மாவே பாவம் .எப்போ கல்யாணம்? எப்போ குழந்தை?நாப்பது வயசுக்கு மேல என்ன வாழ்க்கை ? கஷ்டம்தான்//

பெண்களுக்கு இன்னும் கஷ்டம் பத்மா. என்னோட படிச்ச பலர் கல்யாணமே பண்ணிக்காம ஆராய்சியே கதின்னு இருக்காங்க.

எப்போ அவங்க permanent வேலை வாங்குறது எப்போ அவங்க வாழ்கையில செட்டில் ஆகுறது சொல்லுங்க.

கையேடு said...

ம்ம் ஆய்வுப்பாதையில் இருக்கும் வலிகளை அழகா சொல்லிருக்கீங்க.

ஆனாலும், ஆய்வு செய்பவர்களுக்கு இருக்கும் அறிதல் போதைதான் வாழ்க்கையை நகர்த்திகிட்டிருக்குன்னு நம்புறேன்.

Anna said...

Nice to have met another Tamil woman researcher.

You have nicely summarized the difficulties in the profession especially for a mother. Although I would think that different institutions and different departments somewhat differ in these issues and we can't generalise too much. I read quite a few early career women scientists (who are also mothers) from North America regularly and can send you some links if you like.

The steps to getting a PhD and career afterwards are slightly different here Down under in southern hemishere. But 'Publish or perish' is a universal motto.

What field are you in?