Monday, August 31, 2015

இந்தியாவும், உலகமும், போர்களும்!


பள்ளியில் படிக்கும் போது எனக்கு பிடிக்காத பாடம் என்றால் அது வரலாறு தான். அதுவும் ஆண்டுகள் பற்றி நினைவில் வைத்து கொள்வது போன்ற ஒரு சிரமம் எதுவும் இல்லை என்பது என் எண்ணம், அதனாலேயே எனக்கு வரலாறு இன்னும் பிடிக்காமல் போனது. பத்தாவது வரையில் வரலாறு பாடத்தில் பாஸ் செய்தால் போதும் என்ற நிலையில் அதிகம் வரலாறு பற்றி கண்டு கொள்ளவில்லை. ஆனால் பத்தாவதில் மதிப்பெண் என்னும் சனி சதி செய்ய வேறு வழியில்லாமல் எல்லா வரலாற்று நிகழ்வுகளையும் அவை நடந்தஆண்டுகளையும் பிளாஷ் கார்டு போன்ற ஒன்றில் எழுதி வைத்திருப்பேன். எனக்கும் மனப்பாடத்திற்க்கும் அதிக தொலைவு என்பதாலேயே நிறைய நேரங்களில் வரலாற்று கேள்விகளுக்கு தப்பாகவே விடை அளித்து இருக்கிறேன்.

இந்தியா வரலாறு, இந்தியா சுதந்திர போராட்டம் பற்றி படிப்பதே பிரம்ம பிரயத்தனமாக எனக்கு இருந்த நிலையில் உலக வரலாறா! நோ சான்ஸ் என்று இருந்தது. அதனாலேயே பிற நாடுகளின் வரலாறு பற்றிய கேள்விகளை சாய்ஸ் இல் விட கற்று கொண்டிருந்தேன்.

ஒரு வழியாக பத்தாவது முடித்து பர்ஸ்ட் குரூப் எடுத்தவுடன் 'இனிமேல் இல்லை இந்த வரலாறு தொல்லை அப்பாடா!" என்றிருந்தது எனக்கு. அதற்க்கு பிறகு வரலாறு பற்றி படிக்கவோ பேசவோ எனக்கு வாய்ப்பு வந்ததில்லை.

இந்தியாவை விட்டு வெளியில் வந்த பிறகு நிறைய பேர் என்னிடம் வந்து மகாத்மா காந்தி பற்றியும், இந்திரா பற்றியும், இந்தியா சுதந்திர போராட்டம் பற்றியும் பேசுவார்கள். அதுவும் என்னுடன் படித்த ஒரு பையன் காந்தி பற்றி அனைத்து புத்தகங்களையும் சேர்த்து வைத்து இருப்பார். எந்த நிகழ்வை பற்றி கேட்டாலும் பதில் சொல்வார். அடுத்த நாட்டுக்காரர் நம்ம நாட்டை பற்றி தெரிந்து கொண்ட அளவு கூட நமக்கு தெரியலையே! என்று எனக்கோ அவமானம் பிடுங்கி தின்ன ஆரம்பித்தது.

இன்னொரு எக்ஸ்ட்ரிம் ஆக சிலர் "இந்திரா காந்தி மகாத்மா காந்தியின் மகள் தானே" என்று கேட்பார்கள். இல்லை அவர் நேருவின் மகள் என்று சொல்லி பின்னர் நேரு குடும்ப பெயர், காந்தியான கதையையும் அவர்களுக்கு விளக்க வேண்டி இருக்கும். இதில் கஷ்டம் என்னவென்றால் இதுதான் கதை என்று எதோ ஒன்றை அவர்களிடம் உளற முடியாது. அடுத்த நாளே அதனை பற்றி யாரிடமாவது தெரிந்து கொண்டார்கள் என்றால் நம்மை அடுத்தவர்கள் முன் வைத்து மானத்தை வாங்கி விடுவார்கள். அதனாலேயே இந்தியா வரலாறு பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன்.


என்னுடன் படித்த தென் ஆப்ரிக்க தோழி ஒருவர் காந்தி பற்றி, மண்டேலா பற்றி நிறைய பேசுவார். காலனியாதிக்கம் பற்றியும் ஆப்ரிக்காவில் காலனியாதிக்கம் முடிந்து விடுதலை ஆன பல நாடுகள் இன்னும் உள்நாட்டு கலவரங்களால் வளர முடியாமல் படும் அவஸ்தை பற்றியும் நிறைய கூறுவார். காங்கோ, உகாண்டா, Sierra Leone, எத்தியோபியா, ருவாண்டா இன்னும் பல நாடுகள் பற்றியும் கூறுவார். எனக்கு ஆப்ரிகா கண்டத்தில் எத்தனை நாடுகள் இருக்கின்றன என்பதே தெரியாது அவரோ, அந்தந்த நாடுகளின் பிரச்சனைகள் பற்றி கூறுவார். எனக்கோ எப்போது அவர் நம்மை விடுவார் போய் வேற வேலையை பார்க்கலாம் என்று இருக்கும். ஆனால் அவரோ இந்திய சுதந்திர போராட்டமும், தென் ஆப்ரிக்க விடுதலை போராட்டமும் ஏறத்தாழ ஒரே மாதிரி என்பதால் எனக்கு ஆர்வம் அதிகம் இருக்கும் என்பது போல பேசி கொண்டே இருப்பார்.

இந்த வரலாறு குறித்த பிரச்சனைகளில் இருந்து மீள கொஞ்சம் கொஞ்சமாக இந்திய வரலாறு மற்றும் உலக வரலாறு குறித்த புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தேன். மனப்பாடம் செய்து விடைஅளிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாமல், ஆண்டுகளை கடம் செய்யாமல் வரலாற்றை படிக்க ஆரம்பித்தால் ஒரு கதை போல இருக்கிறது. சில நேரங்களில் சில வரலாற்று நிகழ்வுகளை புத்தகமாக, திரைப்படமாக பார்க்கும் போது இன்னும் அது குறித்த ஆர்வம் அதிகமாகிறது.

உதாரணமாக "Blood Diamond" என்னும் படம். எப்படி? எதற்கு? Sierra Leone நாட்டில் உள்நாட்டு கலவரங்களை பெரிய பெரிய வைர வியாபாரிகள் ஊக்குவிக்கிறார்கள் என்பதை அந்த படத்தில் காட்டி இருப்பார்கள். உள்நாட்டு கலவரங்களை தூண்டி அதில் சண்டையிடும் குழுக்களுடன் ஆயுத பேரம் பேசி அவர்களின் சொத்தான வைரங்களை மிக குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு வெளியில் விற்கும் அவலத்தை அந்த படத்தில் காட்டி இருப்பார்கள். "இப்படி எல்லாமா நடக்கும்?" என்று நான் என் தென் ஆப்பரிக்க தோழியிடம் கேட்பதுண்டு. அதற்க்கு அவர் அதில் காட்டி இருப்பது ஒரு பத்து சதவீதம் தான். இதை விட கொடுமைகள் நடக்கும் என்று சொல்லி என் வயிற்றில் புளியை கரைத்தார் என்பது வேறு கதை

நைபால் அவர்கள் எழுதிய "A Bend in the River" புத்தகம் காங்கோ நாட்டின் காலனியாதிக்கத்தின் பின்விளைவுகளை, அதன் தலைவரின் சுயநல போக்கை நன்கு எடுத்துக்காட்டும். அதே போல நான் சமீபத்தில் பார்த்த " The last king of Scotland" படம் இடி அமினின் உகண்டா நாட்டை பற்றிய கிலியை உண்டாக்கியது.

வரலாறு பற்றி படிக்கும் போது கதை போல இருந்தாலும் அதில் இருக்கும் உண்மை மனதை உலுக்குகிறது. பாலஸ்தீன், ஆப்கானிஸ்தான், ஈராக், நோர்த் கொரியா, இலங்கை, பல ஆப்ரிக்க நாடுகள் ....இன்னும் சொல்லி கொண்டே போகலாம். எத்தனை நாடுகள்? எல்லா வற்றிலும் உள்நாட்டு கலவரங்கள் அதனை ஊக்குவிக்கும் தலைவர்கள்..பதவி வெறி, பணம், நாடு பிடிக்கும் தந்திரம்...என்ன வெல்லாம் ஆட்டி படைக்கிறது இவர்களை ?. இப்படி வரலாற்றை படிக்கும் போது சில நேரங்களில் நாம் எவ்வளவு நிம்மதியாக இருக்கிறோம் என்று எண்ண தோன்றினாலும் உலகத்தில் சாந்தி நிலவ வேண்டும் என்று கடவுளிடம் மனமார வேண்ட தோன்றுகிறது..வேறென்ன செய்ய முடியும் நம்மால் :(( வேண்டுவதை தவிர?



டிஸ்கி

இது ஒரு மீள் பதிவு. 2010 இல் எழுதியது. நீண்ட நாட்களுக்கு பின் படித்த போது மீண்டும் பகிர வேண்டும் என்று தோன்றியதால் இங்கே பகிர்கிறேன்.

நன்றி.

Saturday, August 29, 2015

இந்திய சீரியல் பெண் கேரக்டர்களும், ப்ளீசிங் க்ரீம்களும்

இந்திய சீரியல்களில் பெண்களின் கேரக்டர்கள் 



வெளியூருக்கு வந்த இடத்தில் "தெய்வம் தந்த வீடு" என்ற ஒரு விஜய் டிவி சீரியலும் அதன்  ஒரிஜினல் ஆன "Saath Nibhaana Saathiya" பார்க்க நேர்ந்தது. ஏற்கனவே, என் இந்திய பயணத்தில், தினமும் "தெய்வம் தந்த வீடு" கொடுமையை பார்க்க நேர்ந்ததால்,  கதை ரொம்ப புரிய ரொம்ப நேரம் ஆக வில்லை (ஒரு வருடம் கழித்து பார்த்தாலும் கதை புரிய நிறைய நேரம் ஆகாது போல)
அதே போல, என் அம்மா இங்கு இருக்கும் போது மது பாலா என்ற சீரியல் பார்பார்கள். அதன் ஒரிஜினல் ஆன "Madhubala -Ek Ishq Ek Junoon" பார்க்க நேர்ந்தது








இது போன்ற சீரியல்களை பார்த்த பிறகு, தோன்றிய சிந்தனைகள் இங்கே.

எப்பொழுதும் இரண்டு வகையான கேரக்டர்கள் இந்த சீரியல்களில் இருக்கிறார்கள். வில்லி, ஹீரோயின்.

மிக சுலபமாக அவர்களை நாம் கண்டு பிடித்து விடலாம்.

எப்பொழுதும் புடவை கட்டி, பொட்டு  வைத்து, வட இந்திய சீரியல்கள் எனில், தலையில் முக்காடு இட்டு இருக்க வேண்டும். நீண்ட சிந்தூரம் இட்டு இருக்க வேண்டும், அது ஹீரோயின்.

மாடர்ன் உடைகள், ஜீன்ஸ் போன்றவை அணிந்து இருந்தால், அது வில்லி.

குடும்ப நலன் மட்டுமே தன் நலன், குடும்ப நலனுக்காக தன் நலனை மட்டும் அல்லாமல் தன்னை மெழுகு போல தியாகம் செய்பவள் ஹீரோயின்.அதுவும், தெய்வம் தந்த வீடு சீரியலில் வரும் ஹீரோயின் போல, முட்டாளாக, வெகுளியாக இருக்க வேண்டும். அதுவே மிக சிறந்த பெண், அது ஹீரோயின்.. (ஐயோ, அப்பா, முடியல.)

வில்லி, எப்பொழுதும் தன் சுயநலம், தான் என்று இருப்பவள். தனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதனை செய்வாள். யாரேனும் தப்பு செய்தால் அதனை பொறுமையாக கேட்டு கொள்ளாமல், தாங்கி கொள்ளாமல், உடனடியாக சண்டை  விடுவாள். அது வில்லி.,

அதாவது இவர்களின் அகராதியில், கணவனே கண் கண்ட தெய்வம், தன குடும்பமே கோவில், பதி சொல்லே மந்திரம் என்று கேட்டு வீட்டுக்கு அடங்கி நடந்தால் தான் அவர் நல்ல குடும்ப பெண். அவர் தான் இந்திய சீரியல் ஹீரோயின்.

எதிர்த்து பேசினாலோ, தன்னம்பிக்கை கொண்டு முடிவு எடுத்தாலோ, தனக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதனை உடுத்தினாலோ, தப்பு செய்தால் சுட்டி காட்டினலோ, அவள் வில்லி.

வீட்டு சம்பிரதாயங்களை மறக்காமல் பின்பற்ற வேண்டும். இந்த விசயத்தில் வட இந்திய சீரியல்கள் மறக்காமல், கர்வா சவுத், எனப்படும் கணவருக்காக விரதம் இருக்கும் ஒரு பண்டிகையை பிடித்து கொள்ளுகிறார்கள்.

இன்னும் ஒரு சீரியல் பார்த்தேன், அதில் ஹீரோயின் கருப்பாக இருக்கிறாள் என்று யாருக்கும் பிடிக்க வில்லை, அதனால் அவள் எப்படி தன குடும்ப மதிப்பை பெறுகிறாள், அதற்க்கு என்ன என்ன கஷ்டங்கள் அனுபவிக்கிறாள், இதுவே சீரியல்.  கிட்ட தட்ட எல்லா சீரியல்களும் மாமியார் மருமகள், நாத்தனார் பிரச்சனைகள், அதில் வரும் சிறு சிறு மனஸ்தாபங்கள் என்று மட்டுமே செல்லுகின்றன.

இந்திய பெண்களை எங்கே எடுத்து செல்லுகின்றன இந்த சீரியல்கள் எல்லாம்.  என்ன சொல்ல வருகின்றன இந்த சீரியல்கள் எல்லாம். இது தான் உண்மை நிலையா? உண்மையில் பெண்கள் இதனை தான் விரும்புகிறார்களா? பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் எல்லாம் இவை மட்டும் தானா? வேறு பிரச்சனைகளே இல்லையா?

உண்மையில் நடக்கும் பிரச்சனைகளான, பெண் சிசு கொலைகளும், கற்பழிப்புகளும், வீட்டில் நடக்கும் வன்முறைகளும், வேலையில் நடக்கும் பாகுபாடுகளும், பிரிவினைகளும், மறுக்கப்படும் பேச்சு சுதந்திரங்களும்.....எப்பொழுது உண்மையான பிரச்சனைகளாக சீரியல்கள் பேச போகின்றன. அல்லது, அவை TRB ரேடிங் தராது என்று பேசபடுவதில்லையா? என்ன காரணமோ தெரியவில்லை.


ப்ளீசிங் க்ரீம்கள் 


ஏன் இந்தியர்களுக்கு வெள்ளை தோலின் மீது அப்படி ஒரு ஈர்ப்பு, என்று என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் கேட்டார். ஆண் பெண் வித்தியாசம் இன்றி, "Fair and Lovely" போன்ற ப்ளீசிங் க்ரீம்கள் விளம்பரங்கள். 10 நாட்களில் சிகப்பழகு என்று. இது இந்தியா என்று மட்டுமே அல்ல, என்னுடன் வேலை பார்க்கும் கென்யா நாட்டை சேர்ந்த பெண் சொன்னதும் இது தான். அவளும் சிறு வயதில் இவற்றை போன்ற ப்ளீசிங் கிரீம் உபயோகித்ததாக சொன்னால். மாநிறம் அல்லது கருப்பு தோல் நிறத்தை கொண்ட பல நாட்டு பெண்களை நோக்கியும் இதனை போன்ற ஒரு விளம்பரங்கள் குறி வைத்து அறிவிக்க படுகின்றன. வெள்ளை தோல் மட்டுமே அழகு மற்றவை எல்லாம் இல்லை என்று. 

சமீபத்தில் நியூ யார்க் டைம்ஸ் இல் படித்த செய்தி இது. ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் என்னும் நாட்டில் ஸ்கின் fairness கிரீம்கள் தடை செய்ய பட்டு இருக்கின்றன. அவை ஸ்கின் கான்செர் தூண்டும் என்று அறியப்பட்டதால் அவை தடை செய்ய பட்டன.





Photo Courtesy: http://nytlive.nytimes.com/womenintheworld/2015/05/12/another-african-nation-bans-popular-skin-whitening-creams/


என்னுடைய கடந்த பதிவில் சொன்னது போல, இந்த ப்ளீசிங் கிரீம்கள் எல்லாம், வெள்ளை தோல் மட்டுமே அழகு என்று மக்களை மூளை சலவை செய்து இருக்கிறார்கள். உண்மையில் இவை மெலனின் அளவை கட்டுபடுத்துவதன் மூலம், வெளிர் நிறத்தை தர முயன்றாலும், அதன் மூலம் ஸ்கின் கான்செர் பாதிப்பை மட்டுமே அவை அதிக படுத்தும்.

இந்தியாவில் எப்பொழுது சிகப்பு தோல் மோகம் தீர்வதோ, இது போன்று ஒரு தடை ப்ளீசிங் க்ரீம் களுக்கு நடக்குமோ..


டிஸ்கி

இந்திய சீரியல்கள் பற்றி என்னுடைய கருத்தை மட்டுமே இங்கு பதிந்து இருக்கிறேன். பொதுப்படையான கருத்து அல்ல இது.


நன்றி.






Saturday, August 22, 2015

பார்த்தது, படித்தது, அனுபவித்தது!


பார்த்தது

எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் Mission Impossible படம் நான் கல்லூரி ஆரம்பத்தில் என்று நினைக்கிறன். அதிலும் Tom Cruise இன் மேலிருந்து கீழாக கயிற்றில் இறங்கி கீழே உடலை தொடாமல் அந்தரத்தில் இறங்கும் செயல் சூப்பர் ஆக இருக்கும்.



எல்லா Mission Impossible தொடரிலும் ஏதேனும் ஒரு புல்லரிக்கும் செயல் இருக்கும். கிட்டத்தட்ட எல்லா Mission Impossible சீரீஸ்ம் பார்த்து இருக்கிறேன் என்று நினைக்கிறன், Mission Impossible 2 தவிர. Mission Impossible 4, Ghost Protocol இல் துபாய் புர்ஜ் கலிபா வில் இருந்து குதித்து அடுத்த ப்ளோர்க்கு செல்லும் படி இருக்கும் கட்சிகள் புல்லரிக்க வைக்கும்.


இரண்டு வாரத்திற்கு முன்பு, தோழிகளுடன் மறுபடியும் சினிமா Mission Impossible 5, Rogue Nation படத்திற்கு. ஈதன் ஹன்ட் ஆக அதே ஸ்டைல் உடன் Tom Cruise. முதல் Mission Impossible இல் என்று  பார்த்த Tom Cruise க்கும் இப்பொழுது இருக்கும் Tom Cruise க்கும் அதிக வித்தியாசம் இல்லை,  இன்னும் அதே துடிப்பு என்று கலக்குகிறார்.. என்றாலும் முகம் கிழடு விழுந்ததை போன்று ஒரு சில காட்சிகளில் தெரிகிறார். ஒவ்வொரு சீனும் கலக்கல், சீட்டு நுனிக்கு வரவழித்து விடுகிறார்கள். இன்னும் பல சீரீஸ் வரும் என்று நினைக்கிறன். பார்க்கலாம்.

படித்தது

மனித உடலில் இருக்கும் சீரியல் கில்லெர்ஸ் பற்றி படிக்க நேர்ந்தது. அதனை வீடியோ ஒன்றும் எடுத்து இருக்கிறார்கள். உடலில் இருக்கும் கான்செர் செல்கள் மற்றும் வைரஸ்களை தேடி கொள்ளும் cytotoxic T cells எனப்படும் ரத்த வெள்ளை அணுக்களில் இருக்கும் செல்கள் இப்படி செல்ல்களை தேடி தேடி தன்னை இணைத்து, தன்னுடன் சேர்த்து கொன்று விடுகின்றன. உடலின் பாதுகாப்பு மெக்கானிசம் இது. என்ன அற்புதமான அமைப்பு பாருங்கள். உண்மையில் நம் உடலை போன்ற ஒரு அதிசயம் எதுவும் இல்லை. 





அனுபவித்தது

இது எனக்கு மட்டும் நேர்ந்ததா இல்லை உண்மையில் மக்கள் இப்படி தான் இருக்கிறார்களா என்று தெரியவில்லை. என்னுடைய ப்ராஜெக்ட் விசயமாக இந்தியா சென்றிருந்த போது ஒரு பல்கலை கழகமும் மற்றும் சில பேராசிரியர்களும் சந்திக்கும் பேச வாய்ப்பும் கிடைத்தது. நாம் என்ன பேச ஆரம்பித்தாலும் அல்லது நம்முடைய ஆராய்ச்சி பற்றி சொல்ல ஆரம்பித்தாலும் நிறைய நெகடிவ் கமெண்டுகள் கேட்ட்க நேர்ந்தது. இது இந்தியாவில் வேலை செய்யாது. அல்லது இந்திய செட்டிங் இதற்க்கு ஒத்து வராது. இந்தியாவில் சாம்பிள் கிடப்பது கடினம்..என்று நிறைய நெகடிவ்.. ஒருவரி கூட பாசிடிவ் ஆக, துணிந்து செய்யலாம் என்று சொல்ல வில்லை. ட்ரை செய்து கூட பார்க்காமல் எப்படி இது ஒத்து வராது என்று சொல்லுகிறார்கள் என்று புரியவில்லை.

புதிய முயற்சிகள் செய்வதில் பயமா இல்லை தோற்றால் நம் எதிர் காலம் என்னாவது என்ற பயமா தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், இப்படி safe zone இல் வாழ வேண்டும் என்று இந்தியாவில் இருப்பவர்கள் எப்பொழுதும் நினைக்கும் வரை. புது புது இன்வேன்சியன், கண்டுபிடிப்புகள் வராது என்பது என் எண்ணம்.

இது எனக்கு நேர்ந்த அனுபவத்தை வைத்து மட்டுமே எழுதியது..பொதுவானது அல்ல.

நன்றி.

P.S.

இரண்டு வாரம் நயாகரா, கனடா பயணம் செல்ல இருப்பதால், இரண்டு வாரம் கழித்து சந்திக்கிறேன்.





Friday, August 21, 2015

சில மூளை சலவை விளம்பரங்களும் வரலாறும்!

"நீரின்றி அமையாது உலகு" என்பது பழைய மொழி. "விளம்பரங்கள் இன்றி அமையாது உலகு" என்பது புது மொழி. சாப்பிடும் சாப்பாட்டில் இருந்து உபயோக்கிக்கும் டாய்லெட் பேப்பர் வரை. தலைக்கு உபயோக்கிக்கும் சீப்பில் இருந்து காலுக்கு அணியும் செருப்பு வரை எல்லாமே விளம்பரம். 

இது இந்தியாவில் உலகமயமாக்கலுக்கு பின்பு தான் வந்த நுகர்வோர் கலாச்சாரம், அதற்க்கு முன்பு இல்லை இல்லை என்று சொல்லவே முடியாது. என் சிறு வயதில் பார்த்த தூர்தர்ஷன்  ஒளியும் ஒலியும் இல், பாடல்கள் வருவதற்கு முன்பு கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் விளம்பரம் தொடர்ச்சியாக பார்த்து இருக்கிறேன். அதே போல, ஞாயிற்று கிழமை படத்திற்கு முன்பும், இடைவெளியின் போதும் நிறைய பார்த்து இருக்கிறேன். 

சொல்ல போனால் விளம்பரங்கள் பழைய காலத்தில் இருந்தே பத்திரிக்கைகளில் வந்து இருக்கின்றன. சாவித்திரி, ஹேமா மாலினி காலத்து லக்ஸ் விளம்பரங்கள் அந்த கால பத்திரிக்கைகளில் தவறாமல் இடம் பிடித்து இருக்கின்றன. என் சிறு வயதில் எந்த திரைப்படம் சென்றாலும் அங்கு லிரில் சோப்பு மற்றும் சிந்தால் சோப்பு விளம்பரம் பார்த்து இருக்கிறேன்.

 

அதனால் விளம்பரங்கள் இந்திய உலக மயமாக்கலுக்கு பின்பு  வந்தவை அல்ல.


 ஆனால், மேற்கத்திய நாடுகளில் ஒரு சில விசயங்களை விளம்பர படுத்த என்று மக்களின் குணாதிசயங்கலுடன் தொடர்பு படுத்த பட்டு  மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று விளம்பர படுத்த பட்டு இருக்கின்றன. மக்கள் இதனை உபயோகிப்பது ஸ்டேடஸ் சிம்பல் என்று  மறைமுகமாக மூளை சலவை செய்ய பட்டு இருக்கிறார்கள்.

இதற்க்கு சிறந்த இரண்டு உதாரணங்கள் இங்கே காணலாம்.

புகையிலை, சிகரெட் புகைத்தல் 

முதலாம் உலகப்போர் முடிந்த தருவாயில் அமெரிக்கா எங்கும் ஒரு விளம்பரங்கள் வந்தன. அவை சிகரெட் புகைப்பதை பற்றியது. சிகரெட் புகைப்பது ஆண்மையின் அடையாளமாக சித்தரிக்க பட்டது. அனைவர் கையிலும் சிகரெட்டுகள், சினிமா நடிகர்கள் முதல், குடியரசு தலைவர், போர் முனையில் இருக்கும் வீரர்கள் என்று அனைவர் கையிலும் சிகரெட்டுகள். அது புகைக்காதவர்கள் ஆண்மை இல்லாதவர்கள் என்று மெதுவாக மூளை சலவை செய்யபட்டார்கள்.


 அதே போல 70 களில் பெண்கள் இயக்கம் சம உரிமை பிரச்னை எழுந்தபோது பெண்கள் தங்களை ஆண்களுடன் சமமாக காட்டி கொள்ள என்று புகை பிடித்தலை கை கொண்டனர்.


புகை பிடித்தால் அவர்கள் தைரியசாலிகள் என்று மூளை சலவை நடந்தது. அதன் பின்னர் சிகரெட்டு விற்பனை விண்ணை தொட்டது.

இதே போன்ற ஒரு விளம்பரங்கள் மறை முகமாக இந்திய மண்ணிலும் விதைக்க பட்டன. அதுவும் சினிமா நடிகர்கள் மூலம். 70-80 களில் வந்த படங்களில் எல்லாம் சிகரெட்டு கையில் வைத்திருக்காத நடிகர்களை காண இயலாது. அதற்க்கு முன்பு வந்த படங்களிலாவது கதாநாயகன் புகை பிடிப்பவனாக அதிகம் இருக்க மாட்டார். ஆனால் இந்த காலத்தில் புகை பிடித்தல் ஆண்மை அடையாளம் என்று மாற்ற பட்டது.



இதே நிலை பின்னர் வந்த நடிகர்களிடமும் தொடந்தது,. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது

எப்படி விளம்பரங்கள் மக்களை மூளை சலவைசெய்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் மட்டுமே.


வைரங்கள்

இரண்டாவது உதாரணம், வைரங்கள்.

உலகம் எங்கும் பின்பற்ற படும் ஒரு கலாச்சாரம் இது. ஒரு பையன் ஒரு பெண்ணிடம் தன்  காதலை சொல்லி என்னை கல்யாணம் செய்து கொள்ளுகிறாயா என்று கேட்பதற்கு முன்பு அந்த பெண் முன்பு முட்டியிட்டு கையில் ஒரு வைர மோதிரத்துடன் "Will you marry me?" என்று வேண்ட வேண்டும்.

தற்போது இந்தியாவிலும் இது சினிமாக்கள் மூலம் பிரபல படுத்த படுகிறது. முக்கியமாக வைர மோதிரம் இல்லாமல் என்கேஜெமென்ட் இல்லை. இது எப்படி அறிமுகபடுத்த பட்டது. ஒரு ஸ்டாண்டர்ட் ஆனது.

1914 இல் "A diamond is forever" என்ற பிரசாரங்கள் N.W.Ayer & son என்னும் விளம்பர கம்பெனியால் ஆரம்பிக்க பட்டன.

மர்லின் மன்றோ வை வைத்து, "Diamonds are girls best friends" என்னும் பிரச்சாரம் ஆரம்பிக்க பட்டது.


இவர்களின் ஒவ்வொரு வாசகமும், வைரங்கள் மட்டுமே காதலின் உண்மையான பரிசு, எந்த ஒரு காதலும் வைரங்கள் இல்லாமல் முழுமை அடையாது. என்று பிரபல படுத்த பட்டது. இப்படி மூளை சலவை செய்யப்பட்ட பின்னர், தற்போது propose செய்ய விரும்பும் அனைவரும், தங்களால் முடிகிறதோ இல்லையோ, ஒரு வைரத்தை வாங்கி பெண்ணின் முன் மண்டியிட்டு என்னை கல்யாணம் செய்து கொள் என்று கேட்டு கொண்டு இருகிறார்கள். அது பெரிய விசயமாகவும் பேச படுகிறது.

இந்தியாவில் வைரங்களுக்கு இன்னும் அவ்வளவு மவுசு கூட வில்லை என்றாலும், நகை கடை விளம்பரம் இல்லாத பத்திரிக்கை, டிவி, இன்டர்நெட் விளம்பரங்கள் பார்க்கவே முடியாது.

இன்னும்  சில மூளை சலவை விளம்பரங்கள் இருப்பினும் உதாரணமாக "fair and lovely" போன்றவை இருப்பினும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்து கொள்ளுகிறேன்.

நன்றி.


Thursday, August 20, 2015

இந்தியன் மேனேஜர்களும், வாட்ஸ்அப் விஞ்ஞானிகளும்

இந்தியன் மேனேஜர்கள் 

நீங்கள் ஒரு இந்தியன் மேனேஜர் இடம் வேலை பார்ப்பீர்களா இல்லை வெள்ளை மேனேஜர் இடம் வேலை பார்ப்பீர்களா ? என்று அமெரிக்காவில் வேலை பார்க்கும் ஒரு எந்த ஒரு இந்தியரிடமும் கேட்டு பாருங்கள். அவர்களின் பதில்.ஐயோ, தேசி மேனேஜர் வேண்டாம் பா, வெள்ளை மேனேஜர் தான் நல்லது.என்று  பதில் வரும். என்னிடம் நீங்கள் கேட்டால் நானும் அதையே சொல்லுவேன். என் அனுபவத்தில் கண்ட வரை,நான் வேலை பார்த்த வெள்ளை  மேனேஜர்கள் மைக்ரோ மனஜெமென்ட் செய்ததில்லை. ஆனால் இந்தியன் மேனேஜர் கள், எப்பொழுதும் பின்னர் நின்று கொண்டு வேலை முடிந்ததா என்று படுத்துவார்கள்.

அது எந்த துறையா இருந்தாலும் இது உண்மை என்று நினைக்கிறன். ஏனென்றால், இந்தியன் மேனேஜர் கள் வேலையை பிழிந்து விடுவார்கள், மதிக்க மாட்டார்கள். உங்களை அடிமை போல நடத்துவார்கள், நீங்கள் பார்க்கும் வேலைக்கு அவர்கள் கிரெடிட் வாங்கி கொள்ளுவார்கள்...என்று பல பல கம்ப்ளைன்ட் வரும்.

ஏன் இப்படி இருக்கிறார்கள் இந்தியன் மேனேஜர்கள் என்று யோசித்தால்...பலர் சொல்லுவது நம்ம ஊர் வர்ணாசிரமம் இன்னும் மக்களின் மனதில் நிறைந்து இருக்கிறது அதனாலேயே..என்று சொல்லுவார்கள். இது உண்மையா தெரியவில்லை.

வாட்ஸ்அப் விஞ்ஞானிகள் 


என்னுடைய தோழிகள் அனுப்பிய வாட்ஸ் அப் செய்தி இது. அதாவது வாட்டர் பக்கெட்டில் இருந்து தண்ணீர் அருந்துவதால் High Bone Fever என்ற வைரஸும், உயிர்  கொல்லியான  எபோலாவும் பரவும் என்று அந்த செய்தி  தெரிவிக்கிறது. இதனை இன்னும் 5 பேருக்கு அனுப்பவும் என்று வேறு சொல்லுகிறார்கள்.

உண்மையில் High Bone Fever என்று ஒரு வைரஸ் எனக்கு தெரிந்து இல்லவே இல்லை. அதே போல எபோலாவும் தண்ணீர் மூலம் பரவாது. பாதிக்க பட்டவரின் ரத்தத்தை தொடுவதன் மூல அல்லது காண்டக்ட் மூலமே இது பரவும்.

அதனால், இது  வாட்ஸ்அப் விஞ்ஞானிகள் கண்டு பிடித்த வைரஸ் புரளி மட்டுமே.

எப்படி டிசைன் டிசைன் ஆ புரளி கிளப்புறாங்கப்பா! உக்கார்ந்து யோசிப்பாங்க போல.

நன்றி.

Wednesday, August 19, 2015

கொசு விரட்டிகள் ஏன் அதிகம் வேலை செய்வதில்லை?

Mortein, Good night, Hit ...என்று பல பல கொசு விரட்டிகள் தினமும் அறிமுகப்படுத்த படுகின்றன. இவர்களின் தாரக மந்திரம். கொசுக்களை சீக்கிரம் விரட்டி விடும். அதிக புகை இல்லை, இரவு முழுக்க பாதுகாப்பு, நிம்மதியாக தூங்கலாம்... என்று பல பல.. உண்மையில் இவர்கள் விளம்பர படுத்துவது போல கொசு விரட்டிகள் வேலை செய்யுமா, கொசுக்கள் இந்த கொசு விரட்டிகளை  கண்டு ஓடி விடுமா? உண்மை என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.

கொசுக்கள் முதன் முதலில் கொசு விரட்டிகள் முன்பு  அறிமுகபடுத்த படும் போது துரத்த படுகின்றன. ஆனால் அடுத்த முறை எக்ஸ்போஸ் ஆகும் போது, கொசு விரட்டிகள் எந்த பயனும் ஏற்படுத்துவதில்லை.
அமெரிக்காவில் அதிகம் உபயோபடுத்தும் Deet என்னும் கொசு விரட்டியை வைத்து இந்த ஆராய்ச்சியை செய்து PloS என்னும் ஆய்விதழில் ஆராய்ச்சி கட்டுரை வெளியிட்டு இருக்கின்றனர்(1).
இந்த ஆராய்சியின் படி, கொசு விரட்டிகள் உபயோகிக்கப்பட்டு மூன்று மணி நேரம் மட்டுமே கொசுக்கள் அதன் எபக்ட் கொண்டிருக்கும் என்று, அதன் பிறகு அவை பழகி கொள்ளும் என்றும் அறிந்து இருகிறார்கள். 

London School of Hygiene and Tropical Medicine டாக்டர் ஜேம்ஸ் லோகன் அவர்களின் கருத்து படி "கொசுக்கள் மிக மிக வேகமாக மரபணு மாற்றம் செய்து கொண்டு சூழ்நிலைக்கு தக்க தங்களை மாற்றி தகவமைத்து கொள்ளுகின்றன. அதனாலேயே, பல கொசு விரட்டிகள் உபயோக்கிக்க ஆரம்பிக்கும் போது பயன் தருவது போல தெரிந்தாலும், கொஞ்ச நாட்களில் அல்லது கொஞ்ச நேரத்தில் அவை செயலிலந்தவை ஆகி விடுகின்றன.

அதனால் இனிமேல் எந்த விளம்பரமாவது எங்கள் கொசு விரட்டி இரவு முழுதும் கொசுக்களை கொள்ளும் பாதுகாப்பு அளிக்கும் என்றால் அவை உண்மை இல்லை. வெறும் வியாபார தந்திரம் மட்டுமே.

Photo credit to BBC 

மாறாக, இயற்கையாக கிடைக்கும் புல் ஒன்று கொசுக்களை விரட்டும் என்றும் ஒரு செய்தி பார்க்க நேர்ந்தது. அதிலிருந்து தற்போது கொசுக்களை விரட்டும் Coumarin  என்னும் வேதிபொருளை பிரித்திருப்பதாகவும் படித்தேன். எப்படியே, இயற்கை வழியே சிறந்தது என்று இதன் மூலம் மறுபடியும் நிருபிக்க பட்டு இருக்கிறது. இதனை வைத்து என்ன என்ன விளம்பரங்கள் வர போகின்றனவோ? பார்க்கலாம்.

நன்றி.


Reference

1) Stanczyk NM, Brookfield JFY, Field LM, Logan JG (2013) Aedes aegyptiMosquitoes Exhibit Decreased Repellency by DEET following Previous Exposure. PLoS ONE 8(2): e54438. doi:10.1371/journal.pone.0054438

Tuesday, August 18, 2015

பெண்களும், தலைமை பொறுப்பும், அமெரிக்காவும் !



எப்பொழுதும் எங்கள் ஆபிசில் காலையில் பொது விஷயங்கள் குறித்து பேசுவதுண்டு. கரண்ட் அப்பைர்ஸ், பெண்கள், வரவிருக்கும் தேர்தல் என்று அனைத்தும் பேசுவதுண்டு.

இன்றைய ஹாட் டாபிக் ஆக  அடுத்த வருடம் வரப்போகும் US குடியரசு தலைவர் தேர்தல்   முன்னிலையில் இருக்கும் குடியரசு கட்சியின்  "டொனல்ட் ட்ரம்ப்"  பற்றியும் ஜனநாயக கட்சியின் "ஹிலரி கிளின்ட்டன்" பற்றியும் பேசி கொண்டு இருந்தோம். அப்பொழுது எப்பொழுதும் அமைதியாக இருக்கும் ஒரு வெள்ளை அம்மா, "நீங்கள் என்ன தான் சொன்னாலும், பெண்களால் நாட்டை வழிநடத்த முடியாது அதனால் நான் ஜனநாயக கட்சியை சேர்ந்தவள் என்றாலும், நான் ஹிலாரிக்கு ஓட்டு போட மாட்டேன்" என்று சொன்னார்.

ஏன் அம்மா இப்படி சொல்லுகிறீர்கள் என்று கேட்டதற்கு. பைபிளில் இருக்கிறது, பெண்களால் சர்ச்சை கூட வழி  நடத்த தகுதி இல்லை. இப்படி இருக்க, எப்படி ஒரு  நாட்டை வழி நடத்த முடியும் என்று கேட்டார். பைபிளில் இருப்பதை தான் நாங்கள் பாலோ செய்வோம். அதனால் ஒரு பெண் குடியரசுத்தலைவர் போட்டியில் நின்றால் நாங்கள் ஒட்டு போட மாட்டோம் என்று சொன்னார்.

இதே போன்ற வாசகங்களை நான் மற்ற கன்செர்வேடிவ் கிருத்துவ ஆண்களிடம்  கேட்டு இருக்கறேன் என்பதால் அப்பொழுது  எனக்கு அது ஆச்சரியம் தரவில்லை. ஆனால், இது வருவது ஒரு நல்ல கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணிடம் இருந்து வருவது தான் ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் இந்த பெண் வீட்டில் அனைத்தையும் செய்கிறார், அவளின் கணவர் வீட்டோடு இருக்கிறார் வேலை இல்லை. ஆனாலும், அவள் சொல்லுவது இது தான், என் கணவருக்கு வேலை இல்லை, வீட்டில் இருக்கிறார், ஆனாலும் அவர் தான் குடும்ப தலைவர். அது தான் பைபிளில் இருக்கிறது என்று சொன்ன போது  எனக்கு நாம் அட்வான்ஸ்டு என்று உலகம் எங்கும் நினைத்து கொண்டு இருக்கும் அமெரிக்காவில் தான் இருக்கிறோமா என்று நினைக்க தோன்றியது.

உண்மையை சொன்னால், ஒரு நாட்டை வழி  நடத்த ஒரு பெண்ணை நம்பி நாட்டை ஒப்படைத்தது, சவுத் ஈஸ்ட் ஆசியா தான்முன்னோடி  என்று நினைக்கிறன். இந்திரா காந்தி, பெனசிர் பூட்டோ, கலிதா ஜியா, சந்திரிகா குமாரதுங்கா என்று நிறைய பெண் தலைவர்கள் பார்த்து இருக்கிறோம். அதே போல ஐரோப்பாவிலும், பிரிட்டனின்  தாட்சர், மற்றும் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் போன்ற தலைவர்களும் நாட்டை ஆண்டு கொண்டு திறமாக வழி  நடத்தி கொண்டு இருக்கும் போது. உலகின் தலைவர் என்று மார் தட்டி கொண்டு இருக்கும் அமெரிக்காவில் ஒரு பெண்ணை தேர்தெடுக்க கூட இப்படி யோசிக்கிறார்கள். அதற்க்கு பைபிளை காரணமாக சொல்லுவது சிரிப்பாக இருந்தது. ஒரு வேளை  நாங்கள் பைபிள் பெல்ட் எனப்படும் மாநிலங்களில் இருப்பதனாலா இல்லை US முழுதும் இந்த நிலையா, சொல்லுங்கள் மக்களே.

கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

நன்றி

Monday, August 17, 2015

குரூப்பிஷம் மற்றும் டபுள் ப்ரோமோசனும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும்!

கடந்த வாரம் நடந்த இரண்டு விஷயங்கள், நான்  இந்த பதிவு எழுத காரணம். கிட்டத்தட்ட இரண்டுமே, இந்தியாவில் இருந்து இங்கு புதிதாக வந்த சில குடும்பங்களை பற்றியது என்றாலும், இங்கு வந்து சில ஆண்டுகள் ஆன மக்களிடமும் நான் கண்ட விஷயங்கள் இவை. 

குரூப்பிஷம்
அமெரிக்காவில், எந்த ஊரில் எல்லாம் இந்தியர்கள் இருக்கிறார்களோ அங்கு எல்லாம் இந்தியன் கம்யூனிட்டிகள்  இருக்கும். அங்கு முக்கால் வாசி நேரம் இந்தியர்கள் மட்டுமே வசிப்பார்கள். அக்கம் பக்கம் வீடுகளில் எல்லாம் இந்தியர்கள் இருப்பதாலேயே, குழந்தை விளையாடலாம், நம்ம ஊர் போன்ற சூழ்நிலை இருக்கும் என்று பலரும் இது போன்ற கம்யூனிட்டிகளுக்கு வீடு வாங்கி செல்வது உண்டு.  வீடு வாங்கி கொண்டு செல்லும் போது சந்தோசமாக செல்லும் பலரும், சென்ற சிறிது ஆண்டுகளுக்குள், குரூப் பொலிடிக்ஸ், பிரச்னை என்று ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளாமல் முகத்தை திருப்பி கொள்ளுவதை பார்த்து இருக்கிறேன்.

இனம் மொழி மாறாமல் கிட்ட தட்ட எல்லா இந்தியர்/மாநில மக்களிடமும் இந்த நிலை பார்த்து இருக்கிறேன். என்ன காரணம் என்றால் , இந்தியர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு என்று ஒரு குரூப் சேர்த்து கொள்ளுவார்கள். மாநிலம், மொழி, இனம், சில நேரம் ஒத்த ஜாதி மக்கள் எல்லாம் கூட ஒன்றாக சேர்ந்து க்ரூப் அமைத்து கொள்ளுவார்கள்.  பின்னர் அந்த குரூப் மக்கள் அவர்களிடம் மட்டுமே பேசி கொள்ளுவார்கள். வேறு வெளி ஆட்கள் யாரையும் அந்த குரூப்இல்  சேர்த்து கொள்ளுவது இல்லை.

பல நேரங்களில் இப்படி குரூப் களுக்குள் ,பொறமை, நீ /நான் பெரியவர், என்னிடம் பேச மாட்டேங்கிறா,மதிக்க மாட்டேன்கிறா, குடும்ப பிரச்னை ... என்பன போன்ற பல பிரச்சனைகள் எழுந்து, ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டு கொள்ளுவதுண்டு. பின்னர் அந்த க்ரூப் மக்கள் ஒருவருக்கு ஒருவர் பேசி கொள்ளுவது இல்லை. சில நேரங்களில் குரூப் களில் இருக்கும் குடும்ப பெண்மணிகளுக்குள் நடக்கும் பிரச்சனையால் குடும்ப தலைவர்களும் சில நேரம் பேசி கொள்ள முடியாத நிலை ஏற்படுவதை கண் கூடாக கண்டு இருக்கிறேன். நல்ல நட்புகளாக இருந்த பலரும் உடைந்து சிதறி இருக்கிறார்கள்.

இந்த காரணத்தினாலேயே, எங்களுடைய  நண்பர்கள் அனைவரும் ஒரு இந்தியன் கம்யூனிட்டியில் வீடு வாங்கி சென்று எங்களையும் அங்கு வீடு வாங்குங்கள் என்று வற்புறித்திய  போது, நாங்கள் வேண்டாம் என்று மறுத்து விட்டோம்.

ஊர் விட்டு ஊர் வந்து வாழும் நிலையில் இருக்கும் நாம் ஒருவருக்கு ஒருவர் என்று ஒற்றுமையாக இருப்போம் ஒருவருக்கு ஒருவர் உதவு செய்து கொள்ளுவோம் என்றெல்லாம் இல்லாமல், நீ பெரியவர் நான் பெரியவர் என்று போட்டி போட்டு கொண்டு சண்டை போடுவது ஏன் மக்களே?


இந்த குரூப் கலாச்சாரத்தினால் நிறைய இங்கு வரும் புதியவர்கள் பாதிக்க படுகிறார்கள். அப்படி நான் சந்தித்த வட இந்திய குடும்பம் அது . இவர்கள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்றாலும் ஹைதராபாதில் செட்டில் ஆகி இருக்கிறார்கள். IT துறையில் இருவருக்கும்  வேலை என்பதால், தற்போது, இந்தியாவில் இருந்து 3 ஆண்டுகள் ஆன் சைட் என்று அனுப்பி இருக்கிறார்கள். இரட்டை  குழந்தைகள், இரண்டும் முகுந்த் உடன் பள்ளியில் படிக்கிறார்கள்.  ரொம்ப அமெரிக்க வாழ்க்கை பற்றி அறிந்திராத இவர்கள், இங்கு வந்ததும் நண்பர்கள் வேண்டும் என்று அவர்கள் வந்து சேர்ந்த அபார்ட்மெண்டில் அணுகி இருக்கிறார்கள். முதலில் இவர்கள் புதியவர்கள் என்று யாரும் இவர்களை குரூப்இல் சேர்த்து கொள்ளவில்லை. பின்னர் ஓரிரு நண்பர்கள் சேர்ந்து இருக்கிறார்கள். அவர்களுக்குள்ளும் ஈகோ சண்டைகள், போட்டி பொறமை என்று ஆகி இருக்கிறது.  தற்போது தங்களுக்கு யாரும் நண்பர்கள் கிடையாது பேசாம இந்தியாவிற்கு திரும்பி விடலாம்என்று இருக்கிறேன் என்று அந்த அம்மா சொன்னார்கள்.

இங்கு வந்த புதிதில் நானே இதனை நிறைய அனுபவித்து இருக்கிறேன் என்பதால் என்னால் அவர்கள் சொன்னதை புரிந்து கொள்ள முடிந்தது. அதுவும் பெண்கள் படுத்தும் பாடு அதிகம் என்று இங்கு சொல்லியே ஆக வேண்டும். வேலைக்கு போகும் பெண்கள் இருந்தால் அவர்களை யாரும் குரூப்இல் சேர்த்து கொள்ள மாட்டார்கள், என்ற காரணத்தினாலேயே பல நேரங்களில் நான் என் பல்கலைகழக குடும்பத்துடனே பழகி இருக்கிறேன். என்ன மக்களோ?


டபுள் ப்ரோமோஷன் மோகம்

அடுத்த விஷயம், மக்களின் டபுள் ப்ரோமோஷன் மோகம். அதாவது, தன குழந்தையை எப்படியாவது டபுள் ப்ரோசன் வாங்க வைத்து விட வேண்டும் என்று எல்லா வற்றிலும் தள்ளுவது. அதனை கண் கூடாக காண நேர்ந்தது. எங்கள் தமிழ் பள்ளியில் இந்த வருட அட்மிசன் நேரத்தில் குழந்தைகளின் தமிழ்திறனை கணிக்க என்று ஒரு தேர்வு நடத்தினார்கள், அங்கு உதவி செய்யும் படி நேர்ந்தது. அங்கு குழந்தைகள் தேர்வு எழுத அழைத்து வரும் பல பெற்றோரும், தங்கள் குழந்தை நன்கு தமிழ் பேசும், படிக்கும் அதனால் டபுள் ப்ரமோசன் கொடுத்து அடுத்த கிளாஸ் அனுப்புங்கள் என்று எங்களிடம் சண்டை போட்டார்கள். நாங்கள் அவர்களின் திறனை சோதித்த பிறகு இல்லை என்று சொன்னாலும், எப்படி எங்கள் குழந்தைகளை நீங்கள் இந்த வகுப்பிற்கு அனுப்புகிறீர்கள்?, எங்கள் குழந்தை எவ்வளவு டலேன்ட் தெரியுமா ?, பரிச்சை பேப்பரை கொண்டு வந்து காட்டுங்கள்?, எங்கே மிஸ்டேக் சொல்லுங்கள் என்று ஒரே என்று சண்டை. ஒரு பெற்றோர், 7 வயது குழந்தையை 2ஆம் வகுப்பு தமிழில் சேருங்கள் என்று எங்களுடன் சண்டை. இன்னும் சிலர், பிறந்த தேதி கட் ஆப் இல்லை என்று சொன்னாலும், வேண்டும் என்றே டேட் ஆப் பெர்த் ஐ மாற்றி சொல்லுவது என்று செய்து கொண்டு இருந்ததை பார்க்க சிரிப்பு வந்தது. இந்த ஊரில் வந்து தமிழ் மொழி, கலாச்சாரம் தெரிய வேண்டும் என்று தான் குழந்தைகளை தமிழ் படிக்க இப்படி தமிழ் பள்ளிகளுக்கு அனுப்புகிறோம். இந்த நிலையில் ஏன் இந்த
போட்டி டபுள் ப்ரோமோசன் மோகம், சண்டை என்று தெரியவில்லை.

இதே போன்ற ஒரு மோகத்தை நான் குமான்னிலும் (kumon) பார்த்து இருக்கிறேன். எனக்கு தெரிந்த ஒருவர் kumon வைத்து இருக்கிறார். அங்கு பிள்ளைகளை சேர்க்க வரும் பலரும், ஏன் என் பிள்ளையை இன்னும் இந்த லெவலில் வைத்து இருக்குறீர்கள் மேலே அனுப்புங்கள். இன்னும் ஹோம்வர்க் கொடுங்கள் என்று சண்டை போடுவதை பார்த்து இருக்கிறேன். 

இப்படி நீங்கள் டபுள் ப்ரோமோசன் மோகம் கொண்டு அலைவதால் உங்கள் குழந்தை ஜீனியஸ் ஆகி விடாது. மாறாக, உங்கள் தொல்லை தாங்காமல் வந்து படிக்குமே தவிர உண்மையில் எந்த இண்டரஸ்ட்ம் இல்லாமல் தான் இருக்கும். இப்படி இவர்களை புஷ் செய்து என்ன சாதிக்க போகிறீர்கள், சொல்லுங்கள். என்னவோ போங்கப்பா!

நன்றி.

டிஸ்கி
இது நான் சந்தித்த மக்களை கொண்டு மட்டுமே எழுத பட்டது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.



Friday, August 14, 2015

பொது இடத்தில் சிறுநீர் கழித்தலும், சான் பிரான்சிஸ்கோவும்

இந்தியாவை பற்றி குறிப்பிடும் விமர்சகர்கள் எல்லாம் அங்கு இருக்கும் சுத்தமின்மை மற்றும் எங்கும் சிறுநீர் கழித்தல் என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால், உண்மையில் இந்தியாவில் மட்டும் தான் எங்கும் சிறு நீர் கழிப்பவர்கள் இருக்கிறார்களா? என்றால் இல்லை. சொல்ல போனால் மிக வளர்ந்த நாடாக இருக்கும் அமெரிக்காவின் சிலிக்கான் வல்லெய் எனப்படும் சான் பிரான்சிஸ்கோவில் இது மிக பெரிய பிரச்சனை. அதனை குறித்த செய்தி ஒன்று வாசிக்க நேர்ந்தது. 

எங்கும் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க, சிறு நீரை ரேப்லேக்ட் செய்யும் பெயிண்ட் ஒன்றை சான் பிரான்சிஸ்கோ நகரம் எங்கும் அடித்திருப்பதாகவும், அது சிறு நீர் பட்டவுடன் ரேப்லேக்ட் செய்து சிறுநீர் கழிப்பவரின்  பான்ட், ஷு எல்லாம் நனைத்து விடுவதாகவும் படித்தேன்.


(AP Photo/Eric Risberg)


பொது இடத்தில் சிறுநீர் கழிப்பது சான் பிரான்சிஸ்கோ நகரில் மிகப் பெரிய பிரச்சனை. இதனை தவிர்க்க சிறுநீர் கழித்தால் 500$ அபராதம் என்று பொது அறிவிப்பு கொடுத்தும் சிறிது பயன் மட்டுமே ஏற்பட்டது. 

பல சுவர்களில், "ஹோல்ட் இட்!, இந்த சுவர் பப்ளிக் பாத்ரூம் அல்ல, சான் பிரான்சிஸ்கோவை மதியுங்கள்" என்று எழுதி வைத்து இருக்கிறார்கள். 

சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பப்ளிக் டாய் லெட்டுகள் ஊரெங்கும் இயங்கு கின்றன. பொதுப்பணி துறையில் வேலை பார்பவர்களும் நாள் முழுதும் வேலை செய்து மக்களை பப்ளிக் டாய் லெட்டு உபயோகிக்க வேண்டுகிறார்கள். அதனை தவிர, ஒவ்வொரு லைட் போஸ்ட்ம், சுவற்றையும் செக் செய்து, உப்பு பறித்தவற்றை மாற்றுகிறார்கள் அல்லது செப்பனிடுகிறார்கள். முடிவாக எதுவும் வேலை செய்யவில்லை / கட்டுபடுத்த முடியவில்லை என்ற நிலையில். ரெலேக்டிங் பெயிண்ட் ஐடியா வை செயல் படுத்தி இருக்கிறார்கள்.

இந்த பெயிண்ட் ஐடியா வை,  ஜெர்மனியில் இரவு நேர குடிகாரர்களின் சுவற்றில் அசுத்த பிரச்சனையை தவிர்க்க அங்கு உபயோகபடுத்துவதை பார்த்து பல சான் பிரான்சிஸ்கோ நகர சுவருகளில் அடித்து வைத்து இருக்கிறார்கள்.


இதனை வாசித்த பிறகு எனக்கு தோன்றிய சில எண்ணங்கள்.  எல்லா வசதி இருந்தும் பப்ளிக்கில் அசுத்தம் செய்யும் இவர்களை விட , பொது டாய் லெட்டுகள் அதிகம் இல்லாததால் ரோட்டில், சுவற்றில் அசுத்தம் செய்யும் நம் மக்கள் எவ்வளவோ தேவலையோ என்று எண்ண தோன்றுகிறது. என்ன வசதி இருந்தாலும், மக்கள் மனம் வைத்தால் மட்டுமே ஒரு சுத்தமான ஊரை, நாட்டை உருவாக்க முடியும். மற்றபடி என்னதான்  சட்டம் போட்டாலும் அபராதம் விதித்தாலும், அதனையும் மக்கள் மதிக்க மாட்டார்கள் போல.


நன்றி.


Thursday, August 13, 2015

வயதானாலும் அழகாக, நாகரீகமாக இருப்பது எப்படி?

வயது 30 தாண்டினாலே பெண்கள் பலருக்கு ஒரு கிலி பிடித்து கொள்ளும். ஐயோ, நமக்கு வயதாகிவிட்டதோ என்று!. ஆண்களும்  இந்த சக்கரத்தில் சுழல ஆரம்பிப்பார்கள்.  பெண்கள் பலர், நிறைய மேக்கப்க்கு, வயதை குறைக்கும் க்ரீம், எடையை குறைக்கும் டையட், அழகை கூட்ட டிரஸ்க்கு, நகை, புடவை என்று செலவழிப்பார்கள். ஆண்கள், முடி கொட்டுவதை தவிர்ப்பது எப்படி, நரையை தவிர்ப்பது எப்படி, உடம்பை பிட் ஆக வைத்திருப்பது எப்படி என்று ஆரம்பிப்பார்கள்.

இது ஒரு வகை மிட் லைப் கிரைசிஸ் என்றாலும்,  இன, மொழி, நாடு வேறுபாடின்றி இது நடக்கிறது. முக்கால் வாசி நேரம் இது ஒரு வகை இன்செக்யுரிட்டி. எங்கே நாம் அழகாக இல்லை எனில், நம் வாழ்க்கைதுணை நம்மை விட்டு விட்டு போய் விடுவாரோ? அல்லது, நமக்கு கல்யாணம்/பாய் ப்ரெண்ட்/கேர்ள் ப்ரெண்ட் கிடைக்காமல் போய் விடுமோ? என்ற இன்செக்யுரிட்டியில் நடப்பது.


நான் இங்கு குறிப்பிட விரும்புவது சாதாரண மனிதர்கள் பற்றி மட்டுமே. சினிமா நடிக நடிகையர் பற்றி அல்ல. ஏனெனில், இந்திய சினிமா நடிகைகளுக்கு 25 வயதானாலே ஆன்ட்டி பட்டம் கொடுத்து விடுவார்கள். ஆனால் ஆண் நடிகர்கள், 50-60 வயதானாலும் இளைஞர் ஆக, தன் பேத்தி வயதுள்ள பெண்களுடன் டூயட் பாட விடுவார்கள். இந்த நிலையினாலேயே ஆர்த்தி அகர்வால் போன்ற நடிகைகள் வயது 30 கடந்தவுடன் அழகை கூட்ட அல்லது மெயின்டெயின்  செய்ய என்று பல எக்ஸ்ட்ரீம் விசயங்களான லைபோ சக்சன், பிளாஸ்டிக் சர்ஜெரி என்று சென்று அழகை இழப்பதுடன், சில நேரங்களில் உயிரையும் விடுகிறார்கள்.

வயதாவது என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் வயதானாலும்  வயதுக்கேற்று அழகாக நாகரிகமாக இருப்பது எப்படி? என்பது குறித்து நான் வாசித்த சில டிப்ஸ்   இங்கே.




1. சிறு வயதினர் போல உடை அணியாதீர்கள். அது உங்களை இன்னும் வயதானவராகி காட்டும். உதாரணமாக,உங்கள் வயது  30-40 வயதுக்கு மேல் என்றால் , டீன் ஏஜ் பெண்கள் போல சிறு பாவாடை, சுடிதார் உடுத்த இயலாது. அதனால் நீங்கள் சுடிதார் உடுத்த கூடாது என்று இல்லை. ஆனால் சிறு வயதினர் போல டைட் ஆகவோ இல்லை குட்டையாகவோ அணிய வேண்டாம். நன்றாக உங்களுக்கு பொருந்த கூடிய ஆடைகளை அணியுங்கள். தற்போதைய , ட்ரெண்டு/பாஷன்  என்று பல நேரங்களில் நமக்கு பொருந்தாத உடைகளை வாங்கி பின்னர் அதனை மற்றவர்கள் அல்லது சிறு வயது பெண்கள் அணிகிறார்கள் என்று வாங்கி அணியும் போது பல பெண்களுக்கு அசிங்கமாக தெரிகிறது. ஓவர் சைஸ் அல்லது அண்டர் சைஸ் என்று எதனையும் உடுத்தாதீர்கள். அடுத்தவர்களுக்காக உடுத்தாதீர்கள். உங்களுக்கு எது சவுகரியமாக இருக்கிறதோ அதனை உடுத்துங்கள். அதுவே உங்களுக்கு நாகரீகமான dignified தோற்றம் தரும்.

2.அதிக  நகை அல்லது கழுத்து நிறைய நகை எப்பொழுதும் அணியாதீர்கள். இதனை , பல பெண்கள் எதிர்க்க  கூடும். நிறைய பெண்கள் அதுவும் நடுத்தர பெண்கள் இதனை செய்வதை பார்த்து இருக்கிறேன். நகை அணியுங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை.  ஏதாவது விசேஷம் என்றால் அணிந்து கொள்ளுங்கள். ஆனால் எப்பொழுதும் கோயில் அம்மன் போல தலை முதல் கால் வரை நகை வேண்டாம்  நீங்கள் நிறைய நகை அணிய அணிய, அது உங்களை ஓல்ட் பாஷன் ஆக மட்டுமே காட்டும். சிம்பிள் ஆக இருப்பதுவே பல நேரங்களில் உங்களை  நாகரிகமாக காட்டும்.

3. அதிக மேக் அப் அணியாதீர்கள். இது நிறைய 30 வயதை கடந்த பெண்கள் செய்வதை பார்த்து இருக்கிறேன்.அடிக்கடி பியூட்டி பார்லர் சென்று ப்ளீசிங், பாசில் என்று செய்வது , பின்னர் தினமும் மேக் அப் அணிவதையும் பார்த்து இருக்கிறேன். இதனால் என்ன பிரச்னை ஆகும் என்றுஅவர்கள் அறிந்து கொள்வது இல்லை.. தினமும் மேக்கப் அணிவது, உங்கள் முகத்தில் போர்ஸ் எனப்படும் செல் இடைவெளிகளை மூடி விடுவதால், அதிக அளவு பருக்கள் வர வழிவகுக்கும். பின்னர், முகம் தொங்கிப்போன ஒரு நிலை ஏற்படுத்தும். பிறகு பேஸ் லிப்ட் செய்ய வேண்டும் என்று யாராவது சொல்லுவார்கள். அதற்கும் சென்று பணத்தை அழுவீர்கள். இது தேவையா?, தினமும் மேக்கப் வேண்டாம். ஏதாவது ஒரு நாள் தேவை என்றால் செய்து கொள்ளுங்கள். இல்லை தினமும் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தால், நல்ல மேக்கப் ரிமூவர் அல்லது கிளென்சர்  வாங்கி உபயோகியுங்கள். எப்பொழுதும் மேக்கப் உடன் தூங்க செல்லாதீர்கள்.

4. நரையை மறக்க என்று கிடைக்கும் கண்ட கண்ட கிரீம்கள் வாங்கி பயன்படுத்தாதீர்கள். பல நேரங்களில் அது அட்வேர்ஸ் எபக்ட் ஏற்படுத்தி விடும். முடி உதிர்வு அதிகரிக்கும். சில பெண்களுக்கு வழுக்கை நிலை கூட ஏற்படுத்தி விடும். கலரிங் என்று செல்ல வேண்டாம். ஏனெலில் ஒவ்வொரு மாதமும் அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செய்தாக வேண்டும் பின்னர் அது ஒரு முடிவிலி ஆகி விடும்.   கட்டாயம் வேண்டும் என்றால் மருதாணி அல்லது ஹென்னா செய்து கொள்ளுங்கள்.

5. அழகு என்பது முக அழகு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியமும் கூட. உடல் எடை கட்டுக்குள் இருக்க வேண்டியது மிக முக்கியம். அதற்காக, டையேட்டிங் செய்கிறேன் பேர்வழி என்று பல பட்டினி கிடப்பார்கள். அது தவறு. ஜன்க் உணவுகள் எனப்படும் சிப்ஸ், பிஸ்கட்,சோடா எல்லாம் அறவே ஒதுக்குங்கள். காய்கறி, பழங்கள் அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். அது உங்கள் உடல் பளபளப்பை அதிகரிக்கும். உடல் பயிற்சி மிக முக்கியம். தினமும் குறைந்தது 30 நிமிடம் நடை பயிற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உடல் தோற்றம் உங்கள் அழகை மேலும் மெருகூட்டும்.  நிறைய தண்ணீர் குடியுங்கள்.

 6. அழகாக இருப்பது என்பது வெளிப்புற தோற்றம் மட்டும் அல்ல. வெளிப்புற தோற்றம் சில வருடங்களில் மாறி விடும், அதனால். உள் அழகையும் கவனியுங்கள். அதிக ஸ்ட்ரெஸ் ஆபத்தானது. சாப்பாட்டில் அதிக உப்பு சேர்த்து கொள்ளாதீர்கள்.  உப்பு அதிகமான உணவுகள் ரத்த கொதிப்பை அதிகப்படுத்தும். ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றில் கொண்டு வந்து விடும். இவை எல்லாம் தவிர, வெளிப்புற தோற்றத்திற்கும் ஸ்ட்ரெஸ் எதிரி. நிறைய முக சுருக்கங்களை கொண்டு வந்து விடும். நீங்கள் ஸ்ட்ரெஸ் ஆக ஆக உங்கள் முகத்தில் முக சுருக்கங்கள் அதிகரிக்கும்.

7. நெகடிவ் ஆக இருக்கும் பேசும் மக்களிடம் இருந்து விலகியே இருங்கள். பாசிடிவ் ஆக இருக்கும் மக்களுடன் இருக்கும் போது ,பேசும் போது , உங்களை அறியாமல் மனதும் முகமும் சந்தோசப்படும். மன சந்தோசம் முகத்திலும் வெளிப்படும். அழகான புன்னகை உங்களை இன்னும் அழகாக காட்டும்.

8. அதிகமாக  டிவி பார்க்காதீர்கள்.  எப்பொழுதும் சோபாவில் உக்கார்ந்து கொண்டு டிவி பார்ப்பது எந்த வயதிலும் நல்லதல்ல என்றாலும். வயதாக ஆக இதனை குறைக்க வேண்டும். ஆஸ்திரேலியா ஆராய்ச்சி ஒன்று 25 வயதுக்கு மேல் நாம் டிவி பார்க்கும் ஒவ்வொரு மணி நேரமும் நம் வாழ்கையில் 22 நிமிடத்தை குறைகிறது என்று சொல்கிறது. இது மட்டும் அல்லாமல் பல நேரங்களில் டிவியில் வரும் சீரியல் களில் வரும் பல கதை மாந்தர்கள் தரும்/ சொல்லும் நெகடிவ் எண்ணங்கள் நம் மனதில் இருந்து நம்மை டிப்ரெசனில் கொண்டு வந்து விடும். இது தேவையா?

9. அதிகம் வெயிலில் அலையாதீர்கள். முடிந்த அளவு வெயிலில் செல்லுவதை தவிருங்கள். வெயில் முக சுருக்கங்களை அதிகரிக்கும், வயதான தோற்றம் தரும்.  நல்ல சன் ஸ்க்ரீன் அணிந்து கொள்ளுங்கள். அது உங்கள் முகத்தை பாதுகாக்கும். 

10. முடிவாக,   நான் அழகாக இல்லை, கலராக இல்லை, முடி இல்லை, உயரமாக இல்லை  ... என்று எப்பொழுதும், உங்களை தாழ்த்தி கொள்ளாதீர்கள்.உங்கள் தன்னம்பிக்கையை கை விடாதீர்கள். எனக்கு என்ன குறைவு என்று நினைத்து, தன்னம்பிக்கை கொண்டவராக நீங்கள் இருந்தாலே உங்களுக்கு என்று ஒரு தேஜஸ் கிடைக்கும் அதுவே உங்களை இன்னும் அழகாக காட்டும்.

நன்றி.

Wednesday, August 12, 2015

கற்பனை திறனும், குழந்தைகளும், வெற்றியும்

“Imagination is more important than knowledge. For knowledge is limited to all we now know and understand, while imagination embraces the entire world, and all there ever will be to know and understand.”


"கற்பனை உலகில் எப்பொழுதும் வாழ்பவர்கள்" என்று கவிஞர்கள் எழுத்தாளர்களை பலர் தூற்றுவதை பார்த்து இருக்கிறேன். "கற்பனையில வாழுறத விட்டுட்டு நிஜத்தை கவனி" என்று பல பெற்றோர் தன் டீன் ஏஜ் குழந்தைகளிடம் சொல்லுவதை பார்த்து இருக்கிறேன். அதாவது, எப்பொழுதும் புத்தகம், புத்தகம், மனபாடம், முதல் மார்க் என்று இருந்தால் அவர்கள் நிஜ வாழ்கையில் வாழ்வதாகவும். கொஞ்சம் கற்பனை, படம் வரைதல், கவிதை/கட்டுரை எழுதுதல் என்று இருந்தால் அது கற்பனை வாழ்க்கை என்றும் சொல்லுகிறார்கள்,

இந்தியாவில் பல பெற்றோர்  யாரிடமாவது நீங்கள்,  "குழந்தைகளுக்கு கற்பனை திறனை கற்று கொடுங்கள்" என்று சொல்லி பாருங்கள் உங்களை ஒரு மாதிரி பார்பார்கள். நான் பார்த்தவரை, குழந்தைகள் பென்சில் அல்லது கிரையான் அல்லது ஸ்கெட்ச் பேனா வைத்து ஏதாவது கிறுக்கினால் கூட நிறைய பெற்றோர் அடிப்பதை பார்த்து இருக்கிறேன். கண்ட கண்ட இடத்தில ஏன் இப்படி கிறுக்கிற என்று சத்தம் போடுகிறார்கள். அப்படி குழந்தைகள் கிறுக்கினால் உடனே வரும் பதில், "இப்படி கண்ட இடத்தில கிறுக்காம போய் புக்கை எடுத்து படி, நிறைய தெரிஞ்சுக்கோ ".என்று நிறைய சொல்ல கேட்டு இருக்கிறேன். அதாவது இவர்களின் கூற்றுப்படி, "கனவு உலகில் வாழாமல், நிறைய விசயங்களை தெரிந்து கொள்ளுவது சிறந்தது"

 உண்மையில் நமக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு கற்பனை திறன் தேவையா? வாழ்க்கைக்கு, வாழ்க்கையின் வெற்றிக்கு கற்பனை திறன் தேவையா?

சமீபத்தில்  ஐன்ஸ்டீன் அவர்களின் கற்பனை திறன் பற்றிய மேலே குறிப்பிட்ட கூற்று படிக்க நேர்ந்தது. எத்தனை உண்மையான வரிகள் அவை. உண்மை என்னவென்றால், பெரிய அறிவியல் அறிஞர்கள் ஆகட்டும், கலைஞர்கள் ஆகட்டும்,  இன்வேண்டோர்ஸ் எனப்படும் புதிய புதிய கண்டு பிடிப்புகள் கண்டு பிடிப்பவர் ஆகட்டும் இவர்கள் எல்லாம் கொண்டிருக்கும் ஒரு திறன் அல்லது trait "Imagination" கற்பனை திறன்.

உதாரணமாக, ஐன்ஸ்டீன் அவர்களை எடுத்து கொள்ளுவோம் , இருக்கும் அறிவை தெரிந்து கொள்ளுவது மட்டுமே போதும், என்று நினைத்து நிறைய தெரிந்து கொள்ளுவதில் மட்டுமே அறிவை செலுத்தி இருந்தால், ஒரு "தியரி ஆப் ரெலேய்டிவிட்டி" அல்லது "Energy mass சமன்பாடு"கண்டு பிடித்து இருக்க முடியாது. 

நீங்கள் எவ்வளவு தான் படித்து இருந்தாலும் அல்லது உலக அறிவு பெற்று இருந்தாலும், உங்களுக்கு கற்பனை திறன் இல்லை எனில் தனித்து தெரிய முடியாது. உங்களால் ஒன்றும் புதிதாக கண்டு பிடிக்க முடியாது. அவுட் ஆப் தி பாக்ஸ் எனப்படும் வித்தியாசமாக யோசிக்க உங்களுக்கு சிந்திக்க, கற்பனை செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

அதனால் யாராவது, கற்பனையில வாழாத? என்பர் சொன்னால் ஒரு சிரிப்பு சிரித்து விடுங்கள். கற்பனை இல்லாவிட்டால் எதிலும் வெற்றி பெற முடியாது. வாழ்க்கையாகட்டும், வேலையாகட்டும். எதிலும்.

சரி இப்பொழுது கற்பனை எவ்வளவு முக்கியம் என்று அறிய முடிகிறது அல்லவா?, அடுத்து, எப்படி கற்பனை திறனை வளர்ப்பது, முக்கியமாக குழந்தைகளிடம் கற்பனை திறனை வளர்ப்பது என்று பாப்போம்.

சிறு வயதில் நான்  நிறைய கதைகள் பாட்டி, அம்மா  சொல்லி கேட்டதுண்டு. அப்பொழுது அந்த கதையின் மாந்தர்கள் எப்படி இருப்பார்கள் என்று மனக்கண்ணில் ஓடும்.   

ஒரு கதை படித்தாலோ அல்லது கட்டுரை வாசித்தாலோ கதையுடன் அல்லது கட்டுரையுடன் ஒன்றாவிட்டால் நமக்கு அந்த எழுத்துக்கள் எல்லாம் வாக்கியங்களாக மட்டுமே தெரியும். என்ன சொல்ல வருகிறார்கள் என்று அறிய முடியாது. grasping பவர் அல்லது வார்த்தைகளை உருவங்களாக மனக்கண்ணில் கொண்டு வந்தால் மட்டுமே எழுத்தின் முழு பரிமாணமும் நமக்கு விளங்கும். அதே போல பின்னர் எந்த கதைகள் படித்தாலும் அல்லது செய்தி துணுக்கு வாசித்தாலும் அதில் சொல்ல வரும் செய்திகள் உங்களுக்கு விளங்கும். "Authors motive" மிக முக்கியம். என்ன சொல்ல விளைகிறார் என்று அறிந்து கொள்ள வேண்டும்.

இங்கு குழந்தைகள் முதலில் கற்று கொள்ளுவது "மேக் பிலீவ்" அல்லது "கற்பனை செய்" என்று தான்.
எப்பொழுதும் முகுந்துடன் தினமும் சில்லி சென்ட்டேன்செஸ் எனப்படும் வாக்கியங்கள் விளையாடுவது உண்டு. ஏதாவது ஒரு வாக்கியத்தை சொல்ல வேண்டும் அது கேட்பவர்களுக்கு சிரிப்பை வரவழிக்க வேண்டும். அதுதான் சில்லி செண்டென்ஸ்.  உதாரணமாக "A dolphin climbed on a mountain" .  நான் இப்படி விளையாடுவதை பார்த்து சிலர், என்ன இடியோடிக் விளையாட்டு இது என்று கேட்பார்கள். ஆனால் என்னை பொருத்தவரை, இது பயங்கர இண்டரஸ்டிங் விளையாட்டு. ஏனெனில் குழந்தைகள்  இதனை விளையாடுவதற்கு முன்பு, அந்த மிருகம் எப்படி வாழும் என்று தெரிந்திருக்க வேண்டும், பின்பு எப்படி வாழ முடியாது, என்னவெல்லாம் செய்ய முடியாது என்று அறிந்திருக்க வேண்டும். பின்பு, உங்களின் கற்பனையை பயன்படுத்தி சில்லியாக நிறைய சொல்ல வேண்டும் . அதனால் இந்த விளையாட்டு விளையாட நிறைய தெரிந்திருக்கவேண்டும், மற்றும் கற்பனை செய்ய வேண்டும்.

அதே போல, நிறைய படம் வரைய சொல்லுவது, அல்லது புல்லில் படுத்து கொண்டு மேகத்தை பார்ப்பது, பார்த்து நிறைய மேகத்தின் ஷேப் என்ன மிருகம் போல இருக்கிறது என்று கற்பனை செய்வது. பின்னர் ஒரு மிருகம் வேறு எங்காவது இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய சொல்லுவது. தினமும் புத்தகம் படிப்பது, அதில் வரும் கதை மாந்தர்கள் குறித்து விவாதிப்பது என்று நிறைய நான் விளையாடுவது உண்டு.  குழந்தைகளை நாம் கற்பனை செய்ய சொல்லி ஊக்க படுத்த படுத்த, அவர்களுக்கு உற்சாகமாக இருக்கும். நம்முடன் விளையாட சொல்லுவார்கள்.  நிறைய நெருக்கம் அதிகமாகும்.

இரண்டு நாளைக்கு முன்பு, காலையில் எழும் போது, அம்மா என்னிடம் ஒரு கதை இருக்கிறது கேள், என்று முகுந்த் ஒரு கதை சொன்னான், அது "கேட்ச் என்னும் ஒரு கம்பளி பூச்சி கதை" ஆச்சரியமாக இருந்தது அவன் சொல்வதை கேட்கும் போது. சிறு குழந்தைக்கே உரிய சில சில்லிநேச்ஸ் அந்த கதையில் இருந்தாலும், நாம் செய்யும் சிறு சிறு உற்சாகமும் அவர்களை எப்படி செதுக்குகிறது என்று கேட்க சந்தோசமாக  இருந்தது. 

சரி, இப்படி செய்வதால் என்ன பயன் என்று கேட்பவர்களுக்கு. உங்கள் குழந்தை, ஒரு புத்தக புழுவாக, நடமாடும் நூலகமாக  மட்டும் வாழ வேண்டுமா? அல்லது ஒரு இன்வேன்டோர் ஆக பெரிய பெரிய சாதனைகள் செய்ய வேண்டுமா? நீங்களே உங்கள் குழந்தைக்கு முதல் ஆசான், முடிவு செய்யுங்கள்.

நன்றி.

Tuesday, August 11, 2015

சோம்பேறிகளும், பிசியானவர்களும், மார்க்கெட்டிங்ம் !

சில நாட்களுக்கு முன் meetup என்று நடக்கும்/நடத்தப்படும் மீடிங்க்கு செல்ல நேர்ந்தது. ஒவ்வொரு மீட்அப் ம் ஒரு டாபிக் எடுத்து கொண்டு அது சம்பந்தமான விசயங்களை பற்றி விவாதிப்பது, புதிதாக அந்த துறைக்கு வந்தவர்களை உற்சாகப்படுத்துவது என்று இருக்கும். நிறைய இப்படி மீட் அப்புகள் உண்டு. நாம்  செய்ய வேண்டியது எல்லாம் இப்படி மீட் அப்புகளில் நம்மை இணைத்து கொள்ளுவது, அவர்கள் நடத்தும் மீடிங்க்கு எப்பொழுது முடிகிறதோ செல்வது. இதனால் நாம் அந்த துறையில் லேட்டஸ்ட் என்ன செய்திகள் நடக்கிறது. யார் என்ன செய்கிறார்கள் எப்படி செய்கிறார்கள் என்றெல்லாம் அறிந்து கொள்ளலாம்.

 நான் இருக்கும் ஒரு மீட்அப் "வுமன் இன் டெக்னாலஜி அண்ட் ஹெல்த் கேர்" எனப்படும் ஒன்று. பெண்கள் /பெண்  தொழில் முனைவர்கள் எப்படி கம்பெனி ஆரம்பிப்பது, யாரிடம் இன்வெஸ்ட்மென்ட் கேட்பது, யார் யார் எல்லாம் இன்வெஸ்டர்ஸ், அவர்களை எப்படி அணுகுவது,  latest trend in technology /health care , என்ன படிப்பது, எங்கே வேலை வாய்ப்பு தேடுவது போன்றவை விவாதிக்க படும் .

 நான் சென்ற இந்த மீட் அப்பில் விவாதிக்க பட்ட ஒரு சில விஷயங்கள் இங்கே.

1) Elevator  pitch

முதலில் அவர்கள் விவாதித்தது,  "How to do elevator pitch?" என்பது. அதாவது, புதிதாக கம்பெனி ஆரம்பிப்பவர்கள் எப்படி உங்களின் கம்பனி பற்றி அடுத்தவர்களிடம் விவரிப்பீர்கள். அதுவும், ஒரு லிப்ட் கீழே  இருந்து மேலே ஏறும் நேரத்திற்குள் சொல்லுவீர்கள். இரண்டு வாக்கியங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அதுவும் precise ஆக உங்கள் கம்பனியை விவரிக்க வேண்டும்.

கம்பனி மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது. சொல்ல போனால் அமெரிக்காவில் கம்பெனி ஆர்மபிப்பது என்பது ஒரு ஜோக் போல. யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் ரெஜிஸ்டர் செய்யலாம். சொல்ல போனால் நிறைய இந்திய அமெரிக்கர்கள் தங்கள் கம்பனி ஆரம்பித்து, வெளியில் contracting செய்வதை பார்த்து இருக்கிறேன். அவை, recruting கம்பெனி எனப்படும் வேலைக்கு ஆட்கள் பிடித்து தரும் கம்பெனிஆக பெரும்பான்மை இருக்கும்.

ஆனால், நான் மீட் அப்பில் பார்த்த/கேட்ட கம்பனிகள் எல்லாம் recruting கம்பனிகள் அல்ல. மாறாக, உங்களிடம் ஒரு ஐடியா இருக்கிறது அதனை வைத்து ஒரு பொருள் செய்ய போகிறீர்கள், அதனை பற்றி அந்த பொருளை பற்றி இரண்டு வரிகளில் சொல்ல வேண்டும். அதுவே "elevator pitch". அது என்ன பிரச்சனையை தீர்க்கும். எப்படி தீர்க்கும். அதனால் என்ன பயன்/எப்படி மனித வாழ்கையை அது சுலபபடுத்தும்/நோயை தீர்க்கும்/.... இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம்.


இவைகளின் நோக்கம் இது தான்...உங்கள் கம்பனியை பற்றி உங்களாலேயே இரண்டு  வரியில் சொல்ல முடியவில்லை என்றால் உங்களை நம்பி யாரும் பணம் இன்வெஸ்ட் செய்ய மாட்டார்கள்.

2) பிராண்டிங் 

இந்த மீட் அப்களில் எல்லாம் சொல்லப்படும் அடுத்த முக்கியமான விஷயம், எப்படி பொருட்களை மக்களுக்கு எடுத்து சொல்லுவது/  ப்ராண்ட் செய்வது. இதற்க்கு  அவர்கள் செய்ய சொல்லும்  விஷயம்  "இந்த பொருள்/டெக்னாலஜி எப்படிஉங்கள்  வாழ்கையை சுலப படுத்தும் பாருங்கள்" என்று brand செய்ய சொல்லுவது.

உண்மையாக எடுத்து கொண்டால், இப்பொழுது வெளியிடப்படும் பல பொருட்கள் எப்படி மனிதனை ஏற்கனவே சோம்பேறியாக இருக்கும் மனிதனை இன்னும் சோம்பேறி ஆக்குவது என்ற விஷயத்தை under the  cover  அவர்கள் "உங்கள் வாழ்கையை இது எப்படி சுலபமாக்குகிறது பாருங்கள்" என்று பிரபல படுத்துகிறார்கள் /அல்லது பிரபல படுத்த சொல்லுகிறார்கள்.

இவர்கள் சொல்லுவது இது தான், மனிதர்களில் எப்பொழுதும் இரண்டு வகை உண்டு, 1) பயங்கர சோம்பேறிகள் 2) பிஸி ஆனவர்கள்.

முதல் வகை மனிதர்கள், எப்பொழுதும் சரி சோம்பேறிகள், இங்கிருக்கும் ஒன்றை அங்கு எடுத்து வைக்க ஏதாவது ஆப் இருக்கிறதா என்று தேடுபவர்கள். இவர்கள் கிட்ட தட்ட "வடிவேலுவின், சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?" என்பர் சொல்லும் வகை.

இவர்களை போன்றவர்களே  முதல் டார்கெட்.

அடுத்த வகை, எப்பொழுதும் பிஸி ஆக இருப்பவர்கள். இவர்களுக்கு மூச்சு விட கூட நேரம் இருப்பதில்லை. வீட்டுவேலை, ஆபிஸ் வேலை, வெளி வேலை என்று 24 மணி நேரம் எனக்கு பத்தாது  , என்று அலைபவர்கள். இவர்கள் அடுத்த டார்கெட். இவர்களிடம் விளம்பரம் செய்யும் போது, உங்கள் வேலையை இது சுலபம் ஆக்கும் , எப்படி என்று பாருங்கள் என்று சொல்லுவது.

3) மார்க்கெட்டிங்

மீட்ப்பில் அவர்கள் சொல்லும் அடுத்த பாயின்ட், சுண்டி இழுக்கும் வெப்சைட் அல்லது ஆப் எப்படி உருவாக்குவது என்று. நீங்கள் அவர்களின் இந்த சைட் க்குள் நுழைந்தால் அடுத்து வேறு எங்கும் செல்ல கூடாது. அப்படி இருக்க வேண்டும் உங்கள் மார்க்கெட்டிங் வெப்சைட்.

4) Feedback

அடுத்த முக்கியமான பாயின்ட், feedback எனப்படும் பயனர் மறுமொழி அல்லது அவர்களின் எதிர்வினையை எப்படி உபயோகிப்பது, அதற்க்கு தகுந்தார் போல எப்படி உங்களின் வெப்சைட் அல்லது ஆப்பை மாற்றி அமைப்பது என்று. மக்களுக்கு உங்கள் வெப்சைட் பிடிக்க வில்லை என்றால் எப்படி மாற்றி அமைப்பது, அல்லது அவர்களின் எதிர்வினை பொருத்து உங்கள் வெப்சைட் ஐ மேம்படுத்துவது.

இந்த மீட்டிங் மூலம் நிறைய விஷயங்கள் நான் கற்று கொண்டாலும், முக்கியமாக நான் அறிந்து கொண்டது, எப்படி மக்கள் சோம்பேறிகளாக இருக்கிறார்கள். அவர்களை எப்படி பொருட்களை காட்டி மேலும் சோம்பேறிகள் ஆக்குவது என்பதே.


நன்றி.



Saturday, August 8, 2015

21 ஆம் நூற்றாண்டில் ஏரோ ப்ளானை தொலைத்தது எப்படி?

MH 370 என்னை மிகவும் டிஸ்டர்ப் செய்த விமான விபத்து.நாம் 21 ஆம் நூற்றாண்டில் தான் வாழ்கிறோமா என்று என்ன வைத்த விபத்து. தற்போது எல்லார் கையிலும் GPS வாட்ச், GPS போன்,எங்கே இருக்கிறோம், என்றெல்லாம் சுலபமாக  அறிந்து கொள்ள முடிந்த/முடிகிற இந்த காலத்தில் MH 370 விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் காணாமல் போயிற்று.

 கிட்ட தட்ட ஒன்றரை வருடங்களாக விமானம் என்ன ஆனது, எப்படி ஆனது என்று எதுவும் தெரியாமல் குழம்பி குழம்பி புது புது தியரிகளாக ஒவ்வொரு நாளாக வந்து கொண்டு இருந்தது. விமானியிடம் இருந்து எந்த செய்திகளோ , மே டே கால் எனப்படும் இறுதி எமெர்ஜென்சி  செய்திகளோ இல்லாமல் மாயமாய் மறைந்து  போய் , 15 மாதங்கள் மற்றும்  பல மில்லியன்கள் தேடும் செலவு  கடந்த நிலையில், இன்னும் ஒன்றும் தெளிவாக தெரியவில்லை.  இது ஒரு ஏவியேஷன் மிஸ்டரி ஆகி விட்டது.

இந்த விமான பாகங்கள் ரியூனியன் தீவில் கடந்த வாரம் கரை ஒதுங்க, தற்போது இந்திய பெருங்கடலில் இந்த விமானம் விழுந்து உடைந்திருக்கலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். எப்படி மலேசியாவில் இருந்து கிளம்பி பெய்ஜிங் செல்ல வடக்கு நோக்கி கிளம்பிய  இந்த விமானம் திரும்பி நேர்மாறான திசையில் தெற்கு நோக்கி பயணித்து, யார் கண்ணிலும் படாமல் பல நாடுகளின் கண்காணிப்பில் இருந்து தப்பி அல்லது கண்ணில் மண்ணை தூவி விட்டு,  இந்திய பெருங்கடலில் விழுந்து உடையும்? என்றெல்லாம் பல கேள்விகள் நம்மிடையே.  என்ன நடந்தது, நடந்திருக்கலாம். இது விமானியின் தற்கொலை முயற்சியா? என்றெல்லாம் பல பல தியரிகள்.

எப்படி இது சாத்தியமானது, எந்த விசயத்தில் விமானத்தை நாம் தொலைத்தோம். இது எப்படியெல்லாம் ஒரு விமானம் தொலைக்கபடலாம், என்ற ஒரு  விஷயத்தை நமக்கு சொல்லி கொடுகிறது. என்ன தான் அட்வான்ஸ் GPS, ராடார் போன்றவை இருந்தாலும் எந்த ராடாரும் பரந்து விரிந்த சமுத்திரத்தின் மீது வேலை செய்யாது. அதனால் விமான போக்குவரத்து கண்காணிப்பாளர்கள்  விமானத்தில் இருந்து வரும் செய்திகளான தற்போதைய பொசிசன் மற்றும் வேகம் அவற்றை கொண்டே எங்கே விமானம் இருக்கிறது என்று கணிக்கிறார்கள்.  விமானத்தில் இத்தகைய செய்திகளை அனுப்பவே ஆட்டோமாடிக் பிங்கர் எனப்படும் செய்தி அனுப்பும் சிஸ்டம் ஒன்று இருக்கிறது. அதுவும் MH 370 கேசில் செய்தி அனுப்ப வில்லை. அது அனைத்து வைக்க பட்டதா? அல்லது எதோ எமேர்ஜென்சியினால் அணைந்து விட்டதா என்று இன்னும் அறியப்படவில்லை.  என்ன காரணமோ அந்த காரணம் தெரியவில்லை ஆனால்  மிக வேகமாக தெற்கு சீனா கடல் மீது விமானம் இருக்கும் பொது நடந்து இருக்கிறது.

ஆனால், MH 370 விமானம் ACARS எனப்படும் சாட்டிலைட் உடன் தொடர்ப்பு கொள்ளும் கம்ப்யூட்டர் உடன் இணைக்க பட்டு இருந்தது மட்டுமே ஒரே க்ளு. அது கடைசியாக தெரிந்தது தெற்கு இந்திய பெருங்கடலில் இருந்து செய்தி அனுப்பி இருக்கிறது. தெற்கு சீனா கடலில் இருந்து யூ டர்ன் அடித்து திரும்பி யார் கண்ணிலும் படமால் அல்லது கண்காணிக்கும் எல்லைக்குள் வெளியே அல்லது மேலே பறந்து இந்த விமானம் தெற்கு நோக்கி ஆட்டோ பைலடில் பெட்ரோல் தீரும் வரை பயணித்து இருக்கிறது. பின்னர் பெட்ரோல் தீர்ந்தவுடன் கீழே விழுந்து உடைந்து இருக்கிறது என்று நம்ப படுகிறது.

ஆட்டோமாடிக் பிங்கர் செயலிழக்கப்பட்டது, செய்தி அனுப்பாதது, கண்காணிப்பில் இருந்து தப்பிக்க  தொடர்பு எல்லைக்கு வெளியே பயணித்தது இவை எல்லாம் கூட்டி கழித்து பார்த்தால் , விமானி தற்கொலை முயற்சி செய்து இருக்கலாம் என்று எண்ண பட்டாலும், திடீர் தீயும் அதனை தவிர்க்க விமானிகள் மேற்கொண்ட முயற்சிகளும் இத்தகைய நிலையை உருவாக்கி  இருக்கலாம் என்ற சாத்தியமும் இருப்பதால், உண்மையில் என்ன நடந்தது என்று விமானம் கண்டு பிடிக்க படும் வரை, அல்லது கருப்பு பெட்டி எனப்படும் flight recorder கிடைக்கும் வரை இந்த விமானம் மாயமானது ஒரு aviation mystery மட்டுமே. இந்த விமானம் தொலைந்தது மூலம், இந்த  21 ஆம் நூற்றாண்டிலும் விமானத்தை தொலைக்கலாம் என்று நிரூபிக்க பட்டு இருக்கிறது.


டிஸ்கி 

இது, MH 370 விமானம் தொலைந்ததில் இருந்து நான் வாசித்த செய்திகள் வைத்து எழுதியது. தவறுகள் இருந்தால் தெரிவிக்கவும்.


 நன்றி.



Wednesday, August 5, 2015

வாசகரா? ஸ்பாம் ஆ?


சில நாட்களாக ஐரோப்பாவில், ஒரே ஊரில்  இருந்து தொடர்ந்து என் தளத்தில்  ஒரே பதிவை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். தொடர்ந்து ஒரு சில  இடத்தில் இருந்து வருகை பதிவு பதிவாகி இருக்கிறது. முக்கால் வாசி நேரம், feedspot, feedly போன்ற தளங்களில் இருந்து வந்தாலும், சில நேரங்களில் வெறும் IP நம்பர்களில் இருந்து மட்டுமே வருகை பதிவாகி இருக்கிறது. வருபவர் உண்மையில் பதிவுகளை படிக்க வந்தால் வெல்கம்..ஆனால் நிறைய பேர் ஸ்பாம் ஆக அல்லது வைரஸ் தளங்களில் இருந்து ரோபோட் செயல்படுத்தும் அல்லது விதைக்கும் தளமாக இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது.

உதாரணமாக இத்தாலியில் இருந்து கீழே இருக்கும் இடத்தில் இருந்து தொடர்ந்து வருகிறார்கள். நீங்கள் ஜெனூன் ஆக வருகிறீர்கள் என்றால் நல்லது, தயவு செய்து பின்னூட்டம் இட்டு உறுதி செய்யுங்கள். 


 Italy
Trieste, Friuli-Venezia Giulia

ஏனெனில், எனக்கு என்னவோ இது ஒரு ரோபோட் அல்லது வைரஸ் தளம் போல தோன்றுகிறது.


கூகுளில் இருந்து தற்போது ஒரு கீழ்க்கண்ட அறிவிப்பு வந்து இருக்கிறது. எல்லோருக்கும் வந்து இருக்கிறதா இல்லை எனக்கு மட்டும் வந்து இருக்கிறதா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் ஒரு எச்சரிக்கை நடவடிக்கைக்காக இதனை எழுதுகிறேன்.


நன்றி.


European Union laws require you to give European Union visitors information about cookies used on your blog. In many cases, these laws also require you to obtain consent. 


As a courtesy, we have added a notice on your blog to explain Google's use of certain Blogger and Google cookies, including use of Google Analytics and AdSense cookies. 


You are responsible for confirming this notice actually works for your blog, and that it displays. If you employ other cookies, for example by adding third party features, this notice may not work for you. Learn more about this notice and your responsibilities.


Tuesday, August 4, 2015

ABCD ஆண்கள் சந்திக்கும் விமர்சனங்கள்!

சில மாதங்களுக்கு முன்பு ABCD  பெண்கள்  சந்திக்கும் விமர்சனங்கள், என்ற பதிவு எழுதி இருந்தேன். அதில் பின்னூட்டம் இட்ட சிலர், ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் எழுத சொல்லி இருந்தனர். அது குறித்த பதிவு இது.

டேட்டிங் மற்றும் திருமண சந்தையில் ABCD ஆண்கள் அல்லது இந்தியாவில் இருந்து இங்கு படிக்க வந்து செட்டில் ஆன ஆண்கள் அல்லது சிறுவயதில் இந்தியாவில் இருந்து பெற்றோருடன் இங்கு வந்து செட்டில் ஆன ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இங்கே.


நீங்கள் ஒரு இந்திய ஆணை டேட்டிங் செய்வீர்களா?, திருமணம் செய்வீர்களா, என்று என் அமெரிக்க தோழிகள் சிலரிடம் கேட்பதுண்டு. பெரும்பாலானவர்களின் முதல் பதில் "No Way" என்று இருக்கும். ஏன் என்று கேட்டதற்கு வேறு வேறு காரணங்கள் போல சொன்னாலும் அத்தனை காரணங்களின் அடிநாதமும் ஒரு கீழே குறிப்பிட்ட சில பாயிண்டுகளில் அடங்கி விடும்.

1. அவர்கள் அம்மா பிள்ளைகள்!

பெரும்பாலான பெண்கள் குறிப்பிடுவது, அவர்கள் அம்மா பிள்ளைகள் அல்லது அவர்களின் குடும்ப தாக்கம் நிறைய இருக்கும் அல்லது சொந்தமாக சிந்திக்க தெரியாது. இப்படி நிறைய ஸ்டீரியோடைப் விமர்சனங்களை நிறைய  பெண்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன். ஏன், இங்கு படிக்க வந்து இருக்கும்  நிறைய இந்திய பெண்களே இது போல சொல்ல கேட்டு இருக்கிறேன். அதுவும் தென்னிந்திய ஆண்கள் மீது வைக்கப்படும் குற்றசாட்டுகள் மிக அதிகம். "வட இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் மும்பை, டெல்லி போன்ற மெட்ரோக்களில் இருந்து வந்தவர்கள் என்பதால் அதிக இண்டிபெண்டெண்ட் ஆக இருக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியர்கள் சென்னை, பெங்களூர் போன்ற இடங்களில் இருந்து வந்து இருந்தாலும் அதிக கட்டு பெட்டியாக, அம்மா அல்லது குடும்பம் சொல்லுவதை தவறாமல் பின் பற்றுபவர்களாக இருக்கிறார்கள்" என்று சொல்ல கேட்டு இருக்கிறேன் .

ஒரு சிலர் டேட்டிங், லிவிங் டுகெதர் என்றெல்லாம் வாழ்ந்துவிட்டு கமிட் செய்யுங்கள் என்று கேட்கும் போது, எங்கள் வீட்டில்/குடும்பத்தில்  ஒத்து கொள்ள மாட்டார்கள் என்று சால்சாப்பு சொல்லி விலகுவதை பார்த்து இருக்கிறேன், அந்த பெண்களிடம் சென்று பேசினால், இப்படி விட்டு சென்ற பையன்களை பற்றி கெட்ட கெட்ட வார்த்தைகளாக திட்டுவார்கள்.. இப்படி வீட்டுக்கு பயந்த ஆண் எதற்கு பெண்ணுடன் வாழ வேண்டும் அவளுக்கு திருமண ஆசை காட்ட வேண்டும்.



2. ஆணாதிக்கம் மற்றும் இரட்டை நிலைப்பாடு

அதிக கட்டுபெட்டியாக வளர்க்கபட்டதலோ என்னவோ, இவர்களுக்கு பல விசயங்களில் இரட்டை நிலைப்பாடு இருக்கும். தனக்கு ஒரு சுதந்திரம் அடுத்தவர்குக்கு ஒன்று என்று நினைப்பார்கள். உதாரணமாக தான் எத்தனை பெண்களுடனும் பேசலாம் நண்பராக இருக்கலாம், ஆனால் தன்னுடைய கேர்ள் ப்ரெண்ட் யாரிடமும் பேச கூடாது என்று கட்டுபாடுகள் இருக்கும். அதே போல, நம்பிக்கை ரொம்ப இருக்காது. "A relationship without trust is not possible". இதே காரணங்களுக்காகவே, நிறைய கட்டுபாடுகள் விதிப்பார்கள். டிரஸ் செய்வதில், மேக்கப் செய்வதில், பேசுவதில்...என்று அனைத்திலும். அவர்கள் சொல்படி நடக்க வேண்டும் என்று பெரும்பாலும் நினைப்பார்கள்.

அதே போல பெரும்பாலான ஆண்கள், தனியே இருந்தாலும், தன்னை தானே கவனித்து கொள்ள தெரியாது, அல்லது தன் கேர்ள் ப்ரெண்ட் தன்னை கவனித்து கொள்ள வேண்டும் என்று நினப்பார்கள். சமைப்பது, வீட்டுவேலை செய்வது என்று பலதும் தெரியாது அல்லது தெரிந்தாலும் செய்ய மாட்டார்கள்.


3. ஜட்ஜ்மெண்டல் மக்கள், சோசியல் ஆக இருப்பது என்பது தெரியாது!

இது ஒரு ஸ்பெஷல் காரணமாக கூறப்படுகிறது. நிறைய ஆண்கள் பெரும்பாலும் இந்தியாவில் ஒரு பாலர் கல்வி நிலையங்களில் படித்து வெளியில் வருவதால் நிறைய பெண்களுடன் எப்படி பேசுவது பழகுவது என்று தெரிவதில்லை. அதனால் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவளுடன்  பழகாமல், அவளை பற்றி அறிந்து கொள்ளாமல் இப்படி தான் என்று தனக்கு தானே நினைப்பை வைத்து கொள்ளுகிறார்கள். அதனை விட்டு வெளியே வர பல நேரங்களில் முயல்வதில்லை. இதே போன்ற மனநிலையால் நிறைய நண்பர்களும் வைத்து கொள்ளுவதில்லை. பின்னர் வைத்து கொண்டாலும் தனது நாடு, தனது மொழி, தனது ஊர் என்று தன்னை அதிகம் சுருக்கி கொள்ளுகிறார்கள். வெளியில் வருவது, நிறைய தெரிந்து கொள்ளுவது, நிறைய படிப்பது என்று ஓபன் மைன்டெட் ஆக இருக்க மாட்டார்கள்.


4. அனைத்தையும் பொதுபடுத்தும் மனநிலை

இதுவும் முதல் இரண்டு பாயிண்டுகளுடன் தொடர்பு உடையது தான். வீட்டு தாக்கம் அதிகம் இருப்பதாலோ என்னவோ, பெண்கள் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஒரு வரையறை வைத்து இருப்பார்கள். அதிலிருந்து நாம் சிறிது மாறுபட்டாலும், உடனே, "எங்க வீட்டில எல்லாம் இப்படி இருக்க மாட்டாங்க, நீ இப்படி இருக்க". எங்க வீட்டு பக்கம் இப்படி செய்ய மாட்டாங்க, நீ செய்யிற..இப்படி நிறைய ஒப்பீடு இருக்கும். அனைத்தையும் ஒரு பொதுவான குணம் என்று அவர்கள் வைத்திருக்கும் ஒன்றுடன் எப்பொழுதும் ஒப்பீடு செய்து படுத்துவார்கள்.


டிஸ்கி.

மேலே குறிப்பிட்டவைகள் எல்லாம்  என் அமெரிக்க தோழிகளுடன் பேசிய பொழுது அவர்கள் சொன்ன/பகிர்ந்த  விசயங்கள் மட்டுமே. என்னுடைய சொந்த கருத்துக்கள் அல்ல. பொதுப்படையான கருத்துகளும் அல்ல. வேறு கருத்துகள் இருப்பின் வரவேற்க படுகின்றன.


Saturday, August 1, 2015

பெண்ணென்றால் pay ம் இறங்கும்.

பதிவு எழுத ஆரம்பித்த துவக்கத்தில்  ஒரு பதிவு எழுதி இருந்தேன். அது என்னுடைய சம்பளம் எப்படி என்னுடன் வேலை பார்த்த ஒருவரின் (ஆணின்) சம்பளத்தை விட குறைவாக இருந்தது, என்பதை பற்றியது.


இதே கருத்தை சார்ந்த ஒரு விஷயத்தை சில நாட்களுக்கு முன் என் வீட்டுக்கு வந்த ஒரு பெண்ணும் குறிப்பிட்டார். அதாவது அவரின் சம்பளம் அவருடன் வேலை பார்க்கும், அதே அளவு படித்த அனுபவம் உள்ள ஒருவரின் சம்பளத்தை விட குறைவு என்று.  இது யுனிவேர்சல் பிரச்சனையாக இருக்குமோ என்று தேடியதில் கிடைத்த புள்ளிவிவரங்கள் தலை சுற்ற வைத்தன.


1. ஆணுக்கு ஒரு டாலர் சம்பளம் என்றால் பெண்ணுக்கு 77 சென்ட்ஸ் மட்டுமே சம்பளமாக வழங்க படுகிறது.  அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தியில் கூட இதனை சார்ந்த ஒரு செய்தி காண நேர்ந்தது.   சரிசமமான சம்பளம் தரும் சட்டம் இயற்ற சப்போர்ட் கேட்டு வெள்ளை மாளிகை செய்தி காண நேர்ந்த போது. இது எல்லாரும் அனுபவிப்பது தான் போலவே என்று மனதை தேத்தி கொண்டேன்.



2. பெண்கள்படிப்பு உயர உயர, சம்பள கேப் அதிகமாகிறது. http://nyti.ms/9ov7fp. நியூயார்க் டைம்ஸ்ன் இந்த செய்தி, ஒவ்வொரு வேலைக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் சம்பள இடைவெளியை தெள்ள தெளிவாக எடுத்து காட்டுகிறது. உதாரணமாக, கம்ப்யூட்டர், மற்றும் IT மேனேஜர் ஆக ஒரு பெண் வேலை பார்க்கும் ஒரு பெண் கிட்டத்தட்ட அதே வேலை பார்க்கும் ஒரு ஆணை விட 14% குறைவாக சம்பளம் வாங்குகிறார். இதே போன்ற நிலை வக்கீல் வேலையிலும் இருக்கிறது. 22% குறைவாக சம்பளம் வாங்குகிறார் வக்கீல் வேலை பார்க்கும் ஒரு பெண். நான் லீடர்ஷிப் ரோலில் இருக்கிறேன் அதனால் எனக்கு இந்த பிரச்னை இல்லை என்று யாராவது  நினைத்தால் அதுவும் உண்மை இல்லை. CE ரோலில் இருக்கும் பெண்ணுக்கும் ஆணுக்கும் இடையே 19% சம்பள இடைவெளி இருக்கிறது.

3. பெண்களுக்கு பதவி உயர்வு கிடக்க நீண்ட நாட்கள் ஆகும். இது அடுத்த புள்ளி விவரம்.
National center for education statistics, கூற்றுப்படி, கல்வித்துறையில் இருக்கும் பெண்கள் அதே நிலையில் இருக்கும் ஆண்களை விட3 வருடம் அதிகமாக உழைக்க வேண்டும் பதவி உயர்வு பெற என்று தெரிவிக்கிறது.

4. அமெரிக்காவில் 46% பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அதில் 59% பெண்கள் ஒரு மணிநேரத்திற்கு 8$ மட்டுமே சம்பளமாக பெறுகிறார்கள்.எந்த வேலையாக இருந்தாலும் 99% பெண்கள் ஆண்களை விட குறைவான சம்பளமே பெறுகிறார்கள். 

5. உலகம் முழுதும் 14% பெண்கள் மட்டுமே சீனியர் மனஜெமெண்டில் இருக்கிறார்கள். இது அடுத்த புள்ளி விவரம்.


6. முடிவாக,  அமெரிக்காவில் முழு சம்பளத்துடன் maternity லீவு எனப்படும் பிள்ளைபேறு விடுமுறை நிறைய கம்பனிகள் அளிப்பதில்லை. உலகில் நிறைய நாட்கள் முழு சம்பளத்துடன் பிள்ளைபேறு விடுமுறை அழிப்பது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகள் 







இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் தெரிவிப்பது என்னவென்றால், பெண்களான நாங்கள், என்ன படித்தாலும், எத்தனை சாதித்தாலும் எங்களுக்கான அடிப்படை உரிமைகளுக்காக எப்பொழுதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும் போல. இது எந்த ஊரானாலும், எந்த நாடானாலும் உண்மை தான் போல.


நன்றி.